Periyava Golden Quotes – 974

“ஏகாதசிக்கு லீவில்லையே! சாப்பிடாமல் எப்படி வேலை பண்ணுவது?” என்றால், இதற்கு இரண்டு விதமாகப் பதில் சொல்கிறேன். ஒன்று: எல்லாரும் ஏகாதசி விரதம் இருப்பதென்று வைத்துக் கொண்டு சர்க்காரிடம் வலியுறுத்திக் கோரிக்கை விட்டால் அன்றைக்கு லீவே விட்டு விடுவார்கள். இரண்டு: இப்படிப் பதினைந்து நாளுக்கு ஒரு நாள் சாப்பிடாததால் வாஸ்தவத்தில் தெம்பு குறையவே குறையாது. ஏதோ ‘ஸென்டிமென்டலா’கத்தான் ‘நாம் சாப்பிடவில்லையே, நமக்கு சக்தி இருக்காது’, என்று பயப்பட்டு அந்த பயத்தினாலேயே பலஹீனத்தை வரவழைத்துக் கொள்வதாயிருக்குமே தவிர வாஸ்தவத்தில் அன்றைக்கு நாம் மனஸைக் கொஞ்சம் உடம்பிலிருந்து விடுவித்துக் கொண்டு ஒதுங்கியிருந்தால், அன்றுதான் கூடுதலாக சக்தி, உத்ஸாஹம் எல்லாம் இருப்பதாகத் தெரியும். மற்ற தினங்களை விடவும் அன்று நறுவிசாக நிறைய வேலை செய்ய முடியும். மனமிருந்தால் வழியுண்டு. உடம்புக்குப் பல தோஷங்களிருந்தாலும் அதற்கு ஒரு பெரிய குணமுண்டு. அதாவது நாம் பழக்குகிறபடி கேட்கும். அதனால் ஆபீஸ் கார்யம் பண்ண முடியாதபடி ஏகாதசி உபவாஸம் எவரையும் அசக்தமாக்கி விடாமல் பழக்கிக் கொண்டு விடலாம். ஆனாலும் அன்று முழுக்க பகவத் பரமாகவே செலவழிக்க வேண்டுமென்பதற்காக வேண்டுமானாலும் எல்லாரும் சேர்ந்து டிமான்ட் பண்ணி லீவ் விடும்படியாகச் செய்யலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்


If someone asks, “There is no holiday for Ekadasi!  How can we work without eating food?”  I will reply to this in two ways.  One: If everyone decides to observe Ekadasi Vrata and press the government with their request emphatically, the day will be declared a holiday.  Second: By not eating once in fifteen days, actually, body strength will not get reduced at all.  It would only be that we are bringing the weakness sentimentally fearing that we have not taken food and therefore we may not have strength, while in reality, when we free our mind from the body and remain withdrawn, we will realise that we have additional strength, happiness, etc.  We will be able to work a lot more efficiently than on other days.  Where there is a will there is a way.  Even though the body has several defects (dhoshas), it has a very good quality.  That is, it will respond to, in the way it is habituated. Therefore, it is possible to train not to feel weak to the extent of not being able to perform office work due to Ekadasi fasting.  Still, since it is prescribed that everyone should spend the entire day reflecting on Bhagawan and his thoughts, all can demand and get a holiday declared.-   Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading