மூர்க்க நாயனார் / Moorga Nayanar – must-read

He took gambling as a way to make money to serve the sivanadiyars and the Lord! Yenne Shiva bakthi!!! Never heard this story before…

தொண்டை நாட்டிலே பாலாற்றுக்கு வடகரையில் அமைந்துள்ள சிறந்த ஊர் திருவேற்காடு! இவ்வூரில் வேளாளர் குடியில் சிவத்தொண்டர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இவர் பெயர் மூர்க்க நாயனார். இப்பெயர் இவரது குணம் பற்றி ஏற்பட்டதாகக் கருதப்படுகிறதே தவிர, இவரது இயற்பெயர் இன்னதென்று தெரியவில்லை. அறிவு தோன்றிய நாளிலிருந்தே இப்பெரியார் எம்பெருமானின் திருவடித் தாமரையைப் போற்றி வந்ததோடு திருவெண்ணீற்றினையே மெய்ப்பொருள் என்று கருத்தில் கொண்டு வாழ்ந்து வந்தார். எம்பெருமானின் திருவடியார்களுக்கு அமுதளித்து அகமகிழ்ந்த பிறகே தாம் உண்ணும் நியதியை வழுவாது மேற்கொண்டு ஒழுகி வந்தார். இதனால் இவரது இல்லத்திற்கு வரும் சிவனடியார்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே வந்தது. அதனால் இவரிடமுள்ள பொருள்கள் யாவும் செலவழிந்தன. வறுமை ஏற்பட்டது. எவ்வளவு தான் வறுமை மலைபோல் வளர்ந்த போதும் நாயனார் தமது குறிக்கோளில் நின்று சற்றும் பிறழாமல் வாழ்ந்து வந்தார். பொருள்களை விற்று, விருந்தினர்களைப் பேணி வந்த தொண்டர், இறுதியில் விற்று பணமாக்குவதற்குக்கூட பொருள் இல்லாத கொடிய நிலையை அடைந்தார். இந்த நிலையில் நாயனாருக்கு ஒரு நல்ல யோசனை தோன்றியது. இவர் தமது இளமைப் பருவத்தில் சூதாடுவதற்குக் கற்றிருந்தார். இப்பொழுது பொருள் சேர்க்க அச்சூதாட்டத்தையே ஓர் பற்றுக்கோலாகக் கொண்டார். அவ்வூரிலுள்ளாரோடு சூதாடத் தொடங்கினார்.

பலரைத் தோற்கடித்துப் பெரும் பொருள் ஈட்டினார். அவ்வாறு பெற்ற பொருளைக் கொண்டுத் திருவெண்ணீற்று அன்பர்களுக்கு எப்போதும் போல் திருத்தொண்டு புரிந்து வரலானார். நாயனார் சூதாடும்பொழுது எப்பொழுதுமே ஒரு தந்திரத்தைக் கையாள்வது வழக்கம். சூதாட ஆரம்பிக்கும் பொழுது முதல் ஆட்டத்தில் தம்முடன் ஆடும் எதிரிக்கு விட்டுக் கொடுப்பார். அதனால் முதல் ஆட்டத்தில் தமக்கு ஏற்பட்ட தோல்வியைப் பற்றிக்கூட வருத்தப்பட மாட்டார். எடுத்த எடுப்பிலேயே நாயனார் தோற்றதும் எதிரிக்கு அளவு கடந்த உற்சாகம் ஏற்படுவதோடல்லாமல், அடுத்த ஆட்டத்திலிருந்து நிரம்பப் பொருள் வைத்து ஆடவும் தோன்றும், அதன் பிறகு எதிரி எங்கு வெற்றி பெறப் போகிறான்? சூதாடும் பழக்கத்தில் ஈடுபட்ட நாயனார் சூதாட்டம் என்பதற்காகப் பொய்யாட்டம் ஆடமாட்டார். அதே சமயத்தில் தம்முடன் சூதாடுபவர்கள் எவராகிலும் பொய்யாட்டம் ஆடினால் அத்தருணத்திலேயே சற்றும்கூடச் சிந்திக்காமல் தாம் இடுப்பில் சொருகி வைத்திருக்கும் கரிகையாற் குத்திவிடுவார். ஊர் மக்கள் இவருடன் சூதாடுவதற்கு பயந்தார்கள். அதுமட்டுமல்ல இவருடன் ஆடிய அனைவருமே தோற்றுத்தான் போயினர். நாளடைவில் இவருடன் சூதாடுவதற்கு எவருமே வரவில்லை. இதனால் நாயனார் வெளியூர்களுக்குச் சென்று சூதாடிப் பொருள் பெற்றுப் பரமனுக்குப் பெருந்தொண்டாற்றி வரலானார். இவ்வாறு சூதாடிப் பொருள் நாடி பிறைசூடிப்பெருமானின் திருவடி நாடி, அவர்தம் அடியாரைக் கூடி வணங்கி வந்த மூர்க்க நாயனார் இறுதியில் எம்பெருமானின் திருவடித் தாளினைப் போற்றி வாழும் சிவபதியை அடைந்தார்.

குருபூஜை: மூர்க்க நாயனாரின் குருபூஜை கார்த்திகை மாதம் மூலம் நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது.

 

chUdhinil venReydhu poruL thurichaRRa n^alluNarvil	thIdhakala amudhAkkuvAr koLath thAn^thINdAr	kAdhaludan adiyArkaL amudhu cheyak kadaippan^dhi	EdhamilA vakaithAmum amudhucheydhaN^ kirukkun^AL

 

நாட்டமிகு மூர்க்கர்க்கும் அடியேன்.

Temple images

 

 

The pallava kingdom was famous for the scholors. Its capiatal kAnychi was very famous for its institutions which attracted students from throughoutbhAratham . In that kingdom on the north bank of the river pAli is the town thiruvERkAdu situated. In that town which is sung in the thEvAram born the mUrgga n^AyanAr. He came in an agricultural family which found its heart and service in the feet of the divine with three eyes.

In his childhood, In his youth, from the day he could think he had the firm faith on the Father of this universe and limitless love for His devotees. The love generally manifests as service. He had the priciple of having his food only after giving feast to the devotees who depend only on the Oldest young God. In the rice that is brighter than the stars, the ghee will flow like the glacier over the mountains. The best vegetables of the town will get added taste when n^AyanAr serves them with care to the devotees. Whatever be the need of the devotees that will be fulfilled once it is noted by the n^AyanAr.

His courtious service with wholehearted love brought a lot of devotees to his house. He continued to offer flawless service to them and spent his entire wealth in that. He was not left with a piece of property. A person renounces the principles he has been following when he is pushed to a situation of continuing trounbles. It is the quality of great persons to stand for their discipline and principle and stands in the history as beacons to save the ships that requires direction. mUrgga n^AyanAr was not worried about loosing the property. For him the property achieved its goal, serving the servants of shiva. But he was very much bothered about the lack of resources for the continuation of his holy job of hosting the devotees. He could not find any other alternative to earn in that town.

He had learnt the techniques of gambling long time before that. In the absence of any other alternative he decided that it is better than not serving the devotees. He started travelling to many towns, anointed the Lord shankara in those towns with the scented water of his heartful love. He stood by his service using the money he got from gambling. He saluted the Lord in thiruvArUr on his way to thirukudan^dhai (kumbakONam) . He considered his victories in the casino of thirukkudan^dhai as the blessings of the Lord and used that money for providing feast to the devotees. He used to loose the first game to encourage the opponent and would win the games that follow and get more money. He was quite strict in following the rules of the game. He won’t cheat but if somebody cheats and refuses to pay then he will stab him with a knife. So he was called n^aRchUdhar mUrggar (principled gambler fierce person).

The service for devotees continued with the money from gambling. He won’t touch the material till the devotees eat to their satisfaction. He will eat in the last round after all the devotees had their food. This happened then on throughout his life in this world like the relentless tides of the sea. The Artist for whose dance the dhEvAs, gaNAs sing and play, that Lord greeted him in His abode. Let the strong stand of the mUrgga n^AyanAr on his service even in the troubled circumstances stay in the mind.

 

 



Categories: Announcements

Tags:

11 replies

  1. the incident is equal to Tirumangai Alwar stealing n feeding Vaishnava Acharyas.
    We cant exp-lin these leelas. Sri Sreedhars Explanation is Excellent/ Jaya jaya Sankara

  2. I heard about upper Nayanar. Appreciate if you can post any article about this great soul in English. I believe all Nayanar stories are in Periya Puran. Is there any way we can buy one in English ? Any help is much appreciated.

    • Periya Puranam which describes the lives of the sixty three nayanmars is published in English by Sri Ramakrishna Math Chennai.

  3. Many thanks for uploading this article in English.

  4. Mahesh:
    This story is against the moral value. How could God accept the offering
    from a fellow who destroyed peoples livilyhood by gambling? Will God bless
    a corrupt politician if he offer all his ill gotten wealth to a place of
    worship? I do not have anna Ganapthi to explain this.
    Partha

    • very fact that they are called nayanmars overrules Shri Anna or anyone’s explanation.

    • Swami Sivananda’s clarification to the above: (Source: SIXTY-THREE NAYANAR SAINTS, By SRI SWAMI SIVANANDA)

      “This is an extraordinary illustration of the nature of supreme devotion or Para Bhakti. It is its own law. The devotee knows nothing but God and is actually oblivious of the world and its manners. He lives in God, for God and he is of God. At such a stage, God Himself takes charge of him! The completeness of the surrender is severely tested before this.

      It is the extreme difficulty of this path that made Sage Narada exclaim that even a saint should not violate the canons of morality. Hence, so long as you are aware of your own individuality, stick to the code of right conduct: do not foolishly imitate the sages who dwell in a plane of consciousness, to which you are a complete stranger.”

  5. So the moral of this story serve the Lord what ever way you can. Will God be pleased if gambling money, money got by ill means spent on God? This si not a debate question. A thought only. Gambling is like stealing? Am I correct? I am contemplating why this story in this site?

    • None of us is qualified to debate about nayanmars – as i mentioned early, take the “shiva bakthi” theme from these stories and leave out the rest. Why this story is important to this site? Periyava held nayanmars at the highest level. In addition to that, to trigger more shiva bakthi among us and not debates 🙂

  6. Is it the same Thiruverkadu, which is near Poonamallee. A quite interesting information.
    There is a Balambika Sannithanam and that the Lord Siva Temple is quite old. Jaya Jaya
    Shankara Hara Hara Shankara

    Balasubramanian NR

Leave a Reply to partha915Cancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading