Important Navarathri Resolution – Appeal to Sthrees (Women) by Maha Periyava

Jaya Jaya Sankara Hara Hara Sankara – Below is an extract from one of the chapters of the book ‘Sthree Dharmam’ by Maha Periyava. On this auspicious Navarathri where there will be a lot of movement of Turmeric and Kumkumam (Thilak/Pottu) so I thought I would post this. Out of a lot of compassion Periyava tells us not to get into the sin of Gho hathi unknowingly. Following it or not is up-to us.

Many Jaya Jaya Sankara Hara Hara to Shri B. Narayanan mama for the translation. Rama Rama


திலக தாரணம்

அலக்ஷ்மீகரமானதற்கெல்லாம் பூர்ணகும்பம் வைத்துக் கூப்பிடுவதாக இப்போது பல நடந்து வருவதில் இன்னொன்று, பெண்கள் முறையாகத் திலக தாரணம் பண்ணிக் கொள்ளாமலிருப்பது. கன்யாக் குழந்தைகளுக்கும் ஸுமங்கலிகளுக்கும் திலகம் இட்டுக் கொள்வதை அத்யாவச்யமான அலங்காரமாக நம் ஆசாரத்தில் விதித்திருக்கிறது. அது முகத்துக்கே ஒரு சோபையைக் கொடுப்பதோடு சுபமான சக்திகளை வரவழைத்துத் தருவது, ‘ப்ரூகுடி’ என்ற புருவ மத்தியில் யோக சாஸ்த்ர சக்ரங்களில் ஒன்று இருக்கிறது. சித்தத்தை ஒருமுகப்படுத்தி ‘கான்ஸென்ட்ரேட்’ பண்ணுவதற்கு அந்த இடத்திலேதான் நம்முடைய த்யான லக்ஷ்யத்தை வைத்துப் பார்ப்பார்கள். ‘ஸரியாக அந்த இடத்தில் திலகம் இட்டுக் கொள்வது நம்மிடமுள்ள நல்ல சக்திகள் வ்ரயமாகாமல் மூடி போட்டுக் காப்பாற்றுகிறது; Energy Band -ஐ Protect பண்ணுகிறது’ என்று இந்த நாள் அறிவாளிகளும் சொல்கிறார்கள்.

நல்ல மஞ்சள் குங்குமந்தான் நெற்றிக்கு இட்டுக் கொள்வதற்கானது. ஸுமங்கலிகள் புருவங்களுக்கு மத்தியில் இட்டுக் கொள்வதோடு, அதை விட முக்யமாக வகிட்டிலும் இட்டுக் கொள்ள வேண்டும். அதுவே பரம ஸெளபாக்யம், ஸுமங்கலிகளின் வகிடு மஹாலக்ஷ்மியின் வாஸ ஸ்தானங்களில் ஒன்று. அம்பாளே தன்னுடைய வகிட்டில் செக்கச் செவேலென்று ஸூர்யோதய ரேகை மாதிரிக் குங்குமம் இட்டுக் கொண்டிருந்ததை ஆசார்யாள் ‘ஸெளந்த்ர்ய லஹரி’யில் பாடியிருக்கிறார்.

கன்யாக் குழந்தைகள் சாந்தும் இட்டுக் கொள்ளலாம். அகத்திலேயே அரிசியைக் கருக்கிப் பண்ணிய கருப்புச் சாந்து.

கடையிலே கலர் கலராக விற்கிற பொட்டுக்களை வாங்கி ஒட்டிக் கொள்வது அடியோடு தப்பு, அந்தப் பொட்டை சர்மத்தோடு ஒட்டச் செய்கிற கெமிகலோ, எதுவோ ஒன்று அநாசாரமானதாகவே இருக்கும். அதனால் நாளடைவில் சர்ம வியாதி ஏதாவது உண்டானாலும் உண்டாகலாம். ஜெலடினாக அது இருக்குமானால் அதில் மாட்டுக் கொழுப்புக் கூட இருக்கக்கூடும். இப்படி இருந்தால் பரம மங்களமான திலக தாரணம் என்பதே பசுவதைக்கு உடந்தையாக இருக்கிற மஹா பாபம் வரை கொண்டு நிறுத்துவதாக ஆகிவிடும்.

_________________________________________________________________________________________________________________________________

                                                                          Mark on the Forehead

Among the incidents that are being practiced to welcome misfortunes, there is one more. Women not wearing ‘Thilak’ on their foreheads. Wearing ‘Thilak’ has been specified by SAstrAs as an absolutely necessary decoration for ‘KanyAs’ and married women. In addition to giving a luster to the face, the ‘Thilak’  brings in auspicious things.   There  is a ChakrA in the space between the two eye brows, called  ‘BrUkuti’. In order to concentrate and bring our mind to a single point, this place is used. Wearing a ‘Thilak’ at the correct place there, covers and  protects our good fortunes from being wasted. Today’s intellectuals say that it protects the ‘Energy Band’.

Kumkum  prepared from pure Turmeric is the best suited for ‘Thilak’. Married women (Sumangali) should wear it at the beginning of the parting of hair, in addition to the place between eye brows. That is the ultimate happiness.

The beginning of the parting of hair on the forehead is supposed to be the dwelling place for MahAlakshmi. (Adi Shankara) AchAryA has sung in Soundarya Lahari  that AmbAl is wearing a scarlet Kumkum in that place. Girls can wear ‘SAndhu’ (a black paste made from charred rice).

It is totally wrong to wear the various types of ready made ‘Thilaks’ in different colours, sold in the shops. The gum which is used on the back to make it stick to the skin is improper. During the course of time, it will result in some skin deceases. If it is gelatin, then fat of cows may be present in it. In that case it will make us an accomplice to commit the sin of cow slaughter.



Categories: Deivathin Kural

Tags:

1 reply

  1. Very True. I feel sorry that many young Women do not follow this. Many refuse to follow this saying that does not match their dress. We must conduct free class to Young Hindu girls importance of this in every Hindu schools. Every parents must teach their children from the young age itself importance of this. Very unfortunate thing is 80% of the schools are run by Christian and they are against this “Thilakam Practice” .

Leave a Reply

%d