Periyava Golden Quotes-1094


ஸர்வ தேவதா ஸ்வரூபம் என்றால் நம்முடைய சிற்றறிவால் இன்னதென்றே கிரஹித்துக் கொள்ள முடியாமல் அல்லவா இருக்கிறது? ஒரே மலைப்பாக -– பயம் கலந்த மலைப்பாக -– இருக்கிறதே தவிர அன்போடு பக்தி பண்ணும்படியாக இல்லையே! அதனால் கோமாதாவைக் குறிப்பாக லக்ஷ்மி என்ற ஒரு தேவதையின் ஸ்வரூபமாகச் சொல்வது. அமர[கோச]ம் என்கிற ஸம்ஸ்க்ருத நிகண்டுவில் [அகராதியில்] லக்ஷ்மியின் பல பெயர்களைச் சொல்லும்போது ‘லோகமாதா’, ‘லோகஜனனி’ என்னும் இரண்டு பெயர்கள் சொல்லியிருக்கிறது. கோமாதா அந்த லோகமாதாவே.

கோமாதாவை லக்ஷ்மி என்கிறது ஒரு பக்கம். அவளை லக்ஷ்மியின் வாஸ ஸ்தானமாகச் சொல்வது இன்னொரு பக்கம். லக்ஷ்மிக்கு வாஸ ஸ்தானங்கள் ஐந்து. ஸுமங்கலியின் ஸீமந்தம் என்கிற வகிடு, மலர்ந்த தாமரைப் பூவின் உள்பக்கம், யானையின் மஸ்தகம் [தலை], வில்வ பத்ரத்தின் பின் பக்க ரேகை ஆகிய நாலோடு பசுவின் பின்புறமும் ஐந்தாவதாக மஹாலக்ஷ்மியின் நிவாஸமாக இருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

When described as “Sarva Devatha Swaroopam”, doesn’t it appear difficult to comprehend with our limited knowledge as to what it exactly is? There is only a feeling of awe – that too awe mixed with fear – and we don’t feel like worshipping it with love! This is the reason for describing the Ghomatha as the incarnation of one particular Devatha namely ‘Lakshmi’. In the Sanskrit dictionary ‘Amarakosam’, while reciting the many names of Lakshmi, two names have been given a special reference and they are ‘Loka Matha’ and ‘Loka Janani’. Gho Matha is no one but the Loka Matha Herself.

Describing Ghomatha as Lakshmi Herself is one aspect. Calling her as the abode of Godess Lakshmi is another aspect. There are five places where Lakshmi is believed to reside. Along with the four places namely the central parting of a Sumangali (a married woman who lives with her husband) called ‘Seemandham’, the inner portion of a blossomed Lotus, the front part of an elephant’s head called ‘Masthakam’ and the back side of a ‘Vilva Pathram’, the back side of a cow is considered to be the fifth one.  – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: