Sri Periyava Mahimai Newsletter – Nov 8 2010


Jaya Jaya Sankara Hara Hara Sankara – The final 2010 newsletter from Sri Pradosha mama gruham. What a great Anugraham for Shri Krishnamurtht and Smt. Vedambal? Before anyone asks, can some one share the 126 lines Paamalai which has been heard and blessed by Sri Periyava wholeheartedly? It will indeed be a great blessing for all the devotees. As always, an excellent drop of nectar along with the moving experience of Sri Prasodha Mama sishya.

Many Jaya Jaya Sankara to out sathsang volunteers Smt. Savita Narayan for the Tamizh typing and Shri. Harish Krishnan for the translation. Rama Rama

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (8-11-2010)

சுகப்பிரம்மரிஷி அவர்களை சாட்சாத் தரிசிப்பதுபோலவே ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் தரிசனமும் தவவலிமையும் நமெக்கெல்லாம் பெரும்பாக்யத்தை நல்கியிருக்கிறது. அதன் ரகசியம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா சாட்சாத் ஈஸ்வரரின் திருஅவதாரம் என்பதால்தான்.

தான் அந்த சர்வேஸ்வரர்தான் என்ற தெய்வ ரகசியத்தைக் காப்பாற்றுவதற்கே இந்தத் திருஅவதாரத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா தன்னை அத்தனை எளிமையாகக் காண்பித்துக் கொண்ட பிரயத்தனம் குறிப்பிட்டத்தக்கதாகும். ஆனால் அதையும் மீறி இவர் சாட்சாத் சங்கரரே என்பதை பக்தர்கள் உணர்ந்த சம்பவங்களையும் பரப்பிரம்ம சொரூபமாக தானே ஸ்ரீ பெரியவா அருளியுள்ளார்.

இப்படி ஒரு பக்தர் தன் மேல் இயற்றிய கவியில் வரிக்குவரி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளை சங்கர சிவா என்று போற்றுவதை தான் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஒரு அற்புத சம்பவத்தை இந்த நடமாடும் தெய்வம் நமக்கெல்லாம் தான் ஈஸ்வரரே என்பதை வெளிப்படுத்தும் விதமாக அருளி அந்த அருள்பெற்ற கவிஞரையும் அனுக்ரஹித்துள்ளார்.

கவிக்குஞ்சரம் என ஸ்ரீ மஹா பெரியவாளின் திருவாக்காலேயே அருளப்பட்டவரான கவிச்சக்ரவர்த்தியாம் ஸ்ரீவைத்தியநாத சர்மா அவர்கள் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளைதிங்களஞ்சடை சிவபிரான்என உணர்ந்து கவி பாடியது போலவே அவர்தம் சகோதரி அஞ்சனாட்சி அம்மாள் பெற்றெடுத்த அருட்கவியாம் சுப்ரமணிய கிருட்டிணமூர்த்தியும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளை அதே கோணத்தில் சிலாகித்துக்கவி இயற்றும் பாக்யம் அருளப்பட்டுள்ளது.

இந்த பெரும் பாக்யம் யாவும் ஸ்ரீ பெரியவாளன்றி வேறு தெய்வமில்லை என உலகோருக்கு சர்வகாலமும் உபதேசித்த வைத்தியநாத சர்மாவின் தவப்புதல்வரும், கிருட்டிணமூர்த்தியின் சகோதரி மாதுஸ்ரீ வேதாம்பாளின் கணவருமான பிரம்மஸ்ரீ பிரதோஷ சிவநாயன்மாரால்தான் இவருக்குக் கிட்டியுள்ளது.

ஒருமுறை மாதுஸ்ரீ வேதாம்பாளுடன், கிருட்டிணமூர்த்தியும் வடக்கே உகார் என்ற ஊரில் ஸ்ரீ பெரியவாளின் தரிசனத்திற்குச் சென்ற சமயம், வேதாம்பாள் சங்கர பெரியவாளுக்கு மங்கள ஆரத்தி காட்டும்போது, கிருட்டிணமூர்த்தி தன் மாமா இயற்றியதிங்களஞ் சடை சிவபிரான்என்ற பாடலைப் பாடியுள்ளார்.

உன் மாமனார் பாடின பாட்டு இவருக்கு எப்படித் தெரிஞ்சது?” என்று ஸ்ரீபெரியவா வேதாம்பாளைக் கேட்கஇவர் என் தம்பிதான். கவி சக்ரவர்த்தி இவருக்கும் மாமாதான்என்று வேதாம்பாள் கூறினார்.

ஸ்ரீ பெரியவா தன் கமலமுகம் மலர புன்னகையோடு இவரை வாழ்த்திய தருணத்தில் இவருக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளைப் போற்றி கவி இயற்றிய உத்வேகம் பிறந்திருக்க வேண்டும். இதற்கு முன்னும் சில சின்னச்சின்ன பாடல்களால் ஸ்ரீ பெரியவாளுக்குப் பாமாலை புனைந்திருந்தாலும் இப்போது ஸ்ரீ பெரியவாளை சாட்சாத் ஈஸ்வரரே என்பதாக போற்றிப் பாட வேண்டுமென இவருக்குத் தோன்றியதோ என்னவோ.

பகவான் ஸ்ரீரமணர் இயற்றி அருளிய ஸ்ரீ அருணாசல அட்சர ரமண மாலை என்ற புனிதமான பாமாலையை தன் பாமாலைக்கான அடிப்படையாகக் கொள்ள இவர்தம் மனதில் தோன்றியது. இரண்டு இரண்டு வரிகளாக மிகவும் சிரத்தையோடு இயற்றி வந்து தன் சகோதரியிடம் படித்துக் காட்டுவதும் அதன்பின் அடுத்த வரிகளை எழுதுவதுமாக ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் 86வது ஜயந்தி உறசவங்களின்போதுஸ்ரீ ஜகத்குரு தமிழட்சர பாமாலைஎனும் 126 வரிகள் கொண்ட பாமாலை பூர்த்தியடைந்தது.

இந்தப் பாமாலையை ஸ்ரீபெரியவாளிடம் ஜயந்தி உற்சவத்திற்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டுமென்று எண்ணம் கொண்டவராய் பிரம்மஸ்ரீ பிரதோஷ நாயன்மார் ஸ்ரீ ஏகாம்பரம் என்ற ஸ்ரீ பெரியவாளுக்கு பணிவிடை செய்யும் பாக்யம் பெற்ற அன்பரிடம் கொடுத்தனுப்பினார்.

மீரஜ் என்ற ஊரில் இதை சமர்ப்பித்தபோது ஸ்ரீ பெரியவா எப்படி அருளினார் என்பது அதிசயம். இந்த கவிவரிகள்குருவாய் எமக்கருள் பெரிதாய் பரம்பொருள் குரு சங்கரரவர் பதம் எண்ணிஎன்று தொடங்கியதும், ஸ்ரீ பெரியவா அங்கு தரிசித்து நின்ற பக்தர்கள் கூட்டத்தில் ஒரு பக்தரை மட்டும் கைதட்டி அழைத்து கவிதையின் ஒரு பிரதியை அளித்தாராம். இதில் அதிசயம் என்னவென்றால் இந்தப் பாமாலையைப் பெற்றுக் கொண்ட அந்த பக்தரின் திருநாமமும்குரு சங்கரர்என்பதே. இதை அன்று தரிசித்த பக்தர்கள் உணர்ந்து மெய்சிலிர்த்தனராம்.

முதலில் சமர்ப்பித்தபோதே இப்படி ஒரு அங்கீகாரத்தை அடைந்த பாமாலையைப் பற்றி பிரத்யேகமாக மாதுஸ்ரீ வேதாம்பாளிடம் அடுத்த தரிசனத்தின்போதும் ஸ்ரீ பெரியவா விசாரிக்க நேர்ந்தது. தரிசித்துக் கொண்டிருந்த பக்தையிடம், ஸ்ரீ ஏகாம்பரம் அவர்களை விட்டுதம்பி போட்ட புத்தகத்தோட பேரு என்னன்னு தெரியுமா கேளுஎன்றார் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா. மாமிக்கு அதற்கான பதில் தெரியவில்லை. அந்தப் பாடலை இத்தனை குறிப்பாக ஸ்ரீ பெரியவா கேட்பாரென்று எதிர்ப்பார்க்காததாலும், உண்மையில் அந்த பாமாலையை அத்தனை சிரத்தையாகத் தெரிந்துக் கொள்ளாமல் விட்டிருந்ததாலும், ஸ்ரீ பெரியவாளிடம் தக்க பதிலளிக்க முடியாமல் பக்தை நின்றாள்.

ஸ்ரீ ஏகாம்பரம் இந்த தர்மசங்கடத்தை விலக்குவது போல பக்தையிடம் காதும் காதும் வைத்தாற்போல்ஜகத்குரு தமிழட்சரப் பாமாலைன்னு சொல்லுங்கோஎன்று உதவினார். வேதாம்பாளும் அப்படியே ஸ்ரீ பெரியவாளிடம் சொல்லி அப்போதைக்குத் திருப்தியுற்றாலும், இந்த பாமாலையைப் பற்றி அறியாமல் விட்டுவிட்டோமே என்ற குற்ற உணர்வோடு பின் நாட்களில் அப்பாமாலையைப் படித்து அறிந்துக் கொண்டார்.

மீண்டும் ஒரு தரிசனம், சதாராவில் இரண்டு நாட்கள் மாமி ஸ்ரீ பெரியவாளைத் தரிசித்துத் தங்கியபோது நிகழ்ந்தது. இந்த நாட்களில் ஒரு நாள் மாமியுடன் கூட ஒரே ஒரு பையன் மட்டும் நிற்க ஸ்ரீ பெரியவாளைத் தரிசித்த தருணம் அது.

இப்போது ஸ்ரீ பெரியவா இந்த பாமாலைப் புத்தகம் ஒன்றை வேதாம்பாளிடம் எடுத்துத் தானே கொடுத்தருளிஇதைப் பாடச் சொல்லுஎன்றார். மாமியும் பாமாலையை இசையுடன் பாடத் துவங்கி பத்துப்பதினைந்து வரிகள் முடித்திட்டபோது ஸ்ரீ பெரியவா ஏனோ போதும் என்பதாகக் கூறி பக்கத்தில் நின்ற அந்த பையனிடம் பாமாலையை தொடர்ந்து பாடச் சொல்லி அருளினார்.

இது பக்தையான மாதுஸ்ரீ வேதாம்பாளிடம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா மீண்டும் மீண்டும் ஏதோ இந்த பாமாலையின் விசேஷத்தை உணர்த்துவதற்காகவே அனுக்ரஹிப்பது போலிருந்தது. பக்தையின் மனதிலும் இது ஸ்புரித்திருக்க வேண்டும்.

பாமாலையை மனம் செலுத்தி மறுமுறை மாதுஸ்ரீ வேதாம்பாள் படிக்கத் தொடங்கியபோது அதில் ஸ்ரீ பெரியவாளை வரிக்குவரி சாட்சாத் சிவபிரானாகவே துதுத்து கவி இயற்றப்பட்ட நேர்த்தியினை பக்தை உணரமுடிந்தது. மனப்பூர்வமாக லயித்துப் படித்து இதை அறியச் செய்யவே ஸ்ரீ பெரியவா இத்தனை முறை தனக்கு அருளியுள்ளார் போலும் என பக்தைக்குத் தோன்றியது. அது எத்தனை சத்தியமென்பது ஸ்ரீ பெரியவாளை அடுத்தமுறை சதாராவில் தரிசிக்க சென்றபோது நிகழ்ந்த அரிய சம்பவம் உறுதி செய்தது.

