பூர்வாசாரத்தை விடலாமா என்று கேட்கிறவர்களின் இன்னொரு கேள்விக்குப் பதில் சொல்லியாக வேண்டியிருப்பதால் முடியவில்லை. இதுவும் நானே சொல்லிக்கொடுத்ததை வைத்துக்கொண்டு என்னையே வளைக்கிற கேள்விதான்!
நம்முடைய பூர்விகர்கள் என்று எட்டு, பத்து, இருபது தலைமுறைகளாகச் செய்து வருவதை இப்போது நாம் பூர்வாசாரமென்று சொல்லி அதைத்தான் அநுஸரிக்க வேண்டுமென்கிறோம். அவர்களுக்கு முந்தி இன்னம் அநேகத் தலைமுறைகளுக்கு முன்னாலிருந்த ‘பூர்விகப் பூர்விகர்’கள் செய்து வந்ததையும் இவர்கள் செய்து வந்ததையும் பார்த்தாலோ அதற்கு இது கொஞ்சம் மாறுதலாகவும், சிலதைக் கூட்டியும் குறைத்தும் காணப்படுகிறது. நானே சொன்ன விஷயந்தான்; அதாவது ஆயிரம் வருஷத்துக்கு முந்தி வரையில் ஸ்மார்த்த ஆசாரம் என்பதுதான் பொதுவாயிருந்து வந்திருக்கிறது. அப்புறம் தான் பல ஸம்ப்ரதாயங்கள் ஏற்பட்டு, ஆசார அநுஷ்டானங்களில் மாறுதல், கூடுதல், குறைதல் பண்ணியிருக்கிறது. அதற்கு அப்புறம் இந்தப் பிரிவுகளுக்கென்று அதனதன் ஆசார்ய புருஷர்கள் செய்த இந்தப் புதிய ஆசாரங்கள் (புதுசு என்றால் முழுக்கப் புதுசு இல்லை. முக்கால்வாசி பழைய வைதிகாசாரமாக இருப்பதுதான்; கால்வாசி வித்யாஸமாயிருக்கும் – இப்படிப்பட்ட ஆசாரங்கள்) தலைமுறை தலைமுறையாக வந்து இதுகளும் உறுதிப்பட்டுவிட்ட ஸமயாசாரங்களாக இப்போது ஆகிவிட்டிருக்கின்றன. “இப்போது இந்த ஸமயாசாரங்களையும் யாரும் மீறக் கூடாது என்கிறீர்கள். அது ஸரி. ஆனால் பொதுவான ஸ்மார்த்த ஸம்பிரதாயத்திலிருந்து ஒரு பிரிவாக ஒன்றை வைத்தபோது அந்தந்த ஆசார்ய புருஷர்களே அதுவரையிருந்த பூர்வாசாரத்தில் மாறுதல்கள் பண்ணித்தானேயிருக்கிறார்கள்? அப்போது அவர்களே பூர்வாசாரப்படி ‘ஸ்ட்ரிக்ட்’டாகப் பண்ணவில்லை என்றுதானே ஆகிறது?” இதற்கு மேலே இன்னொன்று என்னை நன்றாக மடக்குகிறதாகக் கேட்கலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்
I have to answer another question raised by those who seek to know whether they can give up their ancestral traditions. This question based on my own statement, is also an attempt to corner me. We state that we have to follow the traditions based on what was practiced by our ancestors ten to twenty generations ago. But if we look at what was followed by still many more generations earlier there are some differences and some features have been added or given up. This was also stated by me. Around a thousand years back, only the Smaartaa tradition was common to everyone. Only at a later stage, some changes occurred with some additions or deletions. The rules and regulations laid down by the Aacharyas of these sects were not entirely new. Most of the Vedic traditions were common and only around 25% of the regulations were different. These new rules have also developed the strength of traditions after having been followed by many generations. The question arises because I state these ancestral traditions must be strictly followed. But when a deviation occurred from the old Smaartaa traditions, the Aacharyas who made these changes themselves deviated from the traditions which meant that they were not strictly following the traditions. Another question may be raised to corner me. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
தானே வாதியாகவும், பிரதிவாதியாகவும் (சில சமயம் விதண்டாவாதியாகவும் கூட) இருந்து கொண்டு, அவ்ர்கள் கேள்விகளையும் தானே கேட்டுக்கொண்டு, பதில்களையும் அளித்துக்கொண்டு, அத்தனை பிரதிவாதங்களையும் தவிடு பொடியாக்கி நம் மத ஆசாரங்களையும் வேத சாஸ்த்ரங்களையும் உறுதிப்படுத்தும் இந்த அவதாரம், ஆதிசங்கரர் அல்லாது வேறு யாராக இருக்க முடியும் ? சங்கரா!
Jaya Jaya sankara Hara Hara Sankara. Janakiraman.Nagapattinam