Golden Quotes

Periyava Golden Quotes-51

உபகாரம் செய்வதன் பயனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் ஆகியன உண்டாக வேண்டும்.  – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் The act of helping others should result in simplicity, humility, abolition of ego and pride for us. – Sri Kanchi Maha Periyava

Periyava Golden Quotes-50

தேகம், மனம், சாஸ்திரம், க்ஷேத்திரம், தீர்த்தம் முதலிய பல சௌகரியங்கள் இந்த உலகத்தில் தான் நமக்குக் கிடைக்கும். நாம் வாக்கினாலும், மனத்தினால், கை கால் முதிலியவற்றாலும் பாபம் செய்து கொண்டே இருக்கிறோம். அந்தப் பாவங்களையெல்லாம், வாக்கையும், மனசையும் அவையவங்களையும் கொண்டே புண்ணியம் செய்து கரைத்திட வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள் மொழிகள்… Read More ›

Periyava Golden Quotes-49

பண விஷயத்தில் மட்டுமல்ல, வார்த்தைகளை உபயோகிக்கும் போது கூட ஒரு சொல் கூட அதிகமாகப் பேசக் கூடாது. அளவாக கணக்காகப் பேச வேண்டும். நமக்கும் சரி, நம் பேச்சை கேட்கிறவர்களுக்கும் சரி, பொழுது மிச்சமாகும். வள வள வென்று பேசாமல் சுருக்கமாக பேசக் கற்றுக் கொண்டால், புத்தியில் ஒரு தீக்ஷண்யமும், வாக்கில் ஒரு பிரகாசமும் உண்டாகும்…. Read More ›

Periyava Golden Quotes-48

கோடி கோடி மக்கள் வீணாகப் போனாலும் ஒருவன் பூர்ணத்துவம் அடைந்து விட்டால் அதுதான் நம்முடைய மதத்தின் ப்ரயோஜனம். அவன் ஒருவன் அனுக்ரஹகத்தாலேயே உலகம் க்ஷேமமடையும். அப்படிப்பட்ட ஒருவன் உண்டாவதற்காகத்தான் நாம் பிரச்சாரங்களைச் செய்கிறோம். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் Crores and Crores of people may go astray but atleast one… Read More ›

Periyava Golden Quotes-47

மீனாக்ஷி என்ற பெயரிலேயே மீன் இருக்கிறது. இதனால் அவளைத்தான் கடாக்ஷத்தாலேயே ஞான தீக்ஷை தந்துவிடும் குருவாகச் சொல்லிருக்கிறார்கள். இது மத்ஸ்ய தீக்ஷை. காமாக்ஷி, பக்தனை ஸ்பரிஷித்து அவன் தலையிலே பாதத்தை வைத்து ஞானியாக்கி விடுபவள். ஞான குரு ரூபிணியாகவே அம்பாளைப் பாவித்துத் திருவடி தீக்ஷை வேண்டுகிறோம். காசியில் இருக்கும் விஷாலாக்ஷி, பக்தர்களை அனுக்ரஹ சிந்தனையோடு மனதால்… Read More ›

Periyava Golden Quotes-46

ஓரிடத்தில் ஆபரணம் எதுவுமின்றி இயற்கை எழிலுடன் ஈசன் பிக்ஷாண்டார் மூர்த்தியாகத் திருக்கோலம் கொள்கிறார். மற்றொரு புறம் அழகே உருக்கொண்ட சுந்தரே ஸ்வரராக அவர் காட்சியளிக்கிறார். அதே கடவுள் பயமுள்ளவர்களுக்குப் பயத்தைப் போக்கி அபயத்தை அளிக்கும் பைரவ மூர்த்தியாகத் தோன்றுகிறார். வீரத்தைக் காண்பிக்கும் நிலையில் அவரே வீரபத்திரராகவும் காட்சியளிக்கிறார். தேவர்கள் விரும்பிய ஆனந்தத்தைக் கொடுக்க சிற்சபையில் அந்த… Read More ›

Periyava Golden Quotes-45

நாம் நான்கு வழிகளில் பாவங்கள் செய்கிறோம். உடலினால் தீய காரியங்கள் செய்வது, வாயினால் பொய் பேசுவது, சொல்லத் தகாத வார்த்தைகளை சொல்வது, மனதில் கெட்ட எண்ணங்களை நினைப்பது, பணத்தின் மூலம் பாவச் செயல்களைச் செய்வது. இந்த நான்கின் மூலமாகவே நன்மை செய்ய நாம் பழக வேண்டும். மற்றவர்களுக்கு உபகாரம் செய்வதற்கோ, கடவுளுக்கு தொண்டு செய்வதற்கோ உடலைப்… Read More ›

Periyava Golden Quotes-44

காசிக்கும் காஞ்சிக்கும் ஒரு எழுத்துதான் வித்தியாசம். இரண்டும் முக்தி க்ஷேத்ரங்கள். தென்னிந்தியர்கள் வடக்கே க்ஷேத்ராடனம் செல்கிறார்கள். வடக்கே உள்ளவர்கள் தெற்கே வருகிறார்கள். அந்த வடஇந்தியர்கள் அப்போது காமாட்சியை தரிசனம் செய்வதோடு அம்பிகையின் சஹோதரரான வரதராஜரையும் தரிசனம் செய்யாவிட்டால் யாத்திரைக்குப் பலனில்லை. தென்னிந்தியர் காசிக்குச் செல்லும் போது ஸ்ரீ ஜகன்னாத க்ஷேத்திரமான பூரிக்கும் சென்று அப்பெருமானைத் தரிசனம்… Read More ›

Periyava Golden Quotes-43

வேத அத்யயனம், யோகம், த்யானம், பூஜை இவற்றைக் கஷ்டப்பட்டு அப்யாசம் செய்வதால் கிடைக்கும் ஈஸ்வரானுபவத்தை தெய்வீகமான சங்கீதத்தின் மூலம், நல்ல ராக, தாள ஞானத்தின் மூலம் சுலபமாகப் பெற்று விடலாம். இப்படி தர்ம சாஸ்திரம் என்னும் ஸ்ம்ருதியைத் தந்திருக்கும் யாக்ஞவல்க்ய மகரிஷியே சொல்லி இருக்கிறார். வீணா கானத்தை அவர் குறிப்பிட்டு சொல்லி இருக்கிறார். கடுமையானப் பிரயாசை… Read More ›

Periyava Golden Quotes-42

சிவன் கோயிலுக்குப் போனால் மஹாலிங்கம் கிழக்கே பார்த்துக் கொண்டிருப்பார். அவருக்கு ஈசான்ய (வடகிழக்கு) திக்கில் நடராஜா தெற்கே பார்த்துக் கொண்டிருப்பார். ஒரு காலை வேறு தூக்கிக் கொண்டு நிற்பார். அவரை எப்பொழுதும் நாம் ஹிருதயத்தில் தியானம் பண்ணிப் பண்ணி, கொஞ்சம் கொஞ்சமாக அவரை நினைத்து, அந்த ஆனந்தத் தாண்டவமூர்த்தியின் ஸ்வரூபம் மனத்தில் ஸ்புரிக்கும்படி ஆகிவிட்டால் அதைத்தான்… Read More ›

Periyava Golden Quotes-41

பாபத்தை ஒரே க்ஷணத்தில் துவம்சம் பண்ணும் ஒரு வஸ்து உண்டு. இரண்டு எழுத்துக்களாலான ஒரு பெயர் அது. சகல வேதங்களுக்கும் மத்தியில் இருப்பது. அதுவே வேதங்களின் ஜீவரத்னம். கோயிலில் மஹாலிங்கம் போலவும், தேகத்தில் உயிர் போலவும் அது வேதங்களின் மத்தியில் இருக்கிறது. அதை வாக்கினால் சொல்ல வேண்டும். யார் சொல்ல வேண்டும்? மனிதனாகப் பிறந்தவன் சொல்ல… Read More ›

Periyava Golden Quotes-40

பயமும் அபயமும் ஒன்றுக்கொன்று எதிரானது. அதனால் பயத்தின் ஸ்தாபனம் மோக்ஷதிற்கு எதிராக இருக்க வேண்டும். மோக்ஷம் என்றால் ‘விடுபட்ட நிலை’. அதற்கு எதிர் ‘கட்டுப்பட்ட நிலை’. இதைப் ‘பந்தம்’ என்பார்கள். ‘பந்த மோக்ஷம்’ என்று சொல்வது வழக்கம். லோக வாழ்க்கையான சம்சாரம் தான் பந்தம். சம்சார பந்தம் என்று சேர்த்தே சொல்கிறோமல்லவா?  – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர… Read More ›

Periyava Golden Quotes-39

நாம் உலக ரீதியாக பயன் பெறுவதற்காக கடவுளிடம் பக்தி செலுத்தினால், அது பக்தியாகாது. பண்டமாற்று வியாபாரமாகும். நம்முடைய ஆன்மீக உயர்வுக்காக பக்தி செலுத்தினால், ஒரு நதி சமுத்திரத்தை அண்டும் போது அதன் ஓசையும், வேகமும் அடங்கி சாந்தப்படுவதைப் போல நாமும் சாந்தியை பெறுவோம். தனக்கு வெளியிலே, தன்னைத் தவிர ஒன்று இருப்பதாகக் கருதி, ஆனந்தத்தை தேடி… Read More ›

Periyava Golden Quotes-38

உலகத்தில் பாவம் பண்ணாமல் இருக்கிறவன் யாராவது உண்டா என்றால் குழந்தை அல்லது பைத்தியக்காரன்தான். ஞானிகளின் உயர்ந்த நிலைக்கு உதாரணம் ‘பாலோன்மத்தவத்’ என்று சொல்லுவார்கள். பாலன் என்றால் குழந்தை. உன்மத்தன் என்றால் பைத்தியம். உன்மாதம் என்றால் தலைக்கு மேலே ஏறிப் போகிற பித்தம். உன்மாதத்தை உடையவன் உன்மத்தன். ஈசுவரனுக்கு ‘உன்மத்தசேகரன்’ என்று பெயர். உன்மத்தம் என்றால் ஊமத்தம்… Read More ›

Periyava Golden Quotes-37

நமக்கு ரொம்பப் ப்ரியம் குழந்தைகளிடம்தான். குழந்தையும் தெய்வமும் கொண்டாடுகிற இடத்தில் தான் என்று சொல்வது உண்டு. குழந்தைக்கு அறிவு வளராததனால் காமக் குரோதங்கள் இல்லாமல் இருக்கிறது. அவற்றுக்குக் கோபம் வரும். அழுகை வரும். உடனே இரண்டு நிமிஷத்துக்கெல்லாம் சிரிக்கும்.விளையாடும்.அழுகை, கோபம் எல்லாம் குழந்தைக்கு வேர் ஊன்றுவது இல்லை. அடுத்த க்ஷணம் சந்தோஷமாக விளையாட ஆரம்பித்து விடும்…. Read More ›

Periyava Golden Quotes-36

தீபத்தின் ஒளி எப்படி வித்தியாசம் பார்க்காமல் பிராமணன், பஞ்சமன், புழு, கொசு, மரம், நீர்வாழ் – நிலம் வாழ் விலங்கினங்கள் மீது படுகிறதோ அப்படியே நம் மனதிலிருந்து அன்பு, ஒரு தீபமாக, எல்லோரையும் தழுவுவதாகப் பிராகாசிக்க வேண்டும். இந்த உத்தம்மான சிந்தனையில் தான் சொக்கப்பானை, அண்ணாமலை தீபம் என்றெல்லாம் நம் பூர்வகர்கள் ஏற்பாடு பண்ணியிருக்கிறார்கள். –… Read More ›

Periyava Golden Quotes-35

மோக்ஷம் என்பது செத்துப் போன பிறகு வேறு எந்த லோகத்திற்கோ போய் அனுபவிப்பது அல்ல. கை கண்ட பலனாக இந்த உலகில் இருக்கும் போதே நமக்குக் கிடைக்க வேண்டும். நல்லது செய்தால் நல்லது விளையும். இப்போதெல்லாம் கஷ்டம், சுகம் என்று அழுது கொண்டு இருந்து விட்டு செத்துப் போன பின் மோக்ஷம் கிடைக்கிறது என்பதில் பிரயோஜனம்… Read More ›

Periyava Golden Quotes-34

  கடவுள் நாமத்தை விடாமல் உச்சரிக்க நாவைப் பழக்கப்படுத்த வேண்டும். நாம் விழிப்பு நிலையில் இருக்கும் போது எதை நினைக்கிறோமோ அதையே நாம் கனவில் பார்க்கிறோம். அது போலவே விடாமல் கடவுள் நாமத்தை எப்பொழுதும், எந்த சூழ்நிலையிலும் உச்சரித்துக் கொண்டிருந்தால் மரணத் தருவாயில் தானாகவே கடவுளை அழைக்க முடியும். இல்லையேல் மரணத் தருவாயில் கடவுளை நினைவு… Read More ›

Periyava Golden Quotes-33

உடற்பயிற்சிகள் தேகத்தின் தசைகளை வலுவாக்குவது போல் அடிக்கடி மந்திரங்களை உச்சரிப்பது நம்முடைய நரம்பு, நாடிகளை, பலம் பெறச் செய்கிறது. இதனால் சித்தம் சுத்தி பெற்று, நம்முள் கடவுள் தங்கும் இடம் தூய்மை பெறுகிறது. நடத்தையாலும், ஆசார அனுஷ்டானங்களாலும் தகுதி பெற்றவர்கள் மந்திரங்களை அறிந்து அவைகளைப் பயனுள்ள வகையில் உபயோகிக்கவும், காப்பாற்றவும் முடியும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர… Read More ›

Periyava Golden Quotes-32

ரிஷிகள் தாங்கள் செய்த தவங்களின் பலனை மக்களுக்கு கொடுத்த இடங்களே கோயில்களும், தீர்த்தங்களும். தவம் செய்ய சக்தி இல்லாதவர்களும் பாவத்தை தொலைக்க வருபவர்களும் இக்கோவில்களுக்கு யாத்திரை செய்வதாலும் இத்தீர்த்தங்களில் முழுகுவதிலும் தாங்கள் புனிதமடைவதுடன் மிகவும் புண்ணிய சாலிகளாகவும் ஆகின்றனர். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்   Rishis gave the results of… Read More ›