Cordial Relationship Between Mutts – Part 3 – 04-06-1952

Thanks to Sri Ganapathisubramanian for this share.

தருமபுரம் மாநாட்டைத் தொடங்கி வைத்து அருளிய ஆசியுரை..3

ஈச்வரனை வழிபட வேண்டியதற்கு முக்ய காரணம் ஒன்று உண்டு. அவர் காமனைக் கண்ணால் எரித்துக் காலனைக் காலால் உதைத்து வென்றார்.

உலகத்திலே கஷ்டப்பட வேண்டியதற்குக் காரணம் பிறப்பிறப்பு. பிறந்தால் மரணம் என்ற ஒன்று இருக்கிறது. ஜனனம் மரணம் இந்த இரண்டுந்தான் கஷ்டங்களைத் தருகின்றன. இந்த இரண்டையும் வென்றவர் ஈசன். அதனாலே ஈசனை வழிபடவேண்டும்.

ஜனனத்துக்குக் காரணம் காமம்.
மரணத்துக்குக் காரணம் காலம்.

ஆனதினாலே காமனைக் கண்ணால் எரித்தார்; காலனைக் காலால் உதைத்தார்.

ஆகவே ஈசனை வழிபட வேண்டுமானால் இதை ஒழிக்க வேண்டும். எனவேதான்
சிவபெருமானுக்குப் ‘பிறப்பறுக்கும்
பெம்மான்’ என்ற பெயர் வந்தது. ‘சிவேபரமகாரணே’ என்று சொல்லுகிறார். ‘ஓருருவம்’ ‘ஓர் பொருள்’ என்றார் சுந்தரமூர்த்தி சுவாமிகள் .

நதிகள் எப்படி எப்படி ஓடிச் சென்றாலும் கடைசியில் கடலில்தான் போய்ச் சேரும். ஜலம் வர வேண்டுமானால் கடலிலிருந்துதான் வரும். பிறகு முடிவாக அங்கேதான் போகிறது. அந்தமாதிரி எல்லாவற்றையும் தன்னுள்ளே வைத்திருக்கிறான் பகவான். நாம் எந்த உலகத்திலிருந்து வந்திருந்தாலும் முடிவாக அங்கேதான் போய்ச் சேர வேண்டும். நாம் ஈச்வரனுக்கு உரியவர்கள். இந்தத் தத்துவம்தான் சிவஞான போதத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. இதுதான் இந்த உலகத்துக்குத் தெரியவேண்டும். இதுதான் இந்த ஆதீன ஸ்தம்பத்திலே எழுதப்பட்டிருக்கிறது.

சிக்ஷா ரக்ஷா என்று ஆண்டவனுக்குப் பெயர். ஆண்டவன் அடிக்கவும் செய்வான் அணைக்கவும் செய்வான்.

அந்தக் காலத்திலே ஜனங்கள் ஈச்வரனை மறந்து விட்டார்கள். கர்வம் உண்டாகி விட்டது. அந்தக் காலத்திலே பகவான் வந்து காப்பாற்றினார். எல்லோரும் சிவபெருமானை மறந்திருந்தபோது ‘பகவான் ரட்சித்தார்.

பிரபு என்பவன் சிக்ஷிப்பவன் ரக்ஷிப்பவன். பிரபுவாக இருப்பவன் அடிக்கவும் வேண்டும் அணைக்கவும் வேண்டும். லோகப் பிரபு இந்த உலகத்திற்கு இதனைச் செய்து
வருகிறார். இதுதான் இந்த உலகத்துக்குத் தெரிய வேண்டும். ஈசுவரனிடத்திலே தோத்திரத்திலும், சாத்திரத்திலும் முறையிட்டால் நம்மைக் காப்பாற்றுவார். எங்கும் பக்தி ஓங்கி வளரும். அன்பு வளரும். பயப்பட வேண்டாம். அன்பு வளர்ந்தால் சந்தோஷந்தான். இம்மாநாடு அன்பு, பக்தியை ஓங்கி வளரச் செய்யட்டும், எங்கும் அரன் நாமமே சூழ்க!
(3/3)



Categories: Upanyasam

Tags:

1 reply

  1. 🙏💐🙏💐🙏💐

Leave a Reply

%d bloggers like this: