Periyava Golden Quotes-1097

கறக்கிற காலத்திலும் ஸரி, கறவை நின்றுபோன பிற்பாடும் ஸரி கோமாதாவின் வயிற்றுக்குப் போதிய ஆஹாரம் போடாமல் வாடவிட்டால் அது நமக்குப் பெரிய களங்கம். இந்த விஷயத்தில் நாமெல்லாரும் பெரிய குற்றவாளிகளாக இருக்கிறோம். இதில் நம்முடைய கவனக் குறைவு மன்னிக்க முடியாத தப்பாகும். நம் மதத்தில் பசுவுக்குத் தெய்வ ஸ்தானம் கொடுத்திருக்கிற மாதிரி இல்லாத பிற மதஸ்தர்கள் தங்கள் தேசத்தில் வளர்க்கிற பசுக்களையும், நம் தேசத்திலுள்ள பசுக்களையும் பக்கத்தில் பக்கத்தில் நிறுத்தி வைத்து ஒப்பிட்டுப் பார்த்தால் நாம் அவமானப்படும்படியே இருக்கும். மற்ற தேசத்தார் பசுவைத் தெய்வமாக சொல்லாவிட்டாலும், அவர்கள் பசு மாம்ஸம் சாப்பிடுபவர்களாக இருந்தாலும் நடைமுறையில் அவற்றின் வயிற்றுக்கு யதேஷ்டமாகப் போட்டு அவற்றைத் தள தள என்று வைத்துக் காப்பாற்றுகிறார்கள். நாமோ நமக்குப் பால் கொடுப்பதற்காக அதற்கு அதம பக்ஷமாக எவ்வளவு தீனி தேவையோ அவ்வளவே போடுகிறோம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Both during the phase of getting milk from it when it’s a milch cow as well as the time when it goes dry and stops giving milk, it’s a great blemish on our part if we starve the cow and let it go hungry. All of us stand as accused in this case. Our negligence regarding this issue is an unpardonable offense. If we compare the malnourished look of the cows of our country with a religion that has elevated it to the position of God with the healthy and glowing look of the cows of other countries with religions which do not share such a sentiment, it would make us feel ashamed and hold our heads down with shame. People in other countries, though they do not revere the cow as God and even consume the meat of the cow, tend to feed it liberally and nurture it with abundant nourishment in all practicality. Whereas we feed it only with minimum required food, just what is enough for it to secrete milk and meet our selfish needs. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: