‘ஸ்வதர்மே நிதனம் ச்ரேய:” என்றால், ‘ஸ்வதர்மம்’ என்று இப்போது வந்திருக்கிற குலதர்மமே ஆதியிலிருந்த ஸ்வதர்மத்துக்கு இந்த அம்சத்தில் வித்யாஸமானதாகத்தானே இருக்கிறது? ஆகையால் அதைப் பழையபடியே – அதாவது ஒரிஜினலான ஸ்வதர்மமாக – மாற்றிக் கொண்டால் இது எப்படி தோஷமாகும்? க்ஷத்ரியன் தர்மத்துக்காக யுத்தம் பண்ணத்தான் வேண்டுமென்று ஆதியிலிருந்து அன்றைக்கு வரையில் இருந்த ஸ்வதர்மத்தைப் பற்றி பகவான் சொன்னதை, ஆதியிலிருந்து ஒரு விதமாகவும் பிற்பாடு வேறு விதமாகவும் குலாசாரம் மாறியிருக்கிற நிலையில் எப்படிப் பொருத்தலாம்?” என்று கேட்டுவிட்டால் என்ன பண்ணுவேன்? பகவான் சொன்ன பதிலை (மரணமே ஸம்பவித்தாலும் குலாசாரத்தைத்தான் பின்பற்ற வேண்டும் என்ற பதிலை) வற்புறுத்த முடியாமல் என் வாயைக் கட்டித்தான் போடுகிறது. ஏற்கனவே கட்டு விட்டுக் கெட்டுப் போனது போதாது என்று புதிதாக எந்தக் கட்டுப்பாட்டையும் தளர்த்தி விடக்கூடாது என்கிற நியாயமும் இன்னொரு பக்கம் என்னைக் கட்டுப்படுத்துகிறது. அதனால் ஒரு ‘காம்ப்ரமைஸ்’ பண்ணி வைக்கத் தோன்றுகிறது. இதைவிட்டால் வழியில்லையென்று, இரண்டையும் ராஜி பண்ணி ஒரு யோசனை சொல்கிறேன். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
“If the Swadharmam (the code of conduct one should follow) is the family tradition now being practiced, this same tradition is in certain aspects different from the code of conduct laid down originally. So how is it wrong if one goes back to following the original code? If someone poses a question that when Bhagawan had stated that a Kshatriya should fight for protecting the Dharma how can it followed suitably in a context where the traditions themselves have changed in the course of time, how can I answer them? I am unable to compel anybody to follow the answer given by Lord Krishna that even under the threat of death one should follow one’s traditions. On the other hand I am bound by the justice of the stand that restrictions should not be relaxed in a situation where discipline has already been diluted. So I feel a compromise has to be proposed, balancing both the arguments. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply