நமக்கு என்ன தெரிகிறது? த்வைத ப்ரபஞ்சந்தான். ஏகப்பட்ட ரூப வித்யாஸங்கள், குண வித்யாஸங்கள், மற்ற வித்யாஸங்கள் கொண்டதான த்வைதந்தான் நாம் இருக்கிற நிலை. பலவித ருசிகள், பலவிதக் காட்சிகள், பலவிதக் கேள்விகள், கோபம், தாபம், பிரேமை, சாந்தி, உக்ரம், ஸெளம்யம் என்று பலவித உணர்ச்சி வேகங்கள், குண வித்யாஸங்கள், நாமம் ரூபம் இவைதான் நாம் இருக்கிற நிலையில் தெரிவது.
‘நாம் இருக்க வேண்டிய நிலை என்ன? இப்போது நமக்குத் தெரியாததாக இனிமேல் நாம் தெரிந்து கொள்ள வேண்டியது என்ன?’ என்றால் அதுதான் இந்த த்வைதத் தோற்றத்துக்கெல்லாம் ஆதாரமாயிருக்கிற ஒன்றே ஒன்று ‘அத்வைதம்’ என்று என்னமோ ஒன்று சொல்கிறார்களே அது. அங்கே ருசியில்லை, சப்தமில்லை, ரூபமில்லை, நாமமில்லை, குணமில்லை. ஆனால் இதற்கெல்லாம் காரணமானது இருக்கிறது. தெரிந்ததையே தெய்வ ஸம்பந்தமுள்ளதாக்கித் தரவேண்டுமென்றுதான் ‘நைவேத்யம் ஷட்ரஸோபதேசம்’, ஹரிகதையும் பஜனை சத்தமும், உக்ர-ஸெளம்ய தேவதைகள், அவற்றுக்கு அநுகுணமான ஹிம்ஸை-அஹிம்ஸைக் கார்யங்கள்.
ஆனால் தெரிந்ததோடு மட்டும் நிற்கப்படாது, தெரியாததையும் கொஞ்சங் கொஞ்சமாகத் தெரிந்து கொள்ள வேண்டுமென்றுதான் பட்டினி – ருசி இல்லாத ஸமாசாரம்; மௌனம் – சத்தமில்லை; நிர்குணப் பிரம்மம் – நாம ரூபமில்லாத ஸமாசாரம். – ஜகத்குரு ஸ்ரீ சந்திரசேகரேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள்
What do we see? It is only the Dual-World (Dwaitham) in which we exist, with so many different forms and characters. In our present state we see only different taste, different views, different queries, anger, frustration, love, peace, rage, calmness, etc.
What is the state in which we should be? What is that unknown which we should know now? The answer is ‘The source which is the basis for all such duality is something called as ‘Adwaita’ (Non-Dualism). In that (Non-Dual) State, there is no taste, no sound, no form, no name, and no character, but the origin of all these things, is available. To make the known path divine, we have all the offerings, singing, chanting, various deities and the violent and non-violent activities.
But we should not stop at knowing only the known things but also gradually learn about the unknown. That is the reason for the fasting – overcoming the taste, silence – overcoming noise and the ‘Niruguna Brahman’ – Divinity without Name and Form. – Jagadguru Sri Chandrasekharendra Saraswati Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Would you know in which part of deviation Kural this comes?
See below.
https://mahaperiyavaa.blog/2019/02/17/periyava-golden-quotes-1019/
Thanks