Thanks to Sri Ganapathisubramanian for bringing out these treasures to us. It is important for us to know how cordial all our hindu matams were in those days – even today several matams are very united. It is also important to know Sankara Matam and it is everlasting contribution to Tamil.
தருமை ஆதீனத்தின் சார்பில் நடைபெற்ற திருநெறிய தெய்வத் தமிழ் மாநாட்டில் ஸ்ரீகாஞ்சீ காமகோடி பீடாதிபதிகள் ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கராசாரிய ஸ்வாமிகள் அவர்கள் அருளிய தொடக்கவுரை…(1)
“திருநெறிய தமிழ்” என்பது ஒரு அருமையான தொடர். திருஞானசம்பந்தப் பெருமானின் முதல் திருமுறையிலே முதல் பதிகத்திலே கடைசிப்பாட்டில் காணப்படுவது.
அரு நெறியமறை என்ற பாட்டிலே “திருநெறியதமிழ் வல்லவர் தொல்வினை தீர்தல் எளிதாமே” என்கிறார்.
அப்படிப்பட்ட சொற்றொடரைப் பெயராக வைத்தது இருக்கிறதே ரொம்பப் பொருத்தம்.
இது தெய்வத்தமிழில் வைக்கப்பட்ட பெயர். தருமபுரம் ஆதீனத்திலே ஒவ்வொன்றும் பொறுக்குமணிகளாக விளங்குகிறது.
இந்த மாநாட்டின் பெயரிலிருந்தே இது தெரிகிறதல்லவா?
இந்தக்காலத்திலே இப்படிப்பட்டதான மிகப்பெரிய விழா நடத்துதலினால் பகவான் அநுக்கிரகம்செய்வார், சிலர் உலகத்திலே கேவலமான முறையிலே தப்புப் பிரசாரங் களில் ஜனங்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள். இந்தமாதிரி உலகம் இருக்கிறதால் மழையே இல்லாமற் போய்விட்டது.
இதற்காக பகவானிடம் பிரார்த்தனை செய்தார்கள்.
சென்னையிலே ஜனங்கள் மழையில்லாமல் தவித்துக்கொண்டிருந்தார்கள். பகவானுக்குப் பிரார்த்தனை செய்ததும் பத்துநாட்கள் மழை பெய்துவிட்டது, ‘போதுமா? போதுமா?’என்று கேட்கிற மாதிரி மழைபெய்தது. பகவான் இல்லை அது கல் சாமிதான் என்று பேசிவந்தவர்களுக்கும் பெய்தது மழை.
சிலர் சொல்லுவார்கள்.
‘சூரிய வெப்பம் இருக்கிறது; சமுத்திரம் இருக்கிறது; அதனாலே மழை பெய்திருக்கிறது..” என்று. சமுத்திரமும் சூரியனும் எப்பொழுதுமே இருந்து வருகின்றன. ஆனால் மழை இப்பொழுது மட்டும் ஏன் பெய்தது? பகவானுக்குப் பிரார்த்தனை செய்ததனால் அல்லவா?
நமக்குப் பகவான் இந்தச் சமயத்தில் உதவி செய்தார். அப்படிச் செய்வதுதான் ஈச்வரனுடைய கடமை.
Categories: Upanyasam
Leave a Reply