என்ன..உன்னோட மனோரதம் பூர்த்தியாச்சா?

 

Thanks to Sri Varagooran mama for the share….

While this incident might have happened several decades back, there are several temples even today having the same problem. There are so many sivacharyars even today longing to take care of Swamy’s nithya puja properly and they barely get support. While we read these incidents and enjoy, let us also take a resolution to support at least 1 deserving temple per family from 2020 onwards.

Mahaperiyava PAdham Sharanam!

(குருக்களின் குறையைத் தீர்த்த மகாபெரியவா)

நன்றி-குமுதம்.லைஃப்
தொகுப்பு-வெ.ஸ்ரீராம்.
13-12-2017 தேதியிட்ட இதழ்.
தட்டச்சு-வரகூரான் நாராயணன்.

ஆதிசங்கர பகவத்பாதர் பொன்மழை பொழிய வைச்ச கதை எல்லாருக்கும் தெரிஞ்சுருக்கும்.

தனக்கு அழுகின நெல்லிக்காயை பிட்சையா போட்டவளோட வீட்டுல இருந்த தரித்திரத்தை விரட்டறதுக்காக, மகாலக்ஷ்மியை வேண்டினாராம், சங்கர மகான்,அந்த வீட்டுல இருந்தவா செஞ்ச பாவம் அடுத்த தலைமுறைலதான் தீரும்.அதுவரைக்கும் தனம் தரம்முடியாதுன்னாளாம்.உன்னோட பார்வைதான் எப்பேர்ப்பட்ட பாவத்தையும் அழிச்சுடுமே. நீ அதை செய்யக் கூடாதான்னு கேட்டு,அந்த வீட்டுல இருந்த வறுமையைப் போக்கினார் ஜகத்குரு.

அதாவது, மகான்கள் நினைச்சா, எப்படிப்பட்டவாளோட கஷ்டத்தையும். எந்த மாதிரியான சூழல்லையும் போக்கிட முடியும்கறது நிதர்சனம். அப்படி பக்தர் ஒருத்தரோட கஷ்டத்தை பரமாசார்யா போக்கினதைத்தான் இப்போ பார்க்கப்போறோம்.

ஒரு சமயம் மகாபெரியவா வெளியூர்ல முகாம் இட்டிருந்த சமயத்துல வழக்கம்போல சுத்துவட்டாரத்துலேர்ந்தெல்லாம் ஏராளமான பக்தர்கள் வந்து தரிசனம் பண்ணினா. அவாள்ல மகாபெரியவா தங்கி இருந்த இடத்துக்கு கொஞ்சம் தள்ளி இருந்த சிவன் கோயில் குருக்களும் ஒருத்தர். கோயில்லேர்ந்து கொஞ்சம் புஷ்பம், வில்வதளம்,விபூதி, குங்குமம் எடுத்துண்டு வந்து சுவாமி பிரசாதம்னு சொல்லி மகாபெரியவாகிட்டே குடுத்துட்டு, ஆசிர்வாதம் வாங்கிண்டு புறப்பட்டுட்டார் அந்த குருக்கள்.

இது நடந்து ரெண்டு நாளைக்கு அப்புறம்,
பிரதோஷம் வந்தது. அன்னிக்கு சாயந்திரம் நாலு மணி இருக்கும். எந்த முன் அறிவிப்பும் இல்லாம, தரிசனம் தந்துண்டு இருந்த இடத்துலேர்ந்து எழுந்துண்ட பெரியவா, மளமளன்னு வெளியில இறங்கி நடக்க ஆரம்பிச்சுட்டார்.

எங்கே போறார்?எதுக்குப் போறார்னு மடத்து சிப்பந்திகளுக்கே தெரியாததால ,எல்லாரும் அவசர அவசரமா அவர் பின்னால ஓடினா. பரமாசார்யா நடை,அவ்வளவு வேகம்! என்னவோ காரணம் இருக்கும்னு பக்தர்களும் சேர்ந்து நடந்தா.

மளமளன்னு நடந்த மகாபெரியவா பக்கத்துல இருந்த சிவன் கோயிலுக்குள்ளே நுழைஞ்சார். அவரைக் கொஞ்சமும் எதிர்பார்க்காத கோயில் குருக்கள் அவசர அவசரமாக வரவேற்க ஓடிவந்தார்.

“அதெல்லாம் இருக்கட்டும்..பிரதோஷகாலம் ஆரம்பிக்கப் போறது..நீ பூஜை ஆரம்பி..நான் முழுக்க இருந்து பார்த்துட்டுப் போறேன்!” சொன்ன பரமாசார்யா சுவாமி சன்னதி நேராத் தெரியறாப்புல ஒரு இடத்துல நின்னுண்டார்.

ஏற்கனவே மகாபெரியவா பின்னாலயே வந்த கூட்டம் அங்கே நிறைஞ்சு இருந்துது. அதோட ஆசார்யா அங்கே இருக்கார்னு தெரிஞ்சதும் இன்னும் நிறையப்பேர் வந்ததுல திருவிழா மாதிரி கூட்டம் அலைமோதித்து.

குறைவான அபிஷேக ஆராதனைப் பொருட்கள்தான் இருந்தாலும்,அதைவைச்சு குருக்கள் நந்திக்கும்,நாதனுக்கும் பரிபூரணமா அபிஷேக அலங்கார ஆராதனைகள் அத்தனையையும் சிறக்கப் பண்ணி முடிச்சு தீப ஆரத்தி காட்டினார்.

ஆரத்தி ஜோதியை இருந்த இடத்துலேர்ந்தே தரிசித்தார் மகாபெரியவா. வந்திருந்த கூட்டம், குருக்கள் காட்டின ஆரத்தியைத் தொட்டுக் கும்பிட்டுட்டு தீபத்தட்டுல தட்சணையா காசுபோடவும் ஆரம்பிச்சா. கையில இருந்த சில்லறைக் காசுகளை சிலர் போட்டா. இன்னும் சிலர், பெரியவா பார்த்துண்டு இருக்கார்ங்கறதால பத்து இருபதுன்னு ரூபாய் நோட்டுக்களைப் போட்டா.

எல்லாம் முடிஞ்சு வந்திருந்தவாளுக்கு பிரசாதம் குடுக்க ஆரம்பிச்சார், குருக்கள்.

முதல் பிரசாதமா விபூதி,வில்வம், புஷ்பத்தை மூங்கில் தட்டுல வைச்சு, மகாபெரியாகிட்டே குடுத்தார்.

மென்மையா அவரைப் பார்த்துப் புன்னகைச்ச மகாபெரியவா, “என்ன..உன்னோட மனோரதம் பூர்த்தியாச்சா? இனிமே எல்லாம் நல்லபடியா நடக்கும்!”னு சொன்னார்.

அவர் சொன்னதைக் கேட்டதும், குருக்களுக்கு அப்படியே கை நடுங்க ஆரம்பிச்சுடுத்து. கண்ணுலேர்ந்து ஜலம் அருவியா கொட்டித்து. “பகவானே…நான் மனசுக்குள்ளே நினைச்சது உங்களுக்குக் கேட்டுதா?” அப்படின்னு கேட்டுண்டே மெய்சிலிர்த்து நின்னார்.

பதில் எதுவும் சொல்லாம மௌனமா புன்னகைச்சுட்டு, கோயிலைப் பிரதட்சணம் பண்ணிட்டுப் புறப்பட்டார் ஆசார்யா.

அதுக்கப்புறம் அங்கே இருந்தவா எல்லாரும் குருக்கள்கிட்டே என்ன நடந்ததுன்னு கேட்டா.

“ரெண்டு நாள் முன்னால மகாபெரியவாளை தரிசனம் பண்ண வந்தப்போ, அங்கே இருந்த கூட்டத்தைப் பார்த்தேன்.

“பரமேஸ்வரா…இந்தக் கூட்டத்துல பத்துல ஒரு பங்கு கோயிலுக்கு வந்தாக்கூட உன்னையும் நன்னா வைச்சுக்கலாம் என்று மனசுக்குள்ளே நினைச்சுண்டேன். சாட்சாத் சர்வேஸ்வரன் கிட்டேதான் நான் அப்படி வேண்டிண்டேன்.

அந்த பகவானும் நானும் வேற இல்லைங்கறதை உணர்த்தறமாதிரி, இங்கே இத்தனை கூட்டத்தையும் அழைச்சுண்டு வந்து திருவிளையாடல் நடத்திட்டுப் போறார், மகாபெரியவா!” தழுதழுக்கச் சொன்னார் குருக்கள். அதுக்கப்புறம் மகாபெரியவா வந்துட்டுப் போன கோயில்னே அது பிரபலம் ஆச்சு. பக்தர்களும் நிறைய வர ஆரம்பிச்சா.



Categories: Devotee Experiences

3 replies

  1. English translation please….

    • Maha Periva fulfilled the desire of the Priest.
      Courtesy: Kumudam Life (Tamil Magazine) 13.12.2017
      Collected by: V. Sriram.

      (I will try to give my best of the incident narrated here)

      Everybody knows how AdiShankhara blessed the old lady with a rain of golden gooseberry. I don’t write again here.

      The bottom line is, it is the matter of time for any Mahans to dissolve problems of any kind to anybody. This incident narrates one of such.

      It was a time when Maha Periva was camping somewhere in outskirts. There was huge public gathering at the camp to have Darshan of Maha Periva all around that area. Very closer-by the camp, there was one Shiva Temple. The priest of the temple who took some Prasadam of the temple which he submitted to Maha Periva and got His blessings and left.

      Two days later, it was Tryodasi Tithi day, Pradosham time (evening), all of sudden Maha Periva, left the Camp and started walking fast towards Shiva Temple. All people surround Him, unable to understand what was happening and silently followed Him. Maha Periva reached the temple with huge crowd. Seeing Him coming, the temple Priest ran fast to welcome Him.

      “It is all ok now. Pradosham is about to start, you start the Pooja now. I will participate in full Pooja”. Maha Periva then selected a place which is very clearly visible to Swamy Sannathi.

      It was already huge crowd behind Him, having known that Maha Periva visited the temple, more people surrounding the areas also gathered there and the temple was jam-packed.

      Even though the Priest was not having much Abishek materials, he performed the Pooja with full devotion. At the end, he showed the Aarthi to Lord and later to Maha Periva and it was shown to the public gathered there. It was a custom that while Aarthi is shown to one, he/she will drop some coins in Aarthi plate and it was huge there, there was huge collections too. Having Maha Periva’s presence, some people even dropped bigger currencies also.

      The Priest started to distribute Prasadams to all devotees there.

      First, Maha Periva was given Vibhuti, Bilva leaves, a few flowers to Maha Periva.

      With a meaningful smile, “Has that happened what you thought? No worries anymore” said Maha Periva.

      The Priest was shocked and in shake terribly. Tears were rolling on his cheeks. ‘O God, I thought in mind, how did you get it?’

      With another meaningful smile, Maha Periva left the temple after completing the Pradhakshna of the temple.

      Some of the people who around the Priest, came closer and asked what had happened?

      “Two days ago, when I went to have His Darshan, I saw the huge crowd there. Thought…… ten percent of this crowd comes to our temple I can celebrate Lord Shiva’s Pooja very nicely. I prayed to Lord Shiva, but how He….? It means Lord Shiva and Him are no different ones, hence He brought this huge crowd here showed His miracle”, said the Priest. No need to say, the temple became famous and increasing public every day

      (Readers are requested to excuse me for mistakes if any found. Jaya Jaya Shankara Shankara).

  2. Oh !!! What a Great !!!
    Hara Hara Sankara
    Jaya Jaya Sankara

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading