Periyava Golden Quotes-544


“எந்த ஸித்தாந்தமானாலும் உன் நம்பிக்கைப்படி வைத்துக்கொள்ளு, அதற்காகக் குலாசாரத்தை மாற்றாதே என்று சொன்னீர்கள். ஸரி. ஆனால் நமக்கு மூர்த்தி உபாஸனை, இஷ்ட தெய்வம் என்பதும் முக்கியமாயிருக்கிறதே! நம்முடைய மதத்தில் இத்தனை தெய்வங்களைச் சொல்லி, ஒவ்வொன்றுக்கும் புராணம், ஸ்தோத்ரம், க்ஷேத்ரம் என்று வைத்திருப்பதால் அவற்றில் ஒவ்வொருவனுக்கும் ஏதாவது ஒன்றில் விசேஷப் பிடிப்பு ஏற்படுகிறதே! பூர்விகர் ஆசாரப்படிதான் செய்ய வேண்டும் என்பதை மாற்றிச் சொல்லலாமா? இல்லாவிட்டால் இவர்கள் ரொம்பவும் மனஸு நொந்து கஷ்டப்படுவார்கள் போலிருக்கிறதே! இவர்கள் நாஸ்திகர்களாகப் போகவில்லை. பூஜை பண்ணமாட்டோமென்று சொல்லவில்லை. நம் மதத்திலேயே சொல்லியிருக்கிற ஸ்வாமிகளில் ஒன்றைத் தான் பூஜிக்க ஆசைப்படுவதாகச் சொல்கிறார்கள். இவர்களை இன்ன குலத்தில் ஈஸ்வரன் பிறப்பித்ததால் இவர்கள் அதில் முன்னே இருந்தவர்கள் எப்படிச் செய்தார்களோ அப்படித்தான் செய்ய வேண்டும் என்று கட்டாயப்படுத்திச் சொல்லலாமென்றால், அதே ஈஸ்வரன் தானே இவர்களுக்குத் தன்னுடைய வேறு ஒரு மூர்த்தியில் விசேஷ பக்தியை உண்டு பண்ணியிருக்கிறான்? ஆகையால், “கர்மா-பக்தி-ஞானம் என்று வருகிற மூன்றில் மற்ற சாஸ்திர கர்மாக்களைப் பூர்வாசாரப்படி பண்ணு! பக்தி மட்டும், பக்தி கர்மாவான பூஜையை மட்டும் உன் இஷ்ட தேவதைக்கே பண்ணப்பா! ஞானம் என்ற ஸித்தாந்த ஸமாசாரத்தைத்தான் முன்னேயே சொல்லியாச்சு” என்று பதில் சொல்லி விடலாமா? இதுவும் ஸமாதானப்பட மாட்டேன் என்கிறது. மற்ற சாஸ்திர கர்மா, பக்தி கர்மா என்று பிரிக்க முடியாமல் சேர்த்துப் பிசைந்தல்லவா வைத்திருக்கிறது? – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்

You had told us that whatever be your philosophical conviction follow it but do not give up your traditions. A doubt arises because the worship of a form and a God dear to our heart is very important to us and our religion speaks of numerous Gods and there are Puranas, Slokas, and Kshetras for each of them and each individual is attracted towards one particular God. A doubt arises because the worship of a form and a God dear to our heart is very important to us and our religion speaks of numerous Gods and there are Puranas, Slokas, and Kshetras for each of them and each individual is attracted towards one particular God. Can we answer such queries by asking people to give up the traditions of their ancestors? Otherwise these people may suffer and break their hearts. They do not want to become atheists. They do not want to give up divine worship. They only want to worship a God who also belongs only to our religion. If we compel them to follow the traditions of their ancestors stating that it is by Divine Will they have been born into this particular family, is it not the very same God who has imbued them with Bakthi on a different form of His own self? So in the triad of Karma, Bakthi. and Gnanam (Action, Devotion, and Knowledge) can we ask them to perform the rituals according to traditions but in the matter of devotion follow the dictates of their own hearts and worship the Ishta Devathaa, the matter of Philosophical conviction having been already discussed in detail? This does not seem convincing either. Saastra karma and Bakthi Karma (ritualistic practices and devotional practices) have been made inseparable in our religion. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s

%d bloggers like this: