Deivathin Kural

Periyava Golden Quotes-552

புதுச் சீர்திருத்தக்காரர்கள் பழசில் நூற்றுக்குத் தொண்ணூறைத் தூக்கிப் போட்டுவிட வேண்டுமென்கிறார்கள். ஆனால் ஸமீப நூற்றுண்டுகளுக்கு முன் வந்த வெவ்வேறு ஸம்பிரதாய ஆசார்யர்களும் கொஞ்சம் மாறுபாடாகப் போயிருந்தாலும் ஆதியிலிருந்ததில் நூற்றுக்குத் தொண்ணூறை ஒப்புக் கொண்டு, தங்களை அநுஸரிப்பவர்கள் தொடர்ந்து அநுஷ்டிக்கும்படிச் செய்திருக்கிறார்கள். முக்யமாக, வைதிகமான நித்ய கர்மாநுஷ்டானங்களை அப்படியே ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஸநாதன தர்மத்துக்கு முதுகெலும்பாக உள்ள… Read More ›

Periyava Golden Quotes-551

இப்போது குலாசாரமாக எது வந்திருக்கிறதோ அதன்படியே பண்ணு; அதோடு கூட உனக்கு இஷ்டமானதாகவும் ஆதி வைதிகாசாரத்துக்கு விரோதமில்லாமல் எது இருக்கிறதோ அதையும் சேர்த்துக் கொள். அப்பா, தாத்தா பண்ணின மாதிரியே சிவ பூஜையோ, விஷ்ணு பூஜையோ பண்ணு. அதோடுகூட உன் இஷ்டதேவதை எதுவோ அதையும் சேர்த்துக் கொள்ளு. முடியுமானால் பஞ்சாயதன பூஜையாகவே பண்ணு. உன் இஷ்ட… Read More ›

Periyava Golden Quotes-550

‘ஸ்வதர்மே நிதனம் ச்ரேய:” என்றால், ‘ஸ்வதர்மம்’ என்று இப்போது வந்திருக்கிற குலதர்மமே ஆதியிலிருந்த ஸ்வதர்மத்துக்கு இந்த அம்சத்தில் வித்யாஸமானதாகத்தானே இருக்கிறது? ஆகையால் அதைப் பழையபடியே – அதாவது ஒரிஜினலான ஸ்வதர்மமாக – மாற்றிக் கொண்டால் இது எப்படி தோஷமாகும்? க்ஷத்ரியன் தர்மத்துக்காக யுத்தம் பண்ணத்தான் வேண்டுமென்று ஆதியிலிருந்து அன்றைக்கு வரையில் இருந்த ஸ்வதர்மத்தைப் பற்றி பகவான்… Read More ›

Periyava Golden Quotes-549

இதற்கு மேலே இன்னொன்று என்னை நன்றாக மடக்குகிறதாகக் கேட்கலாம். நாங்கள் பூர்விகர் ஆசாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று எதற்காகச் சொல்கிறோம் இஷ்ட தேவதா உபாஸனைக்காகத்தான். நாங்கள் நாஸ்திகமாகப் போகவில்லை. ஸித்தாந்தத்துக்காகவோ இஷ்ட தெய்வத்துக்காகவோ மாறலமா என்றுதான் கேட்டோம். ஸித்தாந்தத்துக்காக ஆசாரத்தை மாற்ற வேண்டாமென்று காரணம் சொல்லி விட்டீர்கள். இப்போது இஷ்ட தெய்வ விஷயம் மட்டும் நிற்கிறது…. Read More ›

Periyava Golden Quotes-548

பூர்வாசாரத்தை விடலாமா என்று கேட்கிறவர்களின் இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டியிருப்பதால் முடியவில்லை. இதுவும் நானே சொல்லிக்கொடுத்ததை வைத்துக்கொண்டு என்னையே வளைக்கிற கேள்விதான்! நம்முடைய பூர்விகர்கள் என்று எட்டு, பத்து, இருபது தலைமுறைகளாகச் செய்து வருவதை இப்போது நாம் பூர்வாசாரமென்று சொல்லி அதைத்தான் அநுஸரிக்க வேண்டுமென்கிறோம். அவர்களுக்கு முந்தி இன்னம் அநேகத் தலைமுறைகளுக்கு முன்னாலிருந்த ‘பூர்விகப்… Read More ›

Periyava Golden Quotes-547

பகவானே என்ன சொன்னார், ரொம்ப நிர்தாக்ஷிண்யமாகத்தானே சொன்னார், அப்படித்தான் நாமும் குலாசாரத்தை ஒரு நாளும் விடப்படாது என்று சொல்லிவிடுவோமென்று தோன்றுகிறது. குலதர்மம் என்பதற்காக யுத்தம் பண்ணிப் பிதாமஹர், பந்து, மித்ரர்களையெல்லாம் கொல்லுவதாவது என்று வில்லைப் போட்டுவிட்டு உட்கார்ந்த அர்ஜுனனிடம் பகவான் இப்படித்தானே சொன்னார். “உனக்கு சாஸ்திரம் இந்த ஸ்வதர்மத்தைத்தானே கொடுத்திருக்கிறது? ஒரு பிராம்மணனிடம் போய் நான்… Read More ›

Periyava Golden Quotes-546

“நான் இவ்வளவு நேரம் சொன்னதை வாபஸ் பண்ணிவிடுகிறேன். பூர்வாசாரமும் வேண்டாம்; ஒன்றும் வேண்டாம். நீ எப்படியும் பகவானை நம்புகிறாய், அவனை மனஸார ஒரு ரூபத்தில் உபாஸிக்க வேண்டும் என்று தாபப்படுகிறாய். அதனால் உன்னை அவனே பார்த்துக் கொள்வான். பூர்விகர் ஆசாரத்தைப் பற்றிக் கவலைப்படாதேயப்பா” என்று சொல்லி விடலாமா? இதுவும் நிம்மதிப்படமாட்டேனென்கிறது. எங்கே கட்டறுத்துக்கொண்டு போகலாமென்று ஜனங்கள்… Read More ›

Periyava Golden Quotes-545

சாஸ்திர கர்மா, பக்தி கர்மா என்று பிரிக்க முடியாமல் சேர்த்துப் பிசைந்தல்லவா வைத்திருக்கிறது? எல்லாருக்கும் பொதுவான ஸந்தியாவந்தனத்தில் கூட ஒருத்தர் “பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்” என்றால் இன்னொருத்தர் “ஈஸ்வர” சப்தம் சிவனை ஞாபகமூட்டுகிறதேயென்பதால் (“ஈஸ்வரன்”, “பகவான்” என்ற இரண்டும் ஒரே பரமாத்மாவைத்தான் சொல்கிறதென்றாலும்), மஹா விஷ்ணுவின் ப்ரீதிக்காகவே என்று ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டுமென்று நினைத்து “ஈஸ்வர”… Read More ›

Periyava Golden Quotes-544

“எந்த ஸித்தாந்தமானாலும் உன் நம்பிக்கைப்படி வைத்துக்கொள்ளு, அதற்காகக் குலாசாரத்தை மாற்றாதே என்று சொன்னீர்கள். ஸரி. ஆனால் நமக்கு மூர்த்தி உபாஸனை, இஷ்ட தெய்வம் என்பதும் முக்கியமாயிருக்கிறதே! நம்முடைய மதத்தில் இத்தனை தெய்வங்களைச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் புராணம், ஸ்தோத்ரம், க்ஷேத்ரம் என்று வைத்திருப்பதால் அவற்றில் ஒவ்வொருவனுக்கும் ஏதாவது ஒன்றில் விசேஷப் பிடிப்பு ஏற்படுகிறதே! பூர்விகர் ஆசாரப்படிதான் செய்ய வேண்டும்… Read More ›

Periyava Golden Quotes-543

கேள்வி என்னவென்றால்: “எந்த ஸித்தாந்தமானாலும் உன் நம்பிக்கைப்படி வைத்துக் கொள்ளு, அதற்காகக் குலாசாரத்தை மாற்றாதே என்று சொன்னீர்கள். ஸரி. ஆனால் நமக்கு மூர்த்தி உபாஸனை, இஷ்ட தெய்வம் என்பதும் முக்கியமாயிருக்கிறதே! நம்முடைய மதத்தில் இத்தனை தெய்வங்களைச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் புராணம், ஸ்தோத்ரம், க்ஷேத்ரம் என்று வைத்திருப்பதால் அவற்றில் ஒவ்வொருவனுக்கும் ஏதாவது ஒன்றில் விசேஷப் பிடிப்பு ஏற்படுகிறதே! … Read More ›

Periyava Golden Quotes-542

இன்னொரு கேள்விக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இது வரையில் நான் தத்வம் என்பதை தனிப்பட்ட தெய்வ உபாஸனையோடு சேர்க்காமல் பிரித்தே பேசி வந்திருக்கிறேன். நம்முடைய மதத்திலோ philosophical -ஆக இருக்கிற தத்வ ஸித்தாந்தத்தோடேயே theological -ஆக வருகிற விஷயமான மூர்த்தி உபாஸனையும் சேர்ந்திருக்கிறது. இங்கேயும் பூர்வாசாரப்படியே ஒருவன் ஜன்மாவை பொருத்துச் செய்ய வேண்டுமென்றால் ஜாஸ்தி… Read More ›

Periyava Golden Quotes-541

ஜன்மாப்படி வாய்த்த ஒரு ஸமயாசாரத்தில் இருந்து கொண்டே வேறொரு ஸித்தாந்தில் முன்னேற முடியும் என்பது வெறும் possibility தானா? யதார்த்தத்தில் அப்படிக் காட்ட முடியுமா? காட்டினால்தானே நம்பிக்கை வரும்? காட்டமுடியும். ஏ.வி. கோபாலாசாரியார் என்று ஒருவர் இருக்கிறார். வைஷ்ணவ ஸம்ப்ரதாயப்படிதான் எல்லாம் செய்து வருகிறார். வைஷ்ணவ ஸித்தாந்தத்துக்குமேகூட நிறையத் தொண்டு செய்து வருகிறார். நல்ல பாண்டித்யம்… Read More ›

Periyava Golden Quotes-540

நீ உன் பூர்விகர்களின் ஸித்தாந்தத்தை விட்டு விட்டாய் என்று கூட வெளியில் தெரிய வேண்டியதில்லை. நீ பாட்டுக்கு ஸம்ஸ்கார பலத்தால், படிப்பால், அநுபவத்தால், பகவதநுக்ரஹத்தால் அந்த உன் உள் விஷயத்தில் போய்க் கொண்டிரு. வெளியிலே குலாசாரப்படியே பண்ணு. அதனால் சித்தத்தை சுத்திப்படுத்திக் கொண்டு ஸித்தாந்தத்தின் அந்தத்துக்குப் போ. அப்புறமும் கூடப் பூர்வாசாரத்தை விடாதே. சித்த சுத்தி… Read More ›