Periyava Golden Quotes-540

நீ உன் பூர்விகர்களின் ஸித்தாந்தத்தை விட்டு விட்டாய் என்று கூட வெளியில் தெரிய வேண்டியதில்லை. நீ பாட்டுக்கு ஸம்ஸ்கார பலத்தால், படிப்பால், அநுபவத்தால், பகவதநுக்ரஹத்தால் அந்த உன் உள் விஷயத்தில் போய்க் கொண்டிரு. வெளியிலே குலாசாரப்படியே பண்ணு. அதனால் சித்தத்தை சுத்திப்படுத்திக் கொண்டு ஸித்தாந்தத்தின் அந்தத்துக்குப் போ. அப்புறமும் கூடப் பூர்வாசாரத்தை விடாதே. சித்த சுத்தி ஸித்தித்து, ஸித்தாந்தமும் அநுபவமாகிவிட்ட பின் உன்னளவில் பூர்வாசாரமோ, பிற ஆசாரமோ எதுவுமே வேண்டாந்தான் என்றாலும் லோகத்திலுள்ள மற்றவர்களுக்கு வழிகாட்டுவதற்காக முன்னோர் கைக்கொண்ட ஆசார, அநுஷ்டானங்களை விடாமல் பண்ணிக் கொண்டிரு. இதுதான் பகவான் போட்டிருக்கும் [கீதைக்] கட்டளை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

The others need not even know that you have given up the philosophy of your ancestors. You try to progress inwardly by the strength of your traditions, education, experience, and Grace of Bhagawan. Outwardly, continue to follow the traditions laid down by your ancestors. By doing so, cleanse your mind and reach the very culmination of your philosophy. But even after you reach that stage, do not give up your ancestral traditions.Though it is true that after achieving purification of the mind and the subsequent realization of one’s philosophy there is no need for the observance of any rituals, traditional or otherwise, you continue to observe those traditional practices to set an example to the rest of the world. This is the dictate of Lord Krishna in Bhagawad Gita. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: