Golden Quotes

Periyava Golden Quotes-13

சூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பே. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் அதில் தீப்பற்றிக் கொள்கிறது. பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய… Read More ›

Periyava Golden Quotes-12

ஒருவனுக்கு நல்லதை சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாக சொன்னால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாக போகிற நல்ல வாக்கு சத்யமாகாது. நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்து சொல்லப் படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும்… Read More ›

Periyava Golden Quotes-11

  நம்முடைய தினசரி அலுவல்களில், நம்முடைய கடமைகள் யாவை, எது தர்மம் போன்ற கேள்விகள் எழுந்து அவைகளுக்கு விடை பெற வேண்டி இருக்கிறது. நம்முடைய தர்மம் எது? அதற்கு மூலம் எது? தர்மம் என்பது வாழ்க்கைக்கான ஒழுக்கம். தர்ம வழியில் செயல்பட வேதங்கள் விதித்திருக்கும் வழியில் செல்ல வேண்டும். வேதமே எல்லா தர்மத்திற்கும் ஆதாரம். –… Read More ›

Periyava Golden Quotes-10

அம்பாளை விட மங்கள வஸ்து இல்லை. ‘ஸர்வ மங்கள மாங்கல்யே’ என்று அம்பாளைச் சொல்வார்கள். அவர்களுடன் சேர்ந்திருப்பதாலே பரமேச்சுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவமான அம்பிக்கை மகா சுமங்கலி. அவளுடைய சௌமாங்கல்யத்திற்கு எப்படிப் பங்கம் உண்டாக முடியும்? இதனால் தான் ஆலஹால விஷம் சாப்பிட்டும் கூடப் பரமேச்வரன் சௌக்யமாகவே இருக்கிறார். ஆச்சார்யாள்  (ஸ்ரீ ஆதிசங்கரர்) ஸௌந்தர்ய… Read More ›

Periyava Golden Quotes-9

உஷ்ணத்தினால் உருக்கப்பட்ட நெய்யை நிறமற்றதாகக் காண்கிறோம். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தையடைகிறது. ஈசனை உருவமற்றவர், அரூபி எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் பக்தர்களின் உள்ளத்தில் ஈசன்பால் அன்பு பரிபூரணமாக விளங்கும் பொழுது அந்தக் குளிர்ந்த நிலையில் உருவம் இல்லாத கடவுளும் அவர்களது பக்திக்குக் கட்டுண்டு அவர்களை உய்விக்க ஓர் உருவத்தை யடைகிறார். – ஜகத்குரு… Read More ›

Periyava Golden Quotes-8

  ருத்ராக்ஷத்தின் பெருமை மிக அதிகம். ருத்ராக்ஷத்தைச் சிவபெருமானுடைய அடையாளமாகப் பெரியவர்கள் சொல்லுகிறார்கள். ருத்ரனுடைய நேத்திரம் அது. அதைத் தமிழில் ‘திருக்கண்மணி’ என்று சொல்லுவார்கள். மற்ற விருக்ஷங்களுடைய விதைகளுக்கு இல்லாத ஒரு சிறப்பு இந்த ருத்ராக்ஷத்திற்கு உண்டு. இயற்கையில் துளையோடு உண்டாவது ருத்ராக்ஷம் ஒன்றுதான். இந்த ருத்ராக்ஷம் பாரத தேசத்தில் நேபாளத்தில் இருக்கிறது. – ஜகத்குரு… Read More ›

Periyava Golden Quotes – 7

  உலகத்திலுள்ள எல்லாருமே சிவன் குடிமக்கள். சிவன் மஹாபிதா. நாம் எல்லோரும் யக்ஞம் செய்கிறோம். அக்னி காரியம் இல்லாமல் வைதிகமதமே இல்லை. உலகம் முழுவதுமே வேதம் பரவியிருந்த காலத்தில் எல்லோருமே அக்னி காரியம் செய்தார்கள். அக்னி காரியத்தின் கடைசியில் பஸ்ம தாரணம் உண்டு. வைஷ்ணவர்களாக இருந்தால் பாஞ்சராத்ர ஆகமத்திலுங்கூட ஹோமங்களுக்குப் பிறகு ஹோம பஸ்மத்தை எடுத்துத்… Read More ›

Periyava Golden Quotes – 6

  சிறு பிராயத்திலிருந்தே ஆஸ்திக புத்தியை வளர்க்க வேண்டும். நமது மத அனுஷ்டானங்களை விடாமல் பற்றி ஒழுகி, உத்தமமாக வாழ்கின்ற பெரியோர்களின் சங்கத்தில் குழந்தைகளைப் பழக்க வேண்டும். நம்முடைய ஆத்ம க்ஷேமத்திற்காகவே ரிஷிகள் சாஸ்திரங்களை தந்தார்கள் என்ற விசுவாசத்தை ஏற்படுத்த வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்   We have to… Read More ›

Periyava Golden Quotes – 5

  உடம்பினால் நல்ல காரியம் செய்யவேண்டும். கோயிலுக்குப் போய் பிரதக்ஷிணம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும். தண்டம் சமர்ப்பித்தல் என்று நமஸ்காரத்தைச் சொல்லுவார்கள். தடியைப் போல் விழுவது தான் அது. இந்த உடம்பு நமதன்று, அவருடையது என்று நினைத்து அவர் சந்நிதியில் போட்டு விட வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் We… Read More ›

Periyava Golden Quotes – 4

  உபகாரம் செய்வதன் பயனாக நமக்கு எளிமை, அடக்கம், அஹங்கார நீக்கம் ஆகியன உண்டாக வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்  The result of helping others should result in us acquiring simplicity, humbleness, and destroying one’s ego and pride. – Sri Kanchi Maha Periyava.

Periyava Golden Quotes – 3

  ஒரு மதத்தின் வலிமை அதை அனுசரிப்பவர்களின் எண்ணிக்கையைப் பொறுத்து அல்ல. இந்து மதக் கொள்கைகளின்படி வாழ்ந்து காட்டுபவனே இந்து மதத்திற்கு சிறந்த பிரசரகனாகிறான். அப்படிப்பட்டவர்களால் தான் நம் மதம் இன்று தழைத்திருக்கிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் A religion’s strength is not in the number of people… Read More ›

Periyava Golden Quotes – 2

Jaya Jaya Shankara Hara Hara Shankara – A very important quote for us to follow in our daily lives. Ram Ram. பட்டுப் புடவை, பட்டு வேஷ்டிகளினால் பாவம் தான் வருகிறது. அஹிம்சை, அஹிம்சை என்று சொல்லிக் கொண்டு நாம் மாமிசமே சாப்பிடுவதில்லை என்கிறோம். கொஞ்சம் யோசித்தால் நமக்கு… Read More ›

Periyava Golden Quotes – 1

  நாம் உசந்த ஸ்தானத்தில் இருக்கிறோம். நம் உதவியை பெறுகிறவர் நம்மை விட தாழ்த்தியாக இருக்கிறார். நாம் கருணை காட்டுகிறோம் என்று நினைக்கிற போதே நாம் செய்கிற உபகாரம் அசுத்தமாகி விடுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் When we start thinking that we are in a higher plane… Read More ›