Periyava Golden Quotes-551

இப்போது குலாசாரமாக எது வந்திருக்கிறதோ அதன்படியே பண்ணு; அதோடு கூட உனக்கு இஷ்டமானதாகவும் ஆதி வைதிகாசாரத்துக்கு விரோதமில்லாமல் எது இருக்கிறதோ அதையும் சேர்த்துக் கொள். அப்பா, தாத்தா பண்ணின மாதிரியே சிவ பூஜையோ, விஷ்ணு பூஜையோ பண்ணு. அதோடுகூட உன் இஷ்டதேவதை எதுவோ அதையும் சேர்த்துக் கொள்ளு. முடியுமானால் பஞ்சாயதன பூஜையாகவே பண்ணு. உன் இஷ்ட தேவதைக்குக் கொஞ்சம் ஜாஸ்தி அர்ச்சனை, அபிஷேகம், அலங்காரம் வேண்டுமானால் பண்ணிக் கொண்டு போ. எப்படியானாலும் இப்போது உனக்கு வாய்த்திருக்கிற குலாசாரத்தை விடாதேயப்பா! அதற்கு கௌரவம் கொடுத்து ரக்ஷிக்காமலிருக்காதேயப்பா! இந்த ஸம்பிரதாயத்துக்கு ஆசார்ய புருஷர்களாக வந்தவர்கள் தங்களுக்கு முன்னேயிருந்த பதினாயிரங்கால ஏற்பாட்டில் வித்யாஸங்களைக் கொண்டு வந்திருக்கிறார்களேயென்று அவர்களைக் கண்டனம் செய்யாதே, மரியாதைக் குறைச்சலாகப் பேசாதே, அவர்களை இந்தக் கால ரிஃபார்மர்களோடு சேர்த்து வைத்துவிடாதே. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

Follow what has been handed over to you as a family tradition.  Simultaneously also follow what is dear to your heart. But this should not violate the basic Vedic traditions.  Perform Vishnu Pooja or Siva Pooja as your father or grandfather did.  Worship your favorite deity along with this Pooja. If possible, perform Panchayatana Pooja itself. If you so desire you can worship your favorite deity by performing more of Abhishekam, Alankaram or Archana. However it may be, do not give up the worship of your ancestors. Continue to cherish and honor it.  Do not condemn the great Aacharyas who formulated these traditions because they had made some deviations from the ancient traditions. Do not be disrespectful towards them. Do not equate them with the modern reformers. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: