கோவின் மலமும் பவித்ரமானதாக இருக்கிற மாதிரியே அதன் குளம்படிப் புழுதியும் பவித்ரமானதாகும். ஸாதாரணமாகக் கால் புழுதி என்றால் அது துச்சமானது. அதையே தெய்வத்திடம், தெய்வ ஸமதையான மஹான்களிடம் பாததூளி என்று போற்றி ஏற்றுக் கொள்கிறோம். கோதூளியும் அப்படியே. ஸாயங்காலத்தில் கோக்கள் மந்தையாக மேய்ந்து முடிந்து கொட்டிலுக்குத் திரும்பிக் கொண்டிருக்கும்போது அவற்றின் குளம்படியிலிருந்து பெரிசாகப் புழுதிப் படலம் கிளம்பும். அந்தப் புழுதி உடம்பு முழுவதும் படும்படி நின்றால் அதை புண்ய தீர்த்த ஸ்நானத்துக்கு மேலாகச் சொல்லியிருக்கிறது. புழுதி போவதற்கு ஸ்நானம் செய்வதுதான் வழக்கம் என்றாலும் இங்கேயோ புழுதியே புண்ய ஸ்நானமாக இருக்கிறது! பாலக்ருஷ்ணனே அப்படிப் புழுதியில் திளைத்தாடினான் – ’கோதூளி தூஸரித’னாக இருந்தான் என்று வர்ணித்திருக்கிறது. எப்பொழுதும் அப்படிப் புழுதி படிந்திருப்பதே அவனுக்கு ஒரு ஸௌபாக்ய சோபையை உண்டாக்கிற்று — ‘சச்வத் கோகுர நிர்தூதோத்தத-தூளீ-தூஸர ஸௌபாக்யம்’ -– என்று ஆசார்யாளே பாடியிருக்கிறார். அப்படிப் பசு மந்தை புழுதி எழுப்பிக் கொண்டு கொட்டில் திரும்புகிற ஸாயங்காலத்தையே ‘கோதூளி லக்னம்’ என்று விசேஷித்துச் சொல்லியிருக்கிறது.
கோமாதா, பூமாதா என்று இரண்டு சொன்னதில் பூமாதா தன் புழுதியையே கோமாதாவின் குளம்படியிலிருந்து பெற்று தனக்கும் அபிஷேகம் செய்து கொள்கிறாள். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
Just as the excretion of cow itself is sacred, the dust arising out its hooves is also sacred. Normally dirt from people’s feet would be considered trivial and mean. But the same thing will be accepted with reverence as ‘Padha dhooli’, when it is associated with the feet of God or great Mahans equivalent to God. The same is the case with ‘Gho dhooli’ too. At dusk, after the herd of cows finish their grazing and start returning to their sheds, a big cloud of dust emanate from their hooves while treading on earth. To stand in such a way that our body gets drenched in that dust has been emulated as greater than taking a holy dip in a Punya Theertham. Though the common practice is to take bath only to get rid of dirt and dust and to cleanse ourselves, the very dirt tends to be a holy bath here! It’s been described that Lord Balakrishnan Himself bathed ecstatically in the Ghodhooli, that He was always a “Ghodhoolisarithan” (adorned with dust of the cowherd). Acharyall has sung that such a cover of dust all over His body itself gave Him a radiance of Sowbagyam (prosperity) – “Sashvath Gokura Nirdhoodhothathara-dhooli-dhosara sowbagyam”. The time span of twilight when the cows walk back to their sheds itself has been praised greatly as “Ghodhooli Lagnam”.
Among the two mentioned namely, Ghomatha and Bhoomatha, we can see that Bhoomatha receives her own dust from the hooves of the cow and bathes herself with it too. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply