Sri Periayava Mahimai Newsletter – Jan 11 2010

Jaya Jaya Sankara Hara Hara Sankara – The incident below  shows how much Periyava adheres to Sathyam and Dharmam as found by Justice Ismail. He is really a blessed soul to be in the close proximity of Periyava and have these intellectual discussion on our scriptures.

The other incident shows Pradosha Mama’s Guru Bakthi and how Pradosha Mama has been revered as a Guru by one of his sishyas. This is the second part of the incident. For folks who want missed the first part of want to recap click HERE.

Many Many Jaya Jaya Sankara to our sathsang volunteers Smt. Savitha Narayan for the Tamizh typing and Shri Harish Krishnan for the translation. Rama Rama

(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (11-1-2010)

வியற்பிற்குரிய தெய்வம்

(நன்றி : மஹாபெரியவாளின் தரிசன அனுபவங்கள்)

தன் மேலானக் கருணையினால் உலகோரெல்லாம் உன்னதமடையும் பொருட்டு, சுகப்பிரம்ம ரிஷியின் மேன்மையோடு கூடிய மாபெரும் தவஞானியைப் போல் திரு அவதாரம் பூண்டு நம்மிடையே சாட்சாத் சர்வேஸ்வரர், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளெனும் நடமாடும் தெய்வமாய் திகழ்ந்துள்ளார்.

இத்தகையதோர் முனிவரை அடிக்கடி தரிசனம் செய்யும்பேறு கிட்டியதை தன் பெரும் பாக்யமாக கூறுகிறார் நீதி அரசர் திரு. இஸ்மாயில் அவர்கள். புன்னகையால் அன்புடன் வரவேற்று எதிரில் அமரச் செய்து நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததில் பலவற்றை ஸ்ரீ பெரியவாளிடமிருந்து தெரிந்துக் கொள்ள முடிந்தது என சொல்லும் இவர் தன் அபூர்வமான அனுபவம் ஒன்றை எடுத்துக் காட்டுகிறார்.

ஸ்ரீ பெரியவாளைத் தரிசித்த ஒவ்வொரு சந்திப்பைப் பற்றியும் ஒவ்வொரு கட்டுரை எழுதியிருப்பேனேயானால் அவையே ஒரு சாதனையாக அமையும் என்கிறார்.

அப்படியிருக்க ஒரு குறிப்பிட்ட சந்திப்பின்போது, ஸ்ரீ பெரியவாளிடம் கண்ட ஒரு விசேஷம் இவரை ஆச்சர்யப்படுத்தியதால் அதைப் பற்றிய ஒரு கட்டுரை எழுதினார். உலகமே போற்றிப் பாராட்டும் ஒரு மாமுனிவரைப் பற்றிய கட்டுரையில் எந்த தவறும் இடம் பெறக்கூடாதே என்ற எண்ணத்தினால் இக்கட்டுரை வெளிவருவதற்கு முன்னால் ஸ்ரீ பெரியவாளிடமே சமர்ப்பித்து அதற்கு அங்கீகாரம் பெறவேண்டுமென்று விரும்பினார்.

எனவே கட்டுரையை எழுதி, நண்பரான திரு. வாஞ்சிநாதன் அவர்களிடம் கொடுத்து அதை ஸ்ரீ பெரியவாளிடம் காட்டி அனுமதி வாங்கி வருமாறு சொன்னார்.

திரு. வாஞ்சிநாதனும் அப்படியே இதை ஸ்ரீ பெரியவாளிடம் சமர்ப்பித்தபோது, கட்டுரையை மிக்க  ஆர்வத்தோடு படிக்கச் சொல்லி மதிப்பிட்டு ஒரே ஒரு திருத்தம் மாத்திரம் சொல்லி திருப்பி அனுப்பி வைத்தார். கட்டுரையின் இறுதிப் பகுதியில் “தொண்ணூற்று மூன்று வயதை எட்டும் பெரியவர்களுக்கு தொந்திரவு கொடுத்துக் கொண்டிருக்கிறோமே’ என்ற சொற்தொடர் இருந்தது. அதை மட்டும் திருத்தி மூன்றுக்குப் பதிலாக  தொண்ணூற்று இரண்டு என்பதாக மட்டும் ஒரே ஒரு திருத்தம் செய்யச் சொல்லியிருந்தார்.

இது அத்தனை பெரிய விஷயம் இல்லையென்றாலும் தன்னிடம் ஒரு கட்டுரையைப் படித்துக் காண்பிக்கும்பொழுது அதில் ஒரு சிறு பொருள் குற்றமும் இருக்கக் கூடாதென்ற நேர்மையும், சிரத்தையுடன் கூடிய ஸ்ரீ பெரியவாளின் மனப்போக்கை இஸ்மாயில் உணர முடிந்தது.

இக் கட்டுரையை யாரை விட்டோ படிக்கச் சொல்லி ஒரு முறை கேட்டதோடு அதைத் திருப்பி விட்டாயிற்று. ஸ்ரீ பெரியவாளிடம் அதை திரும்பப் படிக்கவென ஒரு பிரதியும் இல்லை. ஆனாலும் மறுநாள் பிற்பகல் மூன்று மணியளவில் திரு. வாஞ்சிநாதன் அவர்கள் இவரை நீதிமன்றத்திலிருந்த இவரைத் தொலைபேசியில் கூப்பிட்டார்.

“எனக்கு காஞ்சி மடத்திலிருந்து தொலைபேசித் தகவல் வந்தது. என்னை உடனே வரும்படி சொன்னார்கள். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஒருவேளை நான் நேற்று ஸ்ரீபெரியவாளிடம் காட்டிய உங்கள் கட்டுரை சம்பந்தமாக ஸ்ரீ பெரியவா ஏதாவது சொல்வதாக இருக்கலாம். நான் இப்போது காஞ்சி செல்கிறேன். நான் திரும்பி வந்து தகவல் சொல்லும்வரை, நீங்கள் கட்டுரையை எந்த பத்திரிகைக்கும் கொடுத்துவிட வேண்டாம்” என்று திரு. வாஞ்சிநாதன் சொன்னார். இவரும் சரி என்றார்.

திரு. வாஞ்சிநாதன் காஞ்சி சென்று திரும்பினார்.

“இஸ்மாயில் தன்னுடைய கட்டுரையில் ஹிந்துமதம் என்ற பெயர் இரண்டு செஞ்சுரிக்கு முன்னால்தான் வந்தது என்று எழுதியுள்ளார். நானும் அப்படித்தான் அவரிடம் சொல்லியிருக்கிறேன். ஆனால் நான் சொன்னது தவறு. இந்தியாவிற்கு வெளியேயிருந்து வந்தவர்கள் அனைவரும் இந்திய மக்களோடு சேர்ந்து தங்கிவிட்டார்கள். ஆகையினால் இந்திய மக்களுடைய மதத்தின் பெயர் என்னவென்று சொல்வதற்கு அவர்களுக்கு அவசியம் ஏற்படவில்லை.

“மாறாக, முதன் முதலில் இந்தியாவின் மேல் படை எடுத்துத் திரும்பியவன் அலெக்சாந்தர். அவன் சிந்து நதிக்கரை வந்து திரும்பிவிட்டான். சிந்து என்ற நதியின் பெயரே அந்த நதிப் பிரதேசத்தில் வாழ்ந்த மக்களுடைய மதத்தின் பெயராக ‘இந்து மதம்’ என்றானது.

“அலெக்சாந்தர் காலம் B.C. 323. ஆகவே இந்துமதம் என்ற பெயர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே வந்துவிட்டது. நான்தான் தவறுதலாக 200 ஆண்டுகள் என்று சொல்லி விட்டதை இஸ்மாயிலும் எழுதி விட்டார்.

“என்றாலும் இதைப்பற்றி இக்கட்டுரையில் இப்போது சேர்ப்பது சரியாகாது.  வேண்டுமானால் FOOT NOTE என்று அடிக்குறிப்பில் இதைப் போட்டுவிடச் சொல்லு.”

இப்படி ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா சொல்லி அனுப்பியதை திரு. வாஞ்சிநாதன், திரு. இஸ்மாயிலிடம் கூறினார். நீதிபதியான இஸ்மாயில் அவர்களுக்கு ஸ்ரீ பெரியவாளின் நேர்மையைப் பற்றிப் புரிந்ததில் மெய்சிலிர்ப்பு உண்டானது.

கட்டுரையின் பிரதி கூட இல்லாமல் அபார நினைவாற்றலால் மட்டும் ஸ்ரீ பெரியவா கட்டுரையை மனதில் பதித்து கட்டுரையில் தவறு  ஏற்பட்டுவிடக் கூடாதே என்று எடுத்துக் கொண்ட சிரத்தையை எண்ணி ஒருபுறம் வியந்தார் திரு. இஸ்மாயில்.

இரண்டாவதாக, கட்டுரையில் இடம் பெற்றிருந்த தகவலை தான் திருத்துமாறு சொல்லி அதை அப்படியே கட்டுரையில் திருத்தி எழுதச் சொல்லியிருக்கலாம். ஆனால் அது நடந்த சம்பவத்திற்கு மாறாகும். அதாவது முதலில் காட்டப்பட்டபோது கட்டுரையை ஒப்புக் கொண்டு அங்கீகரித்தது மறைக்கப்பட்டு, பிறகு திருத்தம் சொல்லி தான் அதை மாற்றச் சொன்னதும் தெரிவிக்கப்படாமல் விடுப்பட்டு விடும். “கட்டுரையை மாற்ற வேண்டாம். … வேண்டுமானால் FOOT NOTE போட்டுக் கொள்ளச் சொல்” என்று சொன்னதில் ஒளிரும் உண்மையின் பிரகாசத்தினை எப்படித் தாங்கிக் கொள்வதென்று இஸ்மாயில் சிலாகித்துச் சொல்கிறார்.

எதைச் சொன்னாலும், எதைச் செய்தாலும், தெளிவாகவும் துல்லியமாகவும் கொஞ்சம்கூட உண்மைக்கு மாறாக இருக்கக்கூடாது என்று ஸ்ரீ பெரியவா கொண்டிருக்கும் அபார குணத்தை இஸ்மாயில் இந்த சம்பவத்தின் மூலம் அனுபவித்ததாகச் சொல்கிறார்.

ஆனாலும், இஸ்மாயில் கட்டுரையின் கை எழுத்துப் பிரதியில் முன்னர் எழுதியிருந்த 200 ஆண்டுகளுக்கு முன் என்பதை ‘2000 ஆண்டுகளுக்கு’ என்று மாற்றியே அச்சிடக் கொடுத்துவிட்டதாகக் கூறுகிறார்.

இக்கட்டுரை 8-12-1985 கல்கி இதழில் பிரசுரமாயிற்று. இக்கட்டுரையிலும் திரு. இஸ்மாயில், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளிடம் அவர் கண்ட ஒரு அபூர்வ திறமையை விளக்குகிறார்.

அந்த ஆண்டில் இவர் எழுதி வெளிவந்த ‘கம்பன் கண்ட சமரசம்” மற்றும் ‘மூன்று வினாக்கள்’ ஆகிய நூல்கள் ஸ்ரீ பெரியவா பார்வைக்கு வைக்க எடுத்துச் சென்றார்.

ஸ்ரீ பெரியவா ‘கம்பன் கண்ட சமரசம்’ என்ற நூலைத் தன் திருக்கரங்களில் எடுத்து ‘சமரசம்’ என்ற சொல்லில் தன் விரலைப் பதித்து “சமய ஒற்றுமைப் பாட்டைப் பற்றி எழுதியிருக்கிறீர்களா?” என்று கேட்டார்.

“கம்பன் காப்பியத்தில் சைவ – வைணவ பூசல்களை கண்டிக்கும் இடங்களை எடுத்துக் காட்டி எழுதியுள்ளேன்” என்று நூலில் கண்ட சில பாடல்களை இஸ்மாயில் காட்டினார். நூலில் 17ம் பக்கத்தில் இடம் பெற்ற

காலையின் நறுமலர் ஒன்றக் கட்டிய
மாலையின் மலர்புரை சமய வாதியர்
சூலையின் திருக்குஅலால் சொல்லு வோர்க்கு எலாம்
வேலையும் திரையும்போல் வேறுபாடு இலான்.

இந்தப் பாடலைக் கேட்டவுடன், இதனோடு ஒத்த கம்பராமாயணப் பாடலை ஸ்ரீ பெரியவா தன் ஞாபகத்திற்கு கொண்டுவர எத்தனிப்பதுப்போலக் காட்டுக் கொண்டார். நினைவிற்கு வரவில்லையே என்று தன் கையினால் தலையில் தட்டிக் கொண்டு முயற்சிப்பதுபோல திருவிளையாடல் தொடர்ந்தது.

“அந்தப் பாட்டிலே ‘பார் முதல் பஞ்சபூதமும்’, ‘வேறுபாடுற்ற வீக்கம்’ என்றெல்லாம் வருமே நினைவிற்கு வருகிறதா” என்று ஸ்ரீ பெரியவா கேட்க, கம்பராமாயணத்தில் பல ஆராய்ச்சிகள் செய்து புலமை பெற்றிருந்தவரான நீதிபதிக்கு அப்பாடல் நினைவிற்கு வரவில்லை.

“ ‘கை வில் ஏந்தி’  என்றும் அந்த பாட்டில் வரும்” என்று ஸ்ரீ பெரியவா இன்னும் கொஞ்சம் ஞாபகப்படுத்திச் சொன்னார். ஆனால் இவருக்குத் தான் எழுதிய நூலில் இன்னொரு பாடலில் ‘கைவில் ஏந்தி’ என்று வருகிறதை சொல்லி முடிந்ததேயன்றி அந்தப் பாடலில் ‘பார் முதல் பஞ்ச பூதமும் வேறுபாடுற்ற வீக்கம்’ என்ற தொடர் இல்லாமல் போனதால் ஸ்ரீ பெரியவா குறிப்பிடும் பாடலை எடுத்துச் சொல்ல முடியவில்லை.

“கம்பராமாயணம் பிரதி கிடைத்தால் பாடலைக் கண்டுபிடிக்கலாம்” என்று இவர் சொன்னார். ஆனால் “ஸ்ரீ பெரியவாளோ “பொன் விழா மாலை இருக்கா எடுத்து வாருங்கள்” என்று மடத்துச் சிப்பந்திகளிடம் கூறி அனுப்பிவிட்டு இடைப்பட்ட நேரத்தில்தான் இந்துமதத்தைப் பற்றி இவரிடம் பேசிக் கொண்டிருந்தார்.

பொன்விழா மாலை புத்தகப் பிரதி வந்தது. பல நூல்களில் அத்வைதம் குறிப்புகளைப் பற்றிய கட்டுரைகள் கொண்ட  மாலை அது. அந்தக் கட்டுரைத் தொகுப்பில் 114ஆம் பக்கம் ‘கம்பராமாயணத்தில் அத்வைதம்’ என்ற கட்டுரையில் சுந்தர காண்டத்தில் ஒரு பாடல் கொடுக்கப் பெற்றிருந்தது. ஸ்ரீ பெரியவா அதைத்தான் குறிப்பிட்டுக் காட்டினார். அந்த பாடலில்தான் ஸ்ரீ பெரியவா குறிப்பிட்ட ‘பூதம் ஐந்தும்’, ‘வேறுபாடுற்ற வீக்கம்’, ‘கைவிரல் ஏந்தி’ என்ற தொடர்கள் வருகின்றன.

கம்பராமாயணம் தனக்கு ஓரளவு தெரியும் என்றுதான் கொண்டிருந்த அகந்தைக்குச் சரியான அடியாக இந்த சம்பவம் அமைந்ததாக நீதிபதி கூறுகிறார். மேலும் 92 வயதில் முப்பத்தேழு ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்ட நூலிலிருந்து ஒரு பகுதியில் காணும் பாடலை ஸ்ரீ பெரியவா தேடி எடுப்பதுப் போலக் காட்டி விளையாடியதன் நோக்கமும் திரு.இஸ்மாயில் அவர்களுக்கு புரிந்திருக்கலாம்.

இப்பேற்ப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீ மகாபெரியவாளெனும் வியப்பிற்குரிய தெய்வம், உலகோருக்கெல்லாம் சகல ஐஸ்வரியங்களையும், சர்வ மங்களங்களையும் அருளிக் கொண்டிருப்பது வியப்பல்லவே!

ஓரு துளி தெய்வாமிருதம்

காயத்ரியில் சகல மந்திர சக்தியும் அடங்கியுள்ளது. அதை ஜபிக்காவிட்டால் வேறு மந்திர ஜபத்திற்கு சக்தி இல்லை. ஹிப்நாடிஸம் என்பதனால் பல காரியங்கள் செய்கிறார்கள். மோட்சத்திற்குப் போக உதவும் ஹிப்நாடிஸம் காயத்ரீ மந்திரம். ஆசையை அடக்கி ஜன்மம் எடுத்ததின் பலனை அடைய செய்கிற ஹிப்நாடிஸம் காயத்ரீ, லோக காரியங்களைக் குறைத்துக் கொண்டு அதை அதிகமாகச் செய்ய வேண்டும்.

ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் ‘மீளா அடிமை’ யான அற்புத நாயன்மார்  (தொடர்ச்சி)

பிரம்ம ஸ்ரீ மாமாவுடன் சென்று சோலாப்பூரில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பிரபுவை தரிசித்ததின் பலன் பெருகலாயிற்று. பிரதோஷம் தோறும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கு, பிரம்மஸ்ரீ மாமாவின் மூலம் நாயேன் வில்வமாலையை சமர்ப்பிக்கும் பாக்யம் கிட்டியது. எழும்பூரிலிருந்த பிரம்மஸ்ரீ மாமாவின் இல்லத்திற்கு அடிக்கடி செல்லும் வாய்ப்பு ஏற்பட்டு மகிழ்வித்தது. சாயங்காலம் ‘அருணாசல சிவ பிரார்த்தனை முடிந்தவுடன் ஸ்ரீ பிரதோஷம் மாமா ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மேன்மைகளை பற்றியும், அபூர்வ அனுபவங்களைப் பற்றியும் பக்தியோடு கேட்கும்போது மனதிற்கு இதமளித்தது. இதன் மூலம் ஸ்ரீ மாமா, ஸ்ரீ பெரியவாளிடம் கொண்டிருந்த அழுத்தமான நம்பிக்கையுடன் கூடிய ஆழமான பக்தியைப் பற்றி மெல்ல மெல்ல புரியலாயிற்று.

எழும்பூர் மாமா இல்லத்தில் ஸ்ரீ பெரியவாளின் மாத ஜயந்தி, மஹா ஜயந்தி எனும் வருட ஜயந்தி உற்சவங்களில் கலந்து கொள்ளும்போது அது நாயேன் அடைந்த பெரும்பேறாக எண்ணத் தோன்றியது.

இச்சமயத்தில்தான் எனக்கு வெளியூரிலிருந்து வேலை வாய்ப்புக் கிட்டியது.  உடனே பிரம்மஸ்ரீ மாமாவிடம் இதைச் சொல்ல விழைந்தபோது, மாமா ஸ்ரீ பெரியவாளிடம் உத்தரவு பெற்றுச் செல்லுமாறு சொன்னார். அதன்படியே ஸ்ரீ பெரியவாளைத் தரிசித்து உத்தரவானப்பின்னே வெளியூரில் வேலைக்கு நாயேன் சேர்ந்தேன். இந்த மாமாவின் வழிகாட்டுதல் மூலம், நம் வாழ்க்கையின் ஒவ்வொரு நிகழ்ச்சிக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் அருள் எத்தனை அவசியமென்று நாயேனுக்குப் புரிந்தது.

நாயேனுக்கு திருமணத்திற்காக ஒரு பெண்ணின் ஜாதகம் வந்தபோது, பிரம்மஸ்ரீ மாமாவின் மூலமாக அதை ஸ்ரீ பெரியவாளின் உத்தரவிற்காக சமர்ப்பிக்கும் பாக்யம் ஏற்பட்டது. அப்படி ஸ்ரீ பிரதோஷம் மாமா சமர்பிக்க காஞ்சி சென்றபோது, முதல்நாள் ஸ்ரீ பெரியவா மௌனம் என்பது தெரிந்தது. மறுநாள் பிரதோஷ தினமாக அமைய, ஸ்ரீ பெரியவா தானே வலிய ஸ்ரீ பிரதோஷம் மாமாவை அழைத்து திருமணத்திற்கான தன் பூர்ண ஆசிகளை வழங்கி அருளினார். இதன் மூலம் ஒரு குரு ஸ்தானத்தில் இருக்கும் பக்தர், தன் சிஷ்யனுக்காக பிரார்த்திக்கும்போது அத்தெய்வம் குருவை உத்தேசித்தே அந்த சிஷ்யருக்கும் அருள் செய்கிறார் என்பது அனுபவமானது.

குருவான பிரம்மஸ்ரீ மாமாவிடம் அடைக்கலமானதால் நாயேனுக்கு பல விஷயங்கள்  புரியலானது. திருமணமும் காஞ்சியில்தான் நடக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு அதன்படியே தீர்மானமானது. இதற்குள் பிரம்மஸ்ரீ மாமா உத்யோக ஓய்வுபெற்று ஸ்ரீ பெரியவாளின் பேரனுக்ரஹத்தினால் காஞ்சியிலேயே குடியேறினார். பிரம்மஸ்ரீ மாமா காஞ்சிக்கு வீட்டிலுள்ள பூஜையோடு செல்லும்போது நாயேனுக்கும் உடன் செல்லும் அருள் கிட்டியது. வழி நெடுக தேவாரம் முழங்க வீட்டு பூஜை ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவாளின் சன்னதியில் வைக்கப்பட்ட காட்சியும், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா வாஞ்சையோடு ஸ்ரீமாமாவை விசாரித்ததும், மாமாவின் பரிபூர்ண அர்ப்பணிப்பும் நாயேனுக்கு ஒரு பரவச அனுபவமாகவே இருந்தது.

காஞ்சியில் நாயேன் திருமணம் நடந்தது. முகூர்த்த சமயத்தில் ஸ்ரீ மஹாபிரபு அருளிய எல்லா பிரசாதங்களையும் நாயேன் பிரம்மஸ்ரீ மாமா காட்டிட்ட வழியில் கண்களில் ஒற்றிக் கொண்ட சமயத்தில் ஸ்ரீ மாமா முகூர்த்தத்திற்கு வந்தவர் இதைக் காண நேர்ந்தது. அபூர்வமான ஸ்ரீ மாமாவின் வரவால் நாயேன் உணர்ச்சி வசப்பட்டவனானேன். தன் சிஷ்யனின் தாபத்தை தீர்க்க எப்படி ஒரு குருவானவர் தன் இயல்பான நடவடிக்கையையும், கட்டுப்பாட்டையும் தியாகம் செய்து, சிஷ்யரை மகிழ்விக்க முடியும் என்பதை ஸ்ரீ மாமாவின் வரவால் எனக்கு உணர முடிந்தது.

அன்று இரவு கொட்டும் மழையில் உறவினர்களோடு பிரம்மஸ்ரீ மாமாவின் இல்லத்திற்கு அவரை நமஸ்கரித்து ஆசி பெற நாயேன் சென்றேன். அவருக்கே  உரித்தான அன்பு மழையோடு வரவேற்று ஆசி மழையை ஸ்ரீ மாமா பொழியலானார்.

“ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளோட ஜயந்தியை விடாம அங்கேயும் நீ கோலாகலமாக கொண்டாடணும்…… அந்த ஊரை ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா கோட்டையா திகழும்படி ஆக்கணும்” என்று நாயேனின் வாழ்க்கைக் கோர் அரும்பெரும் அர்த்தமாக்கும் திருப்பணிக்கானக் கட்டளையை அன்று பிரம்மஸ்ரீ மாமா அருளி விடைக் கொடுத்தனுப்பினார்.

—  கருணை தொடர்ந்து பெருகும்.

(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)

_________________________________________________________________________________

Shri Shri Shri Maha Periyavaal Mahimai (11-01-2010)

Shri Maha Periyava, due to His kindness, to bless all the people, like  Sugabrahma Rishi Saint, took avatar as Shri Shri Shri Maha Periyava and walked in this earth.

Judge Ismail considers himself blessed to meet Maha Periyava often. Periyava used to invite him with a smile and talk to him for hours together. He shares a very strange incident that occurred. He considers that it will be an achievement in itself, if he writes about all the interactions with Periyava.

Once he was surprised by the one special incident with Periyava. So he wanted to write an essay on that incident. Before he wanted to publish it, he wanted to show it to Periyava once. Since the article was about Periyava, he did not want any misinformation to be published.

He actually gave the article to his friend Sri Vanchinathan, who was going to meet Periyava. When Vanchinathan gave the article to Periyava, He read the entire article with great interest. He had only one correction in the article. In the last part of the article, it was mentioned that “93 year old Periyava”. He corrected it to read as “92 year old Periyava”.

Even though it was not a big thing, Ismail understood the dedication of Periyava in making sure that there were no errors in the article. Periyava had read the article and returned the copy to Vanchinathan. So He did not have a copy to read it again later. Vanchinathan called Ismail early afternoon to say that he received a call from Sri Matam and they have asked him to come there immediately. He was not aware of the reason for the call. He thought it might be related to the article he had showed to Periyava the day before. He also asked Ismail to not to give the article to any press until he is back from Kanchi.

Vanchinathan came back from Kanchi. Periyava had said “Ismail had mentioned that the name Hindu religion came only before two centuries. I had also mentioned the same thing to him. Those who came from outside India, stayed here. So they did not have the necessary to call or name the religion of Indian people. The first foreigner to attack and go back was Alexander. He came until the Sindhu River and returned. So the river Sindhu’s name turned into the name of religion of the people as Hindu.”

Periyava Continued, “It was around 323 BC when Alexander lived and so the name Hindu came into existence around 2000 years ago and not 200 years. Ismail wrote is as 200, since I said that. Let us not change it in the article, but add this information as footnote.”

Vanchinathan told this information to Ismail. Ismail had goosebumps on hearing this. Ismail was amazed at Periyava’s memory. He had given all this information without even a copy of the article and also marveled at the effort He had put to make sure the article information was correct.

Also, Periyava had mentioned not to correct the article and put this as a foot note to the article. This shows His like for truthfulness, to make sure if the article had incorrect information, it continues to stay that way and the correct information is added as foot note. Whatever He says, and whatever He does, they will be clear and perfect and will not deviate from truth. Ismail realized this greatness of Periyava with this incident.

But Ismail changed the article to say “2000 years” instead of “200 years” before publishing. This article was published on 8-12-1985 in Kalki magazine. Even in this article, Sri Ismail explains the knowledge of Periyava. In the same year, he took his books “Kamban Kanda Samarasam” (Agreement seen by Kamban) and “Moondru Vinakkal” (Three questions) for Periyava to see. After seeing the book, “Kamban Kanda Samarasam”, He pointed at the word “Samarasam” and then asked “Have you written about religious harmony?”

“I have showed the places that disapproves the Saiva – Vaishnava conflict”, said Ismail and showed some poems. There was a poem in the 17th page of that book:

Kalayin Narumalar Onra Kattiya
Malayin Malarpurai Samaya Vathiyar
Sulaiyin thirukualal sollu vorkku ellam
Velayum thiraiyumpol verupadu ilan

After hearing this song, Periyava acted as if He was trying to remember a similar song in Kamba Ramayanam. He struck His head with His hands to show that He could not remember the song.

Periyava also said that the song has the words “paar mudhal panchabhootham” and “verupadatra veekkam” and asked Ismail if he remembered it. Ismail, who had done multiple researches on Kamba Ramayanam could not remember the song.

Periyava added some more information and said that the song also has “kai vil enthi”. Ismail could recollect one song that had “Kaivil enthi” but that song did not have the other phrases that Periyava had mentioned earlier. Ismail said that they could look the song up if they could get a copy of Kamba Ramayanam, but Periyava asked one of the Shishya to get a copy of the magazine “Pon Vizha Malai” and started to talk about Hindu religion with Ismail.

A copy of the magazine arrived. It had collected information on various books talking about Advaitham and on page 114, it had an article about Advaitham in Kamba Ramayanam. The article had a song from Sundara Kandam that Periyava was talking about. Ismail felt that this was a lesson for him to be humble and not feel proud about his knowledge on Kamba Ramayanam. Also Ismail understood that only Periyava, who at 92 years, can pick a particular song from a book that was published 37 years ago.

There is no surprise that the wonder filled God is granting all the goodness and blessings to all the peoples in this world.

A drop of God’s Nectar:

Gayathri has all the mantra’s power. If Gayathri is not performed, then performing all the other mantras have no effect. Lot of things are being done using hypnotism. Gayathri is the hypnotism to attain Moksha. To control one’s desire and to attain the purpose of this Janma, Gayathri Japam should be done. We need to reduce our worldly activities and do more Gayathri Japam.

Shree Shree Shree Maha Periyaval’s “Always Devoted” wonderful Nayanmar (Contd.)

All good things started to pour in after visiting Periyava at Solapur along with Brahmashree mama. I had the opportunity to submit Vilva malai to Periyava every Pradhoshan along with Brahmashree mama. I was happy that I had the chance to visit Brahmashree mama at his Chennai Egmore residence. It was very heartening to hear Brahmashree mama speak about his experiences with Periyava after Arunachala Shiva Pooja. This enabled me to understand the deep bhakthi that Shri Mama had on Periyava.

I realized that I was blessed to attend Periyava’s monthly Jayanthi and the yearly Maha Jayanthi at Mama’s egmore residence.

It was during this time that I had a job offer from a different town. On the advice of Brahmashree mama, I met Periyava to receive his approval/blessings for the new job. This also made me understand that it is really important to have Periyava’s blessings for all the things that we do.

I had received the horoscope of a girl as a proposal for my marriage. Brahmashree mama had taken the horoscope to Periyava for His approval. On that day, Periyava was observing silence. Next day being Pradosham, Periyava itself called Brahmashree Mama and blessed the proposal. On that day I learnt that, when a guru (Brahmashree Mama) prays for a Shishya, the God blessed the Shishya based on his Guru.

I had learned a lot of things under my guru Shri Brahmashree mama. My marriage also happened at Kanchi, just like how I had wished for. Meanwhile, Brahmashree mama retired and moved to Kanchipuram. I had the blessings to attend the Pooja at Brahmashree Mama’s house at Kanchipuram. The Devaram that was being sung throughout, Periyava’s concern for Shree Mama and Mama’s complete devotion had me in a complete blessed feeling mode.

During my marriage at Kanchi, Brahmashree Mama bought all the prasadams given by Periyava. When I received those prasadams, I realized how a Guru goes a long way to make sure his Shishya’s are happy. On the same day, with heavy rains in the evening, I had reached Mama’s house to seek his blessings. Mama received me with love and showered all his blessings.

“Celebrate the Jayanthi of Shree Shree Maha Periyava and make your town into a fortress protected by Periyava”. These lines were said by Brahmashree Mama, who gave a new purpose to my life.

Grace will continue to grow.

(Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)

 



Categories: Devotee Experiences

Tags:

Leave a Reply

%d bloggers like this: