Golden Quotes

Periyava Golden Quotes-1057

ஜனக மாதாவும், கோமாதாவும் பாலைச் சுரக்கிற மாதிரி, தானியங்கள், (உ)லோஹங்கள், தாதுக்கள் ஆகிய வளங்களையும், இவை எல்லாவற்றுக்கும் மேலாக நீர்வளம் என்பதையும் பூமி சுரக்கிறது. அதனால் தான் பூமாதா என்பது. பசுத்தாய் என்பது போல் புவித்தாய். மிருகமாகத் தெரிகிற பசு, ஜடமாகத் தெரிகிற பூமி ஆகிய எல்லாவற்றிலும் உயிருள்ளதும் அன்பே உருவமானதுமான மாத்ருத்வத்தை –- தாய்த்… Read More ›

Periyava Golden Quotes-1056

கோவை மாதாவாகவே நம்முடைய தேசத்தில் தொன்றுதொட்டுக் கண்டு அன்பும் பக்தியும் செலுத்தியிருக்கிறார்கள். அன்பும் சாந்தமும் நிறைந்த தோற்றத்தோடு நிற்கிற ஒரு பசுவைப் பார்த்தாலே பெற்ற தாயாரைப் பார்ப்பது போன்ற ஒரு உணர்ச்சி தோன்றும். பெற்றெடுத்துப் பாலூட்டும் மாதாவை ஜனக மாதா என்பது. அதே மாதிரி இன்னும் ஒரு சில மாதாக்களைச் சொல்வதில்தான் கோமாதாவும் ஒன்று. பூமாதா,… Read More ›

Periyava Golden Quotes-1055

ரொம்பவும் வயஸான தசையிலும், மற்ற ஆகாரங்கள் குறைந்து அல்லது நின்றே போன நிலையிலும் ஒரு மனிதருடைய உடலில் உயிரை நிறுத்திக் கொடுக்கும் உணவாகப் பசு தருகிற பாலே இருக்கிறது. நம்முடைய ஆயுஸின் ஆரம்பத்தில் ஒரு குறுகிய காலகட்டத்தில் மாத்திரம் நம்மைப் பெற்றெடுத்த தாய் பால் தருகிறாளென்றால் பசுவோ நம்முடைய ஆயுள்காலம் பூராவும் பால் தருகிறது. அதனால்தான்… Read More ›

Periyava Golden Quotes-1054

Jaya Jaya Sanakara Hara Hara Sankara – Starting today, we are going to see Sri Periyava’s quotes on a very important subject, Gho Matha Samrakshanam. Many thanks to Smt. Vasanthi Sundaram for the translation. Rama Rama வாயில்லா ஜீவன் என்று சொல்லப்படுகிற… Read More ›

Periyava Golden Quotes-1053

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The last quote of yet another great section ‘Extremities in Moderation’. Many Jaya Jaya Sankara to our sathsang volunteer Shri. R. Sridhar for the translation. Rama Rama சொந்தச் சொத்து, சொந்தச் செலவு ஆகியவற்றில் கணக்காய்… Read More ›

Periyava Golden Quotes-1052

ஒன்று ஞாபகம் வருகிறது. இங்கே (ஸ்ரீ மடத்தில்) நாங்களும் வித்வான்கள், புலவர்களுக்குப் பொன்னாடையோ சால்வையோ போர்த்தி ஸம்மானிப்பது என்று வழக்கிமிருக்கிறதல்லவா? அதன்படி உ.வே. ஸ்வாமி நாதய்யர் அழைத்துக் கொண்டு வந்திருந்த ஒரு தமிழ்ப் புலவருக்குப் போர்த்துவதற்காக சால்வை கொண்டு வரச் சொல்லி, ஸ்வாமிநாதய்யர் கையாலேயே அதை அவருக்குப் போடச் சொன்னேன். அந்தப் புலவரின் கொள்கைகள் சிலது… Read More ›

Periyava Golden Quotes-1051

அபரிக்ரஹ விஷயமாக நானே ஒன்று பண்ணிக் காட்ட வேண்டியதாயிருக்கிறது. எனக்குப் பட்டுப் பொன்னாடை போர்த்தி மரியாதை பண்ணுவது என்று ஒரு வழக்கம் வைத்துக் கொண்டிருக்கிறீர்கள். பக்திக்கு ஸ்தூலமாக அடையாளம் காட்டணுமென்ற எண்ணத்தில் பஹு காலமாகவே இப்படிப் பெரியவர்களுக்குப் பண்ணுவது என்று நடந்து வந்திருக்கிறது. அதெல்லாம் தேசம் ஸுபிக்ஷமாக ஸம்ருத்தியாக இருந்த காலம். பொன்னாடை மரியாதைக்குப் பாத்திரமான… Read More ›

Periyava Golden Quotes-1050

இப்போது நாம் பணத்தாலும் உடைமைகளாலும் லக்ஷரிகளாலுந்தான் அந்தஸ்து என்று ஆக்கிக் கொண்டு, இதைத் தேடிக் கொண்டே போவதில் சீலங்களை இழந்து, சீலத்தாலேயே நம் முன்னோர்கள் எந்தச் சொத்துமில்லாமலும் பெற்றிருந்த ஸமூஹ கௌரவத்தையும் அடியோடு இழந்து, ரொம்பக் குறைந்தவர்களாக நிற்கிறோம். உடைமைகளைச் சேர்த்துக் கொள்ளக் கொள்ள பயந்தான் ஜாஸ்தியாகிறது. அபரிக்ரஹத்தின் நிம்மதி இங்கே ஒருகாலும் கிடைக்காது. –… Read More ›

Periyava Golden Quotes-1049

அபரிக்ரஹத்துக்கு எங்கேயோ போகவேண்டியதில்லை. நாலைந்து தலைமுறைக்கு முன்னால் எப்படியிருந்தார்கள் என்று பார்த்தால் போதும். மண்பானை, கல்சட்டி, ஓலை, பாக்குப்பட்டை இதுகள்தான் அவர்களுடைய சொத்து. கருகமணிதான் நகை. நாலு கீற்றை வேய்ந்து கொண்டால் அந்தப் பர்ணசாலைதான் அரண்மனைக்கு மேலே. அரண்மனைக்காரனான திலீபன் முதலான சக்ரவர்த்திகள் இப்படிப் பர்ணசாலைகளில் வசித்து வந்த வஸிஷ்டர் முதலானவர்களின் காலில்தான் வந்து விழுந்தார்கள்…. Read More ›

Periyava Golden Quotes-1048

ஸமீப நூற்றாண்டுகளில் கூட பொது ஜனங்கள் வருகிற போகிற யாத்ரிகர்களுக்கெல்லாம் அன்ன சத்திரம், கோயிலில் முக்குறுணி நாலுகுறுணி என்று நிவேதனம் பண்ணிப் பிரஸாதமாக விநியோகிப்பது, லக்ஷ பிராம்மண போஜனம் என்கிற மாதிரி தானதர்மம் என்றெல்லாம் செய்தே தீரவேண்டியிருந்தது. அப்புறம் பணமாய்ப் பண்ணிப் பாங்கில் போட்டுக் கொள்ளலாம் என்று ஏற்பட்ட பின்தான் தனக்கென்று எத்தனை வேண்டுமானாலும் சேர்த்துக்… Read More ›

Periyava Golden Quotes-1047

ஸமீப நூற்றாண்டுகளில் கூட பொது ஜனங்களுக்கிடையே பண்ட மாற்று முறையில் தான் பெரும்பாலும் வியாபாரம் நடந்தது. அரசாங்கத்திற்குக் கூட விளைச்சலில் ஆறில் ஒரு பங்கு தான்யமாகவே தான் கொடுக்கப்பட்டு வந்தது. பாக்கி தான்யத்தைப் பணமாக்க முடியாது. வியவஸாய நாடு அல்லவா இது? இங்கே உற்பத்தியாகிற பண்டங்களில் தான்யம்தான் மிகவும் அதிகம். அநேகமாக ஒவ்வொருவனுக்கும் சொந்தமாகத் துண்டு… Read More ›

Periyava Golden Quotes-1046

ஈஸ்ட் இண்டியா கம்பெனி ஆட்சி வருகிறவரை கூட நம் நாட்டில் எல்லா ஜனங்களிடையேயும் விசேஷமாக நாணயப் பழக்கம் இருந்துவிடவில்லை. மேல்மட்டங்களில் சில கார்யங்களுக்கு மட்டுந்தான் நாணய மாற்றத்தில் கொடுக்கல் வாங்கல் நடந்தது. ஒரு நாணயத்துக்கு நிஜமாகவே அதன் மதிப்பு இருக்கும்படியாகத் தங்கம், வெள்ளி இவற்றிலேயே காசு இருந்தால், அதிகமாகக் கிடைக்காத இந்த லோஹங்களில் அளவாகவே நாணயம்… Read More ›

Periyava Golden Quotes-1045

ரூபாய் என்று ஒன்று இல்லாத நாள் உண்டா என்று தோன்றலாம். அப்படி ஒரு நாள் இருந்திருக்கிறது. ஆதியில் எல்லா இடத்திலும் barter என்று ஒரு பொருளுக்குப் பதில் இன்னொரு பொருளை ‘எக்ஸ்சேஞ்ஜ்’ (பரிவர்த்தனை) பண்ணிக் கொள்வதுதான் இருந்ததே தவிர ரூபாயோ ஸ்டெர்லிங்கோ டாலரோ இல்லை. அப்புறந்தான் ஒவ்வொரு சீமையிலும் ஸமுதாயங்கள் ஒரு அமைப்பாகக் கெட்டிப்பட்டு, அங்கங்கே… Read More ›

Periyava Golden Quotes-1044

நம்முடைய ஆசார்யாளும் “விவேக சூடாமணியி” ல் அபரிக்ரஹ தர்மத்தை சிறப்பித்துச் சொல்லியிருக்கிறார். யோகத்தின் முதல் வாசல் மௌனம் என்று சொல்லிவிட்டு அடுத்ததாக அபரிக்ரஹத்தையே கூறுகிறார்: யோகஸ்ய ப்ரதமம் த்வாரம் வாங்நிரோதோ (அ)பரிக்ரஹ:. ரூபாய் என்று ஒன்று ஏற்பட்ட நாளாகத்தான் சொந்தத்துக்கு ஜாஸ்தி சேர்த்து மூட்டை கட்டி வைத்துக் கொள்வது, தன்னுடைய துராசைகளுக்கே கன்னா பின்னா என்று… Read More ›

Periyava Golden Quotes-1043

திருட்டுக்குப் பல டெஃபனிஷன்! “உள்ளங்கவர் கள்வன்“, “சித்த சோர்” என்றெல்லாம் பகவானுக்கே திருட்டுப் பட்டங்கள்! வரவு சிறுத்து செலவு பெருகினால் அதுவே ஒரு திருடு என்று வசனமிருக்கிறது. கீதையில் பகவான் லோக வாழ்க்கைக்கானவற்றை தேவ சக்திகளிடமிருந்தே பெறுகிற மனிதனானவன் அவற்றை அவர்களுக்கு அர்ப்பணிக்காமல் அநுபவித்தால் அதுவே ஒரு திருட்டு தான் என்கிறார். ஜீவாதாரத் தேவைக்கு ஜாஸ்தியாக… Read More ›

Periyava Golden Quotes-1042

மநு தர்மசாஸ்திரத்தில் ஐந்து தர்மங்களை அடிப்படையாகச் சொல்லுமிடத்தில் அஹிம்ஸை, ஸத்யம், அஸ்தேயம் இந்த மூன்றையும் சொல்லிவிட்டு நாலாவதாக ‘சௌசம்’ என்னும் சுத்தத்தையும், கடைசியில் இந்த்ரிய நிக்ரஹத்தையும் கூறியிருக்கிறார். ‘பிரம்மசர்யம்’ என்று பதஞ்ஜலி சொன்னதைக் கொஞ்சம் விஸ்தாரம் பண்ணினால் அதுவே இந்திரிய நிக்ரஹம். பதஞ்ஜலி சொன்ன அபரிக்ரஹத்துக்குப் பதில் மநு சௌசத்தைச் சொல்லியிருக்கிறார். தனக்கு அத்யாவச்யமானதற்கு அதிகமாக… Read More ›

Periyava Golden Quotes-1041

நீ ஜீவிப்பதற்கு எது அத்யாவச்யமோ அதற்கு அதிகமாக ஒரு துரும்புகூடச் சேர்த்துக் கொள்ளாதே’ என்பதுதான் அபரிக்ரஹ தர்மம். இதை யோக சாஸ்திரத்தில் ஸாதகன் அடிப்படையாகக் கொள்ள வேண்டிய ஐந்து ‘யம’ங்களிலேயே ஒன்றாகப் பதஞ்ஜலி (யோக ஸூத்ரத்தில்) சொல்லியிருக்கிறார். ‘யமம்’ என்றால் அடங்கி வைப்பது. மஹா பாபிகளையும் அடக்கி வைத்துத் தண்டிப்பதால் யமனுக்கு அப்படிப் பெயர். மனஸை… Read More ›

Periyava Golden Quotes-1040

நமக்காக ஸம்பாதனம் செய்து கொள்வது, செலவழித்துக் கொள்வது இரண்டிலுமே ரொம்பவும் கணக்காயிருப்பதுதான் இதற்கு அடிப்படை. இதைத்தான் ‘அபரிக்ரஹம்’ என்று பெரிய தர்மமாக சாஸ்திரங்களில் சொல்லியிருக்கிறது. ‘பரிக்ரஹம்’ என்றால் உடைமை சேர்த்துக் கொள்வது; அப்படிச் சேர்த்துக் கொள்ளாமலிருப்பதே ‘அபரிக்ரஹம்’. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள் Strict control over what we earn and… Read More ›

Periyava Golden Quotes-1039

கணக்கு வழக்கு இல்லாமல் புண்யம் பண்ணுவதற்கு மனநெறி முதலில் ஏற்பட வேண்டும். அது ஏற்படுவதுற்கு நம்முடைய பேச்சு, எண்ணம், நமக்கென்று பண்ணிக் கொள்ளும் காரியம், சொந்தச் செலவு. சாப்பாடு, ட்ரெஸ் எல்லாவற்றிலும் கணக்காயிருந்தால்தான் முடியும். இவை யாவற்றிலும் நாம் கணக்காயிருப்பது சாச்வத ‘லாப’ த்தை உத்தேசித்தே என்பதை மறந்து விடக்கூடாது. இப்போது நம் பர்ஸுக்குள் இருப்பதன்… Read More ›

Periyava Golden Quotes-1038

வெளியில் காட்டுகிற அக்கவுன்டஸில் ஆட்டைத் தூக்கி மாட்டில் போட்டு ஸரிகட்டினதாகக் காட்டி விடலாம். ஆனால் “நமக்கு நாமே accountable -ஆக இருக்க வேண்டும்” என்கிறார்களே, அதில் எந்த தகிடுதத்தமும் செய்து ஜயிக்க முடியாது! நாம் செய்கிற அத்தனையையும் கர்ம ஸாக்ஷியாக ஒருத்தன் பார்த்துக் கொண்டிருக்கிறான்! அவனை ஏமாற்றவே முடியாது! பண்ணிய பாபத்துக்கெல்லாம் ஈடாக எதிர்த் தட்டில்… Read More ›