Periyava Golden Quotes-1091

ராமர்-க்ருஷ்ணர் இந்த தேசத்தின் இரண்டு கண்கள். க்ருஷ்ண பரமாத்மாவிடமும் லோகத்தின் நலனைப் பிரார்த்திக்கும்போது இதே மாதிரி லோக ஹிதத்தைச் சொல்வதற்கு முந்தி கோ, ப்ராஹ்மணன் ஆகியவர்களின் நலனைச் சொல்லியிருக்கிறது:

நமோ ப்ரஹ்மண்ய தேவாய கோ ப்ராஹ்மண ஹிதாய ச |
ஜகத்-ஹிதாய க்ருஷ்ணாய கோவிந்தாய நமோ நம: ||

இப்படி யஜ்ஞத்தைத் தாங்கி தரித்து தூக்கி நிறுத்துபவர்களாக யஜ்ஞ கர்த்தாவான ப்ராஹ்மணன், யஜ்ஞத்துக்கு வேண்டிய த்ரவ்யம் தருகிற கோ என்ற இரண்டு பேர் இருந்தாலும் அந்த இருவரிலும் கோவுக்கே முதலிடம் கொடுத்து, அப்புறமே ப்ராஹ்மணனுக்கு இடம் தந்து ‘கோப்ராஹ்மண’ என்று சொல்வதாகவே இருக்கிறது. ராமாயண மங்கள ச்லோகம், க்ருஷ்ண பரமாத்மாவைப் பற்றின ச்லோகம், பொது வசனம் எல்லாவற்றிலுமே ப்ராஹ்மணனைப் பின்னுக்குத் தள்ளி கோவுக்கே முக்யத்வம் தந்து ‘கோ-ப்ராஹ்மண’ என்றே சொல்வதாகயிருக்கிறது.

ப்ராஹமணர்களை பூதேவர், அதாவது தேவலோகத்தில் இல்லாமல் பூலோகத்திலேயே இருக்கிற தேவர்கள் என்பது. வேதத்துக்கே தங்களை அர்ப்பணம் செய்து கொண்டு, லோக க்ஷேமத்துக்காக யஜ்ஞ கர்மாநுஷ்டானங்களைப் பண்ணிக் கொண்டிருக்கும் ப்ராஹமணர்களைத்தான் அப்படிச் சொல்கிறது; தற்காலத்திலிருக்கும், ஸ்வதர்மத்தை விட்டுவிட்ட ப்ராஹமணர்களை அல்ல. இப்படி தேவராகச் சொல்லப்பட்டவர்களுக்கும் முந்தி கோ. ‘தான் கெட்டது போதாதென்று சந்த்ர புஷ்கரணியையும் கெடுத்தான்’ என்கிற மாதிரி, ப்ராஹமணன் வேத ரக்ஷணமான ஸ்வதர்மத்தை விட்டதில் யஜ்ஞ-ஹோமாதிகளுக்கு க்ஷீணம் ஏற்பட்டுவிட்டதால் அவற்றுக்கு நெய், கோமயம் முதலியன தருகிற கோவின் புண்யகார்யமும் தடைப்பட்டு விட்டது! – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Lord Rama and Krishna are the two eyes of this country. Even before praying to Krishna Paramathma for Universal well being, before speaking of the goodness of the world, the welfare of the cow and the Brahmin has been mentioned.

Namo Brahmanya Devaya Gho Brahmana Hithayacha |
Jagath-Hithaya Krishnaya Govindhaya NamoNmaha ||

Though there are two who bear, support and uphold the Yagnya namely the Brahmin who is the Yagnya Kartha and the cow which offers the necessary products for the Yagnya, primary importance has been given only to the cow among the two, mentioning the cow first and then followed by the Brahmin secondly, by saying “Ghobraahmana”. In all texts like Ramayana Mangala Sloka, the Sloka about Krishna Paramathma and even in common speech, it happens to push the Brahmin behind by giving importance to the cow and always say ‘Ghobrahmana”.

Brahmins are considered to be Bhoodevas, that is, Devas who reside on earth instead of Devaloka. It says so only about the Brahmins who have dedicated their lives entirely to Vedas and are performing Yangya Karmanushtanams for the sake of universal welfare; not the present day Brahmins who have forsaken their Swadharma (Dharma assigned to them). The cow finds its place even before such Brahmins who are considered as Devas. As the adage goes, “He who got corrupted, happened to pollute the Chandra Pushkarani as well”, as the Brahmin has given up his Swadharma namely the Veda Rakshanam (Preservation of Vedas), there was a resultant deterioration in Yagnyas and Homams which in turn hindered the Punya acts of offering ghee and Ghomayam by the cow also. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: