87. Gems from Deivathin Kural-Vedic Religion-My Mission (Part 3)

Jaya Jaya Sankara Hara Hara Sankara – How to turn around the society that is very divided and in distress? Where is Manu’s home and which place is Kalki Avatar going to happen? Why am I roaming around cities non-stop giving so many upanyasams (lectures)? What is my wish or the desired outcome after all these efforts? Sri Periyava’s ‘My Mission’ continues….

Many Jaya Jaya Sankara to our sathsang seva volunteer Smt. Hema Sukumaran for the translation. Rama Rama

Click HERE for Part 2 of the chapter.


என் காரியம் (Part 3)

இப்போதிருக்கிற துவேஷம், மனக்கசப்பு, கோபதாபங்கள் போக வேண்டுமானால், வேத ரக்ஷணம் என்கிற கடமையைப் பெற்றவர்கள் அதைச் செய்து, ஸாதுக்களாக, சாந்தர்களாக வாழ்ந்து காட்ட வேண்டும். இதன் பலன் மற்றவர்களுக்கு உடனே புரியாமல் போகலாம். ஹர்த்தால் வந்து கடைகளை மூடினால் உடனே சிரமம் தெரிகிற மாதிரி, வேத ரக்ஷணம் நிற்பதனால் ஏற்படும் சிரமம் சமூகத்திற்குப் தெரியாமல் போகலாம். ஆனால் உண்மையில் இது நின்று போவதால் ஏற்படுகிற நஷ்டமே பெரிசு. இது நாளாவட்டத்தில் புரிந்து விடும். வேத ரக்ஷணத்துக்காக என்றே சிலர் ஆயுசை அர்ப்பணித்து வாழ்வதில் பெரிய சமூகப் பிரயோஜனம் இருக்கிறது என்று எல்லாரும் காலப்போக்கில் உணர்வார்கள். கடமையில் பின்வாங்காமலே நின்றால், ஒரு நாள் இப்போது எத்தனைக்கெத்தனை துவேஷம் இருக்கிறதோ, அத்தனைக்கத்தனை பிரீதி உண்டாகத்தான் செய்யும்.

ஆதியில், மநு இருந்ததே தமிழ் நாட்டில்தான். இங்கேதான் வேத வித்யை, ஞானம், பக்தி எல்லாமே ரொம்பச் செழிப்பாக இருந்திருக்கிறது. த்ரவிடேஷு பூரிச: என்பார்கள். தமிழ்நாட்டில் தாயுமானவர், பட்டினத்தார் போன்றவர்தான் என்றில்லை; மதாந்தரங்களைச் (அன்னிய மதங்களை) சேர்ந்த வேதநாயகம்பிள்ளை, மஸ்தான் சாகிப் போன்றவர்கள்கூட தமிழ்நாட்டு மண்ணின் விசேஷத்தால் பரம வேதாந்திகளாக இருந்திருக்கிறார்கள். வேத தர்மத்துக்கு ஆதி வீடே இதுதான். அந்தத்திலும் கலி முடிவில் வேத ரக்ஷணத்துக்காக அவதரிக்கப் போகிற கல்கி திராவிட தேசத்தில் திருநெல்வேலிச் சீமையில் தோன்றப்போகிறார் என்றுதான் சொல்லியிருக்கிறது. அங்கேதான் வேத தர்மத்தில் தவறாத பிராம்மணர் இருக்கப் போகிறார்; அவருக்குப் புத்திரராகக் கல்கி அவதரிக்கப் போகிறார் என்று புராணத்தில் சொல்லியிருக்கிறது. அப்படிப்பட்ட தேசத்தில் வைதிகத்துக்கு விரோதமே இருக்கக்கூடாது. இதைச் செய்வதற்கு விசை பிராம்மணர்களிடமேதான் இருக்கிறது என்று சொல்லத்தான் பட்டணத்துக்கு வந்திருக்கிறேன்.

மநுஷ்யனைத் தன் நிஜமான நிலைக்கு உயர்த்த எத்தனை கட்டுப்பாடுகள் வேண்டுமோ அத்தனையையும் சொன்னது நம் மதம்தான். தனி மனிதனுக்குக் பலவிதக் கட்டுப்பாடுகள்; சமூகத்துக்கும் பலவிதக் கட்டுப்பாடுகள். கட்டுப்பாடு என்றால் கரை போடுவது என்று அர்த்தம். கரையில்லாமல் ஒரு ஏரி இருக்க முடியுமோ! கட்டுப்படுத்தக் கூடாது என்று அப்படியே கரையை உடைத்துவிட்டால் ஜலம் முழுதும் பாழாகி ஊரும் பாழாக வேண்டியதுதான். ரொம்பவும் விசித்திரமாக இருப்பது என்னவென்றால், மிக அதிகமான கட்டுப்பாடுகள் உள்ள நம் மதத்தில்தான் இப்போது அடியோடு ஒரு கட்டுப்பாடும் இல்லாமல் ஆகிவிட்டிருக்கிறது!

இதில் சமூகத்துக்கு வழிகாட்டியாக இருக்க வேண்டிய பிராம்மணர்களைக் கொஞ்சம் கொஞ்சம் கட்டிப் போடலாம் என்றுதான் ஊர் ஊராகச் சுற்றி, ஓயாமல் உபந்நியாசம் பண்ணுகிறேன். பிராம்மணர்கள் அப்படி நினைக்கிறார்களோ இல்லையோ, நான்தான் அப்படி நினைக்கிறேனோ இல்லையோ – அவர்கள் எனக்கு மற்றவர்களைவிடக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்கள் என்று பொதுவில் பரவலாக அபிப்ராயம் இருக்கிறது. எனவே முதலில் இவர்களை இவர்களுடைய தர்மத்தில் கொஞ்சம் கட்டுபட்டிருக்கச் செய்தாலே, அப்புறம் மற்ற ஜனங்கள் எல்லோருக்கும் அவரவர்களுக்குச் சொல்லவேண்டியதை நான் உபதேசிப்பதற்கு எனக்கு ஒரு சக்தி உண்டாகும். ஆகவே என் வார்த்தைகளுக்குப் பிராம்மணர்கள் கொஞ்சம் கொஞ்சம் கட்டுப்பட்டு, இதர சமூகத்துக்கெல்லாம் நான் செய்யக்கூடியதை செய்வதற்கு சகாயம் பண்ண வேண்டும்.

சுருக்கமாக என்னச் செய்யச் சொல்கிறேன்? ஆசாரியாள் சரீரத்தை விடுவதற்குமுன் சாரமாக உபதேசம் செய்த ஐந்து சுலோகங்களில், எடுத்த எடுப்பில் என்ன சொன்னாரோ அதையேதான் சொல்கிறேன்: வேதோ நித்யம் அதீயதாம். இதையே மொழி பெயர்த்த மாதிரி ஔவையாரும் உபதேசத்தை ஆரம்பிக்கும்போதே ஓதாமல் ஒரு நாளும் இருக்க வேண்டாம் என்கிறாள். ‘தினமும் வேதத்தை அத்யயனம் பண்ண வேண்டும்’ என்று ஆசாரியாள் ‘பாஸிடி’வ்வில் சொன்னதையே அவ்வை ‘நெகடிவ்’-ஆக ‘ஒரு தினம்கூட அத்யயனம் பண்ணாமல் இருக்க வேண்டாம்’ என்றாள். ‘ஓதுதல்’ என்று வெறுமே சொன்னாலே ‘வேதம் ஓதுதல்’ அதாவது ‘அத்யயனம்’ என்றுதான் அர்த்தம். எழுதாமல் படிக்காமல் வாயாலேயே ஓதவேண்டியது வேதம் என்பதால் இப்படிப் பெயர் வந்தது. வேதத்துக்கு ‘ஓத்து ‘என்றே பெயர். திருக்குறளிலும் இப்படி வருகிறது. வேதங்கள் ஈசுவரனை பூஜை செய்த வேதபுரி என்கிற ஸ்தலத்துக்கு ‘திருவோத்தூர்’ – ‘திரு ஓத்து ஊர்’ என்றே பெயர் இருக்கிறது. பிரம்ம சிருஷ்டியிலிருந்து நம் வரைக்கும் வந்துள்ள இந்த ஓதும் பணி சாசுவதமாக நடக்க வேண்டும் என்று உங்கள் எல்லோருடைய காதிலும் போடத்தான், இப்படிப் பட்டணம் பட்டணமாகத் திரிந்து கொண்டு, உங்களுக்கெல்லாம் செலவு வைத்து, சிரமங்களைத் தந்து கொண்டிருக்கிறேன்.

இத்தனை ஆயிரம் பேர் கூடுகிற இடத்தில் சொன்னால் ஒரு பத்து இருபது மனசுக்குள்ளாவது அது இறங்கிக் காரியத்தில் பலிக்காதா என்று எனக்கு ஆசை.

_________________________________________________________________________

My Mission (Part 3)

To ward off enmity, distress, and anger prevailing now, those duty bound to protect Vedas should perform their duty and  be a living example of saintly hood and peace. Its effect may not be seen immediately. The disadvantages of discontinuing Veda Rakshanam  are not visible like difficulties faced in Hartal when shops get closed. Actually the loss of this is much more. This will be realized only in due course. The benefit accrued to the society due to the total lifetime dedication of some will be known later on. If one adheres to Dharma one day there would be as much amiability as that of animosity prevailing now.

In the early age Manu dwelled in Tamizh Nadu. Veda vidhya, Gnana, and Bakthi flourished here. There is a saying “Dravideshu Bhurishaha”. In Tamizh Nadu not only saints like Thayumanavar and Pattinatthar were born but people of other religion such as Vedanayakam Pillai and Masthan Saheb were there who were great philosophers due to the greatness of soil of Tamizh Nadu. This the home for Veda Dharma in the beginning. Even towards the end of Kali, it is said that incarnation of Kalki to protect Vedas is set to take place at Tirunelveli in Dravida land. It is said in the Puranas that only there will be a Sath Brahmin undeterred from Dharma and Kalki will be born as his son. In such a country there should be nothing opposed to Vaideekam. The switch for this, is with the Brahmins. I have come to the city to tell you this.

Our religion alone has laid down all the required regulations to raise man to his true state. Several regulations for individuals; many regulations for the society;  to have control is like building a bank for a lake. If the bank is destroyed with a view that there should be no regulation then the water body as well as the place around will get destroyed. The irony is the religion which had maximum control now has absolutely no regulation.

In order to bind the Brahmins who are to guide the society, I go to various places and give continuous upanyasams (lectures). There is a widely formed general opinion that the Brahmins should obey me more than the others- whether Brahmins think so or not, whether I feel so or not. So if I bind them somewhat in their duties then I shall have the power to preach to others what is required of them. So Brahmins should give heed to my words and help me in doing what I could do to other communities.

In short what I expect you to do? Before leaving the mortal body Aacharya preached the essence in five slokas. I tell you what he had advised in the very beginning. ‘Vedo Nityam Adhiyataam‘.  Avaiyar also starts her preaching with ‘Odhaamal Orunaalum Irukka Vendaam’. What Aacharyal said in positive ‘Chant Veda everyday’, she said in negative ‘Don’t abstain from chanting everyday’.  The word Odhudhal alone means Vedam Odhudhal or Veda Adhyayanam. Vedas is something neither written nor read but chanted and hence it is said as Odhudhal. Vedam is also called as ‘Othu’ in Tamil. We can find it in Tirukural also. Vedapuri where Vedas worshipped Eshwara is called ‘ThiruOthuoor’. In order to bring home to you that the chanting of Vedas which was passed on to us since Brahma srishti (creation) should continue, I roam around cities resulting in your spending more and straining.

If I tell these in places like these where thousands throng won’t it reach the minds of at least ten or twenty and yields actionable results then my purpose will be served. This is my wish!



Categories: Deivathin Kural

Tags:

2 replies

Trackbacks

  1. 87. Gems from Deivathin Kural-Vedic Religion-My Mission (Part 3) | sriaiyerrs
  2. 88. Gems from Deivathin Kural-Vedic Religion-My Mission (Part 4) – Sage of Kanchi

Leave a Reply

%d bloggers like this: