Periyava Golden Quotes-1095


கோவிடத்தில் எதிரிடைகள் சேர்கிறதில் கோமய, கோமூத்ரங்களும் பவித்ரமாக இருப்பதாகப் பார்த்தோமல்லவா? அப்படியேதான் அதன் முக மண்டலமாக இல்லாமல் ப்ருஷ்டபாகமாக இருக்கப்பட்ட பின்புறமும் பரம பவித்ரமான லக்ஷ்மீவாஸமாக இருக்கிறது. அழகுக்காக கோவின் முகத்தில் சந்தன குங்குமங்கள் இட்டுக் கழுத்தில் மாலை போட்டாலும், கோபூஜை என்று பண்ணும்போது பின்புறத்தை அலங்கரித்து அங்கேயே அர்ச்சனாதிகள் செய்யவேண்டும். ஒரு கோவினிடம் நிக்ருஷ்டமானது [தாழ்ந்தது] என்று எதுவுமேயில்லை. அதனிடம் ஸர்வமும், ஸர்வாங்கமும் உத்க்ருஷ்டமே [உயர்ந்தனவே]. நம் மடம் மாதிரி தர்மபீடங்களில் ப்ரதிதினமும் காலம் கார்த்தாலே நடக்கிற முதல் வழிபாடு கோபூஜைதான் என்பதிலிருந்து கோவுக்குள்ள உத்க்ருஷ்டமான ஸ்தானத்தைப் புரிந்து கொள்ளலாம். பசுவைவிட யானை எவ்வளவோ பெரியதாக இருந்தாலும் கோபூஜைக்கு அப்புறந்தான் கஜபூஜை. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

While discussing contradictory things coming together in a cow we saw how the urine and dung of the cow are also sacred, didn’t we? It is in the same way that we find not the facial part of the cow but its rear portion which is considered to be extremely sacred and pure and the abode of Goddess Lakshmi. Though the cow’s face can be adorned with sandal paste and Kumkum and a garland donned around its neck for the sake of ornamentation, while doing Gho Puja, only the rear portion of the cow has to be decorated and Archanas being done there. There is no part that is inferior in a cow. Everything and every aspect of its body are sacred and superior. In Dharma Peetams like our Matam (Sri Kanchi Matam), the first worship done early in the morning every day is Gho Puja, a fact from which we can understand the elevated position the cow holds. Even though the elephant is far bigger than the cow, Gaja Puja (worship of the elephant) comes only next to Gho Puja (worship of the cow). – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: