Periyava Golden Quotes-539

“சில ஸமயாசாரங்களே கொஞ்சம் ‘லீனியன்ட்’டாக இருந்து கொண்டு, மனஸைக் கட்டுப்படுத்துவதற்கு அவசியமான ஆசார அநுஷ்டானங்களை கொஞ்சம் விட்டுக்கொடுத்து விடுகின்றனவே! காயக் காய உபவாஸமிருந்தால்தான் கர்மா போகும்; வயிற்றிலே ஆஹாரமில்லாமலிருந்தால்தான் நன்றாகப் பிராணாயாமம், த்யானம் பண்ண முடிகிறது என்று பார்த்தால் கோவிலேயே ‘திருப்பக்ஷி’ (‘திருப்பள்ளி எழுச்சி’ என்பதுதான் இப்படியாயிருக்கிறது!) என்று அக்கார அடிசிலும், புளியோதரையும், ததியோரையும் போடுகிறார்களே! ப்ரஸாதமானதால் “வேண்டாம்” என்றாலும் தோஷமாகுமே”! என்றால் … பரவாயில்லைப்பா! அதைச் சாப்பிடு. உன் மனஸு பகவானுக்குத் தெரியும். உனக்குச் சாப்பாட்டில் ஆசையில்லாவிட்டாலுங்கூட, அது வேண்டாம் என்றே இருந்தாலும்கூட, பகவான் பிறப்பித்தபடி நமக்கென்று ஏற்பட்ட பெரியார்கள் பண்ணி வைத்த வழிக்கு அடங்கி நடக்க வேண்டுமென்றுதான் பிரஸாதத்தைச் சாப்பிடுகிறாய் என்பது ஸ்வாமிக்குத் தெரியும். அந்த மனப்பான்மையை மெச்சியே அவன் வெறும் வயிற்றில் செய்யும் த்யானத்தினால் ஏற்படுகிற பலனைக் கொடுத்து விடுவான். ப்ராணாயாமம் என்று நீயாகப் பண்ணுவதை பகவானின் கிருபை பண்ணிவிடும். அல்லது ப்ரஸாதத்தை வாங்கிக் கொள்; ஆனால் உடனேயே சாப்பிடாமல், வீட்டுக்கு எடுத்துக் கொண்டுபோய் உன் தியானம் முடிந்தபின் சாப்பிடு. பூர்வாசாரத்தை விடப்படாது என்ற உறுதியிருந்தால் எப்படியாவது ‘அட்ஜஸ்ட்’ பண்ணிக் கொண்டுவிடலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Some religious traditions themselves are lenient, giving up some of the traditional practices which are essential for the control of the mind. If fasting is observed scrupulously, Karma will disappear. Pranaayaama (Breath control) and Dhyaana (meditation) are easy to practice when the stomach is empty. But in the name of Thirupakshi (nothing but a colloquial form of Thiruppalli Ezhuchchi, the ritual awakening of god performed daily) delicious naivedhyam (holy food offered to God) like akkaara adisal, puliyodharai, and dadhiyorai are distributed. If one is not in a position to refuse this naivedhyam because it will be sinful to do so and is in a state of dilemma, then a consoling explanation is offered. “Do not worry…have the naivedhyam…God knows the true nature of your heart…even if you do not have any desire to eat these offerings and want to refuse them….God knows that you are having this naivedhyam obeying the traditions laid down by your ancestors…they formed these traditions according to Divine dictates. God will appreciate such attitude of yours and grant you all those blessings which will accrue the benefits of meditating on an empty stomach. What is achieved by your practice of praanaayaamam will be given to you by Divine grace. Otherwise you receive the naivedhyam. But eat it after going home and performing your daily meditation. “If one is firm on not giving up the ancestral traditions, there are many adjustments to make it possible.” – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi SwamigalCategories: Deivathin Kural, Golden Quotes

Tags:

1 reply

  1. Deivathin Kural is the book that answers all the questions, clears all the doubts (of a spiritual seeker) about sanathana dharma (Hinduism).

Leave a Reply

%d bloggers like this: