Upanyasam

இன்று கார்த்திகை ஸோமவாரம்

சோமவாரம் எனப்படும் திங்கட்கிழமை சிவபெருமானை வழிபடுவதற்கு சிறப்பான நாள். குறிப்பாக, கார்த்திகை மாதத்தின் திங்கட்கிழமை, விரதம் இருந்து, பூஜை செய்து சிவ தியானம் செய்ய உகந்ததாக போற்றப்படுகிறது. எல்லா சிவாலயங்களிலும் கார்த்திகை சோமவாரத்தில் சிவலிங்கத் திருமேனிக்கு சங்காபிஷேகம் செய்யப்படுகிறது. 108 சங்கால் அபிஷேகம் அல்லது 1008 சங்கால் அபிஷேகம் நடைபெறுகிறது. இதை தரிசிப்பதால் நம் துன்பங்கள்… Read More ›

அம்மையே அப்பா! முருகா முத்துக்குமரா!

ஆசார்யாள் ஸுப்ரமண்ய புஜங்கத்தில் “ஜநித்ரீ பிதா ச” என்ற ஸ்லோகத்தில் முருகப் பெருமானையே அம்மாவாகவும் அப்பாவாகவும் துதித்து, பிழை பொறுத்து, அருள வேண்டுகிறார். அந்த ஸ்லோகத்தின் பொருளை இங்கே காணலாம் -> ஸுப்ரமண்ய புஜங்கம் – முப்பதாவது ஸ்லோகம் – எந்தாயும் எனக்கருள் தந்தையும் நீ “குமாரேச ஸூனோ குஹ ஸ்கந்த” என்று தொடங்கும் முருகனுடைய… Read More ›

வேலை வணங்குவது எமக்கு வேலை

இன்று கந்தஷஷ்டி உற்சவத்தின் முதல் நாள். இந்த ஆறு நாட்களும் முருகனை வழிபட்டு வரங்களை பெறுவோம். சூர சம்ஹாரம் செய்த ஸுப்ரமண்ய ஸ்வாமியின் கையில் உள்ள வேலை வழிபாட்டால் பகைவர்கள் ஒழிவார்கள். மஹாபெரியவா, பஞ்சாயதன பூஜையில் ஒரு வேலையும் சேர்த்துக் கொண்டு, ஷண்மத வழிபாடாக பண்ணலாம் என்று சொல்லி இருக்கிறார்கள். நாமும் அருணகிரிநாதர் அருளிய வேல்… Read More ›

இன்று மேட்டூர் ஸ்வாமிகள் ஆராதனை

தீபாவளியைப் மேலும் புனிதப் படுத்த வேண்டியோ என்னவோ, ஸ்ரீ மேட்டூர் ஸ்வாமிகள் ஒரு தீபாவளியன்று சித்தி அடைந்தார். ஸ்வாமிகள் மஹாபெரியவாளோடு தன் அனுபவங்களை பகிர்ந்து கொண்ட காணொளியை மீண்டும் மீண்டும் கேட்கும் போது, அவர் எளிமையாக சொல்லும் விஷயங்களில் எவ்வளவு தர்ம சூக்ஷ்மங்கள் பொதிந்து உள்ளன என்ற என் வியப்பை இந்த ஒலிப்பதிவில் பகிர்ந்துள்ளேன் ->… Read More ›

இன்று ஐப்பசி பூரம் – காமாக்ஷி ஜயந்தி

காஞ்சி க்ஷேத்ரத்தில் காமாக்ஷி தேவி, ப்ரஹ்மாவின் தபஸிற்கு மகிழ்ந்து, பிலாகாசத்தில் இருந்து கரும்புவில், பஞ்ச புஷ்பபாணம், பாசம், அங்குசம் ஆகிய ஆயுதங்களைத் தாங்கிக் கொண்டு நாம் பார்க்கும் அழகு வடிவமாக ஆவிர்பவித்த நாள் இந்த ஐப்பசி பூரம். இந்த நாள் காமாக்ஷி ஜயந்தி என்று கொண்டாடப் படுகிறது. இந்த நன்னாளில் மூக பஞ்சசதீ ஸ்தோத்ரத்தில் இருந்து… Read More ›

உள்ளம் கவர் கள்வன்

இன்று ஐப்பசி பௌர்ணமி. எல்லா சிவன் கோவில்களிலும் அன்னாபிஷேகம் செய்வார்கள். பௌர்ணமி அம்பாளுக்கும் விசேஷம். இந்த ஒரு சிவானந்த லஹரி ஸ்லோகத்தின் விளக்கத்தில் பல மூக பஞ்சசதீ ஸ்லோகங்களின் விளக்கமும் கொடுக்கப் பட்டுள்ளது. இன்று இந்த ஸ்லோகங்களின் மூலமாக பார்வதீ பரமேச்வராளை மனதில் த்யானிப்போம் -> சிவானந்தலஹரி 22வது ஸ்லோகம் பொருளுரை

பெரியவாளுக்கு நாலு நமஸ்காரம் பண்ணுவதற்கென்றே ஒரு ஸ்லோகம்

भुवनजननि भूषाभूतचन्द्रे नमस्ते कलुषशमनि कम्पातीरगेहे नमस्ते । निखिलनिगमवेद्ये नित्यरूपे नमस्ते परशिवमयि पाशच्छेदहस्ते नमस्ते ॥ (ஸ்துதி சதகம் 99வது ஸ்லோகம்) பு⁴வநஜநநி பூ⁴ஷாபூ⁴தசந்த்³ரே நமஸ்தே கலுஷஶமனி கம்பாதீரகே³ஹே நமஸ்தே । நிகி²லநிக³மவேத்³யே நித்யரூபே நமஸ்தே பரஶிவமயி பாஶச்சே²த³ஹஸ்தே நமஸ்தே ॥ ஸன்யாசிகளுக்கு நமஸ்காரம் பண்ணும் போது நாலு தடவை நமஸ்காரம் பண்ண… Read More ›

மஹாபெரியவா அப்படி என்ன உசத்தி?

இன்னிக்கு அனுஷம் (இந்தியாவில் நாளை). எத்தனையோ சாதுக்கள் இருந்தாலும் நாம இன்னிக்கும் மஹாபெரியவாளை ரொம்ப உசத்தியாக கொண்டாடுகிறோம். அது எதனால் தெரியுமா? -> சாதுவுக்கும் மகானுக்கும் உள்ள வித்தியாசம்

நாராயண நாமத்தின் மகிமை

இன்று புரட்டாசி சனிக்கிழமை. முகுந்தமாலையில் குலசேகர ஆழ்வார், நாராயண நாமத்தின் மகிமையை பற்றி சொல்லி உள்ளதை கேட்போம் நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன் நாராயணா என்னும் நாமம்

மௌலௌ கங்கா சசாங்கெள – மஹாபெரியவா உபன்யாசம்

ஸ்ரீமத்அப்பைய தீஷிதரின் மார்கபந்து ஸ்தோத்ரம் ஒலிப்பதிவு ஸ்ரீமத்அப்பைய தீஷிதரின் துர்கா சந்திர கலா ஸ்துதி ஒலிப்பதிவு ஸ்ரீமத்அப்பைய தீஷிதரின் தனி ஸ்லோகமான “மௌலௌ கங்கா சசாங்கெள” என்ற ஸ்லோகத்திற்கு மஹா பெரியவா ரொம்ப அனுபவித்து இருபது நிமிடங்களில் பொருள் கூறி இருக்கிறார்கள். தீக்ஷிதரின் 500வது ஜயந்தி வைபவமான இன்று, இந்த உபன்யாசத்தை கேட்டு மகிழ்வோம்.

அஜாமிளோபாக்யானம்

ஸ்ரீமத் பாகவதத்தில் “அஜாமிளன் கதை” என்று ஒன்று உண்டு. “பகவானுடைய நாமங்களை நாவினால் சொன்னாலே, அது எல்லா பாவங்களையும் போக்கும். தன் நாமத்தை சொல்பவனை, பகவான் தன்னை சேர்ந்தவனாக எண்ணி, எல்லா காலத்திலும் எல்லா கோணத்திலும் காப்பாற்றுவார்” என்று இந்த கதை நமக்குச் சொல்கிறது. நாரயணீய ஸ்லோகங்களைக் கொண்டு இந்தக் கதையை சொல்லியிருக்கிறேன். மஹாபெரியவா, சிவன்… Read More ›

மஹாபெரியவா ரூப த்யானம்

இன்று அனுஷம். மஹாபெரியவா, “ஸத்-சித்-ஆனந்தம் என்கிற பெரிய தத்வம் நமக்குத் தெரியாமல், புரியாமல் இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும். காமாக்ஷியின் ஸெளந்தர்யமே நமக்கு ஆனந்தம் தரத்தானே செய்கிறது? அம்பாளின் அழகுப் பிரவாஹத்தைப் பார்த்தாலே போதும்; நிறைந்த நிறைவாகி விடலாம். அதிலேயே ஊறி ஊறி அத்வைத மோக்ஷானந்தத்துக்குப் போய்விடலாம்.” என்கிறார். மூக பஞ்சசதீ ஆர்யா சதகத்தின் இரண்டாவது ஸ்லோகத்தில்,… Read More ›

பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் ஸ்ரீமத் பாகவத உபன்யாசம்

ஜகத்குரு டிரஸ்ட் மடிப்பாக்கம் ஏற்பாட்டில் பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் அவர்கள் நேரலையில் 39 நாட்கள் ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம் உபன்யாசம் செய்தார்கள். அதன் ஒளிப்பதிவை இங்கே கேட்கலாம் -> வால்மீகி ராமாயணம் பிரம்மஸ்ரீ சுந்தர்குமார் அவர்கள் அடுத்ததாக அவர் 45 நாட்கள் ஸ்ரீமத் பாகவத மஹாபுராணம் வரும் 27.09.20 முதல் 12.11.20 தினமும் இந்திய நேரம் மாலை… Read More ›

இன்று ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆராதனை

இன்று மஹாளய அமாவாசை. ஸ்ருங்கேரி ஆசார்யாள் ஸ்ரீ சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் ஆராதனை. நம் மஹா பெரியவாளுக்கு சந்திரசேகர பாரதி ஸ்வாமிகள் மேலே அபார அன்பு, மதிப்பு. அந்த மஹானைப் பற்றி நான் ஸ்வாமிகளிடம் கேட்டவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன்-> ஸ்ருங்கேரி சாரதாம்பா காஞ்சி காமாக்ஷி

இன்று போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை

ஒரு மஹாளய பக்ஷ த்வாதசி அன்று போதேந்திர ஸ்வாமிகள், தன் அதிஷ்டான ஸ்தலத்தை ஸ்ரீசத்குரு ஸ்வாமிகளுக்கு வெளிப்படுத்தி, அந்த திதியிலேயே தன்னுடைய ஆராதனையை செய்து வருமாறு பணித்ததால், ஒவ்வொரு வருடமும் மஹாளய பக்ஷ த்வாதசி அன்று போதேந்திர ஸ்வாமிகள் ஆராதனை கொண்டாடப் படுகிறது. யஸ்ய ஸ்மரண மாத்ரேண நாம பக்தி: ப்ரஜாயதே | தம்நமாமி யதிச்ரேஷ்ட்டம்… Read More ›

ஷ்யாமளா நவரத்னமாலிகா

மஹாகவி காளிதாசர், ராஜமாதங்கி என்று போற்றப்படும் ஷ்யாமளா தேவியைக் குறித்து அருளிய அழகான ஒரு ஸ்லோகம் ஷ்யாமளா நவரத்னமாலிகா. இதை பாராயணம் செய்தால் நல்ல வாக்கும், சங்கீதம் போன்ற கலைகளில் தேர்ச்சியும் ஏற்படும். அதன் ஒலிப்பதிவை இந்த இணைப்பில் கேட்கலாம். -> ஷ்யாமளா நவரத்னமாலிகா ஒலிப்பதிவு இந்த ஸ்லோகத்தின் மூலமாக, கோவிந்த தாமோதர ஸ்வாமிகளுக்கு சிறு… Read More ›

Dr.வீழிநாதன் அவர்களின் யூட்யூப் சானல்

வீழிநாதன் மாமா மஹாபெரியவாளோடு தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை, ஆனந்தம் பொங்க பகிர்ந்து கொள்வதை நாம் நிறைய கேட்டிருக்கிறோம். இந்த இணையதளத்திலேயே மகேஷ் நிறைய அவற்றை பகிர்ந்துள்ளார். மாமா எளிமையின் உருவமாக இருப்பதால், அவருடைய இன்னொரு பக்கத்தை உங்களில் சிலர் அறிந்திருக்க வாய்ப்பில்லை. Dr.வீழிநாதன் அவர்கள், பல வருடங்கள், சென்னை பல்கலைக்கழகத்தின் சம்ஸ்கிருத பிரிவின் தலைவராகவும், பேராசிரியராகவும்,… Read More ›