ஒரு கையில் ஈசுவரன், ஒரு கையில் லோகம்!

ஒரு கையில் ஈசுவரன், ஒரு கையில் லோகம்! ஜன்மா பூரா ஒருத்தன் ஏதோ மாடு மாதிரி தேஹத்தால் அலைந்து திரிந்து, கையையும் காலையும் ஆட்டிக் கொண்டிருந்துவிட்டு, சாந்தமாக சௌக்கியமாக ஈச்வர பரமான, ஆத்மார்த்தமான விஷயங்களைத் தெரிந்து கொள்ளாமலும், பக்தி, தியானம் எதுவுமே இல்லாமலும் ஜீவனை விட்டானென்றால் அவன் மனுஷ்ய ஜன்மா எடுத்தே பிரயோஜனமில்லைதான். ஆனால் செய்ய வேண்டிய நிலையில் சரீர உழைப்புப் பண்ணியேயாக வேண்டும். பொதுவாக இப்போது ஜனங்கள் இருக்கிற லோகாயதமான, அபக்வமான ஸ்திதியில் அவர்களில் பெரும்பாலார் நீண்ட காலத்துக்கு சரீரத்தால் உழைத்து உழைத்தே சித்தசுத்தி பெறவேண்டியவர்களாகத்தான் இருக்கிறார்கள்.

 

 

 

மூளையால் மட்டும் வேலை செய்கிறவனுக்கும், பேனா வேலைக்காரனுக்கும் சரீரத்தால் உழைப்பவனைப் போல அசந்து தூக்கம் வருகிறதோ? தூக்கம் வராவிட்டால் மனஸ் எங்கேயாவது திரிந்துகொண்டே அழுக்கைச் சேர்த்துக் கொள்கிறது. நன்றாக உழைத்துவிட்டு வந்தவன் இப்படியெல்லாம் கெட்ட சிந்தனைகளில் போகாமல் நன்றாகத் தூங்குகிறான். அதனால் தேஹ பலம், புத்தி பலம் இரண்டும் உண்டாகிறது. தேஹத்தையும் புத்தியையும் ‘கனெக்ட்’ பண்ணுகிற nervous systemஐ அவன் பாழ் பண்ணிக் கொள்கிறதில்லை.சரீர உழைப்பில்தான் ஆரம்பித்தாக வேண்டியிருக்கிறது. ஆனால் சரீரத்தோடு நின்று விடாமல் அந்த ஆரம்ப நாளிலிருந்தே ஈச்வரபரமான விஷயங்களிலும் ‘டச்’ வைத்துக் கொண்டேயாக வேண்டும். போகப் போக ‘டச்’ பண்ணினால் மட்டும் போதாது, ‘டச்’ பண்ணுவதை கையில் பிடித்து வைத்துக் கொள்ளவும் ப்ரயத்னப்பட வேண்டும். அத்யாத்ம ஸமாசாரங்களில் அதிகம் ஈடுபட வேண்டும். ஆனால் இப்போதும், இவன் ஆத்மாபி விருத்தியில் உச்சாணிக் கொம்புக்கே போய்விட்டாலும் அப்போதுங்கூட, சரீரப் பணியில் இவன் ‘டச்’சை அடியோடு விட்டுவிடக் கூடாது. ஜீவன்முக்தன் என்று என்னவோ சொல்கிறார்களே, நமக்கெல்லாம் அப்படிப்பட்ட ஸ்திதி புரிவதுகூடக் கஷ்டமாயிருக்கிறதே, அந்த ஸ்திதி வந்து நமக்கென்று மனஸில்லை, எண்ணமில்லை, ‘ப்ளான்’ இல்லை என்று ஆகிறமட்டும், நாமாக உடற் தொண்டை அடியோடு விட்டோமென்று இருக்கவே கூடாது. அதனால்தான் பெரியோர்கள், ஒரு கையால் ஈச்வரனைப் பிடித்துக் கொண்டே இன்னொரு கையால் லோக கார்யங்களைப் பண்ணு” என்கிறார்கள்.

– ஜகத்குரு காஞ்சி காமகோடி ஸ்ரீ சந்திர சேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்Categories: Upanyasam

5 replies

 1. If we cannot do bodily activities for the benefit of the society like digging well etc., let’s atleast hit the gym; Whilst working out, let’s chant Rama nanam, or any divine name/stotram; That will help this body be fit, also gives the necessary sidha sudhi as we are chanting. That will be like making up for the lost labour, won’t it?

  CAUTION: Don’t over exert and break down. Start gradually (in gym), build it up.

 2. nice to read articles regarding periyava.i had twice met him in close alongwith my friends. he listened to our chanting of shanthi panchakam very patiently(that was the time he was on chathurmasyam at kurnool,andhra;that time bala periyava was to become the third periyava)he enquired about all of us,where we learnt vedas,who was the guru etc.and blessed us.very nice time we all had in kurnool

 3. Just a few seconds back, I replied to you,Mahesh, in your blog on Amazing Dharshan of Hanuman where I mentioned about the opportunity I had, one among other devotees
  in carrying the MENA to Sanskrit college and now I have HIS dharsanam in the Mena in
  your latest blog

  Great Mahesh,Thank you so much

 4. Jeevan mukthi endru ennamo solkirarkale—

  That is Mahaperiyava,Mahesh

  • Absolutely …..I was thinking the same…….our periyava’s simplicity amazes me….the quality of including Himself with us is such a unique thing to Him……

   I didn’t know that you had such a fortune to carry mena for Him……very delighted to meet such great folks in this forum…..

Leave a Reply

%d bloggers like this: