Jaya Jaya Sankara Hara Hara Sankara – Why Varna Dharma or Caste based division of labor here? Are we praising ourselves or is it others praising us? How come a great civilization existed here when we were so divided? Here is Sri Periyava….
Many Jaya Jaya Sankara to our sathsang seva voulunteer Shri S. Ravisankar for the translation. Rama Rama
இங்கு மட்டும் இருப்பானேன்?
உலகத்தில் மற்ற தேசங்கள் இல்லையா? அங்கேயும் மதங்கள் இல்லையா? அந்த மதங்கள் அந்த தேச ஜனங்களுக்கு இப்படிப் பாரம்பரியமாகத் தொழில்களை வகுத்துக் கொடுத்து ஜாதி, ஜாதி என்று வைக்கவில்லையே! நமக்கு மட்டும் எதற்கு? என்ற கேள்வி பிறக்கிறது.
ஜாதிகள் என்று பிரித்து வைக்காத தேசங்களிலும், சாஸ்திரங்களையும் அறிவு நூல்களையும் வளர்க்கிறவர்கள், ராஜ்யபாரம் நடத்தி யுத்தம் செய்கிறவர்கள், வியாபாரிகள், விவசாயிகள், தொழிலாளிகள் எல்லோரும் இருக்கத்தான் செய்தார்கள்! இன்றைக்கும் இருக்கிறார்கள்.
ஆனாலும் ‘இது நம் தேசம்’ என்கிற சுய அபிமானம் இல்லாமல், நிஷ்பக்ஷபாதமாகவே பார்த்தாலும், நம் தேசத்தின் மகோன்னதமான நாகரிகம் மாதிரி அங்கெல்லாம் எங்குமே காணோமே! மற்ற தேசங்களில் நடுநடுவில் ஒரு பெரிய நாகரிகம் தோன்றினாலும்கூட, அது இங்கே இருக்கிற மாதிரி இத்தனை ஆயிரம் வருஷங்கள் நீடித்து நிலைத்து நிற்கக் காணோமே! நாமே நம் பெருமையை சொல்லிக் கொள்வது என்றில்லை; அலெக்ஸாந்தர் காலத்திலிருந்து நாம் இத்தனை அதல பாதாளத்துக்கு போயிருக்கிற இன்றைக்கு வரையில்கூட, வெளிதேசத்தவர்கள் சகலருமே, ஹிந்து நாகரிமா (Hindu Civilisation) ஆ! அப்பாடா, அது எத்தனை மகோன்னதமாக இருக்கிறது! என்று ஆச்சரியப்பட்டு வருகிறார்களே! இதற்கு விசை என்ன?
அங்கெல்லாமும் மகாபுருஷர்கள், ஞானிகள், பக்தர்கள், பரோபகாரிகள், தியாகிகள் பிறந்துதான் இருக்கிறார்கள். ஆனாலும் கணக்குப் போட்டுப் பார்த்தால் நம் ஒரு தேசத்தில், அவிச்சின்னமாக (அறுபடாத தொடரிழையாக) எத்தனையோ ஆயிரம் வருஷங்களாகத் தலைமுறைக்குத் தலைமுறை கூட்டம் கூட்டமாக உத்தம புருஷர்கள், ஸாதுக்கள், ஞானிகள், தத்துவ சிந்தாந்திகள், பக்தர்கள் பரோபகாரிகள் தோன்றின மாதிரி வேறெங்குமே காணோம். அத்தனை வெளி தேசங்களிலும் இருக்கிற மகான்களைக் கூட்டினாலும் அதைவிட இங்கே மகாபுருஷர்கள் தோன்றியிருக்கிறார்கள். இதை land of saints, land of sages என்றெல்லாம் – நாம் சொல்லவில்லை. சொல்ல வேண்டியதும் இல்லை – மற்ற தேசத்துக்காரர்களே தலைக்குமேல் தூக்கி வைத்துக் கொண்டு கூத்தாடுகிறார்கள். ‘இப்படி ஒரு வேதாந்தமா? இப்படி ஒரு தத்துவங்களா?’ என்று நம் கிரந்தங்களைக் கொண்டாடி நமஸ்காரம் செய்கிறார்கள்.
கலை, சிற்பம், சங்கீதம், காவியம், ஜோதிஷம் – கணிதம் மாதிரி அறிவு சாஸ்திரங்கள், வைத்திய சாஸ்திரம் என்று எதை எடுத்தாலும் இந்தியாவுக்கு நிகர் எதுவுமே இல்லை என்று லோகமே வானளாவப் புகழ்கிறது. உபநிஷத்து, கீதை, ராமாயணம், சாகுந்தலம் இந்த மாதிரி உலகத்திலேயே இல்லை என்கிறார்கள். தமிழ் நூல்களிலேயே இருக்கப்பட்ட தேவாரம், திவ்யப் பிரபந்தங்கள் போன்ற பக்தி நூல்கள் லோகத்திலேயே வேறெங்கும் இல்லை என்கிறார்கள். குறளைப் பார்த்து இப்படியும் ஒரு சின்ன நூல் அத்தனை நீதிகளையும் இவ்வளவு தெளிவாக எடுத்துச் சொல்வதற்கு உண்டா, உண்டா என்று ஆச்சரியப் படுகிறார்கள். என்ன கோபுரம், என்ன சிற்பங்கள், திவ்விய விக்கிரகங்கள், எப்படிப்பட்ட சங்கீதம், பரத நாட்டியம் என்று அந்நிய தேசத்தவர்கள் எல்லாம் பிரமித்து, தாங்களாகவே இவற்றைப் பற்றித் தெரிந்துகொள்வதற்காக வீடு வாசலை எல்லாம் விட்டுவிட்டு இங்கே ஓடி வருகிறார்கள். வெள்ளைக்காரர்கள் நம்மை அடிமைப்படுத்தி, ஒரு பக்கத்தில் நம்மிடம் இல்லாத தோஷங்களை எல்லாம் சுமத்தி, நம்மைப் பிரித்துப் பிரித்து வைத்து ஆட்சி பண்ணினாலும் (divide and rule) இன்னொரு பக்கத்தில் நம் நாகரிகத்தைப் பார்த்து அதிசயப்பட்டு நம்முடைய சாஸ்திரங்களை எல்லாம் தேடித் தேடி எடுத்து ஆராய்ச்சி செய்து தங்கள் பாஷையில் தர்ஜுமா பண்ணி (மொழி பெயர்த்து) வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இப்படி ஓர் உன்னதமான நாகரிகம் இங்கு மட்டும் இருக்கும்படியாக அப்படி இங்கே பிரத்யேகமாக என்ன விசேஷம் இருந்தது? மற்ற தேசங்களில் இல்லாமல் நம் சமூக வாழ்வில் மட்டும் என்ன பிரத்யேக அமைப்பு இருந்தது என்று பார்த்தால், இந்த வர்ணாசிரம தர்மம் ஒன்றுதானே அகப்படுகிறது.
சீர்திருத்தக்காரர்களால் நம் குறைகளுக்கெல்லாம் இருப்பிடமானது என்று நினைக்கிற வர்ண தர்மம் என்ற தனியம்சம் இருக்கிற நம் தேசம்தான் மற்ற எல்லா தேசங்களையும்விட தத்துவத்தில், குணசீலத்தில், கலைகளில், அறிவில் எல்லாவற்றிலுமே நிறைந்து தலைசிறந்து நிற்கிறது.
_________________________________________________________________________________
Why Only Here? (In This Country)
In the world, are there no other countries? There also, are there no religions? Wonder why those religions have not divided the society with castes, based on Jobs! Why only for us? These are the questions raised here.
Even in those countries where they did not divide the society with castes, they did have scholars who developed Sastras and knowledgeable scripts. Kings or powers that be ruling the country waging wars, businessmen, agriculturalists, laborers, etc. were also there. Even today all of them continue to be there.
Looking with a balanced view, without patriotic affiliation, “It’s my country” we find the great civilization seen here that do not exist in other places. Even if a big civilization suddenly sprang up in between, it did not continue to exist for many thousands of years like this place! It’s not that we try to blow our own trumpet and boast ourselves. Right from the time of Alexander, till this day we are touching the nadir! All foreigners wonder “Oh, Hindu civilization wonderful! How beautifully it is maintained “Is the awe struck look! What’s the power (reason) for this?
In those places too great religious saints, sages, devotees, helping tendency people, sacrificing nature humans were born. If we go through statistics only in our country, without break one generation after next great number of Mahan’s, Saints, sages, philosophers, devotees, and helping tendency people are born for thousands of years. This cannot be seen anywhere else. Even if we add all the great souls born in other countries, it is seen that the numbers far exceed here. We are not telling that this is the land of saints. Not necessary, we have to say this. The people from countries give credit, holding us above their head and dance.
“What a wonderful philosophy! How beautiful the grandhas (preachings) are! It is how our scriptures are celebrated and prostrated by them.
The whole world appreciate to the sky limit, stating that there are no equals to our scriptures, music, epics, astrology, brain staggering Sastras based on mathematics and medical sciences. They also say, that there are no epics equal to Upanishads, Gita, Ramayana, Sakunthala, etc. According to their observation that there are no equals even to Tamizh Divine based epics like Dhevaram, Dhivya Prabantham in the world. Seeing Thirukkural world is dumb founded observing its small size carrying in few lines all morals in clear pattern. Astonished to know more about the great towers (gopurams), sculptures, Divine statues, wonderful music, beautiful bharathanatyam, etc. they leave their homes and come here on own interest. Though the whites made us their slaves, thrust their culture unknown to us, apart from exercising “Divide and rule” policy, from another side they wondered seeing our civilization. They searched from various nook and corners, collected such things, carried out research work, translated and kept them in their custody.
What is the specialty for such high level civilization existing only in this place? If we closely observe we can see, the missing link in other countries but existed here as a specialty is ‘Varnasramam’ (Profession based division) based dharmic ways.
Reformists think that the basic defect in our system is only due to Varna Dharma (caste based dharma) whereas, we find that this is the place where the above dharma is the root cause for our superiority in philosophy, behavioral character, arts, and intelligence.
Categories: Deivathin Kural
Leave a Reply