இந்த முறை பாமாலையை தான் அனுபவித்து உணர்ந்து கொண்ட நிலையில் மாமி அதை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளெனும் சங்கரசிவ சன்னதியில் உருக்கமாகப் பாட விரும்பி அதன்படியே அனுக்ரஹம் பெற்றார். அப்போது திரு. ஜோஷி எனும் பக்தர் ஒரு தட்டில் பூராசக்கரையை சமர்ப்பித்து நின்றார். அதைத் தன் திருக்கரங்களில் இழுத்த ஸ்ரீ பெரியவா அந்த பாக்கெட்டில் ஆங்காங்கே பொத்தலிட்டார். பின் கட்டைவிரல் மோதிரவிரல் இரண்டையும் சேர்த்து ஒரு சிட்டிகை பூரா சக்கரையை எடுப்பதும் மாமி பாமாலையின் ஒவ்வொரு வரியாகசங்கரசிவா’ ‘சங்கரசிவாஎன முடிக்கும் போதும் ஒரு வரிக்கு ஒரு சிட்டிகையாக அத்தனை 126 வரிகளையும் கேட்டபடி தன் பவளவாய்க்குள் பூரா சக்கரையை லாவகமாக ஏற்றுக் கொள்வதுமாக ஒரு அரும்பெரும் அனுபவத்தை அனுக்ரஹித்தார். இது தன்னைத் துதித்து இயற்றிய கவிதை வரிகளின் பொருளையும் அதன் உண்மையையும் தானே ஒப்புதல் அளிப்பதுபோல சாட்சாத் சங்கர சிவனான ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா அருளுவது போலிருந்தது. எப்பேற்பட்ட மேன்மையான ஏற்பு இது! பரந்தாமன் பக்த குசேலனின் அவலை மூன்றுமுறை சுவைத்தது போல் சங்கரன் இந்த பக்தி மாமாலைக்காக 126 முறை இனிப்பை சுவைப்பது போல அங்கீகரித்துள்ளார்.

இப்படி உயர்வு பெற்ற பாமாலையை வேதாம்பாள் ஸ்ரீ பெரியவா சன்னதியில் பாடும் பெரும்பேறு கிட்டிய ஆனந்தத்திற்காகவும், பொறுமையுடன் 126 வரிகளையும் கேட்டு  கூடவே இனிமையான அனுபவத்தை அருளியதற்காகவும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளை கண்கள் பனிக்க நமஸ்கரித்தெழுந்தாள்.

இப்பேற்பட்ட தெய்வ அங்கீகாரம் இதோடு நின்றுவிடவில்லை. ஸ்ரீ பெரியவா இந்த பாமாலைத் தொகுப்பை 86வது ஜயந்தி உற்சவத்தின்போது 87 பிரதிகள் எடுத்து பாரதபூமி எங்குமுள்ள பத்து சங்கரமடங்களுக்கும் பஜனை மடங்களுக்கும் அனுப்புமாறு உத்தரவிட்டருளினார்.

மேலும் ஹிக்கின்பாதம்ஸ் புத்தக நிறுவன அன்பர் திரு. குப்புசாமி அவர்கள் இந்த பாமாலையை புத்தகமாக வெளியிட ஸ்ரீ மஹா பெரியவாளிடம் ஆசி கேட்டபோது, அவரிடம் ஒவ்வொரு புத்தகத்திற்கும் ஐம்பது ரூபாய் என விலை நிர்ணயம் செய்யும்படியும், அதில் கிடைக்கும் பணத்தை திரயம்பகேஸ்வரர் கோயிலுக்கு சேர்ப்பிக்கவும் ஸ்ரீ பெரியவா அருள் கட்டளையிட்டார்.

எங்கிருந்தாலும் நின்னருளாசி
எங்களுக்குண்டு சங்கர சிவா

என்று கிருட்டிணமூர்த்தி சொல் கவிமணி மாலையில் காணும் வரிகளைப் பற்றி ராஜீ என்ற பக்தரிடம்இவர் இந்த பாட்டிலே என்கிட்டே சண்டைபோட்டு அனுக்ரஹம் வாங்குவது போல இருக்கோல்யோஎன்று ஸ்ரீ பெரியவா குழந்தையாகக் கேட்டதிலிருந்தே இந்த பாமாலையை பக்தியுடன் பாடும் அனைவருக்கும் அந்த தெய்வத்தின் ஆசி நிச்சயமுண்டு என்பது உறுதியாகத் தெரிகிறதல்லவா!

தெய்வமாய் உன்னையே சங்கரகுருவென
தாரணி போற்றிடும் சங்கர சிவா

என்று இப்பாமாலை போற்றிடும் பெரும் தெய்வத்தை நாம் பற்றிக் கொண்டு வாழ்வில் சகல நலன்களையும், சௌபாக்யங்களையும் அடைவோமாக.

ஓரு துளி தெய்வாமிருதம்

எது நமக்கு ஆனந்தத்தைத் தருகிறதோ அதைத்தான் அழகு என்கிறோம். அன்பே உருவானவர்களை அவர்கள் ரூபம் எப்படியிருந்தாலும் திரும்பத் திரும்ப பார்த்துக் கொண்டேயிருக்கிறோமென்றால் அன்புதான் அழகு என்றாகிவிடுகிறது. அன்பு ரொம்பவும் முதிர்ச்சியடைகிற நிலையில் ரூப அழகே அடிபட்டுப்போய் அன்பு ஒன்றே அழகாக தெரிகிறது என்றாகிறது!

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மீளா அடிமையாம் அற்புத நாயன்மார்
                                                                 (தொடர்ச்சி)

பிரம்மஸ்ரீ மாமாவின் அனுக்ரஹம், தபஸ், தியாகம் இவையாவும் காஞ்சியில் அதிருத்ர சண்டி வைபவங்கள் மங்களகரமாக நடந்தேறிய நேர்த்தியில் நாயேனுக்கு அறிந்துகொள்ள முடிந்ததோடல்லாமல், நாயேனின் வாழ்க்கைக்கும் அவை வழிகாட்டி அனுக்ரஹித்ததை என்னென்பது!

நாயேனின் கிராமத்தை சேர்ந்தவர்களிடமிருந்து வந்த வேதமரபை சார்ந்த ஒரு பெண் ஜாதகத்தையும், நாயேனின் ஜாதகத்தையும் சேர்த்து பிரம்மஸ்ரீ மாமாவிடம் கொடுத்து ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளிடம் உத்தரவு அருளைப் பெற்றுத்தர பிரார்த்தித்துக் கொள்ளப்பட்டது.

பிரதோஷ தரிசனத்திற்கு முன்தினம் தரிசிக்க சென்ற மாமா இந்த இரண்டு ஜாதகங்களயும் ஸ்ரீ பெரியவா சன்னதி முன் சமர்பித்து ஸ்ரீ பெரியவா உத்தரவு தந்தால் நாயேன் குடும்பத்திற்கு தெரிவித்துவிடுவதாகிப் பிரார்த்தித்து நின்றார். ஆனால் ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளோ மௌனத்தை காத்தவராக காட்சியருளியதில் அதை சம்மதமாக எடுத்துக் கொள்வதா என்ற சந்தேகமே மிஞ்சியது.

ஆனால் ஸ்ரீ பெரியவாளின் அருளோ தக்க சமயத்தில் அனுக்ரஹிக்க விழைந்தோ என்னவோ! மறுநாள் பிரதோஷத் தரிசனத்திற்கு சென்ற மாமாவின் நினைவில் இந்த ஜாதக விஷயம் ஞாபகம் இல்லாமல் போனது! பிரதோஷ திவ்ய தரிசனம் முடிந்து மாமா ஸ்ரீ பெரியவாளிடம் உத்தரவு கேட்டு ஊருக்குக் கிளம்பும் சமயத்தில் நீ மறந்தாலும் நான் மறவேன் என்பதுபோல நேற்று கொண்டு வந்த ஜாதகத்தை திருமணம் செய்துக் கொள்ள சொல்லு என்பதாக தானே வலிய உத்தரவு நல்கி பெரும்பாக்யத்தை ஸ்ரீ பெரியவா அருளினார்.

திருமணம் நிச்சயிக்கப்பட்டதும், நாயேனின் பெற்றோர்கள் திருமாங்கல்யம் செய்துக் கொண்டு மஹாபெரியவாளிடம் அனுக்ரஹம் பெற காஞ்சி சென்றனர். பிரம்மஸ்ரீ மாமா கிரஹத்தில் பெரியவாளின் மாத ஜயந்தி உற்சவம் கொண்டாட்டத்தில் கலந்துக் கொண்ட இவர்கள் அந்த கோலாகலத்தில் இதைப் பற்றி மாமாவிடம் நினைவுபடுத்தவில்லை.

அது அன்று அனுஷதின இரவு! சுவாமி புறப்பாடு சமயத்தில் இதை அறிந்த மாமாஏன் ஞாபகப்படுத்தவில்லை? இன்னிக்கு அனுஷ புண்ணிய நாள்! உடனே போய் பெரியவாளிடம் அனுக்ரஹம் வாங்கிட்டு வாங்கஎன்றார்.

நாயேனின் பெற்றோர்கள் இரவாயிற்றே என்று தயங்கஏன் தயங்கறீங்க கவலைப் படாம போங்க. நிச்சயமா பெரியவா அருள் கிட்டும்என்றார். மடத்திற்கு சென்றபோது இவர்கள் நினைத்ததுபோலவே ஸ்ரீ பெரியவா விச்ராந்தி எனும் ஓய்விற்கு சென்றுவிட்டதாகத் தெரிந்தது.

கவலையுடன் நின்ற நாயேனின் தந்தையிடம் ஸ்ரீ பாலுகல்யாணமா?” என்று விசாரித்து மேனாவின் அருகில் அழைத்துச் சென்றார். மெல்லிய குரலில் சொன்னதும் கருணாமூர்த்தி மேனாவின் கதவை திறந்து தரிசனம் தந்தார். அதே சமயத்தில் இன்னொரு ஆச்சர்யம் அங்கே நிகழ்ந்தது. எப்போதும் முன்பே வரும் ஸ்ரீ காமாட்சி அம்மன் பிரசாதம் இதற்கென்றே அன்று தாமதமாக வந்ததுபோல் அமைந்தது.

ஸ்ரீ மஹாபிரபு மந்தஹாசத்துடன் அம்பாளின் குங்கும பிரசாதத்தை முதலில் தான் ஏற்றுக்கொண்டு, திருமாங்கல்யத்தின் மீது தன் திருக்கரங்களால் சேர்ப்பித்து ஆசிர்வதித்தார். நாயேனின் பெற்றோருக்கு பேரானந்தம்!” நிச்சயம் அனுக்ரஹம் பண்ணுவாஎன்று பிரம்மஸ்ரீ மாமாவின் வாக்கின் வலிமை எத்தகையது என நாயேனின் மனதில் இச்சம்பவம் இன்னொரு சான்றினைப் பதித்துவிட்டது.

(அந்த பேரனுக்ரஹம் ஒன்றினாலேயும், மாமாவின் பூர்ண ஆசியோடும் நாயேனின் திருமணம் இனிதே நடந்தது)

—  கருணை தொடர்ந்து பெருகும்.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)
_________________________________________________________________________________

Shri Shri Shri Mahaperiyavaal Mahimai (8-11-2010)

Shri Mahaperiyava, due to His kindness, to bless all the people, like a Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Mahaperiyava, walked this earth and blessed us.

It is very important to note that, Periyava, in this thiru avatar, lived a very simple life to conceal the divine secret that He is indeed Sarveshwaran. But He has also let some of His devotees to realize the fact that He was Shankara.

One of the incident related to this, is the blessings a poet received, when Periyava approved the verse, which the poet wrote about Periyava describing Him as Shankara and Shiva in all the verses.

“Kavi Chakravarthy” Shri Vaidyanatha Sarma, who sang Periyava as “Thirukalanchadai Shivapiran” was referred to as “Kavi Kunjaram” by Periyava. In a similar way, Periyava also blessed the poet Subramaniya Krishnamurthy, who was the son of Anjanasaatchi (Sister of Shri Vaidyanatha Sarma), who also sang Periyava as Lord Shiva.

All this was possible due to Pradosham Mama, who made the world realize that, Periyava is Sarveshwaran. Pradosham Mama is the son of Shri Vaidyanatha Sarma and husband of Maadhushri Vedambal, sister of Krishnamurthy.

Once Maadhushri Vedambal went with her brother Krishnamurthy to a town called Ugar in North India to have darshan of Periyava. When Vedambal was doing arthi, Krishnamurthy sang “Thingalanchadai Sivapiran” written by his uncle Shri Vaidyanatha Sarma.

“How did he know the song sung by your father-in-law?” Periyava asked Vedambal. She said that he is her brother and Kavi Chakravarthy is also his uncle.

Periyava blessed Krishnamurthy and it should be that instant, where he would have got the motivation to sing about Periyava. Even though Krishnamurthy had written small verses about Periyava before, this might have been the instance where he would have started singing Periyava as Sarveshwaran.

Based on Shri Arunachala Akshara Pamalai written by Shri Ramanar, Krishnamurthy wrote two lines at a time, constantly reading it to his sister and by Periyava’s 86th Jayanthi Celebration, was able to complete the 126 lines of “Shri Jagadguru Akshara Pamalai”.

To dedicate the Pamalai to Periyava before the Jayanthi celebration, Pradosham Mama gave it to Shri Ekambaram.

When the Pamalai was given to Periyava, who was camping at Miraj, that miracle happened. Periyava called a devotee in the large crowd and gave the book. The other devotees were awestruck, when they realized that the devotee’s name was Guru Shankar, just like the line in the book, “Guruvai emakku arul periyathai paramporul Guru Shankar avar paadam enni”.

The pamalai which was blessed in the first instance, also continued to receive further blessings. When Maadhushri Vedambal went for Periyava’s darshan, Periyava through Shri Ekambaram asked her, “Do you know the book published by your brother?” She did not know the answer. Since she did not expect that question from Periyava, and since she did not put an effort to read the book, she stood there without an answer.

Shri Ekambaram understood her plight, and helped her with the answer “Shri Jagadguru Akshara Pamalai”. Even though she said the name of the book to Periyava, she felt guilty of not knowing about the book and later read it.

There was one more instance that occurred, when Maadhushri Vedambal went to Satara for couple of days for Periyava’s darshan. On the second day, when only she and another devotee were having darshan, Periyava gave the pamalai book and asked her to sing. When she was done with 10-15 lines, Periyava asked the other devotee to continue singing.

It was during this time, with Periyava’s blessings, she realized the importance of this book. She started to read the book again and again and started to realize the lines about Periyava as Sarveshwaran was very true. This was further confirmed during another darshan of Periyava at Satara.

During that darshan, Maami wanted to sing the pamalai before Periyava and was blessed to do the same. At the same time, a devotee Shri Joshi had brought some Poora Sakkarai (Country Sugar). As Maami was singing, Periyava pulled the Sugar towards Him and started to break it to small pieces. As Maami was completing each verse with “Shankara Shiva”, Periyava took pinches of sugar between his thumb and ring finger and ate it for all the 126 verses. With this action, Periyava was approving the verses, it meaning, and blessing as Sarveshwaran. When Periyava ate the sugar, it was like Lord Krishna eating the beaten rice three times and blessing Kuselan.

Vedambal was very happy to sing the pamalai before Periyava. She prostrated to Periyava, who blessed her by listening to all the 126 verses and also accepting the sugar pieces for all of these verses. What an amazing experience it was. She was truly blessed for experiencing this blessing.

The blessing for the pamalai did not stop there. For the 86th Jayanthi celebration, Periyava had 87 copies of the book published and sent to the 10 Shankara Matam and other Bhajanai Matam around India. Also, when Shri Kuppuswamy, on behalf of the book publisher Higginbotham, requested to publish the book, Periyava asked the price to be fixed at Rs. 50/- and asked the proceed from the sales of the book to be donated to Triambakeswarar temple.

“Engu Irunthalum Nin Arulasi
Engalukku undu Shankara Shiva”

“Wherever we are, Your blessings
Are always with us Shankara Shiva.”

Periyava had once mentioned the above lines to a devotee Raji and said “Don’t you feel that he is fighting with me to get my blessing.” With a mischievous smile on His face. This tells us that whoever reads this pamalai will be definitely blessed by Periyava.

“Deivamai unnaye Shankara guru ena
Dhaarani potridum Shankara Shiva”

“Shankara Guru, You are our God
You are the Shankara Shiva that the whole world praises.”

Let us all pray and seek the blessings of Periyava.

A drop of God’s Nectar:

We call that beauty, that which gives us pleasure. When we skip seeing the outer appearance of a person, and look at only their love, then love becomes the beauty. When the love attains a level of maturity, then all the outer appearances are ignored and love alone is seen as the beauty.

Shri Shri Shri Mahaperiyaval’s “always devoted” wonderful Nayanmar
(Contd.)

Brahmashree Mama’s blessings, penance and sacrifice not only helped in the success of the Adi rudram celebration in Kanchipuram, it also blessed me and guided me in my life.

Both my horoscope and a girl’s horoscope, belonging my village was given to Brahmashree Mama and we requested to get the blessing of Periyava.

The day before Pradosham, Brahmashree Mama went for Periyava’s darshan and kept both the horoscopes at His feet and requested His blessings. Periyava was silent and Brahmashree Mama was confused. He was unable to decide, if the silence was an approval or not.

The next day, Brahmashree Mama was busy with the Pradosham and totally forgot about the horoscopes. When the celebrations were over and Mama went to Periyava to take leave, Periyava reminded about the horoscope to Mama, and approved for the marriage. It was indeed a great blessing.

After the marriage was fixed, my parents took the thirumangalyam to Kanchipuram to seek Periyava’s blessings. At Pradosham Mama’s residence, due to Jayanthi celebrations, they forgot all about it. It was Anusham night, and when the preparations were being made for carrying Swami in the temple car (ther), Pradosham Mama asked why we did not remind about it and asked us to go and get the blessings from Periyava on that sacred day.

My parents were hesitant since it was almost night. Pradosham Mama asked us not to hesitate and assured that Periyava will bless us. When we reached Srimatam, we learned that Periyava had already retired for the day.

Seeing my worried look, Shri Balu asked “Marriage?” and took us near the Mena and whispered the information to Periyava. On hearing this Periyava opened the Mena door and gave His darshan. There was one more surprise in store for us. The Kamakshi Amman prasadam, which usually comes earlier, arrived when we were there.

Periyava took the kunguma prasadam first and then applied on the thirumangalyam and gave it to us. My parents were over joyed. This was another incident when I realized the power of Brahmashree Mama’s words and assurance.

(My marriage took place with Periyava and Pradosham Mama’s blessings.)

Grace will continues to flow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)

 

 



Categories: Devotee Experiences

Tags:

2 replies

  1. Namaskarams. Mahaperiyava Akshara Paamaalai – the same blog – mahaperiyavaa.blog – la – Audio Content – la – Periyava Akshara Paamaalai heading la – audio and lyrics irukkirathu. Please click the link below: https://mahaperiyavaa.blog/2016/03/30/periyava-akshara-paamalai/ Jaya Jaya Sankara ! Hara Hara Sankara !

  2. Please send Periyava AtcharapaamalaiRajalakshmi

What do you think?

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s

%d bloggers like this: