Deivathin Kural

Periyava Golden Quotes-26

பகவானிடம் பக்தி உண்டாகவும், அவனது அருள் கிடைக்கவும் முதலில் பிறருக்கு உதவி செய். மனம் பக்குவமடைந்தால் உண்மையான பக்தியும், ஈஸ்வரனின் அருளும் கிடைக்கும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்   We need to help others to get the grace of Bhagawan and Bhakthi. When our mind… Read More ›

Periyava Golden Quotes-25

ஸ்ரீ அப்பய்ய தீக்ஷிதர் என்று ஒரு பெரியவர் இருந்தார். இன்றைக்கு நாம் விபூதி, ருத்ராக்ஷம் தரித்திருப்பது அவர்களுடைய ப்ரயத்தனத்தின் ப்ரயோஜனம். அவர்கள் 104 புத்தகங்கள் எழுதியிருக்கிறார்கள். சிவோத்கர்ஷத்தை ஸ்தாபித்தார்கள். விஷ்ணு த்வேஷத்தினால் அப்படிச் செய்யவில்லை. விஷ்ணு பக்தி என்று பேர் வைத்துக்கொண்டு சிவ பக்தியை நாசம் பண்ணி சிவத்வேஷத்தை வளர்ப்பதை அவர்கள் வெறுத்தார்கள். ‘சிவத்வேஷத்தை சகிக்க… Read More ›

Periyava Golden Quotes-24

  பரமசிவனுக்கு உரிய ஐந்து அடையாளங்களில் பஸ்மமாகிய விபூதி ஒன்று; அவனுக்குப் பிரியமான மற்றோர் அடையாளம் ருத்ராக்ஷம். வில்வம் மற்றொன்று. பஸ்மம் சத்ய ஸ்வரூபமானது. அதை சாக்ஷாத் பரமசிவனுடைய ஸ்வரூபமே என்று சொல்லவேண்டும். ப்ரபஞ்சமெல்லாம் நசித்தாலும் தான் அழியாமல் இருப்பவன் பரமசிவன். உலகத்திலுள்ள பொருள்கள் எல்லாம் எரிந்துபோனால் பஸ்பமாகி விடுகிறது. அதை எரித்தால் அது அழிவதில்லை…. Read More ›

Periyava Golden Quotes-23

தருமம் நம்முடைய மதம் என்னும் மரத்தின் வேர். பக்தியும், ஞானமும் அதன் மலர்கள், பழங்கள். அந்த வேர் காய்ந்து போகாமல் காப்பது நம் கடமை. மிகப் பரவலான கருத்தொற்றுமையின் அடிப்படையில் தருமத்தை பாதுகாப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும். இதற்கு ஓரளவு தியாகம் தேவைப்படுகிறது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்   Dharma is… Read More ›

Periyava Golden Quotes-22

மூன்று மூர்த்திகளுக்கும் மேலே அதீதராகப் பரமசிவன் இருக்கிறார். அவர் ப்ரம்மாவுக்கு அனுக்ரஹம் பண்ணுகிறார். காமேச்வரனாக அருள் புரிகிறார். பராசக்தி காமேச்வரியாக அனுக்ரஹிப்பாள். பரமேச்வரனுடைய அனுக்ரஹத்தால் ப்ரம்மா வேதங்களை அறிந்து கொள்கிறார். நான்கு வேதங்களையும் நான்கு முகத்தில் சொல்லிக் கொண்டு சிருஷ்டியைச் செய்து கொண்டிருக்கிறார். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்   Lord Paramasiva… Read More ›

Periyava Golden Quotes-21

இந்த ஜென்மத்திற்குப் பின்பும் உபயோகப்படக் கூடிய சில காரியங்கள் செய்யப்பட வேண்டியது அவசியம். விபூதி இட்டுக் கொள்ளுதல், ருத்ராக்ஷம் அணிதல், ச்ராத்தம் செய்தல் முதலிய காரியங்கள் நாம் எப்பொழுதும் சௌக்யமாக இருப்பதற்கு உதவுங்காரியங்கள். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள் There are certain things that need to be compulsorily done… Read More ›

Periyava Golden Quotes-20

  எத்தனை போட்டாலும் திருப்தியில்லாமல் கபளீகரம் பண்ணும் நெருப்பு மாதிரி தான் ஆசை, எத்தனைக்கெத்தனை எளிமையாக வாழ்கிறோமோ அத்தனைக்கத்தனை ஆத்ம க்ஷேமம். நாம் எப்படி வாழ்கிறோமோ அப்படியே பிறரும் வாழ வேண்டும் என்று நினைப்பதற்கு முந்தி, நாம் எப்படி வாழ வேண்டும் என்று தீர்மானம் செய்து கொள்ள வேண்டும். அடிப்படைத் தேவைகள் எல்லோருக்கும் பூர்த்தியாக வேண்டும்…. Read More ›

Periyava Golden Quotes-19

  தொடர்ச்சியாக வந்த தாரையை நாம் அறுத்து விடக் கூடாது. ப்ராணாயாமத்தோடு சித்த ஏகாக்ரத்தோடு மந்த்ரலோபமில்லாமல் பரமேச்வர அர்ப்பணம் பண்ணி எல்லாவற்றையும் கர்மானுஷ்டானங்கள் பண்ண வேண்டும். பக்தி ச்ரத்தையோடு கர்மகலாபத்தோடு பண்ண வேண்டும். அர்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும். – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்   We should not cut off… Read More ›

Periyava Golden Quotes-18

    சகல வஸ்துக்களும் அழிந்தாலும் கடைசியில் தான் ஒன்று மட்டுமே சத்தியமாக இருக்கிற பஸ்மத்தை நெற்றியிலும், ஸ்வபாவமாகத் துவாரங்களுடனும் முகங்களுடனும் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிற ருத்ராக்ஷங்களைக் கழுத்திலும், சாக்ஷாத் மஹாலட்சுமியின் வாசஸ்தலமாகிய வில்வத்தைச் சிரசிலும், வேதத்தின் மத்யமணிக்கு, நடுநாயகமணிக்கு, ஒப்பாக விளங்குகிற ‘சிவ’ என்னும் இரண்டு அக்ஷரங்களை நாக்கிலும், சுத்த ஸ்படிக ப்ரகாச மஹாலிங்கத்தை உள்ளத்திலும் தரித்துக்கொண்டு… Read More ›

Periyava Golden Quotes-17

நாம் எத்தனையோ அபசாரம் பண்ணிக் கொண்டிருந்தாலும் நமக்கெல்லாம் அனுக்ரஹம் பண்ணிக் கொண்டு பரமேச்வரன் சகல புவனங்களையும் ரக்ஷித்துக் கொண்டிருக்கிறார். நாம் செய்கிற அக்கிரமத்தைப் பார்த்தோமானால் நமக்கு ஒரு வேளை அன்னங் கிடைக்கலாமா? அப்படி இருக்கிற போது நம்மைப் போன்ற சகல ஜீவராசிகளுக்கும் ஒவ்வொரு வேளையும் அன்னம் கிடைத்துக் கொண்டிருக்கும்படியாக நம்மிடமிருந்து ஒருவித பிரயோஜனத்தையும் எதிர்பார்க்காமல் சர்வேச்வரன்… Read More ›

Periyava Golden Quotes-16

அன்னம் என்பதில் ப்ரோட்டீன், கார்போ ஹைட்ரேட், வைட்டமின் முதலியன மட்டும் இல்லை. அதைச் சமைத்தவர், தான்யமாகவும் இல்லை. காய்கறியாகவும் அதை விலைக்கோ, தான்யமாகவோ கொடுத்தவர். அதைப் பயிர் பண்ணியவர் ஆகியவர்களுடைய குணதோஷங்களுக்கும் அந்த அன்னத்தில் சூட்சூம்மாக டெபாஸிட் ஆகி சாப்பிடுவதற்குள் போகிறது. இவர்கள் தோஷமுடையவர்களாயிருந்தால், சாப்பிடுகிறவனையும் அந்த தோஷம் தொற்றிக் கொள்ளும் இதுதான் அன்ன தோஷம்… Read More ›

Periyava Golden Quotes-15

  நாம் கண்ணால் மட்டுமே பார்க்கிறோம். ஒன்றை ரோஜா என்கிறோம். மற்றொன்றை ஊமத்தை என்கிறோம். ஞானம் என்ற அறிவால் பார்த்தால் அது ரோஜா அன்று. ஆனந்தமாகத் தான் தெரியும். ஊமத்தம் பூவும் அவ்வாறே தெரியும். நமக்கு ஞானம் இல்லாதபடியால் அவைகளை வெவ்வேறாக பார்க்கிறோம். உண்மை நமக்கு புலப்படாததற்கு காரணம் நமக்கு சித்தத்தில் அழுக்கு இருப்பதே. –… Read More ›

Periyava Golden Quotes-14

ஸ்வப்னம் என்பதே வாழ்க்கையில் நிறைவேறாத அபிலாஷைகளின் ஸ்வரூபம். ஸ்வப்னத்தில் கெட்ட காரியங்கள் பண்ணுவது போல கண்டால், நாம் அப்படி எண்ணிக் கொண்டிருந்திருக்கிறோமோ என்று மனது துக்கப்பட வேண்டும். கெட்ட காரியமோ கெட்ட காமமோ ஒரு நாளும் ஸ்வப்னத்தில் வராமலிருந்தால் அப்போது நல்லவர்களாக இருக்கிறோம் என்று சந்தோஷப்படலாம். நம்மை நாமே சோதித்துப் பார்த்துக் கொள்ளத்தான் ஈஸ்வரன் ஸ்வப்னத்தை… Read More ›

Navarathiri Special-Saraswathi Devi

Jaya Jaya Shankara Hara Hara Shankara – Happy Navarathiri! These three days are dedicated for Saraswathi Devi. Here below Sri Periyava beautifully explains the divinity of Saraswathi Devi and Sarada Navaratri. Ram Ram. ஸரஸ்வதி ஸரஸ்வதி பூஜையானது சரத்காலத்தில் வருகிறது. ‘சரத்’ காலத்தில்… Read More ›

Periyava Golden Quotes-13

சூர்ய கிரணம் இருக்கிறது. ஒவ்வொரு கிரணமும் நெருப்பே. ஆனால் ஒரு துணியை வெய்யிலில் காட்டினால் அதில் தீப்பற்றிக் கொள்ளவில்லை. லென்ஸ் என்ற பூதக் கண்ணாடியை வெய்யிலில் காட்டி அதன் கீழ் ஒரு துணியைப் பிடித்தால் அதில் தீப்பற்றிக் கொள்கிறது. பூதக்கண்ணாடி அனேக கிரணங்களை ஒருமிக்கக் குவிக்கிறது. அப்படியே எங்குமுள்ள ஈச்வரனுடைய அருள் நமக்குக் கிடைக்கும்படிச் செய்ய… Read More ›

Periyava Golden Quotes-12

ஒருவனுக்கு நல்லதை சொன்னால் மட்டும் போதாது. அதை அவன் ஏற்றுக் கொள்ளுமாறு அன்புடன் சொல்ல வேண்டும். நல்லதைக் கூட கடுமையாக சொன்னால் அதை யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். இவ்வாறு நிஷ்பலனாக போகிற நல்ல வாக்கு சத்யமாகாது. நல்லதாகவும் இருக்க வேண்டும்; அது யாரை உத்தேசித்து சொல்லப் படுகிறதோ அவனுக்கு இன்பம் தரும் விதத்தில் இதமாகவும்… Read More ›

Periyava Golden Quotes-11

  நம்முடைய தினசரி அலுவல்களில், நம்முடைய கடமைகள் யாவை, எது தர்மம் போன்ற கேள்விகள் எழுந்து அவைகளுக்கு விடை பெற வேண்டி இருக்கிறது. நம்முடைய தர்மம் எது? அதற்கு மூலம் எது? தர்மம் என்பது வாழ்க்கைக்கான ஒழுக்கம். தர்ம வழியில் செயல்பட வேதங்கள் விதித்திருக்கும் வழியில் செல்ல வேண்டும். வேதமே எல்லா தர்மத்திற்கும் ஆதாரம். –… Read More ›

Periyava Golden Quotes-10

அம்பாளை விட மங்கள வஸ்து இல்லை. ‘ஸர்வ மங்கள மாங்கல்யே’ என்று அம்பாளைச் சொல்வார்கள். அவர்களுடன் சேர்ந்திருப்பதாலே பரமேச்சுவரனும் மங்கள ஸ்வரூபியாகிறார். மங்களமே வடிவமான அம்பிக்கை மகா சுமங்கலி. அவளுடைய சௌமாங்கல்யத்திற்கு எப்படிப் பங்கம் உண்டாக முடியும்? இதனால் தான் ஆலஹால விஷம் சாப்பிட்டும் கூடப் பரமேச்வரன் சௌக்யமாகவே இருக்கிறார். ஆச்சார்யாள்  (ஸ்ரீ ஆதிசங்கரர்) ஸௌந்தர்ய… Read More ›

Periyava Golden Quotes-9

உஷ்ணத்தினால் உருக்கப்பட்ட நெய்யை நிறமற்றதாகக் காண்கிறோம். அதே நெய் குளிர்ந்தவுடன் வேறொரு நிறத்தையடைகிறது. ஈசனை உருவமற்றவர், அரூபி எனச் சாஸ்திரங்கள் கூறுகின்றன. ஆனால் பக்தர்களின் உள்ளத்தில் ஈசன்பால் அன்பு பரிபூரணமாக விளங்கும் பொழுது அந்தக் குளிர்ந்த நிலையில் உருவம் இல்லாத கடவுளும் அவர்களது பக்திக்குக் கட்டுண்டு அவர்களை உய்விக்க ஓர் உருவத்தை யடைகிறார். – ஜகத்குரு… Read More ›