Periyava Golden Quotes-1120


சாஸ்த்ர வசனப்படி தர்ம தேவதையே தபஸ், சௌசம் [தூய்மை], தயை, ஸத்தியம் என்ற நாலு கால்களுடைய ஒரு ரிஷபமாகத்தான் இருக்கிறது. அந்த தர்மக் காளையுடனேயே கோமாதாவும் இருப்பதாகவும், தர்மத்தையே பாலாகச் சுரக்கிற ‘தர்மதுகா’வாக அப்பசுத் தாய் இருப்பதாகவும், அந்த ஜோடியைக் கலி புருஷன் ஹிம்ஸித்ததாலேயே இந்த யுகம் இப்படிச் சீர்குலைந்திருக்கிறதென்றும் ‘பாகவ’தத்தில் இருக்கிறது.* ஆகையினால் கலிதோஷம் நீங்கி தர்மம் தலையெடுப்பதற்குச் செய்ய வேண்டியவற்றில் கோ ரக்ஷணம் முக்யமான ஒன்றாகும். அதிலே நாம் தவறினோம் என்ற பெரிய களங்கம் ஏற்படாமல் நமக்கு கோபாலக்ருஷ்ண ஸ்வாமி அநுக்ரஹிக்க வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்

Per the verses of Shastras, the very form of Dharma Dhevatha is personified as a Rishab (Bull), with Tapas (Penance), Soucham (Cleanliness), Dhaya (Compassion) and Sathyam (Truth) as its four legs. Bhagavatham holds that Ghomatha is also present with the Bull and that the Divine Cow Mother stands as “Dharma Dhuka” who secretes Dharma as Her milk and it was only because “Kali Purushan” tormented the Divine couple that this fourth Yuga namely ‘Kali’ is inflicted by all sorts of evil*. Therefore to get rid of ‘Kali Dosham’ (evils of Kali) and to enable Dharma to get manifested in this world, cow protection is one of the most important actions to be carried out. May Lord Gopalakrishnan shower His grace upon us to save us from the disgrace befalling on us of having failed to do this. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal



Categories: Deivathin Kural, Golden Quotes

Tags:

Leave a Reply

%d bloggers like this: