Golden Quotes

Periyava Golden Quotes-999

நாம் பலவிதமான பேச்சுகளைப் பேசி கெட்ட விஷயங்களை விஸ்தாரம் பண்ணியும், பல பேரைத் திட்டியும் வாக்தேவியான ஸரஸ்வதிக்கு அபசாரம் பண்ணுகிறோம். இதற்குப் பிராயசித்தமாக ஸரஸ்வதியின் நஷத்ரமான மூலத்தில் மௌனம் இருப்பதுண்டு. தினமுமே அரைமணியாவது மௌனமாக த்யானம் பண்ண வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள் When one discusses all sorts of… Read More ›

Periyava Golden Quotes-998

மௌனமும், பட்டினியும் சேர்ந்தால், அதாவது வாய்க்கு இரண்டு காரியமுமே இல்லாமலிருந்தால் அன்று மனஸ் பாரமார்த்திகத்திலே நன்றாக ஈடுபடுவதை அநுபவத்தில் தெரிந்து கொள்ளலாம். அதனால் அவரவர் இஷ்ட தெய்வத்துக்காக சிவராத்ரியோ, ஷஷ்டியோ, ஏகாதசியோ பட்டினி கிடக்கிறபோது மௌனமாகவும் இருக்கலாம். அம்பாளை உபாஸிக்கிறவர்கள் நவராத்ரி பூராவும் மௌனமிருப்பார்கள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள் When fasting… Read More ›

Perriyava Golden Quotes-997

எத்தனையோ கார்யங்களை வைத்துக் கொண்டிருந்தார் காந்தி. ஒரு வீட்டிலே அப்பா என்றாலே எவ்வளவோ கார்யம் இருக்கும். அவரை தேசபிதா, Father of the Nation என்கிறார்கள். அப்படியிருந்தும் வாரத்தில் ஒருநாள் மௌனம் வைத்துக் கொண்டிருந்தார். ‘மௌனமாயிருக்கக் கட்டுப்படி ஆகாது’ என்று எவரும் சொல்ல முடியாதபடி அவர் ஒரு எக்ஸாம்பிள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி … Read More ›

Periyava Golden Quotes-996

ஸோம வாரம், குருவாரம், ஏகாதசி முதலிய நாட்களில் ஒன்றில் மௌனம் அநுஷ்டிக்கலாம். ஸோமவாரம், குருவாரம் ஆஃபீஸ் இருப்பதால் ஞாயிற்றுகிழமைகளில் மௌனமிருக்கலாம். பாதி நாளாவது இருக்கலாம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி  ஸ்வாமிகள் One can observe complete silence on Mondays, Thursdays or on Ekadasi. Since Mondays and Thursdays are… Read More ›

Periyava Golden Quotes-995

வயிற்று உபவாஸம் மாதிரியே இதற்கும் தர்ம சாஸ்திரத்தில் அநேக காலங்களை விதித்திருக்கிறது. “மௌநேந போக்தவ்யம்” என்று கேள்விப்பட்டிரூப்பீர்கள். சாப்பிடுகிற காலங்களில் பேசப்படாது என்று அர்த்தம். வாய்க்கு உள்ள இரண்டு வேலைகளில் ஒன்றாகச் சாப்பிடும் போது, இன்னொரு வேலையான பேச்சையும் தரப்படாது. இப்படி விதித்தபோதே ருசியையும் கட்டுப்படுத்தியதாக ஆகிறது. மௌனமாக போஜனம் செய்யும் போது, ‘இது வேண்டும்,… Read More ›

Periyava Golden Quotes-994

பிரம்மஞானியான முனிவன் மௌனம், மௌனமாயில்லாமலிருப்பது என்ற இரண்டையும் விட்டு விடுகிறான் என்று உபநிஷத் சொல்கிறது*. முதலில் படித்துப் பண்டிதனாகி, ரொம்பவும் வாதங்கள் சர்ச்சைகள் பண்ணி ஸத்ய தத்வத்தைத் தெரிந்து கொள்கிறான். அப்புறம் பாண்டித்யம், பேச்சு எல்லாவற்றையும் விட்டு விட்டு ஒரே நிஷ்டையில் போய்விடுகிறான். அப்புறம் பிரம்ம ஞானியாகிறபோது மௌனத்தையும் விட்டு விடுகிறான், மௌனமில்லாமையையும் விட்டுவிடுகிறான் என்று… Read More ›

Periyava Golden Quotes-993

மனஸை அடக்கினவன்தான் முனி. ‘முனிவனின் குணம் எதுவோ அதுதான் மௌனம்’ என்பதே அந்த வார்த்தைக்கு அர்த்தம். முனிவனின் குணத்தில் பேசாமலிருப்பதுதான் தலை சிறந்தது என்று பொதுக் கருத்து இருந்திருப்பதால்தான் ‘மௌனம்’ என்றால் ‘பேசாமலிருக்கிறது’ என்று ஆகிவிட்டிருக்கிறது. மனஸை அடக்கினவனின் தன்மை என்றாலும், அதுவே நம் மாதிரி மனஸ் அடங்காதவர்கள் அந்த நிலையை அடைவதற்க்கு உதவுவதாகவுமிருக்கிறது. –… Read More ›

Periyava Golden Quotes-992

மனஸைக் கட்டுப்படுத்துவதற்கு வழியாக ஒவ்வோர் இந்த்ரியத்தையும் கட்டுப்படுத்தி வைக்கப் பழக வேண்டும். வாயைக் கட்டவேண்டும். அதாவது சாப்பாட்டிலும் கட்ட வேண்டும்; பேச்சிலும் கட்ட வேண்டும். ஏதாவது சொல்லி, நம்மை ‘எக்ஸ்ப்ரெஸ்’ பண்ணிக் கொண்டேயிருக்க வேண்டுமென்று இருக்கும் அரிப்பைக் கட்டுப்படுத்துகிற நெறிதான் மௌனம். இதை ஸாதித்தால் மனஸை அடக்குகிறதும் கொஞ்சங் கொஞ்சமாக ஸுலபமாகிவிடும். – ஜகத்குரு ஸ்ரீ… Read More ›

Periyava Golden Quotes-991

இத்தனை வாதப் பிரதிவாதச் சண்டையும் பேச்சால் தானே? மௌனம் அநுஷ்டித்தால் அன்றைக்காவது சண்டை சச்சரவு இராது. “மௌனம் கலஹம் நாஸ்தி” இதுவும் ஒரு ஸமூஹ ஸேவைதான். சண்டை வராது என்பதாக ஒரு கெடுதலை இல்லாமல் பண்ணுவது மட்டுமில்லை; நல்லதுகளையும் உண்டாக்கிக் கொடுக்கிற சக்தி மௌனத்துக்கு உண்டு. ஸகல புருஷார்த்தங்களையும் பெற்றுத்தர அது உபாயம் என்பதால்தான் “மௌனம்… Read More ›

Periyava Golden Quotes-990

இப்போது எங்கே பார்த்தாலும் பேச்சுத்தான். ‘பேச்சாளார்கள்’ என்றே பலர். ஒலிபெருக்கி வைத்து மீட்டிங்குகள். கல்யாணம், கார்த்திகை, வேறே விழாக்கள் என்று எங்கே பார்த்தாலும் ‘லௌட் ஸ்பீக்கர்’ வைத்து சத்தம். இந்த அவஸ்தையைப் பார்க்கிறபோது, மௌனம் அதை அநுஷ்டிக்கிறவனுக்குச் செய்கிற நல்லது ஒரு பக்கம் இருக்கட்டும், இது ஸமூஹத்துக்கே செய்கிற தொண்டு என்று தோன்றுகிறது. – ஜகத்குரு… Read More ›

Periyava Golden Quotes-989

வயிற்றைக் கட்டி, வாயைக் கட்டி’ என்கிறபோது சாப்பாடு,  பேச்சு இரண்டையும் கட்டுப்படுத்துவதுதான் தாத்பர்யம். ஆனால் நேர்மாறாகப் பண்ணுகிறோம். இரண்டு வேலையும் தேவைக்கு அதிகமாகக் கொடுக்கிறோம். வாய்தான் ரொம்ப over-worked! அமித போஜனமாக ஓயாமல் ஏதாவது சாப்பாடு, நொறுக்குத் தீனி, பானம் என்று உள்ளே தள்ளிக் கொண்டேயிருக்கிறோம். எப்போது பார்த்தாலும் வெட்டியாக ஏதாவது பேசிக் கொண்டேயிருக்கிறோம். இந்த… Read More ›

Periyava Golden Quotes-988

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Starting today, we are going to see quotes from yet another important topic, Mounam (silence). Many Jaya Jaya Sankara to Smt. Vijayalakshmi for the translation. Rama Rama வெளியிலே உள்ள விஷயங்களை நமக்குத் தெரிவிப்பவை ஞானேந்திரியங்கள்…. Read More ›

Periyava Golden Quotes-987

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The final quote of this Upavasam super series….Rama Rama நாக்கை அடக்க முடியவில்லை என்று விடவே கூடாது. ஆப்பிளைச் சாப்பிட்டுத்தான் ஆடம் அடிமட்டத்துக்கு விழுந்துவிட்டான் என்கிறார்கள். Forbidden fruit மாதிரி நம் சாஸ்திரப்படி forbidden food எதையுமே சாப்பிடக் கூடாது. மீறினால் அது… Read More ›

Periyava Golden Quotes-986

பெங்காலில் விதவைகள் எத்தனை கடுமையாக ஏகாதசி வ்ரதாநுஷ்டானம் பண்ணுகிறார்கள் என்பதைப் பார்த்து அதை நாமும் கொஞ்சமாவது ‘எமுலேட்’ பண்ண முயல வேண்டும். பெங்கால்காரர்கள் மத்ஸ்ய ப்ராம்மணர்கள்தான்; ஆனால் விதவைகள் அந்த ஸாமானைத் தொடமாட்டார்கள். அதோடு ஏகாதசியை அவர்களே மற்ற எவரையும் விடத் தீவிரப் பற்றுடன் அநுஷ்டிக்கிறார்கள். வாயில் சொட்டுப் பச்சைத் தண்ணி கூட விடாமல் அன்று… Read More ›

Periyava Golden Quotes-985

மற்ற வியாதிகளுக்கும் இந்த ‘க்ஷுத் வியாதி’க்கும் ஒரு வித்யாஸம், தலைவலிக்கு மருந்து போட்டால் அது போய் விடுகிறது; மறுபடி என்றைக்கோ ஒரு நாள்தான் வருகிறது. ஜ்வரமும் இப்படித்தான். ஆனால் இந்தப் பசி வியாதி மட்டும் இப்போது மருந்து போட்டு ஸ்வஸ்தப்படுத்தி விட்டாலும், வேளை தப்பாமல் மறுபடி மறுபடி ‘அட்டென்டன்ஸ்’ கொடுத்துக் கொண்டேயிருக்கிறது! இப்படி இயற்கையை ஏவிவிட்டு… Read More ›

Periyava Golden Quotes-984

வைகுண்ட ஏகாதசி, மஹா சிவராத்ரி, கோகுலாஷ்டமி, ராமநவமி முதலிய விசேஷ நாட்களில் கூட நாம் வாயைக் கட்டாமல், வயிற்றைச் கட்டாமலிருந்தால் அது இந்த தேசத்தில் பிறந்த நமக்கு ரொம்பக் குறைவாகும். வயிறு குறைந்தாலும் மனஸ் நிறையும்படிப் பண்ணிக் கொள்வதே நமக்கு நிறைவு. அப்படிப் பண்ணிக் கொள்வதற்கான ஸங்கல்ப பலத்தை பகவான் எல்லாருக்கும் அநுக்ரஹிக்க வேண்டும். வியாதிக்கு… Read More ›

Periyava Golden Quotes-983

நம் மதத்தில் சிறப்பித்துச் சொல்லியிருக்கும் ஏகாதசியில் எல்லாரும் வ்ரதாநுஷ்டானம் பண்ண வேண்டும். சாப்பிடாமல் இருப்பது வெறும் ‘அநாசக’ மாக இல்லாமல், பகவானோடு சேர்ந்து வாழும் ‘உப-வாஸ’மாக ஆகவேண்டும். இதற்கு ஏகாதசியன்று நம்மால் எவ்வளவு முடியுமோ அவ்வளவு பகவன் நாமத்தை ஜபமாகவோ, பஜனையாகவோ உச்சரிக்க வேண்டும்; எவ்வளவு அதிக நாழிகை பகவத் த்யானம் செய்ய முடியுமோ அவ்வளவு… Read More ›

Periyava Golden Quotes-982

மூன்றாவது ஏகாதசி தை க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஸபலா’. நாலாவது அம்மாவாஸை சுக்ல பக்ஷத்தில் வருகிற ‘புத்ரதா’. ஐந்தாவது மாசி க்ருஷ்ண பக்ஷத்தில் வரும் ‘ஷட்திலா’. ஆறாவது அம்மாஸம் சுக்லபக்ஷத்தில் வரும் ‘ஜயா’. இப்படியே வரிசையாக பங்குனி, சித்திரை, வைகாசி, ஆனி மாஸங்களில் ‘விஜயா’, ‘ஆமலகீ’, ‘பாப மோசனிகா’, ‘காமதா’, ‘வரூதினீ’, ‘மோஹினி’, ‘அபரா’, ‘நிர்ஜலா’… Read More ›