Periyava Golden Quotes-542

இன்னொரு கேள்விக்கு நான் பதில் சொல்லியாக வேண்டும். இது வரையில் நான் தத்வம் என்பதை தனிப்பட்ட தெய்வ உபாஸனையோடு சேர்க்காமல் பிரித்தே பேசி வந்திருக்கிறேன். நம்முடைய மதத்திலோ philosophical -ஆக இருக்கிற தத்வ ஸித்தாந்தத்தோடேயே theological -ஆக வருகிற விஷயமான மூர்த்தி உபாஸனையும் சேர்ந்திருக்கிறது. இங்கேயும் பூர்வாசாரப்படியே ஒருவன் ஜன்மாவை பொருத்துச் செய்ய வேண்டுமென்றால் ஜாஸ்தி மோதல் ஏற்படும் போலிருக்கிறது. அதாவது: விசிஷ்டாத்வைதி என்கிறவன் வெறும் ஃபிலாஸஃபியாக, ‘எல்லாருக்கும் பொதுவான ஒரு பரமாத்மாதான் ஜீவாத்மாவின் அந்தர்யாமியாக உள்ளே புகுந்து ஆட்டிக் கொண்டும் இருக்கிறது. ஜீவனானவன் முக்தியிலும்கூட அதோடு ஒன்றாகப் போய்விடாமல், தான் அதன் ஒரு அம்சமே என்பதைப் புரிந்து கொண்டு, பக்தியோடு அதன் ஆளுகைக்குக் கீழே தனியாகத்தானிருக்க வேண்டும்’ என்று சொல்லிப் பொதுப்படையான ஒரு பரமாத்மாவோடு நிறுத்திவிடவில்லை. ‘அந்தப் பரமாத்மா விஷ்ணுதான்; சிவன் இல்லை. அவனுக்கு இன்ன நிறம், இத்தனை கை, அவனுக்கு நிறைய அலங்காரம் பண்ணி ஆராதிக்க வேண்டும்’ என்றெல்லாமும் சொல்கிறான். இப்படியே சைவ ஸித்தாந்தியும் இன்னொரு தத்வ சாஸ்திரத்தைச் சொல்கிறான். அது விசிஷ்டாத்வைதத்தைவிட அத்வைதத்துக்குக் கிட்டே போகிறது. என்றாலும் இதிலும் அத்வைத ஐக்யம் இல்லை. இவனும், பெயரே சைவ ஸித்தாந்தம் என்றிருப்பதற்கேற்க, பொதுவாக ஏதோ ஒரு பரமாத்மா என்று சொல்லாமல், ‘அவர் சிவன் என்ற மூர்த்திதான்; விஷ்ணு இல்லை. அவர் ‘இப்படியிப்படியிருக்கிறார். அவருக்கு ஆராதனையாக ஓயாமல் அபிஷேகம் செய்ய வேண்டும்’ என்றெல்லாம் சொல்கிறான். அத்வைதி அந்தப் பரமாத்மாவை வித்யாஸமில்லாமல் எல்லா மூர்த்திகளிலும் உபாஸிக்க வேண்டுமென்றிருந்தாலும், நடைமுறையில் [அத்வைதிகளான] ஸ்மார்த்தர் குடும்பங்களில் எத்தனையோ தலைமுறையாக சிவபூஜைதான் பண்ணுவது, [விஷ்ணுவுக்கான] ஸாளக்ராம பூஜைதான் பண்ணுவது, [அம்பாளுக்கான] ஸ்ரீ வித்யா பூஜைதான் பண்ணுவது என்றெல்லாம் வந்திருக்கிறது. கேள்வி என்னவென்றால்: “எந்த ஸித்தாந்தமானாலும் உன் நம்பிக்கைப்படி வைத்துக் கொள்ளு, அதற்காகக் குலாசாரத்தை மாற்றாதே என்று சொன்னீர்கள். ஸரி. ஆனால் நமக்கு மூர்த்தி உபாஸனை, இஷ்ட தெய்வம் என்பதும் முக்கியமாயிருக்கிறதே! நம்முடைய மதத்தில் இத்தனை தெய்வங்களைச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் புராணம், ஸ்தோத்ரம், க்ஷேத்ரம் என்று வைத்திருப்பதால் அவற்றில் ஒவ்வொருவனுக்கும் ஏதாவது ஒன்றில் விசேஷப் பிடிப்பு ஏற்படுகிறதே! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

I have to answer another question. Till now I have been talking about philosophy without relating it to any worship of individual God. But in our religion philosophy is linked to the theological issue of worship of God. If one insists that in this matter also one has to follow the traditions of one’s ancestors, the conflict seems to intensify. A Vishistadwaiti does not confine himself to his philosophical stance that a single Divine Power or Paramathma pervades all living beings and even in a state of liberation the individual soul does not merge with the Supreme Being but remains in a state of supplication and devotion with the awareness that it is also an aspect of the Supreme Soul or Paramathma. He further states that this Supreme Being is Vishnu and not Siva. He is of such colour and He has so many hands and He should be bedecked and worshipped. Similarly the Saiva Siddhanti also takes another philosophical stance. Though it is closer to Adwaita than Visishtadwaita the complete confluence stated by Adwaita is not there. Because the philosophy is itself called Saiva Siddhanta, he does not talk generally of a Supreme Being. He states that this Supreme Being is Siva and not Vishnu. He gives attributes certain characteristics to Him and states that Abhishekams should be constantly performed to Him as a form of Worship. Though the Adwaiti is supposed to worship the Supreme Being in all forms without any distinction, practically in many Smaarta families, who are Advaitis, traditionally there has been either Siva worship or Salagrama worship of Vishnu or Ambal worship. I had stated that the traditions should be followed as handed down by the ancestors whatever may be one’s philosophical conviction. But a doubt arises because the worship of a form and a God dear to our heart is very important to us and our religion speaks of numerous Gods and there are Puranas, Slokas, and Kshetras for each of them and each individual is attracted towards one particular God. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

3 replies

  1. This is exactly my predicament! has Mahaperiava in his infinite wisdom given a solution to this?!

Leave a Reply

%d bloggers like this: