கோவிடமிருந்து நாம் பயன் பெறும் விஷயமாகவும் ஒன்று சொல்ல வேண்டும். உண்மையான பயன், அது தரும் த்ரவியங்களை வைதிக யஜ்ஞங்களிலும் தெய்வ கார்யங்களிலும் உபயோகப்படுத்திக் கொள்வதும், அதன் பால், தயிர் முதலானவற்றை நாம் சாப்பிட்டு ஆரோக்ய விருத்தி பெறுவதுந்தான். ஆனால் துர்பாக்யவசமாக நடப்பது என்னவென்றால் ஆரோக்யத்துக்கு ஹானியான காபிக்குத் தான் இப்போது பாலில் பெரும்பகுதி போகிறது. அம்ருத துல்யமான பாலை உடம்பு, மனஸ் இரண்டையும் கெடுக்கும் விஷ வகையான கஃபைன் சேர்ந்த டிகாக்ஷனோடு சேர்த்து வீணடிக்கிறோம். பசு ரக்ஷணம் போலவே ஆத்ம ரக்ஷணத்திலும் ஜனங்கள் கவனம் செலுத்தி, காபி குடிக்கிற கெட்ட பழக்கத்திலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
பலமுறை காபி குடிப்பதற்குப் பதில் அந்தப் பாலில் ஒரு பாகம் கோயில் அபிஷேகத்துக்கும், ஒரு பாகம் ஏழை நோயாளிகளுக்கும் ஏழைக் குழந்தைகளின் வயிற்றுக்கும் போகுமாறு செய்ய வேண்டும். பால் ருசியே காணாமல் நோஞ்சான்களாக லக்ஷக்கணக்கான ஏழைக் குழந்தைகள் இருக்கும்போது, நினைத்தபோதெல்லாம் பல பேர் காபி ருசி பார்ப்பது ஸமூஹத்துக்குச் செய்கிற த்ரோஹமாகும். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள்
There is something to be said about the benefits derived from the cow. The real benefit is to make use of the products that the cow gives in Vaidhiga rituals and divine activities and to improve our health by consuming milk and curd we get from it. But unfortunately what happens now is that a large amount of milk is used only to make coffee, drinking of which, is an unhealthy habit. We are wasting the milk which is an equivalent of Amruth (Nectar) by mixing it with coffee decoction which has caffeine that spoils both body as well as the mind. Just like concentrating in Cow protection, people should focus their attention in Athma Rakshanam (preserving the Soul) too and should free themselves from the clutches of this bad habit of drinking coffee. Instead of drinking coffee many times a day, we should see to it that a portion of the milk used in it, goes to temples for Abhishekam and another portion to feed sick people and poor children. While there are innumerable children who are living malnourished without having tasted milk at all, it is a great social treachery if many keep tasting coffee several times a day as and when they fancy it. – Jagadguru Chandrasekharendra Saraswathy Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Leave a Reply