Jaya Jaya Sankara Hara Hara Sankara – Newsletter from Sri Pradosha Mama gruham. Beautiful illustration of how one should follow Aacharam whatever the circumstances is shown here by Periyava apart from a couple of great incidents.
Many Many Jaya Jaya Sankara to our sathsang volunteers Smt. Savitha Narayan for the Tamizh typing and Shri Harish Krishnan for the translation. Rama Rama
(வாயினால் உன்னைப் பரவிடும் அடியேன் படுதுயர் களைவாய் பாசுபதா பரஞ்சுடரே)
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவாளின் மகிமை (18-11-2009)
உதாரண புருஷர்
சாட்சாத் பரமேஸ்வரரான ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா, தான் பிரம்மரிஷி சுகமுனிவரின் மேன்மையுடன் இருப்பதைத் துளியும் உலகோருக்குக் காட்டாமல் தன் அபார கருணையினால் நம்மிடையே எளிய திருஉருவோடு அருளுவது நாம் செய்த புண்ணிய பலனேயாகும்.
நடமாடும் தெய்வமாயிருந்தும் ஆசார அனுஷ்டானங்களை உலகோர் எப்படியெல்லாம் கடைப்பிடிக்க வேண்டுமென்பதற்காகத் தானே தன்னை வருத்திக் கொண்டு அந்த மாமுனிவர் அவைகளை அனுசரிப்பதில் உதாரண புருஷராய் நமக்கு அவ்வப்போது எடுத்துக்காட்டாக அருளியுள்ளார்.
ஐப்பசி பூரம், அம்பாள் ஆவிர்பவித்த புண்ணிய தினம். ஸ்ரீ பெரியவா இத்தினத்தில் காமாட்சி அம்மன் கோயிலில் பாலபிஷேகம் செய்வது வழக்கம். என்றும்போல் அன்றும் அதிகாலையில் துயிலெழுந்த மகான் ஸ்நானம் செய்து, அனுஷ்டானங்களை முடித்துப் பூஜைகளை முடித்தாகி விட்டது. அதுவரை ஒரு வாய் தீர்த்தம் கூட ஏற்றுக் கொள்ளவில்லை.
உடனே காமாட்சியம்மன் கோயில் தரிசனத்துக்கு புறப்பட்டாகிவிட்டது. கூடவே சிஷ்யர்கள் ஒரு குடம் நிறைய பசும்பாலை எடுத்துவர, ஸ்ரீ பெரியவா தன்னுடைய மரக்குடத்திலும் பசும்பாலை நிறைத்து கோயிலை நோக்கி நடக்கலானார்.
மணி பிற்பகல் நாலு மணியை எட்டிக் கொண்டிருந்தது.
காலையிலிருந்து ஒரு துளி தீர்த்தம் கூட உட்கொள்ளாமல் கால் நடையாக ஈஸ்வரர், காமாட்சியம்மன் கோயிலை நோக்கிச் சென்றுக் கொண்டிருந்தார். கோயில் அபிஷேகம், தரிசனம் முடித்துக் கொண்டு ஸ்ரீ மடத்திற்கு திரும்பி வந்தபின்தான் ஸ்ரீ பெரியவா பிட்சை ஏற்றுக் கொள்ள முடியும்.
போகும் வழியில் ஒரு பக்தர் எதிர்ப்பட்டார். பக்தி மேலிட்டவராக ஸ்ரீ பெரியவாளை அந்த சாலையிலேயே விழுந்து வணங்கினார். அப்படி அவர் வணங்கியபோது உணர்ச்சிவசப்பட்டவராய் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளின் திருவடிகளைத் தொட்டுவிட்டார்.
‘அடடா!’ என்று ஸ்ரீ பெரியவாளிடம் கைங்கர்யம் செய்பவர்கள் கவலையுற்றனர். ஸ்ரீ பெரியவாளின் மடிக்கு பங்கம் வந்துவிட்டதால் மறுபடியும் ஸ்நானம் செய்து வேறு மடி அணிந்துக் கொண்டால்தான் தரிசன அபிஷேகத்துக்கு உகந்ததான மடியாக ஏற்றுக் கொள்ளப்படும்.
இதல் கண்ணன் என்ற அணுக்கத் தொண்டர் தாங்காத கோபம் கொண்டார். காலையிலிருந்து ஒரு சொட்டு தண்ணீர் கூட சாப்பிடாமல் இப்படி ஸ்ரீ பெரியவாளுக்கு விழுப்பு வந்துவிட்டதே, அதனால் மறுபடி ஸ்நானம், அனுஷ்டானம் என்று உடம்பை ஸ்ரீ பெரியவா வருத்திக் கொள்ள வேண்டியதாகி விடுகிறதே என்ற ஆதங்கம் அவருக்கு.
அதனால் இப்படி ஒருவர் பாதத்தை தொட்டு விட்டதை ஸ்ரீ பெரியவா மடி போய்விட்டதென்று எடுத்துக் கொள்ளாமல் இயல்பாக விட்டுவிட்டால் தேவலாமென்று அவர் நினைத்தார். அதனால் அதற்கேற்ப ஸ்ரீ பெரியவாளை சமாதானம் செய்ய முற்பட்டார்.
“கோயிலுக்குள் போகிறபோது யாராவது தொட்டாலும் பட்டாலும் அதை தோஷமாக எடுத்துக்கணும்கிறது இல்லே! கோயிலுக்குள் சுவாமி தரிசனம் செய்ய வருகிறவா எல்லாரும் பவித்ரமானவா தானே! அவர்கள் எல்லோரும் மடியாதான் நெனைச்சுக்கணும்…. அதனாலே பெரியவா மறுபடி ஸ்நானம் செய்ய வேண்டாம்னு படறது…..கோயில் உற்சவ காலங்கள்லே ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவா……. அவா தலைகளை தரிசித்தாலே பரம பாக்யம்னு சொல்றோம்….எல்லோருமே புண்ணியசாலிகள்தான்…… அதனாலே ஸ்ரீ பெரியவா நேரே சுவாமி தரிசனம் செய்யலாம்னு எனக்கு தோன்றது…….அப்புறம் சுவாமி தரிசனம் பண்ணின பின்னாடியும் ஸ்நானம் பண்றது வழக்கமில்லே… அது சரியுமில்லே”.
இப்படி ஸ்ரீ பெரியவாளுக்கு தனக்கு ஆசார குறைவு ஏற்பட்டுவிட்டது என்ற எண்ணம் எழாமலிருக்க கண்ணன் சாதகமாகப் பேசி இதன்மூலம் ஸ்ரீ பெரியவா மறுபடியும் ஸ்நானம் செய்வதை எப்படியாவது தடுக்க முடியாதா என்று இதை ஸ்ரீ பெரியவா திருச்செவியில் விழும்படியாக உரக்க சொல்லிக் கொண்டே வந்தார்.
ஸ்ரீ பெரியவாளுக்குய்த் தொண்டரின் ஆதங்கம் புரிந்திருந்தாலும் இதை மௌனியாக கேட்டுக் கொண்டே நடக்கலானார்.
எல்லோரும் காமாட்சி கோயிலை அடைந்தானது.
ஸ்ரீஸ்ரீஸ்ரீ பெரியவா, தன் தொண்டனின் சமாதானத்தை ஏற்று நேரே காமாட்சியம்மனைத் தரிசிக்க போய்விடுவாரென்றுதான் மற்றவர்கள் நினைத்தார்கள்.
ஆனால் ஸ்ரீ பெரியவாளின் திருவடியோ காமாட்சியம்மன் ஆலயத்தில் நுழைந்து நேரே திருக்குளத்திற்கு நடைபோட்டது.
ஸ்ரீ பெரியவா கண்ணனை நோக்கி “இன்னிக்குத் துலா மாச பூரம். இன்னிக்குக் காமாட்சியம்மன் கோயில் குளத்திலே குளிச்சா ரொம்ப ரொம்ப புண்ணியம்…..எல்லோரும் குளத்திலே ஸ்நானம் பண்ணுங்கோ” என்றபடி குளத்தில் இறங்கினார்.
இந்த ஸ்நானம் எதற்காக? விழுப்பானதற்காக ஸ்நானம் செய்வதாகவும் இல்லாமல் ஏதோ இந்த ஸ்நானம் ஏற்கனவே சங்கல்பிக்கப்பட்டதாகவும் அதன்கூட தான் மட்டுமேயல்லாமல் எல்லோருமே நியாயமாக இப்படி ஒரு ஸ்நானம் செய்ய வேண்டுமென்பதுபோலவும் நிலைமையை உண்டாக்கியதை சாதுர்யம் என்று சாதாரணமாகவா எடுத்துக் கொள்ள முடியும்?
சாட்சாத் சர்வேஸ்வரருக்கு இப்படியெல்லாம் ஒரு பக்தர் காலை தொடப்போவதும், கண்ணன் ஆதங்கப்படப்போவதும் என எல்லாமுமே தெரிந்ததுதான்!
ஸ்நானம் செய்து மடி உடுத்தி அனுஷ்டானம் முடித்த பின்பே காமாட்சி தரிசனமும் அபிஷேகமும் ஸ்ரீ பெரியவா செய்தார்கள்.
அதற்கும் பின்பே கால்நடையாக திரும்பவும் ஸ்ரீ மடத்திற்கு வந்து சாயங்கால அனுஷ்டானங்களை செய்த பின்பே பிட்சையாக வெறும் பால் மட்டுமே!
இதுதான் ஆசாரம் என்பதற்கு ஒரு விளக்கமாக ஸ்ரீ பெரியவா எப்போதும் எடுத்துக் காட்டுவதில் தவறியதில்லை!
ஈஸ்வரர் பிரேரணை
ஒரு பக்தர் ஸ்ரீ பெரியவாளிடம் இப்படி முறையிட்டார். “என் ஜாதகப்படி எனக்கு இப்போது சனி தசை. சனி புக்தி. என்னை ரொம்பப் படுத்துகிறது…..ரொம்ப அலைச்சல்” என்று முனகியவாறு நமஸ்கரித்து எழுந்தார்.
ஸ்ரீ பெரியவா புன்னகை தவிழ “சனி ரொம்ப நல்லவர். ஆயுள்காரகர். அவராக ஒன்றும் கெடுதல் செய்யமாட்டார். பிராப்த கர்மாவை அனுபவித்தே ஆகணும். என் நட்சத்திரம் அனுஷம். சனி பகவானுடையது. நான் தினமும் பல மைல் தூரம் நடக்கறேன். அதுக்கு சனி கிரஹம் காரணமில்லே. ஈஸ்வரர் பிரேரணை என்று சமாதானம் செஞ்சுக்கணும்.”
பக்தர் தெளிவாகி மன அமைதியுடன் உத்தரவு பெற்றுச் சென்றார்.
சனி பிரேரணையினால் அல்ல; ஈஸ்வர பிரேரணை என்று சாட்சாத் ஈஸ்வரரின் திருவாக்கினாலே அருளியிருக்கிறபடியால் அந்த ஸ்ரீ சங்கர குருவை நாம் சரணடைந்துவிட்டால் எல்லா மனக் குறையும் நீங்கி, அமைதியும் ஆனந்தமுமான வாழ்வோடு சகல சௌபாக்யங்களும் நம்மை வந்தடையும்.
ஓரு துளி தெய்வாமிருதம்
பஞ்ச அங்கங்கள் கொண்டது பஞ்சாங்கம் எனப்படும். தினமும் ஈஸ்வரர் முன்னாலே பஞ்சாங்கம் படிக்கிறபோது திதியைச் சொல்லும்போது ஐஸ்வர்யமும், வாரம் சொல்லும்போது ஆயுள் விருத்தியும், நட்சத்திரம் சொல்லும்போது பாவம் விலகலும், யோகத்தால் வியாதி நிவர்த்தியும் கரணம், காரியசித்தியும் ஏற்படும்படியான பலனைக் கொடுக்கும்!
ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹபெரியவாளின் “மீளா அடிமை”யான அற்புத நாயன்மார்
(தொடர்ச்சி)
நாயேனுக்கு பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமாவிடம் ஏற்பட்ட அனுபவம் தொடர்கிறது.
முதலில் நான் காலேஜ் படித்துக் கொண்டிருந்தபோது, என் வைணவ நண்பரும், மற்றும் உறவினர் ஒருவரும் எழும்பூரிலுள்ள ரயில்வே காலனியில் பிரம்மஸ்ரீ மாமாவின் பெரியவா பக்தி, சௌ. மாமியின் அன்பு, அவர்களின் புதல்வர்களான ஸ்ரீ அருணாசலம், ஸ்ரீ கணேசன் ஆகியோரின் ரிஷி பக்குவநிலை இவைகளைப் பற்றி என்னிடம் அனுபவித்துக் கூறினார்.
உடனே பிரம்மஸ்ரீ மாமாவை பார்க்க என் மனதில் எண்ணம் ஏற்படலானது.
அடுத்தவாரமே நண்பர்கள் இருவரும் பிரம்மஸ்ரீ மாமவுடன் பண்டரிபூர் சென்று ஸ்ரீ பெரியவாளை தரிசனம் செய்ததைப் பற்றி விவரமாக சொன்னபோது, எழும்பூர் சென்று நானும் மாமாவை பார்க்க வேண்டுமென்ற ஆவல் மிகுந்து விட்டது.
பிரம்மஸ்ரீ மாமாவை காணச் செல்லும் வாய்ப்பு கிட்டியது. சற்று பயம் கலந்த பக்தியோடுதான் தயங்கியபடி உள்ளே நுழைந்தேன்.
முதல் பார்வைக்கே நிறைய உருத்திராட்சிரங்கள் அணிந்தவராய் தேகமேங்கும் விபூதி தரித்த சிவப்பழமாக பிரம்மஸ்ரீ மாமாவைத் தரிசித்தபோது அவரிடம் ஒரு பெரிய மதிப்பு மிகுந்தது. மாமாவின் ரிஷி அம்சத்துடனான மகன் ஸ்ரீ அருணாசலம் வேகமாக என்னை நோக்கி வந்தபோது எனக்கு ஒரு மிரட்சி ஏற்பட்டதை மாமா பார்த்துவிட்டார் போலும். தன் வெங்கல குரலில் “குழந்தை ஒண்ணும் பண்ணமாட்டான் பயப்படாதே” என்று மாமா என் தயக்கத்தைப் போக்கினார்.
மாமாவின் கிரஹத்தில் ஸ்ரீ பெரியவாளின் திருஉருவப் படம் கம்பீரமாக என்னை வரவேற்றது. ஜன்னல் வழியே மாமாவின் பூஜையறையில் ஸ்ரீ பெரியவாளை சித்திர ரூபமாக தரிசித்தபோது ஆனந்த அனுபவமாய் பெருகலாயிற்று..
மெதுவாக பிரம்மஸ்ரீ மாமாவிடம் விண்ணப்பித்தேன்.” அடுத்த பிரதோஷத்துக்கு ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவா தரிசனத்துக்கு நானும் கூட வர்றேன்” என்றேன்.
“நான் எப்ப வரணும்னு சொல்றேனோ அப்போ வரலாம்” என்று மாமா அன்பாக ஆமோதித்தார்.
அடுத்த சில பிரதோஷங்களுக்கு சென்னை பூக்கடையில் வில்வமாலை வாங்கி சமர்ப்பிக்கும் பாக்யம் கிட்டியது. வில்வம், நிறைய ருத்ராட்சம், விபூதி தாரணம் என இவைகள் பிரதோஷ கால சம்பந்தப்பட்ட பவித்ர அடையாளங்கள் என்பதை பிரம்மஸ்ரீ மாமாவிடம் பரிச்சியமானதிலிருந்து உன்னதமாக புரிந்தது.
அந்த திருநாளும் வந்தது. பிரம்மஸ்ரீ மாமாவுடன் ஷோலாப்பூரில் அருளிக் கொண்டிருந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைத் தரிசிக்க செல்லும் பேரனுக்ரஹம் கிட்டிவிட்டது! ரயில் பயணத்தின்போது பல சுகமான அனுபவங்கள்! பிரம்மஸ்ரீ மாமா ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் மேன்மையினையும், தனக்கேற்பட்ட ஆபூர்வ அனுபவங்களையும் பக்தி பரவசத்தோடு சொல்லிக் கொண்டு வந்ததில் பயணம் புனிதமாய் நிறைந்தது. இந்த அரியவாய்ப்பு கிடைத்ததால் நாயேனுக்கு பெரும் மகிழ்ச்சி!
ஷோலாப்பூர் அடைந்து பாலாஜி மந்திருக்குள் நுழைந்தோம். நெடுந்தூரப் பயணத்தால் ஏற்பட்ட உடல் சோர்வு, பிரம்மஸ்ரீ மாமா அருகாமையினாலும், அங்கே ஸ்ரீமடத்தில் கைங்கர்யம் செய்பவர்களின் அன்பான உபசரிப்பினாலும் முற்றிலும் அகன்று விட்டதாகத் தோன்றியது.
மறுநாளின் அனுபவங்கள் எழுத்தில் வடிக்க முடியாத ஆனந்தமாகின. அந்தப் பெரும்பாக்யத்தினால் மெய் சிலிர்த்தது. விவரிக்க இயலாத ஆனந்தத் தருணங்களாக அனுபவித்தேன்.
அன்று மாலை பிரதோஷம்.
மஹாராஷ்டிரா அமைச்சர், ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளைத் தரிசித்தபோது ஸ்ரீ மஹாபிரபு கோயில் சன்னதியில் ஸ்வாமியுடன் பேசினார் என்று கூறிய தகவல் எனக்கு வியப்பளித்தது.
அந்தப் பிரதோஷ வேளையில் மாலை மிதமான வெயிலில் பிரம்மஸ்ரீ மாமா, ஸ்ரீ மஹாபெரியவாளைப் பார்த்து பிரார்த்தித்தபோது, அதை ஸ்ரீ பெரியவா தன் திருக்கரத்தில் எண்ணிக் கொண்டிருப்பதைக் காணும் பரவச அனுபவம் கிடைக்கப் பெற்றேன்.
தரிசனம் ஈந்த ஸ்ரீபெரியவா, உள்ளே செல்வதற்குத் தயாரானபோது தான் இந்த அதிசயம் நேர்ந்தது. உள்ளே போவதற்குமுன் ஸ்ரீ பெரியவா, கைங்கர்யம் செய்பவரிடம் எதையோ கூற, அவர் எங்களிடம் வந்தார்.
“பிரதோஷம் மாமாவோடு வந்த பையனை பெரியவா கூப்பிடறா” என்று அவர் சொன்னார்.
நாயேன் அதை எங்களுடன் வந்த அந்த வைஷ்ணவ நண்பராகத்தான் இருக்குமென்று நினைத்தேன். மற்றவர்களும் அப்படித்தான் நினைத்திருக்க வேண்டும். ஆகவே அந்த வைணவ அன்பர் முன் சென்றார்.
ஆனால் ஸ்ரீ பெரியவா ”இல்லை இன்னொருத்தன்” என்று சொன்னபோதும் நாயேனுக்குப் புரியவில்லை.
“அட! உன்னைதாண்டா!” என்று நாயேனைப் பார்த்து பிரம்மஸ்ரீ மாமா சொல்லியபடி என்னை முன்னால் தள்ள, எனக்கு பயமான புது அனுபவமானது. தயங்கியபடி ஸ்ரீ பெரியவாளின் அருகாமையில் சென்று தரிசிக்க நின்றேன். சுமார் பத்து நிமிடங்களுக்கும் மேலாக ஸ்ரீ பெரியவாளை கண்குளிரத் தரிசித்த பரவசத்தால் மனம் நிறைந்தது.
முன்னோர்களின் தவம் என்பது ஒரு காரணம் என்றபோதிலும், பிரம்மஸ்ரீ மாமாவுடன் சென்றதால் ஏற்பட்டதின் பலன்தான் இது என்று மனதிற்குள் நன்றாகப் புரியலாயிற்று.
இப்பேற்பட்ட மாபெரும் பரவச நிலையை நாயேனுக்கு ஏற்படச் செய்ததற்கான காரணம் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹா பெரியவாளுக்கும், பிரம்மஸ்ரீ பிரதோஷம் மாமாவிற்குமே தெரிந்திருக்கக்கூடிய ஒரு ரகசியம் என்பதாக நாயேன் உணரலானேன்.
— கருணை தொடர்ந்து பெருகும்.
(பாடுவார் பசிதீர்ப்பாய் பரவுவார் பிணிகளைவாய் – சுந்தரமூர்த்தி சுவாமிகள் தேவாரம்)
__________________________________________________________________________________
Shree Shree Shree Maha Periyavaal Mahimai (18-11-2009)
A Exemplary Role Model
It is a great blessing for us that Shree Maha Periyava though he was a Brahmasri Suga Munivar, lived a very simple life to grant us grace and bless us.
Even though Periyava was an incarnation of God Himself, He followed all the daily rituals and observed all the vrathams to make sure he set an example for all us.
Aippasi pooram is the Janma Nakshatram of Kamatchi Amman. On this day, Periyava does milk Abhishekam for Kamatchi. As usual on this day, as soon as Periyava woke up, he bathed and completed his daily rituals and Pooja. He did not drink a single drop of water until then.
Immediately later He started walking towards Kamatchi Amman temple. Periyava’s disciple used to carry milk and Periyava will carry milk in His wooden container.
The clock struck 4 0 clock in the evening.
Periyava without drinking even a drop of water, used to walk to Kamatchi Amman temple. He used to take Biksha only after returning to Sri Matam.
When He was walking towards the temple, a devotee fell at the feet of Periyava and touched His feet.
Periyava’s disciple were worried that now Periyava will bathe again. One of the disciples of Periyava called Kannan was very disappointed. He did not want Periyava to bathe again and do all the rituals again and stress His body.
He wanted to tell Periyava that it is ok since anybody who is visiting the temple are already clean and pure. He asked Periyava not to bathe again, since it is said that just witnessing the people who have come to temple during any festival in itself is a blessing. Also after having darshan, it is not necessary to bathe.
Kannan was telling this loudly so that Periyava would listen to this. Periyava understood the disciple’s intention, but as soon as He reached Kamatchi temple, he went directly to the temple pond.
Periyava looked at Kannan and said that it is very auspicious to bathe in the Kamatchi Amman temple tank on Thula month pooram and let us all bathe now.
Why this snanam now? Is it because of the devotee touching Periyava’s feet or is it because that was already decided before. No one else other than Periyava can think of something like this.
Periyava would have already known about the devotee touching His feet and how Kannan will feel about it.
Only after bathing at the temple pond did Periyava had darshan of Kamatchi and did abhishegam.
After all this, He walked backed to Sri Matam, did His daily evening rituals and then took biksha. The biksha for that day was only milk.
Maha Periyava never missed an opportunity to show us how to live an exemplary life of following rituals (Aacharam).
Eswara’s Inspiration
A devotee appealed to Periyava that he is under Shani dasa and Shani bukthi is causing lot of miseries to him.
Periyava smiled and replied that Shani was very good and giver of long life. He does not do any bad by Himself, but all of us have to undergo our previous karmas. Periyava also added that His nakshatram was Anusham, which belongs to Shani bhagwan. “I need to walk a long way daily and that is not because of Shani bhagwan, it is due to Bhagwan’s inspiration”.
The devotee’s doubt was cleared and he left with a clear mind.
When the Eswara Himself says that it is not Shani, but the Bhagwan Himself, once we surrender to Him, we will be blessed.
A drop of God’s nectar
Panchangam has five parts. When it is read daily before God, telling the thithi brings wealth, telling the day improves the life expectancy, telling the nakshatram/star pushes away one’s sins and telling the yogam cures a person’s diseases and brings success to his life.
Shree Shree Shree Mahaperiyaval’s “Always Devoted” wonderful Nayanmar
My story with Brahmashree Pradosham Mama continues.
When I was studying in college, my Vaishnavaite friend and a relative had informed me, with great fervor, about the resident of Egmore Railway Colony, Brahmashree Mama’s Periyava bhakti, Maami’s affection, their sons Shree Arunachalam and Shree Ganesan’s Rishi like maturity.
On hearing about this, I had a keen desire to meet Brahmashree Mama.
In the next week, when both of my friends informed me about their trip with Brahmashree Mama to Pandarpur for darshan of Periyava, I wanted to go to Egmore and meet Mama.
I had the chance to go and meet Brahmashree mama. I entered the place filled with a mixture of fear and bhakti.
My respect for Brahmashree mama increased when I saw Him wearing rudraksham and vibuthi. When I saw mama’s son Shree Arunachalam walking quickly towards me, I felt little strange and nervous. Pradosham mama understood my thoughts and said, “My son will not do anything, do not fear”.
A magnificent picture of Periyava welcomed me. I looked at Periyava’s sketch at mama’s Pooja room through the window and felt very happy and relaxed.
In a very soft tone, I told mama, “During the next pradosham, I will come with you for darshan of Periyava.
“Whenever I call you, you can come at that time”, said PradoSsham mama.
For the next few pradosham, I had the opportunity to buy Vilvam, Rudraksham and also understood the role of these items during Pradosham with the help of Brahmashree mama.
The day I had been waiting for arrived. I travelled with Brahmashree mama to Sholapur for darshan of Periyava. Pradosham mama told lot of experiences with Periyava with intent bhakti and fervor. I was very happy to hear those experiences.
We reached Sholapur and entered the Balaji temple. All the tiredness due to the journey melted away by being with Brahmashree mama and by the kind hospitality provided by Sri Matam.
There were many wonderful moments that happened the next day, and I find it difficult to put everything in words.
It was Pradosham that evening.
I was surprised to hear that a Maharashtra Minister had come and spoke to Periyava in the temple.
I was blessed to see Pradhosham mama praying to Periyava and Periyava in turn blessing mama.
When Periyava was about to step inside, the miracle happened. He called one of his disciples and said something. The disciple started walking towards us and said that Periyava is calling the person who came with Pradosham mama.
I thought that Periyava should be calling the other Vaishnavite friend who had come with us. Everyone thought the same and that friend moved forward towards Periyava.
“He is calling you”, Brahmashree mama said to me and pushed me forward towards Periyava. It was a new experience for me and for the next ten minutes, I had darshan of Periyava. That had filled my mind with happiness and peace.
I realized that this was not only because of my forefather’s penance, but also due to Brahmashree mama. The secret to my happiness after the darshan will only be known to Periyava and Brahmashree mama.
- Grace will continues to grow.
Appease the hunger of those who sing, Cure the disease of those who spread your name – Sundaramurthy Swamigal Devaram)
Categories: Devotee Experiences
Thanks for the dedicated team for bringing out these treasures.
HARA HARA SHANKARA JAYA JAYA SHANKARA