The Plank which shook hither and thither!

How to Pray

 

தள்ளாடிய பலகை!
===============

1956ல் கும்பகோணம் மகாமக விழாவிற்கு காஞ்சிப்பெரியவர் வந்திருந்தார். உடல்நலக்குறைவு காரணமாக விழாவில் பங்கேற்கவில்லை. பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பதையும் தவிர்த்தார்
.
அன்று, வெளிநாட்டவர் ஒருவர் சுவாமியைத் தரிசிக்க வந்திருந்தார். சுவாமி காய்ச்சலால் அவதிப்படும் விபரத்தை பணியாளர்கள் எடுத்துச் சொல்லியும், அவர் செல்ல மனமில்லாமல் அங்கேயே நின்றார். இதுபற்றி, பணியாளர் ஒருவர் சுவாமியிடம் தெரிவித்தார்.
வெளிநாட்டவரை தன்னிடம் அழைத்து வரும்படி பெரியவர் கட்டளையிட்டார். ஒரு பலகையில் அமர்ந்திருந்த பெரியவரைக் கண்ட வெளிநாட்டவர் பணிவுடன் வணங்கினார்.

அப்போது, தான் அமர்ந்திருந்த பலகையைச் சற்று தள்ளி வைத்த பெரியவர், அவரின் கேள்விகளுக்கு பதிலளிக்க தொடங்கினார். அப்போது அந்த பலகை இப்படியும் அப்படியுமாக தள்ளாடியது.

அதை வியப்புடன் பார்த்த வெளிநாட்டவர், “”இதென்ன அதிசயம்! பலகை எப்படி தானாக ஆடுகிறது?” என்று கேட்டார். தனக்கிருந்த குளிர் காய்ச்சலை பலகைக்கு மாற்றியிருப்பதால், அது தள்ளாடுவதாக பெரியவர் தெரிவித்தார். அவரிடம் பேசி முடித்தபின், மீண்டும் பெரியவர் பலகை மீது அமர்ந்தார். மீண்டும் பெரியவரை காய்ச்சல் தொற்றிக் கொண்டது. வெளிநாட்டவர் வியப்புடன் அங்கிருந்து புறப்பட்டார்.

*****
Thanks a ton to Shri Varagooran Narayanan who had typed this in Sage of Kanchi group in Facebook. He had read this in Dinamalar.

Who is He…



Categories: Devotee Experiences

5 replies

  1. excellent hara hara shankara jaya jaya shankara

  2. Excellent. Om Namah Shivaya. Happened to see this article on a Pradosham day in Pradosham Time. Sri Sri Sri Mahaperiva sharanam

  3. May be it is too much to ask. Pardon me if I am troubling too much. If possible Kindly write this article in English also.

  4. Maha Periyavavin ThiruviLaiyaadalkaLil ithuvum onRu Poolum! Jaya Jaya Shankara, Hara Hara Shankara!

  5. This is superb. Only Periyava could have done this.

Leave a Reply to N.V.SubramaniCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading