Periyava Golden Quotes-549

இதற்கு மேலே இன்னொன்று என்னை நன்றாக மடக்குகிறதாகக் கேட்கலாம். நாங்கள் பூர்விகர் ஆசாரத்தை மாற்றிக் கொள்ள வேண்டுமென்று எதற்காகச் சொல்கிறோம் இஷ்ட தேவதா உபாஸனைக்காகத்தான். நாங்கள் நாஸ்திகமாகப் போகவில்லை. ஸித்தாந்தத்துக்காகவோ இஷ்ட தெய்வத்துக்காகவோ மாறலமா என்றுதான் கேட்டோம். ஸித்தாந்தத்துக்காக ஆசாரத்தை மாற்ற வேண்டாமென்று காரணம் சொல்லி விட்டீர்கள். இப்போது இஷ்ட தெய்வ விஷயம் மட்டும் நிற்கிறது. இதிலும் பூர்வாசாரப்படிதான் போகவேண்டும் என்று சொல்லி விடலாமென்று நீங்கள் பார்க்கிறீர்கள். ஆனால் நமக்கு நேராகப் பூர்விர்களாக இருக்கிறவர்கள், அவர்களுக்கும் பூர்விகர்களாக இருக்கிறவர்கள் என்று பாகுபாடு செய்து ஆராய்ந்து பார்த்தால், நம் நேர் பூர்விகர்களே ஆதி பூர்விகர்களுக்கு வித்யாஸமாகப் போயிருக்கிறார்களென்றும், இந்த இஷ்ட தெய்வ ஸமாசாரத்தில் வேத காலத்திலிருந்து ஆயிரம் வருஷத்துக்கு முன்வரை வந்த நெடுங்காலப் பூர்வாசாரம் எங்களுக்கு ஆதரவாகத்தானிருக்கிறதென்றும் தெளிவாகத் தெரிகிறது. வேதத்திலோ, ஸ்மிருதிகளிலோ, இந்த ஸ்வாமிதான் உசத்தி என்று எந்த ஒன்றையும் பரதெய்வம் என்று நிர்தாரணம் பண்ணி வைத்திருக்கவில்லை. எல்லாவற்றையும் ஒரே பரமாத்மாவாகச் சொல்லி, ஆனாலும் எவரெவருக்கு எந்த மூர்த்தியில் அபிருசியோ, மனஸு லயிக்கிறதோ அதை இஷ்ட தெய்வமென்று வழிபட இடம் கொடுத்திருக்கிறது; தனக்கு ஒன்றில்தான் கவர்ச்சியிருக்கிறது என்பதற்காக அதை பக்தி செய்தாலும், மற்ற தெய்வங்களை நிந்திக்கக் கூடாது என்று வைத்திருக்கிறது; இதற்காகவே பஞ்சாயதன பூஜை என்று ஏற்படுத்தி, இஷ்ட தெய்வத்தை அதில் பிரதானமாக வைத்தாலும் மற்றவற்றையும் பரிவாரங்களாக வைத்துப் பூஜை செய்து ஸமரஸ பாவத்தை வளர்த்துக் கொள்ள வேண்டுமென்று சொல்லியிருக்கிறது -இதையெல்லாம் நீங்களே உபந்யாஸம் செய்திருக்கிறீர்கள். ஆகையால் அதற்கப்புறம் நடுவாந்தரத்தில் வந்த ஆசார்ய புருஷர்கள் சிவன்தான் உசத்தி, விஷ்ணுதான் உசத்தி என்று ஏதோ ஒன்றை வைத்து அது எங்கள் குலாசாரமாக வந்திருக்கிறபோது, பிராசீனமான வைதிக தர்மத்துக்கு வித்யாஸமாகப் போய்விட்ட இந்தக் குலாசாரத்தை நாங்கள் மாற்றி, பிராசீன வழிப்படியே உபாஸனா விஷயத்தில் போனால் அது எப்படித் தப்பு? நாங்கள் சீர்திருத்தகாரர்களைப் போல வேதத்தின் கர்ம காண்டம், ச்ரௌத-ஸ்மார்த்த ஸூத்ரங்கள், தர்ம சாஸ்திரங்கள் இவற்றையெல்லாம் தூக்கிப் போட்டுவிட்டு, வேதாந்தந்தான் ஸாரம், பாக்கியெல்லாம் சக்கை என்று சொன்னால் தப்பு. இவை எல்லாவற்றையும் ஒப்புக்கொண்டே, ‘இஷ்ட தெய்வ உபாஸனை இவற்றுக்கு ஸம்மதமானதுதான். இன்னும் சொல்லப் போனால் ஒரு தெய்வத்துக்கு மட்டுமே பரத்வம் சொல்வதுதான் ஒரிஜினலான சாஸ்திரங்களுக்கு சம்மதமாயிருக்காது’ என்றே, இப்போது கட்டாயமாக ஏதோ ஒரு ஸ்வாமியிடம்தான் பக்தியாயிருக்க வேண்டும் என்கிற குலாசார ஏற்பாட்டிலிருந்து ஸ்வதந்திரம் கேட்கிறோம். கொஞ்சங்கூட வைதிக சாஸ்திரத்துக்கு விரோதமாக இல்லாத இந்த ஆசையை எப்படி நிராகரிக்கலாம்?” என்று கேட்கலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Another question may be raised to corner me. “What is the reason we desire to give up the ancestral traditions? It is not because we want to become atheists; it is only because of our affinity towards a particular God. You asked us not to change the traditions for the sake of philosophical convictions. Now what is left is the matter of devotion to a particular God.  You want to state that the ancestral traditions should be followed in this issue also. But when we study our direct ancestors it is clear that they took a different path from that of their ancestors and in the matter of Ishta Devatha the traditions that existed thousands of years ago support our cause. Neither the Vedas nor the Smriti has extolled the superiority of one God and identified one particular God as the Divine Supreme. Every God has been declared only as a manifestation of the Supreme Being and freedom has been given to worship one particular form as the Ishta Devatha, the form to which one is strongly drawn. Even if a person is attracted to one particular God, he has been prohibited from criticizing the other Gods. Panchayatana worship has been formed keeping this purpose in mind and in that, even if one God is worshipped primarily, the other Gods are also worshipped along with Him or Her to develop a perspective of equality. You have explained this in your discourses. But if at a later stage the Aacharya Purushas have declared the superiority of Siva or Vishnu and this has become our family tradition, what is wrong if we give up this practice which itself was a deviation and go back to the original practice in the matter of worship of the Ishta Devatha or the God close to our heart? Unlike the reformers we do not advocate the exclusion of the Karma Kanda of Vedas, consisting of Smaarta Srowdha Sutras and Dharma Sastras (pertaining to rituals and traditions and promoting the path of virtues) declaring only the Vedanta to be the true essence and the rest to be mere left over. If we do so, it is wrong. We accept the Karma Kanda and its relationship with the Ishta Devatha worship. In fact the original scriptures are not for declaring one particular God Divine Supreme and hence we seek the liberty to free ourselves from the family tradition which does so.  How can you deny this desire of ours which does not go against the Vedic scriptures? The questions progress further. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: