Periyava Golden Quotes-1124



உண்டி வாயிலே மெகானிகலாகப் பணத்தைப் போடுவது பெரிசில்லை. அதுவும் இப்போது இருக்கிற inflation -ல் எவரும் ஏதோ கொஞ்சம் உண்டியில் போட்டு விட்டுப் போய்விடலாம். அதுவும் பண்ண வேண்டியது தான். ஆனாலும் இப்படி மெகானிகலாக உண்டி வாயில் போடுவதைவிட, ஒரு செலவும் நமக்கு இல்லாமலே கறிகாய்த் தோல்களை நேரே உயிருள்ள ஒரு பசு வாய்க்குப் போட்டு, அது தின்பதைப் பார்த்தால், இதில் நமக்குக் கிடைக்கிற உள்ள நிறைவே அலாதி என்று தெரியும். ஸேவையிலே இதுதான் முக்யமான அம்சம்; அதில் பணமும் உழைப்பும் பேசுவதைவிட ஜீவனோடு ஜீவன் பேச வேண்டும்.

ஸேவை செய்கிறவர்கள் ஸங்கமாக ஒன்று கூடும்போது இப்படி உயிர்த் தொடர்பு ஏற்படுவது மட்டுமின்றி, ஸேவைக்குப் பாத்திரமாகிறவர்களையும் நேரே தங்ளோடு தொடர்பு படுத்திக் கொள்ள வேண்டும். ஒரே ஈஸ்வரன்தானே இத்தனை ஜீவன்களுமாகியிருப்பது? ஜீவலோகத்துக்குச் சொரிகிற அன்பினால், ஸேவையால் அந்த ஈஸ்வரத்வத்தை அநுபவித்து அவனுக்கு வழிபாடாகவே இதைச் செய்வதுதான் ஸேவையின் ஸாரம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Dropping money in the Hundi as an offering in a mechanical way is not all that great a gesture. Considering the inflation rate prevailing now, it will be easier for anyone to drop some amount. That of course is good and necessary too. But instead of dropping money mechanically in the Hundi, if we try to collect the discarded vegetable peels without incurring any expense and offer them directly as a feed to the cow, we will realise that watching the cow eating it gives a unique satisfaction more than anything else. This is the most important aspect in service; more than the involvement of money and labour, there should be a soul to soul interaction in it.

When service minded people come together, apart from establishing a biological communication, those who are benefiting from the service should also get connected with them directly. Isn’t the same Eswara who has manifested Himself as all these species? The essence of service lies in experiencing the Divine by showering love and service to all beings on earth and doing it as worship to Himself. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural

Tags:

2 replies

  1. beautifully stated-Great,simply great.

  2. சரணம் சரணம் ஸ்ரீ குரு . ஜானகிராமன் நாகப்பட்டிணம்

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: