சாஸ்திர கர்மா, பக்தி கர்மா என்று பிரிக்க முடியாமல் சேர்த்துப் பிசைந்தல்லவா வைத்திருக்கிறது? எல்லாருக்கும் பொதுவான ஸந்தியாவந்தனத்தில் கூட ஒருத்தர் “பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்” என்றால் இன்னொருத்தர் “ஈஸ்வர” சப்தம் சிவனை ஞாபகமூட்டுகிறதேயென்பதால் (“ஈஸ்வரன்”, “பகவான்” என்ற இரண்டும் ஒரே பரமாத்மாவைத்தான் சொல்கிறதென்றாலும்), மஹா விஷ்ணுவின் ப்ரீதிக்காகவே என்று ஸங்கல்பம் செய்து கொள்ள வேண்டுமென்று நினைத்து “ஈஸ்வர” என்கிற இடத்தில் “பகவத்” என்கிறார்! சைவனாகப் பிறந்து விஷ்ணு பக்தி பண்ண வேண்டுமென்றிருக்கிற ஒருவனுக்கு, “கேசவ, நாராயண” என்று சொல்லிக் கொண்டு நாமத்தைக் குழைத்துப் போட்டுக் கொண்டால் தான் மனநிறைவு இருக்கலாம். இவனை விபூதிதான் இட்டுக் கொள்ள வேண்டுமென்றால் அவன் [சிவ] பஞ்சாக்ஷரம் சொல்லித் தானே அதைக் குழைத்து இட்டுக் கொள்ள வேண்டியிருக்கும்? சிகை, ஸூத்ரம் ஆகியவற்றோடு ‘புண்ட்ரம்’ என்று நெற்றிக்கிட்டுக் கொள்வதிலும் பூர்வாசாரப்படிதான் பண்ண வேண்டும் என்றிருப்பதால், தெய்வத்தையும் மாற்றிக் கொள்ளக் கூடாது என்று வைத்துக் கொண்டால், அது ஸ்வபாவமான பக்திக்கு இடையூறாக ஆகிறதே! இப்படியாக வெளிச் சின்னம், நேராக பக்தி பூஜையில்லாத வைதிக கார்யம் இவற்றிலெல்லாங்கூட பூர்விகர்களின் ஸம்பிரதாயத்தில் நிலை நாட்டப்பட்டுள்ள ஏதோ ஒரு தெய்வத்தை ஸம்பந்தப்படுத்தியிருக்கிறதே! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
Saastra karma and Bakthi Karma (ritualistic practices and devotional practices) have been made inseparable. Even in a common ritual like Sandhyavandanam if somebody utters the phrase ‘Parameswara preetyartham’, another person feels that the word Eswara reminds one of Siva and uses the phrase ‘Bhagawat Preethyartham’ with the feeling that the sankalpam should be done in the name of Maha Vishnu only though ‘Eswara’ and Bhagawan” denote the very same Divine Supreme. A person born a Saivite might want to apply Thiruman (the sign of Vaishnavites) on his body uttering the names Kesava and Narayana (the names of Vishnu). But as per his ancestral tradition if he has to apply vibhuti on his forehead, should he not do so uttering the Siva Panchakshara? If along with Sikai and Stram (the tuft and the holy thread) if it is insisted that Pundram (the holy sign on the forehead and the body) should also be applied according to the ancestral traditions and so one should not switch over to a worship of a different God, then does it not come in the way of spontaneous devotion? So even in those matters not directly related to God or His worship like Vedic rituals and application of the holy sign, the identity of a particular God is involved in our ancestors Aacharas. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply