ஸகல மக்களும் ஒன்றுகூடி நடத்த வேண்டிய பணி என்னவென்றால் ஒரு பசு கூட வதைக்குப் போகாமல் வயிறு ரொம்பத் தீனி பெறவும், ஸுகாதாரமான கொட்டில்களில் வாஸம் பெறவும் செய்வதுதான். இதற்காகக் கறவை நின்றுபோன பசுக்களுக்கென்றே ஆங்காங்கு காப்பு விடுதிகளை மக்கள் அமைத்துச் செவ்வனே பரிபாலிக்க வேண்டும். கறவை நின்ற பசுக்களை வைத்துக் காப்பாற்ற ப்ரியப்படாமல் இறைச்சிக் கூடத்துக்கு விற்கவிருக்கும் எல்லா சொந்தக்காரர்களிடமிருந்தும் அவற்றை வாங்கி இந்த விடுதிகளில் வைத்துக் காப்பாற்ற வேண்டும். போதிய பண்பாடில்லாத சொந்தக்காரர்களாயிருந்தால் அவர்கள் மாம்ஸ விலையையும் தோல் விலையையும் நினைத்து பேரம் பண்ணக்கூடும். அவர்களுக்குப் பொறுமையாகவும் சாந்தமாகவும் இப்பணியிலுள்ள புண்யம், ஜீவகாருண்யம் இரண்டையும் எடுத்துச் சொல்லி நியாய விலைக்கோ, இலவசமாகவோ விற்கச் செய்ய வேண்டும். பல மாட்டுக்காரர்கள் நிஜமாகவே ஏழைகளாகக் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பார்கள். அவர்களிடமிருந்து இலவசமாக எதிர் பார்ப்பதற்கில்லைதான். எப்படியானாலும் அதிக விலை கொடுக்க வேண்டியிருக்கிறது என்ற காரணத்துக்காக ஒரு பசுவைக்கூடக் கொலைக் கூடத்துக்குப் போகும்படிப் பண்ணிவிடக்கூடாது. ‘விலைக்கு மாடு வாங்குவது, விடுதி அமைப்பது, தீனி போடுவது என்றால் நிரம்பப் பணம் பிடிக்குமே! அதோடு, ‘மாடோ பாடோ’ என்று கிழமாடுகளைப் பராமரிப்பதென்றால் சரீர உழைப்பும் நிரம்பத் தேவைப்படுமே!’ என்றால், இந்தப் பணியின் முக்யத்வத்தைப் பார்க்கிறபோது பணமும் உழைப்பும் ஒரு பெரிசில்லை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
The task which ought to be done collectively by the entire society of people is to make it happen that not a single cow should go the slaughter house and should be fed to the full stomach and be made to live in clean sheds under hygienic conditions. For this, shelters for unyielding cows should be set up at many places and be maintained well by the people. The unyielding cows, whose owners are unwilling to feed them any longer and are sending them to the slaughter houses, should be bought and protected in these shelters. If some owners are uncultured, they might bargain a rate for the skin and meat of the cows. We should patiently explain the Punyam and compassion involved in this work and should coax them to sell the cows for a fair price or for free. Many owners might be really poor and suffering and it’s certainly not fair to expect them to part with the cows for free of cost. Whatever be the situation, not a single cow should be left to be sent to the slaughter house just because it involves paying a higher price. If such a thought as “buying the cows, setting up shelters and feeding them – all these are extremely expensive and moreover maintaining the old cows are strenuous and painstaking” crops up, the answer should be that considering the importance of this duty both money and physical strain are trivial and unimportant. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply