இவ்வளவு படிச்ச உனக்கே சரியான அர்த்தம் சொல்லத் தெரியவில்லை!

Periyava_reading_book_pencil_BN

ஒரு நாள் பெரியவா தரையில் சயனித்துக் கொண்டிருந்தார். நானும் என் மனைவியும் அவர் பாதாரவிந்தத்தின் அடியில் உட்கார்ந்திருந்தோம்.

”ஸ்ரீ நிவாசா உனக்கு காரைக்கால் அம்மையார் சரிதம் தெரியுமா?” என்று கேட்டார்.

”நாயன்மார்களில் ஒருவர் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்”

பின்னர் அதே முற்றத்தில் ஸ்ரீபெரியவா திருவடிகளின் சமீபத்தில் நாங்கள் இருவரும் தரையில் படுத்து உறங்கினோம்.

ஆழ்ந்த நித்திரை.

”ஏய் யாராடா அங்கே”! என்ற பெரியவா குரல் கேட்டு விழித்து எழுந்தோம். உடனே அவள் தன்னுடன் எப்போதும் வைத்திருக்கும் கற்பூரத்தை தாம்பாளத்தில் வைத்து ஏற்றினாள். ஸ்ரீபெரியவா எழுந்து உட்கார்ந்தார். கற்பூர தீப ஒளியில் அவருடைய விஸ்வரூப தரிசனம் கிடைக்கப்
பெற்றோம்!

இதே கைங்கர்யத்தை என் மனைவி நாங்கள் எத்தனை நாட்கள் மடத்தில் தங்கினாலும்,ப்ரதி தினமும்,பெரியவாளுக்கு கற்பூர ஹாரத்தி எடுத்து சேவிப்பது வழக்கம். இருளின் மத்தியில் கற்பூர சேவையில் பெரியவா விஸ்வரூப தரிசனம் எங்களுக்கு எப்போதும் கிடைத்து வந்தது. பெரியவா சயனித்ததும் அவர் பாதகமலத்தின் அடியில் நாங்கள் தம்பதிகளாக சயனிக்கும் பாக்யமும் தவறாமல் கிடைத்தது. அவர் அனுக்ரஹத்தினால் அந்த பாக்யமும், ஸ்வதந்திரமும் எங்களுக்கு ப்ராப்தமானபடியால் மடத்தில் உள்ள  எல்லாரும் எங்களை அன்புடனும், மரியாதையுடனும் நடத்தினார்கள்.

ஸ்ரீபெரியவாள் யதியாகவும், பீடாதிபதியாகவும் ,ஜகத் குருவாகவும் ஆனபடியால், சாமான்ய க்ரஹஸ்தனான எங்களுக்கு தம்பதிகளாக நெருங்கி கைங்கர்யம் செய்யும் வாய்ப்பில்லை.

அடியேனுக்கு வேத அத்யயனம், வித்வாம்சம், பாண்டித்யம் போன்ற எந்த யோக்யதையோ, மடத்துக்கு அளவு கடந்த திரவிய சகாயம் செய்யக் கூடிய தனிகனாகவோ இல்லாத போதும், ஸ்ரீபெரியவாள் அத்வைத சம்ப்ரதாயத்தைச் சேர்ந்தவராயிருந்தும், நான் சிஷ்டாத்வைதனாயிருந்தும், அடியனை பத்னி சஹிதம் அவர் திருவடிச் சாயையில் இருத்தி வைத்துக் கொண்டது தெய்வ சங்கல்பம் அன்றி வேறில்லை.!

ஒரு நாள் விஸ்வரூப தரிசனத்துக்கு ஹாரத்தி காண்பிக்கும்போது நான் ஒரு சம்ஸ்க்ருத ஸ்லோகம் சொல்லி தண்டம் சமர்ப்பித்து நின்றேன்..

அது குரு தத்வம் சொல்வதாக அமைந்த அழகிய ஸ்லோகம்.

ப்ரம்மானந்தம் ப்ரம ஸுகிர்தம் கேவலம் ஞானமூர்த்திம்
த்வந்த்வாதீதம் ககன ஸத்ருஸம் தத்வமஸ்யாமி லக்ஷ்யம்
ஏகம் நித்யம் விமலமசலம் ஸர்வதீ ஸாக்ஷிபூதம்
பாவாதீதம் த்ரிகுண ரஹிதம் ஸத்குரும் தம் நமாமி ||

அப்போது வ்த்யார்த்தி நாராயண ஐயர் என்பவர் அங்கு இருந்தார். அன்று ஸ்வர்ணமுகி நதியில் நானும் என் மனைவியும் ஸ்னானம் செய்யும்போது, நாராயண ஐயரும் எங்களுடன் இருந்தார். அவர் ஸம்ஸ்க்ருதம் தெரியாவிடில் கற்றுக் கொள்; உச்சரிப்புத் தவறாக சொல்லாதே என்றார். நான் வெட்கம் அடைந்தேன்.

அன்று இரவு பெரியவா முற்றத்தில் மேனாவில் அமர்ந்திருந்தார். பத்துமணி அளவில் நாங்கள் அம்மாவுடன் வந்தனம் செய்து நின்றிருந்தோம்.
வித்யார்த்தி நாராயண ஐயரும் உடனிருந்தார்.

அவரைப் பார்த்து பெரியவா”இவாளை உனக்குத் தெரியுமா”?
என்றார்.

நாராயண ஐயர்”தெரியுமே நெல்லிக்குப்பம் வைஷ்ணவ தம்பதிகள்” என்று பதில் சொன்னார்.

”காலையில் ஸ்னானம் செய்யும்போது கேட்டுத் தெரிந்து கொண்டேன். ஸம்ஸ்க்ருதம் கற்றுக்கொள்ளும்படி அவாளிடம் சொன்னேன்.” என்றார்.

சிறிது நேரம் மௌனத்துக்குப் பிறகு பெரியவா ஒரு ஸ்லோகம் சொல்லி நாராயணாய்யரிடம் அதற்கு அர்த்தம் கேட்டார். அவரும் அர்த்தம் சொன்னார்.

ஸ்ரீபெரியவாள் அந்தச் சொல்லுக்கு” ப்ரம்மா என்றுகூட அர்த்தமாகிறதே! விஷ்ணுன்னுதான் சொல்லணுமா? ப்ரம்ம என்று வைச்சுண்டே அதற்கு முழு அர்த்தமும் சொல்லலாமே!இவ்வளவு படிச்ச உனக்கே சரியான அர்த்தம் சொல்லத் தெரியவில்லை. நீ போய் அவனுக்கு புத்தி சொல்லப் போயிட்டயோ?ஏதோ அவனுக்குத் தெரிந்ததை ஆசையாகச் சொன்னான்”

அன்று முதம் வித்யார்த்தி நாராயண ஐயர் எங்களிடம் அதிகப் ப்ரியமாகப் பழகினார்.

இதுவும் நெல்லிக்குப்பம் தம்பதினர் அனுபவமே! இவர்களுக்கு பெரியவாளோட பரிபூர்ண கடாக்ஷம் இருக்கு என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ!  கர ஹர ஹர சங்கரா….



Categories: Devotee Experiences

Tags:

4 replies

  1. The Guru Protects and Forgives errors on the part of the Devotee! Hara Hara Shankara,Jaya Jaya Shankara!

  2. English translation

    IvvaLavu padichcha Unakke Sariyana artham Cholla theriyavillai

    One day, Periyava was resting on the floor. My wife and I were sitting near His Holy Feet.

    Periyava asked me, “Srinivasa, do you know Kaaraikkal Ammaiyar Charitham ?”
    I said, “I have heard that she is one among the Naayanmaars”

    Later, in the same portion of the building, we went to sleep near His Holy Feet. Deep sleep.

    We suddenly woke up to the voice of Periyava calling out, “Hey, who’s there ?”
    Immediately my wife, who always used to carry camphor with her, put a piece on a plate (ThambaLam) and lit it up. Periyava sat up. We bowed down at His Vishwaroopa Dharshan we got in the light of the camphor.

    No matter how many days we stayed at the Matam, it was a practice with my wife to offer Karpura Harathi to Periyava and salute Him daily. We also had the fortune of getting His Vishwaroopa Dharshan regularly in the light of the camphor. We also got the fortune of sleeping near His Holy Feet regularly. Since, due to His Anugraham, we got this kind of fortune, we were treated with respect and affection by people in the Matam.

    Since Periyava was an ascetic, Peetadhipathi and a Jagadguru, we, as a couple, did not get the opportunity to offer Kaingaryam by moving closely with Him.

    I was not an expert in Vedas, nor was I a scholar. I was not in a position to contribute in cash or kind to the Matam. I belonged to the Shishtadwaitha fold and Periyava was a proponent of the Advaitha philosophy. In spite of all these, the fact that Periyava took us under His wings was nothing short of a divine play.

    One day, while offering camphor Harathi during Viswaroopa Darshan, I quoted a Sanskrit Shloka and stood there doing ‘Dhandam SamarpaNam’

    Brahmanandam Paramasukhadam Kevalam Gnanamurthim
    Dvantateetam gaganasadrusham tatvamasyaadilakshyam
    Ekam nityam vimalamachalam sarvadheesaakshibhootam
    Bhaavateetam triguNarahitam sadgurum tam namami

    At that point in time, there was a person called Vidyarthi Narayana Iyer who was there. That morning, when my wife and I were bathing in the SwarNamukhi river, Narayana Iyer was there with us.
    He said, “If you don’t know Sanskrit, learn it. Don’t mispronounce words”. I was totally ashamed.

    That night, Periyava was sitting inside the Mena (palanquin). Around 10 pm, along with Amma, having saluted Him, we stood there. Vidyarthi Narayana Iyer was also present.

    Periyava looked at him and said, “Do you know these people?”

    Narayana Iyer said, “Yes, I know them. Nellikuppam VaishNava couple. I met them during bathtime in the morning. I asked them to learn Sanskrit”

    Periyava was silent for a few moments and then he quoted a Shloka in Sanskrit and asked Narayana Iyer to tell the meaning. Narayana Iyer gave the meaning.

    Periyava referring to the couplet said, “It can also be interpreted as ‘Brahma’ ! Does it have to be interpreted only as Vishnu ? We can keep it as ‘Brahmam’ and explain the meaning fully. In spite of studying so much, you are unable to tell the proper meaning. And you think you are qualified to advise him? Poor fellow, he was saying whatever he knew with affection”

    From that day onwards, Narayana Iyer treated us with even more affection.

    This is the experience of the Nellikuppam couple. Can there be any doubt that this couple had the complete Kataksham of Periyava ?

    Jaya Jaya Shankara Hara Hara Shankara

  3. very Instructive incident for me. Just like a doctor who gives different medicines to different patients, here Maha Periyavaa was forgiving the devotee for the Sanskrit mistakes while taking to task other devotees in other contexts for Sanskrit pronunciation errors ( The importance of correct intonation in Vedic chanting using the Tvastaa story given by Periyavaa to some devotee is an example).

    This clarifies a long standing confusion for me. There are self styled dharma sastra experts (book learning and not learning from a Guru directly), including in this forum, who routinely castigate others for not following the rules by the book. What I get from this incident is that a Guru has to administer the right conduct from Dharma Sastras to the student based on their tendencies, allowing gradual progress till all blemishes are removed (hence contradictory prescriptions for different people, seemingly at odds with Shastras). Ultimately, the student will conform to the Shastras fully since he is in the Guru’s care and the Guru will change the dosage of the “Sastras” medicine systematically.

    Unless this “Sastang” happens with the Guru, Dharma Sastras will not not be assimilated and digested by the student, just like Annam has to be digested before it becomes part of their being.

    This also means Dharma Sastra Pronouncements by self styled experts of book knowledge should not be
    the basis for decisions for people. A Guru’s prescription of Sastras to the student is the touchstone. What the book expert has done is simply amassed intellectual knowledge about the Sastras without assimilating it himself by having Satsang with a guru (like undigested Annam is not a part of me until it is assimilated). These self styled experts also use Shastras as an intellectual weapon to intimidate and harass others (as it is also done in this forum sometimes by some posters) perhaps not being aware of it themselves, all the while thinking they are doing a noble service! It is like wanting to become a doctor and write prescriptions for patients a) without the training to do so and b) and not having seen the patient and diagnosed their condition!

Leave a Reply to KrishnaCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading