Golden Quotes

Periyava Golden Quotes-101

  உபநயனத்தோடு காயத்ரீ தீர்ந்தது, மறுநாளிலிருந்தே கிரிக்கெட்டும், ஸினிமாவும், கட்சி மீட்டிங்குந்தான் என்று ஆகிவிடாமல் உபநயனப்பிள்ளை தொடர்ந்து ஸந்தியாவந்தனம் செய்யும்படியாக மாதாபிதாக்கள் கண்டிப்புடன் பார்த்துக் கொள்ள வேண்டும். அவர்களே கிளப், ஸினிமா, மீட்டிங், ரேஸ் என்று போகிறபோது நான் சொல்வது என்ன பலன் தரும் என்று எனக்கே தெரியவில்லை. தாங்கள்தான் வீணாகப் போயாயிற்று, குழந்தைகளாவது உருப்படட்டும்… Read More ›

Periyava Golden Quotes-100

குழந்தைக்கு உடம்புக்கு [நோய்] வந்தால் மருந்து வாங்கித் தராமலிருந்தால் எத்தனை தப்போ, அதைவிடத் தப்பு உரிய வயசில் உபநயனம் பண்ணி அவனுக்கு ஆத்ம க்ஷேமமாகவும் அவன் மூலமாக லோகத்துக்கு க்ஷேமமாக இருக்கிற காயத்ரீ உபதேசத்தைக் கொடுக்காமலிருப்பது. வெறும் ஜம்பத்துக்காக இப்போது பூணூல் என்றால் அதை ஒரு குட்டிக் கல்யாணம் போலப் பண்ணுவது என்று வைத்துக் கொண்டு… Read More ›

Periyava Golden Quotes-99

வேதத்தை ஸ்வீகரிப்பதற்கு ஒருத்தனை அர்ஹனாக்கி [அருகதை உள்ளவனாக்கி அதன் மூலம் லோகம் முழுவதற்கும் நல்ல திவ்ய சக்திகளைப் பரப்புகிற பரம ச்ரேஷ்டமான கர்மாவான உபநயனத்தின் பெருமையை அறிந்து அதை உரிய காலத்தில் பண்ண வேண்டும். த்வி-ஜன்-இருபிறப்பாளன்-எனப்படும் பிராம்மண, க்ஷத்ரிய, வைச்யர்கள் லோகோபகாரமான இரண்டாவது பிறப்பை அடைவது அவர்கள் எப்போது வேதத்தைக் கற்கத் தகுதி பெறுகிறார்களோ அப்போதுதான்…. Read More ›

Periyava Golden Quotes-98

வேதாத்யயனம் செய்யும்பொழுது அந்த அந்தக் காண்டத்துக்கு ஏற்பட்ட தனி நியமத்தோடும் பிரம்மச்சரியத்துக்கு ஏற்பட்ட தனி நியமத்தோடும் பண்ணினால் தான் மந்திர ஸித்தி உண்டாகும். நாம் ஒன்றும் பண்ணுவதில்லை. “உபயோகம் இல்லை” என்று மட்டும் சொல்லுகிறோம். கல்யாணத்துக்கு முன்பு ‘வ்ரதம்’ என்று ஒரு பெயர் வைத்து ஒரு மணி நேரத்துக்குள் எல்லா ஸம்ஸ்காரங்களையும் சுருக்கி அர்த்தமே தெரியாமல்… Read More ›

Periyava Golden Quotes-97

எல்லாரும் தம் தம் வேதத்தையும் வித்தைகளையும் அத்தியயனம் பண்ண வேண்டும். ஆவணி அவிட்டம் வருகிறது. அன்று உபாகர்மா பண்ணுகிறோம். அன்று வேதத்தில் புது பாகம் ஆரம்பித்துக் கொள்ள வேண்டும். தை மாஸம் பூர்ணிமையில் உத்ஸர்ஜனம் [முடித்தல்] பண்ண வேண்டும். ஆவணி மாதத்தில் ஆரம்பித்துத் தை மாதத்தில் விட்டுவிட வேண்டும். அதாவது ஏறக்குறைய தக்ஷிணாயன ஆறு மாதத்தில்… Read More ›

Periyava Golden Quotes-96

எந்த மந்திர ஸித்திக்கும் நியமம் அவசியம் வேண்டும். ஆத்மா கடைத்தேறுவதற்கு மந்திரமயமான வேதம் இருக்கிறது. அதைப் பாடம் பண்ணுவதற்கு ஒரு நியமம் வேண்டும். வேத ஸமூஹம் முழுவதற்கும் ஏற்பட்ட இந்த நியமமே பிரம்மச்சரியமாகும். இது தவிர, வேத பாகம் ஒவ்வொன்றுக்கும் தனித்தனி நியமங்கள் இருக்கின்றன. அவ்வளவுக்கும் சேர்த்து மொத்த விரதம் பிரம்மச்சரியம். தனித்தனி பிரிவுக்குத் தனித்தனி… Read More ›

Periyava Golden Quotes-95

ப்ரம்மச்சரியம் என்பது வேதாத்தியயனம் பண்ணுவதற்காக ஏற்பட்ட ஒரு தீக்ஷை. அதற்குப் பூர்வாங்கமாக ஏற்பட்ட ஒரு காரியம் உபநயனம். பரிஷேசனம் என்று ஜலத்தால் சாதத்தைத் தெளிப்பது எதற்கு? அது போஜனத்திற்கு அங்கம். சாதத்தை அப்படியே சாப்பிட்டு விடக்கூடாது. ஈச்வரப் பிரஸாதமாக்கிச் சாப்பிட வேண்டும் என்றே முதலில் அதன் மேல் ஜலம் தெளிக்கிறோம். இப்படிச் செய்துவிட்டு சாப்பிடாமல் இருந்தால்… Read More ›

Periyava Golden Quotes-94

உபநயனம் பூர்வாங்கம். அங்கம் என்றால் பிரதானம் ஒன்று வேண்டும். பிரதானத்திற்கு அங்கி என்று ஒரு பெயருண்டு. உபநயனம் என்ற அங்கத்துக்கு அங்கியாக இருப்பது ப்ரஹ்மச்சர்யம். ப்ரஹ்மச்சர்யம் என்ற இடத்தில் ப்ரஹ்ம என்பதற்கு வேதம் என்பது அர்த்தம். வேதத்தை மனப்பாடமாகக் கற்று ஸ்வாதீனப்படுத்தவே ஒரு ஆசிரமம் ஏற்பட்டிருக்கிறது. அதுதான் ப்ரஹ்மச்சர்யம். அதற்கு பூர்வாங்கம் உபநயனம். அந்த ஆசிரமத்துக்கு… Read More ›

Periyava Golden Quotes-93

உப-சமீபத்தில், நயனம் – அழைத்துக் கொண்டு போகிறது. யாருக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறது? ஒருவனை குருவுக்கு ஸமீபத்தில் அழைத்துக் கொண்டு போகிறதுதான் உபநயனம். குரு யார்? வேதவித்துக்கள். உபநயனம் பிரம்மச்சரியத்துக்கு ஆரம்பம். அதன் முடிவு ‘ஸமாவர்த்தனம்’, உபநயனம் முதல் ஸமாவர்த்தனம் வரையில் இருப்பது ப்ரஹ்மச்சரியம். ஸமாவர்த்தனம் என்றால் திரும்பி வருகிறது என்று அர்த்தம். ஒரு இடத்துக்குப் போனால்தான்… Read More ›

Periyava Golden Quotes-92

குழந்தையாயிருந்தவனுக்கு அறிவு வந்து, தானே மந்திரங்களைச் சொல்கிற சமயத்தில் உபநயனம் நடக்கிறது. “பிக்ஷாசர்யம் சர” (பிக்ஷை எடு) என்று இந்தச் சடங்கில் சொன்னால் பூணூல்காரப் பையன் “பாடம்” ( baad `ham) (அப்படியே செய்கிறேன்) என்கிறான். அதனால் இவனுக்கு உபநயனத்துக்கு முன்பே “பிக்ஷாசர்யம் சர” என்று சொன்னால் அதைப் புரிந்து கொள்வதற்கான ஸம்ஸ்கிருத ஞானம் இருக்க வேண்டும். ஐந்து… Read More ›

Periyava Golden Quotes-91

ஜகத்துக்குத் தாயாகவும் கருணையுடையவளாகவும் இருக்கும் பரதேவதையிடம் பக்தி இருக்க வேண்டும். எப்படி குழந்தைக்கு வேண்டியதைத் தாய் தருவாளோ அப்படி அம்பிகை லோகத்தில் வித்தை, செல்வம் முதலியவைகளை அடையச்செய்து பின்பு தானாகப் பழுத்துப் பரமானந்தத்தைப் பெறும்படி அனுக்ரஹம் செய்வாள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் We should have devotion towards the ‘Paradevatha’… Read More ›

Periyava Golden Quotes-90

விவாஹ காலத்தில் அம்பாளை அவசியம் ஆராதிக்க வேண்டும். ருக்மணி ஸ்ரீகிருஷ்ணன் பர்த்தாவாக வரவேண்டுமென்று அம்பிகையை ஆராதித்தாள். அம்பிகையின் ஆராதனத்தால் பதிபக்தியும் குருபக்தியும் உண்டாகிறது. அதற்காகத்தான் ருக்மணி பூஜை செய்தாள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் We should worship ‘Ambal’ during marriage time. Rukmini worshipped Ambal that Krishna should… Read More ›

Periyava Golden Quotes-88

சாங்க்ய சூத்திரத்தில் ஈஸ்வரன் மூன்று கண் உள்ளவன் என்று சொல்லப்பட்டிருக்கிறது. அமரமும் அப்படியே சொல்லுகிறது. லோகத்தில் ஈஸ்வரன் என்ற சப்தம் சிவனுக்கே வழங்கப்படுகிறது. அவன் மஹாபுருஷன், ப்ரம்ம சூத்திரத்தில் ‘சப்தாதேவப்ரமித’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஈசானன் என்னும் சப்தத்திற்கு எது அர்த்தமோ அதுதான் பரமேஸ்வர ஸ்வரூபம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் In ‘Sankya… Read More ›

Periyava Golden Quotes-89

நம்முடைய ஆசார்ய ஸ்வாமிகள் ப்ரச்நோத்தர ரத்ன மாலிகா என்ற க்ரந்தத்தில் ஒரு கேள்வி கேட்கிறார். ‘கோ ப்ராம்மணை ருபாஸ்ய:?’ ‘காயத்ரி அர்க்காக்னி கோசர: சம்பு:’ எந்த வஸ்து காயத்ரி, அக்னி, அர்க்கன் (சூரியன்) என்னும் மூன்றிலும் ப்ரகாசிக்கிறது? சிவன் தான். காயத்ரியின் பரம தாத்பர்யமாயிருப்பவர் அவரே. சூரியனிடத்தில் பிரகாசிப்பவரும் அவர் தான். ஸ்ரீருத்ரத்தில் பரமேஸ்வரன் அக்னி… Read More ›

Periyava Golden Quotes-87

பரமேஸ்வரன் ஓங்காரம், ஸ்வரூப ப்ரம்மமும் ஓங்காரந்தான். அதனுடைய அர்த்தத்தை விவரிக்கும் ஓர் உபநிஷத்தே தனியாக இருக்கிறது. அதற்கு ‘மாண்டூக்யோபநிஷத்’ என்று பெயர். அதில் ‘சாந்தம் சிவம் அத்வைதம் சதுர்த்தம் மன்யந்தே’ என்று சொல்லப்பட்டிருக்கிறது. சிவஸ்வரூபம் தான் பரப்பிரம்மம். ப்ரதோஷ காலத்தில் ஈஸ்வர தரிசனம் செய்ய வேண்டும். ஈஸ்வரன் கோயிலில் ப்ரதோஷ காலத்தில் எல்லாத் தேவர்களும் வந்து… Read More ›

Periyava Golden Quotes-86

பரமேஸ்வரனுடைய கீர்த்தியை நாம் வாக்கினால் சொல்லுவதனாலும், கேட்பதனாலும் பவித்திரர்களாக ஆகிறோம். அவருடைய ஆக்ஞையை யாரும் மீறமுடியாது. அகம்பாவமாக இருக்கும்போது அவர் சிக்ஷிக்கிறார். குழந்தைகள் ஏதாவது தப்பு செய்தால் நாம் அடிக்கிறோம். அதுபோல பரமேஸ்வரன் தேவதைகளை சிக்ஷித்தார். ஹாலஹால விஷம் பாற்கடலில் உண்டானபொழுது அதைச் சாப்பிட்டு ரக்ஷித்தார். சகல தேவதைகளும் பரமேஸ்வரனுடைய குழந்தைகள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர… Read More ›

Periyava Golden Quotes-85

வேதத்திலிருப்பதை எல்லோருக்கும் நன்றாக விளங்க வைப்பது பதினெட்டு புராணங்கள். பதினெட்டு உப புராணங்கள் வேறே இருக்கின்றன. பதினெட்டு புராணங்களும் சேர்ந்து நான்கு லட்சம் கிரந்தம். ஒரு கிரந்தம் என்பது 32 எழுத்துக்கள் கொண்டது. பதினெழு புராணங்கள் மூன்று லட்சம் கொண்டவை. மிகுதியுள்ள ஒரு லட்ச கிரந்தம் ஸ்காந்த புராணம். பரமசிவனைப் பற்றிச் சொல்பவை பத்து புராணங்கள்,… Read More ›

Periyava Golden Quotes-84

நாமாவும் ரூபமும் இல்லாத மதம் நமது மதம். பேர் ஏன் இல்லை? அடையாளம் ஏன் இல்லை? மற்ற மதங்களுக்கெல்லாம் இருக்கிறதே என்று ஒரு சமயம் யோசித்துப் பார்த்தேன். அப்புறம் எனக்கு நிரம்ப சந்தோஷமாக இருந்தது. பேரில்லாமல் இருப்பது ஒரு கௌரவம் என்பது ஏற்பட்டது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் Our religion has… Read More ›

Periyava Golden Quotes-83

சர்வ ஜகத்தும் பரமேச்வரனுடைய சரீரம். அதற்கு அப்படியே கவசம் மாதிரி இருப்பது அம்பிகை சரீரம். அப்படி இருக்கும்படியான நிலையில் பஞ்சபூதங்களுக்கும் மேலே மனசு என்று ஒன்று இருக்கிறதே அதுவும் நீதான். ஆகாசமும் நீதான். அக்னியும் காற்றும் ஜலமும் பூமியும் நீதான். நீயே எல்லா ஸ்வரூபமாகவும் ஆகியிருக்கிறாய். கொஞ்சம் கொஞ்சம் எங்களிடத்திலிருக்கும்படியான ஞானம், ஆனந்தம் எல்லாவற்றுக்கும் ஆதாரமாக… Read More ›

Periyava Golden Quotes-82

குழந்தைகளுடைய எண்ணப்படி பழைய காலத்திலிருந்து ஸ்வாமியாக எண்ணப்பட்டு வந்தவர் உமாமகேஸ்வரர் என்பது தெரிகிறது. குழந்தைகளால் சொல்லப்படும் ஒரு விஷயத்துக்குப் பெருமை அதிகம். குழந்தை தான் தெய்வம். அவர்களிடத்தில் காமக் குரோதங்கள் இல்லை. ‘குழந்தையாக இரு’ என்று உபநிஷத் சொல்லுகிறது. அதற்கு மோச எண்ணம் இல்லை. கபடம் இல்லை. அவைகளெல்லாம் இல்லாதபோது வருவதுதான் உபநிஷத், உபநிஷத்தும் குழந்தையினுடைய… Read More ›