வசவு or உபதேசம்?

When I visualized how this mami must have complained to Periyava, it really made me laugh! We all know such subtle pokings and mamis are experts at that 🙂 This is not the first time I am reading this article – every time I read, I laugh in the beginning! So this article clearly falls under “Mahesh’s picks” category!

Jokes aside, how many mahans will see this as a upadesam to Him from a common parents? That is why He is Mahaperiyava! Miracles will make us feel out of the world – no doubt! But these simple incidents, His humility in taking a feedback and “correcting Himself” is unparalleled. I am many of you remember Varanasi experience, right?  For those who haven’t heard that – here it goes::

When Mahaperiyava visited Varanasi, there were few local sanyasis, who wanted to give some tough time to Periyava, asked a question  to Him  “When there are so many people in this country who have not accepted you as guru, how can you be called jagadguru ?”.

Then comes the real Jagadguru’s response, “I don’t know what your definition of Jagadguru is. In my world , anyone who treats this jagad as a guru as it teaches so many things on a daily basis, is a jagadguru.” with a smile on His face.

All those sanyasis were speechless!

Doesn’t this article confirm what He said there?!

 

43

 

நான் மட்டுமில்லை, ஜனங்களை நல்ல வழியில் திருப்புவதற்குப் பிரயத்தனப்படுகிற பொறுப்பு கொண்டே எவருமே, ”சொந்த விஷயங்களை கவனித்துக்கொள்; வீட்டுக் கார்யங்களை கவனித்துக்கொள்” என்று உபதேசம் பண்ணுவதில்லையென்பது மட்டுமில்லாமல், ”சொந்த விஷயங்களையே கவனித்துக் கொண்டிருந்தால் போதாது. இப்படிப்பட்ட ஆசைகளை, தேவைகளைக் குறைத்துக்கொண்டு, அதனால் லௌகிக உழலலையும் குறைத்துக்கொண்டு, கொஞ்சமாவது ஆத்மாவை கவனித்துக் கொள்ளுங்கள்; அதற்கு வழியாக, ஒரு அங்கமாக ஸமூஹத்தை, லோகத்தை கவனித்துத் தொண்டு செய்யுங்கள்”- என்றே சொல்லும்படியிருக்கிறது.

ஆனால் இப்படி ‘அட்வைஸ்’ பண்ணுவதிலுங்கூட நான இன்னம் கொஞ்சம் ஜாக்ரதையாகத்தான் இருக்க வேண்டும் என்று எனக்கு புத்தி சொல்லித் திருந்துகிற மாதிரி இன்றைக்கு அந்த தம்பதி வந்து, (நான் வசவு என்று சொன்னாலும்) வ்யஸனத்தோடு விஞ்ஞாபனம் பண்ணிக் கொண்டு போனார்கள் எனக்குத் தெரிந்தோ தெரியாமலோ என் ஜாக்ரதைக் குறைவால், நான் பரோபகாரத்தைச் சொல்லும்போது அதற்கு ஒரு qualifying clause [நிபந்தனைப் பிரிவு] போடாமலே இருந்துவிட்டேன் என்பதற்காக என்னை வையத்தான் வேண்டும். அதனால் அவர்களுக்கு ரொம்பவும் கஷ்டம் யதார்த்தத்தில் ஏற்பட்டுவிட்டதால் திட்டித்தானிருக்க வேண்டும். ஆனால் வயஸு, லாயக்கிருக்கோ இல்லையோ அதுவாக வந்து சேர்ந்துவிட்ட ‘குரு ஸ்தானம்’, இதுகளை உத்தேசித்துத் திட்டாமல் மரியாதையாகவே சொல்லிவிட்டுப் போனார்கள்.

அவர்களுக்கு என்ன கஷ்டம் ஏற்பட்டுவிட்டது. அவர்கள் வீட்டுப் பிள்ளை, பிரம்மசாரிப் பையன், வேலையிலிருக்கிறவன், என் பரோகார உபதேசங்களைப் படித்துவிட்டு அதிலேயே ஓவராக ஈடுபட்டு விட்டானாம். தன் கார்யம், வீட்டுக் கார்யம் எதையும் கவனிப்பதில்லையாயம். ஆபீஸ் கார்யம்கூட ச்ரத்தையாகப் பண்ணுகிறானோ இல்லையோ என்று பயமாயிருக்கிறதாம். எப்போர்து பார்த்தாலும் பிடி அரிசி கலெக்க்ஷன், [மாடுகளுக்காக] காய்கறித் தோல் கலெக்க்ஷன், இப்படி ஒரு பக்கம் கலெக்க்ஷன், இன்னொரு பக்கம் டிஸ்ட்ரிப்யூஷன் – ஆஸ்பத்திரியில் பிரஸாத டிஸ்ட்ரிப்யூஷன் மாதிரி, என்றிப்படி ஓயாமல் ஒழியாமல் அலைந்து கொண்டிருக்கிறானாம்.

”தான் கட்டிக்கொண்ட துணியைக்கூடத் தோய்க்கிறதில்லை; இவள்தான் தோய்த்துப்போட வேண்டியிருக்கு” என்று அந்த மநுஷ்யர் கம்ப்ளெயின் பண்ணினார்.

உடனே அவர் behalf -ல் அந்த அம்மாள் பரிந்துகொண்டு, ”வீட்டுக்கு ஒரு ஸாமான், காய்கறி பார்த்து வாங்கிப் போடுகிறதில்லை. சொன்னால்கூடக் காதில் போட்டுக்கொள்வதில்லை இத்தனை வயஸுக்கு இவரேதான் பண்ணும்படி இருக்கிறது” என்று சொன்னாள்.

”ஊர் வெயில் மழை எல்லாம் அவன் மேலேதான். உடம்பு வீணாய்ப் போயிடுத்து. கையை விட்டுச் செலவும் நிறையப் பண்ணுகிறான். நாங்கள் கேட்கிறோமென்பதால் எரிச்சல், கோபம். ஏதோ கொஞ்சம் அகத்தில் தலைகாட்டுவதையும் நிறுத்திவிடப் போகிறானே என்று முடிந்த மட்டும் நாங்களும் வாயைத் திறப்பதில்லை. இருந்தாலும் மநுஷ்யர்கள்தானே? சொல்லாமலேயும் இருக்க முடியவில்லை. நீங்கள்தான் அவனுக்கு நல்ல புத்தி வரப்பண்ணணும்” என்று சொன்னார்கள். பெற்ற மனஸு!

அவர்கள் அப்படிப் பிரார்த்தனை பண்ணிக்கொண்ட போதிலும், ”இந்தக் கஷ்டம் உண்டாக நீதானே ஜவாப்தாரி? நீதான் இதை ஸரி பண்ணணும்”என்று அவர்கள் இடித்துக் காட்டினதாகவே நான் நினைத்துக் கொள்கிறேன்.

இனிமேலே எனக்குப் பிரஸங்கம் பண்ணுகிற உத்தேசமில்லை*. ஆனாலும் இப்போதுதான் என்னைப் பார்க்க வருகிறவர்களும், அட்வைஸ் கேட்கிறவர்களும் ஜாஸ்தியாகிக்கொண்டு வருகிறார்கள். அதனால் இனிமேல் பிரஸங்கம் பண்ணாவிட்டாலும், என்னிடம் வருகிறவர்களிடம் பேசுகிறபோது, நல்லதைச் சொல்கிறபோது, ஒவ்வொருவனும் பொதுத்தொண்டு ஏதேனும் அத்யாவச்யமாகப் பண்ணித்தானாக வேண்டும் என்று சொல்லும்போதே, “without prejudice to” (இன்னதற்கு ஹானி இன்னியில்) என்று அநேக ஒப்பந்தங்களில் qualifying clause போடுகிறார்களே, அந்த மாதிரி இதற்கும் ஒரு நிபந்தனை, ‘தன் கார்யம், குடும்பக் கடமைகளைக் கொஞ்சங்கூட விடாமல்’ என்றும் போடவேண்டுமென்று தீர்மானம் பண்ணிக் கொண்டிருக்கிறேன். பிற்பாடு இது ஸமயத்தில் நினைவு வந்து சொல்வேனோ மாட்டேனோ, அந்த [பரோபகார] ஸப்ஜெக்டே என்னை இழுத்துக்கொண்டு போய்விடுமோ என்னவோ, எப்படியானாலும், இன்றைக்கேனும் அந்தத் தாயார் தகப்பனார் படுகிற கஷ்டத்தைப் பார்த்ததில் இப்படிச் சொல்கிற ஞானம் எனக்கு உண்டாயிருக்கிறது.

”தான் அவிழ்த்துப்போட்ட துணியைத் தாயார்க்காரி தோய்க்கணும்; வயஸுக் காலத்தில் அப்பன்காரன் கடை கண்ணி ஏறி இறங்கணும்” என்று விட்டு விட்டு ஒருத்தன் ஸோஷல் ஸர்வீஸுக்கு கிளம்பணும் என்று நான் நினைத்ததேயில்லை. நினைக்காவிட்டாலும் இதை வாய்விட்டு நான் சொல்லாதது தப்புத்தான். இதனால், இன்றைக்கு இங்கே வந்து போனவர்கள் மாதிரி இன்னும் எத்தனை பேர் வீட்டில் அனர்த்தத்தை உண்டாக்கியிருக்கிறேனோ? எல்லாருக்கும் என்னிடத்தில் வந்து சொல்லிக்கொள்ள முடியுமா? ”சொல்லிக்கொள்வதே ‘பெரியவா’ மேலே குறை சொல்கிற மாதிரித்தானே ஆகும்? அப்படிப் பண்ணலாமா?” என்றே பலபேர், பாவம், வாயை மூடிக்கொண்டு என்னால் ஏற்பட்ட கஷ்டத்தைப் பொறுத்துக் கொண்டிருக்கலாம்.

இன்றைக்கு வந்தவர்கள் எனக்கு என்ன உபதேசம் பண்ணியிருக்கிறார்கள்? ‘வசவு’, ‘வசவு’ என்று இத்தனை நாழி நான் சொன்னதை ‘உபதேசம்’ என்று சொல்லியிருக்கலாம். வசவானால்தான் feeling -ஐக் கிளப்பிவிடும் என்று அப்படிச் சொன்னேன். அதனால் உண்மையை அலசிப் பார்த்துத் தெரிந்துகொள்ள வழி ஏற்படுமென்றேன். அதைவிட ‘உபதேசம்’ என்று அடக்கமாக எடுத்துக்கொண்டு விட்டால் இன்னம் ச்லாக்யம் என்று தோன்றுகிறது. ஸ்வய ஸமாசாரங்களிலேயே ஒருத்தன் அதியாக ஈடுபட்டுப் பொதுக் கார்யங்களை கவனிக்காமலிருப்பதுதான் ‘ஜெனரல் ரூல்’ என்றாலும், எதிர்த்திசையில் சில பேர் அத்யாவசியமான சொந்தக் கார்யம், கடமைகளையும் விட்டு விட்டுப் பொதுக் கார்யம் என்று பறந்துகொண்டு, வீட்டு மநுஷ்யர்களுக்கு ச்ரமம் உண்டாக்கவும் கூடும் என்பதை நான் மறக்கக்கூடாது. அதனால், ”சொந்தக் கார்யம் என்பதையே கவனித்துக் கொண்டிருந்தால், அலை ஓய்ந்துதான் ஸமுத்ர ஸ்நானம் என்கிற மாதிரி பொதுக் கார்யங்களை எவருமே எப்போதுமே செய்ய முடியாது” என்று நான் அட்வைஸ் பண்ணும்போதே, அதை qualify பண்ணி, ”அதற்காக, அத்யாவச்யமான சொந்த வேலைகளை, அகத்து ட்யூட்டிகளை ஒருநாளும் விடக்கூடாது” என்றும் எடுத்துச் சொல்லிவிட வேண்டும். இதுதான் எனக்குக் கிடைத்திருக்கும் உபதேசம்.

 

 

 

 



Categories: Devotee Experiences, Mahesh's Picks

12 replies

  1. i actually cant read n write Tamil. Have never really bothered about it. . But today when i see so many articles written about paramacharyar in Tamil….i feel handicapped. Feels like i m not destined to know more than wat i can read in english or hear some (Tamil)audio n video cliipings……

    • sorry that you feel that way….it is not intentional that i post only tamil articles…unfortunately, i dont have time to do such translations…if anyone does it, i gladly post it here…..

      • Not at all! Ur service is unmatchable, I shall soon learn to read n write Tamil n it wud sure be a gateway for such learnings in future. Thankyou
        Sent from BlackBerry® on Airtel

  2. Mahaperiyava is humility personified.

  3. How many Sanyasis accepted their mistakes (it is not a mistake but it was misunderstood by ordinary people) but Periyava does it again. Even their advises misunderstood by others They try to establish themselves. In this juncture I remember once Balu Mama narrated an incident that one devotee came to Periyava for small reason (Her pet dog was not taken its food and became sick). Periyava advised to that devotee it was not a good practice to breed a dog in houses. Suddenly Balu mama told to Periyava that it was not a time to advise. (One cannot understand ‘NEETHISASTHRA’ when they are in trouble) whether the reason was big or silly Periyava must showered His blessings and solve the problem. Periyava accepted with Balu mama and solved the problem as His own style. What a GREAT SOUL.

  4. Maha Periyavaa is lovingly called Jagat Guru, because HIS Upadesams
    are incomparable and all for good only, i.e. for the common folk, i.e. Loka Kshemam. Jaya Jaya Shankara Hara Hara Shankara

    Balasubramanian NR

  5. parabhokara idham sariram— parabhokara punyanam pa paya pari peedanam
    jaya jaya sankara hara hara sankara

  6. Excellent

  7. Here is another interesting article on PERIYAVA’S Definition of JAGAT GURU
    =============================================================
    This story dates back to the year 1933, when MAHA PERIYAVAA was in Varanasi.
    PERIYAVAA was received in the palace of the KASSI KING.
    Many important personalities and learned men (Pundits) were also present.
    The Pundits mind there was an element of jealousy.
    How can he PERIYAVAA have the title of JAGATGURU.(जगत् गुरु).
    One of the Pundits thundered, “WHO IS THIS JAGAT GURU”
    PERIYAVAA politely replied “I am”
    The Pundit then remarked sarcastically “So you are the JAGAT GURU”

    PERIYAVAA replied.
    जगतां गुरुः न
    When i say I am JAGATGURU, i DON’T mean to say, I am GURU of this JAGAT.
    जगति पद्यमानाः सर्वे मम गुरवः
    All living beings in this world ARE MY GURUS.

    The Pundits were completely taken aback by this simple yet great explanation.
    PERIYAVAA did not stop with that.
    In that hall where this debate was going on there were some nests built by sparrows.
    PERIYAVAA pointed to one of them and asked the PUNDITS

    किं इदं?
    WHAT IS THIS?

    The Pundit replied:
    नीडः
    NEST

    PERIYAVAA asked:
    केन निर्मितं ?
    BY WHOM WAS THIS BUILT?

    The Pundit Replied:
    चटकैः
    BY THE SPARROW.

    PERIYAVAA continued:
    This nest is built by birds which do not hands or legs.
    We have hands and legs.
    Yet we are unable to build a nest like the sparrow.
    The sparrow has KRIYA SHAKTI (क्रिया शक्ति)
    But i do not have that SHAKTI.
    Hence this sparrow is myGURU!!!

    Source:MAHA PERIYAVA DARSANA ANUBHAVANGAL – T S KOTHANDARAMA SHARMA.

    In one of the pravachanam on UDHAVA GITA by HH JAYENDRA SARASWATI SWAMIGAL, JUST 2 OR 3 YEARS BACK, elaborated further on this.

  8. hara hara sankara jaya jaya sankara

    gurupathame saranam

  9. Both types of Upadesams to us; take care of your duties at home and also do social service. Both are interdependent. One should not ignore one in favour of the other. Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  10. THE EMBODIMENT OF HUMILITY! cANNOT FIND ANOTHER NOBLE SOUL LIKE HIM.

Leave a Reply to V.RamasubramanianCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading