Periyava Golden Quotes-1104



கறிகாய்த் தோல் மாதிரியே சாதம் வடித்த கஞ்சியும் பசுவுக்கு ஆஹாரமானதால் அதையும் சேகரித்துப் பசுக்களுக்குச் சேர்க்கலாம். ஆனால், இப்போது பெரும்பாலான வீடுகளில் குக்கர் சமையல் வழக்கம் வந்து விட்டது. அப்படியில்லாத இடங்களில் இந்தக் கைங்கர்யமும் செய்யலாம். அரிசியை ஜலம் விட்டு அலம்புகிற கழுநீர் என்கிற கழிவு நீருங்கூடப் பசுவுக்கான ஆஹாரம்தான். அதுவும் பசு வயிற்றுக்குப் போகும்படிச் செய்யலாம். செய்யவேண்டும்.

வீட்டுத் தோட்டங்களில் ஒரு சின்ன திட்டில் பசுவுக்கென்றே அகத்திக் கீரை பயிரிடுவது என்று ஏற்பட்டுவிட்டால் அதுவும் கோ வதை நின்று கோரக்ஷணம் நடப்பதற்குக் கணிசமான உபகாரம் செய்ததாகும். அகத்திக் கீரையைப் பசு பரம ப்ரீதியோடு சாப்பிடும்.

பகவான் வாஸுதேவனின் வயிற்றுக்கே போடுவதாக நினைத்து இப்படியெல்லாம் எந்த முறையிலேனும் நாம் ஒவ்வொருவரும் பசுக்களை அவச்யம் ரக்ஷிக்கவேண்டும். அந்த உணர்ச்சி வந்துவிட்டால், சிரமமே ஏற்பட்டாலும் அது சிரமமாகத் தெரியாது. மனமிருந்தால் வழியுண்டு. இந்த விஷயத்தில் நிச்சயமாக மனம் இருந்தேயாக வேண்டும். அப்போது வழியும் தானே பிறக்கும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Just as Vegetable peels, the extra water collected while cooking rice in a pot, (Kanji in Tamizh) is also consumed by the cow and so it can be collected and given to the cows. But then the habit of cooking in pressure cooker has come in most of the households. So this could be done in houses where cooking is done in the old fashion. The water used to wash the rice called Kazhuneer (in Tamizh) is also a good cow feed. We can make arrangements for it to be given to the cows. We ought to make it happen indeed.

In the garden of every house, a small patch of land has to be maintained to grow Agathi Keerai (sesbania grandiflora, a type of spinach) and if this becomes regular, it would contribute a lot in stopping cow slaughter and developing protection of cows. Cows consume the Agathi Keerai with a great zeal.

Considering it that feeding cows is like feeding Lord Vasudevan Himself, each one of us should definitely protect the cows by some means or the other. If such an attitude sets in, no difficulty, even if there are any, will appear as troublesome. Where there is a will there is a way. As far as this issue is concerned there should be a will by all means. Then a way will be found automatically. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural

Tags:

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: