Thanks to Sri Ganapathisubramanian for this treasure.
தருமை ஆதீனம் திருநெறிய தெய்வத் தமிழ் மாநாட்டில் பூஜ்யஸ்ரீ ஆசார்யாள் அவர்கள் மாநாட்டைத் தொடங்கி வைத்து அருளிய ஆசியுரை…2
உலகத்தில் சில இடங்களில் ஜனங்களிடத்திலே கீழ்த்தரமான பிரசாரம் இந்தமாதிரி நடக்கிறது.. ஜனங்கள் இருக்கிற நிலையிலே அபசாரம் எதுவும் ஈச்வரனிடத்திலே ஏற்படக்கூடாது. இதைத்தான் பகவான் நமக்கு.. அறிவித்தார். ஆக, ஈச்வரன் விஷயத்தில் கீழ்த்தரமான பிரசாரம் அதிகமாக ஆகக் கஷ்டமும் அதிகமாகிறது.
இந்தமாதிரி நாஸ்திகர்கள் எல்லாம் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்குக் கஷ்டம் வர வேண்டும் என்று நாமும் பேசக்கூடாது.
ஒருவன் நாள்தோறும் தவறு செய்கிறான். காங்கிரஸ்காரர்களும் தவறு செய்கிறார்கள். ஆகையால் குற்றத்தை நினைக்கக்கூடாது. அவர்கள் சார்பாகவும் ஈச்வரன் சந்நிதானத்தில் போய் அவர்கள் செய்த அபசாரத்தைப் பொறுத்து உலகிலே பஞ்சம் இல்லாமல் செய்யவேண்டும் என்று சொல்லி, ஏதோ தவறான பிரசாரத்தினாலே அவர்கள் மனம் மாறிப் போயிருக்கிறார்கள் ஆகையால் ஈச்வரனே அந்தத் தவறை மன்னித்துக் கொள்ளும் என்று நாம் பிரார்த்தனை செய்யவேண்டும்.
எல்லோருடைய அபசாரத்தையும் என் சார்பாக நீக்கவேண்டும் என்று பிரார்த்தித்துக் கொள்ளவேண்டும்.
நாஸ்தீகவாதம் மிகவும் பரவிக் கொண்டிருந்த இந்தக் காலத்தில் – P.T. இராஜன் பைத்தியக் காரத்தனமாக நடக்கிறார் என்று சில ஜனங்கள் எண்ணுகிற காலத்திலேயே யார்போனாலும் சரி… மதிப்புப் போனாலும் சரி.. நாடெங்கும் எதிர்ப்பு வந்தாலுஞ்சரி.. அதற்குப் பயப்படக் கூடாது என்று எண்ணி ஐயப்பனைத் தலையில் வைத்து ஊர் ஊராய்ச் சுற்றினார்.
அப்பேர்ப்பட்ட தெய்வபக்தி உள்ளவர் P.T.ராஜன்.இவர் தராசு முனையிலே இருக்கிறவர். தராசுக் கட்சியில் இருந்துதானே இன்று இங்கு வந்திருக்கிறார் நமது P.T. ராஜன்?
எங்கு பார்த்தாலும் இப்பொழுது ஹர ஹர சப்தம் எழ வேண்டும்.
இந்த நாட்டிலே, கூட்டத்திலே எவ்வளவு. சப்தமிருந்தாலும், “ஹர ஹர” என்று சொன்னவுடனே எல்லாம்அ டங்கிவிடும். அந்த முறையிலே எங்கே இருந்தாலும் எவ்வளவு சப்தமிருந்தாலும் ஹரஹர என்று ஒருவர் சொன்னவுடனே எல்லோரும் சொல்லவேண்டும்,
திருஞானசம்பந்தப் பெருமான் வாக்கிலே தோன்றிய இந்த நாமத்தை எங்கே பார்த்தாலும் சொல்லவேண்டும்.
இந்த மாநாட்டை இந்த ஆதீனத்திலிருந்து ஆரம்பித்து விடவேண்டியது; இதன் எதிரொலி எங்கும் எல்லா நாட்டிலும் கேட்கும்.
Categories: Upanyasam
Hara hara shankara jaya jaya shankara.
Dear Moderator,
Ram Ram,
Looks like this topic has valuable content, it would’ve been easier for us if equivalent English version is also included in the post.
Please consider, thanks in advance.