1. Sri Sankara Charitham by Maha Periyava – Pravrutti ; Nivrutti

Jaya Jaya Sankara Hara Hara Sankara – On this Very Auspicious Sri Sankara Jayanthi, here is the very first chapter of the great blockbuster Sri Sankara Charitham by Maha Periyava. In this chapter Sri Periyava talks about two paths, the materialistic lives most us lead and the one who renounced it. Which path gives Permanent & ever lasting happiness? Our Periyava answers below.

As mentioned in the announcement few days back, Our sathsang seva volunteers:

1. Shri ST Ravikumar will be translating these chapters and,

2. Smt. Sowmya Murali will pen the sketches based on the subject for every chapter. Isn’t this chapter sketch glorious? She was also gracious enough to record these chapters as one of the devotees asked for it. The audio has been provided at the end of the post.

So, there are lot of incentives our Periyava has given us to read this “Maha Punniya Charitham”, contemplate and follow.

Please share these posts as much as you can including non-tamizh speaking devotees. Bhava Sankara Desikame Saranam! Rama Rama

ப்ரவ்ருத்தி – நிவ்ருத்தி

இரண்டாயிரம், இரண்டாயிரத்து ஐநூறு வருஷங்களுக்கு முந்தி நம்முடைய தேசத்தின் நிலைமை ரொம்பவும் சீர்கெட்டுப் போயிருந்தது.

அநாதி காலமாக வேதோக்தமான வழி நம் தேசத்திலிருந்து வந்திருக்கிறது. ஸநாதன தர்மம் என்று அதற்குப் பேர். வேதத்தை அநுஸரித்து ஏற்பட்டதால் அதற்கு வைதிக மதம் என்றும் பேர் சொல்லலாம். அப்புறம் பஹு காலம் கழித்துதான் அந்நிய தேசத்தினர்கள் ஹிந்து மதம், ஹிந்து மதம் என்று அதற்குப் பேர் கொடுத்துச் சொல்லி நாமும் அவர்கள் வைத்த பெயரையே சொல்லிக் கொண்டிருக்கிறோம். இதற்குப் பேர் ஸநாதன தர்மமென்றோ, வைதிக மதமென்றோகூட நம்முடைய மதத்திற்கு ஆதாரமாக இருக்கப்பட்ட நூல்களில் எதிலும் சொல்லியிருக்கவில்லை. வேறே மதங்களில்லாமல் இது ஒரே மதம்தான் அநாதி காலமாக இருந்து வந்ததால் இதற்கு ஒரு பேர் கொடுக்க வேண்டிய அவசியம் இருக்கவில்லை.* அப்புறம் மேற்கு தேசங்களிலிருந்து வந்தவர்கள் நம்முடைய பாரத தேசத்தில் முதலில் ஸிந்து நதியைத்தான் கடக்க வேண்டியிருந்ததால், ஸிந்துவை Indus – ஆக்கி, அப்படியே அதைச் சேர்ந்து வரும் பாரத தேசத்துக்கும் India என்று பேர் கொடுத்து, அதன் ப்ராசீனமான மதத்தை Hinduism என்றும், அதைப் பின்பற்றும் நம் எல்லோரையும் Hindus என்றும் சொல்ல ஆரம்பித்து, இந்தப் பெயர்களே நிலைத்து விட்டன.

வேதங்கள் வகுத்துள்ள இந்த ஸநாதன தர்மத்தில் இரண்டு மார்க்கங்கள் — ப்ரவ்ருத்தி மார்க்கமென்றும், நிவ்ருத்தி மார்க்கமென்றும். லோக வாழ்க்கையை நன்றாக, தர்மமாக நடத்துவதற்கு ப்ரவ்ருத்தி மார்க்கம். லோக வாழ்க்கையை விட்டுவிட்டு, அதை முடித்து விட்டு பரமாத்மாவோடு ஐக்யமாகி ஜனன மரணத்திலிருந்து விடுதலை பெறுவதற்கு நிவ்ருத்தி மார்க்கம்.

தர்மமாக, அதாவது தனக்கும் நல்லதாகவும், ஜன ஸமூஹத்துக்கும் நல்லதாகவும் வேத விதிப்படி இல்லற வாழ்க்கை நடத்தி, வர்ணாச்ரம வியவஸ்தைகளை அநுஸரித்து கர்மாநுஷ்டானங்களைச் செய்வதுதான் ப்ரவ்ருத்தி மார்க்கம். இதிலே கர்மாநுஷ்டானம் எவ்வளவு நன்றாகச் செய்கிறோமோ, அந்த அளவுக்குப் புண்யம் கிடைத்து, புண்ய பலனாக ஸ்வர்க்கம் என்ற இன்ப லோகத்தில் வாஸம் கிடைக்கும். ஆனால் அந்த இன்பம் சாச்வதமல்ல. அந்த இன்பத்தை அநுபவிக்க அநுபவிக்க நம்முடைய புண்ய ‘பாலன்ஸ்’ குறைந்து கொண்டே வரும். முழுக்க அது தீர்ந்தவுடன் “புநரபி ஜனனம்” என்கிறபடி மறுபடி இந்த மண்ணுலகிலேயே பிறக்க வேண்டியதுதான். ஆனாலும் வேத தர்மப்படி (பூர்வ ஜன்மத்தில்) செய்ததால் இது நல்ல பிறவியாக, நல்ல வசதிகள் வாய்த்த பிறவியாக இருக்கும். இந்தப் பிறவியிலும் தர்மம் தப்பாமல் வாழ்க்கை நடத்தினால் மறுபடி ஸ்வர்க போகம். ஆனாலும், (முன்பு) சொன்ன மாதிரி, இந்த போகம் சாச்வதமல்ல.

சாச்வதமல்ல என்பது ஒரு பக்கம். அதோடுகூட அநுபவிக்கும்போதேகூட இந்த இன்பம் பூர்ணமான நிறைவைத் தருவதாக இருக்காது. ‘இனிமேலே எதுவும் வேண்டாம்! இந்த நிலை நிரந்தரமாக வாய்த்து விட்டதல்லவா? இதிலிருந்து கொஞ்சங்கூட விலகுவதற்கில்லை. இனியொரு குறை நமக்குக் கிடையாது’ என்று எப்போது ஆக முடியுமோ அப்போதுதான் நிறைவான பூர்ணானந்தம். பூலோகம், ஸ்வர்கம் ஆகிய இரண்டிலுமே எத்தனைதான் ஸந்தோஷமிருந்தாலும் அது இப்படிப்பட்ட நிறைந்த ஆனந்தத்தைத் தரமுடியாது. பல தினுஸான பயம், துக்கம், காமக்ரோதாதி இழுபறிகள் இல்லாமல் இந்த லோகங்களில் இருந்துவிட முடியாது. இந்த இன்பங்களைப் பெறுவதற்காக ஓயாத முயற்சியும் பண்ணிக் கொண்டேதானிருக்க வேண்டும். அதாவது போராடிக் கொண்டேதானிருக்க வேண்டும்.

அது மட்டுமில்லை. இந்த இன்பங்கள் நம்முடைய உள்ளாழத்தில் நாம் என்னவாக இருக்கிறோமோ அதை த்ருப்தி பண்ணுமா? பண்ணவே பண்ணாது. ஏதோ கண்ணுக்கு, காதுக்கு, வாய்க்கு, இன்னம் ஸ்பர்சாதிகளுக்கும், மனஸுக்கும், அறிவுக்குங்கூட இன்ப அநுபவம் இருக்குமேயொழிய, இதற்கெல்லாமும் உள்ளே, நம்முடைய அந்தஃகரணத்துக்கும் உள்ளே இருக்கப்பட்ட ஆத்மாவுக்கு இவற்றிலே கொஞ்சமும் ஸுகாநுபவம் இருக்காது. இன்பங்களை அநுபவிக்கிற நமக்கே அப்பப்போ ஒரு தீர்க்கமான யோசனை வரும்போது, ‘இது என்னது? நம்மிலே ஸாரபூதமாக உள்ளேயிருக்கிற ஏதோ ஒன்றுக்கு ஒரு நிறைவையும் பெறாமல், வெளிமட்டத்தில் ஸெளக்யம், இன்பம் என்று அஸ்திரமான (நிலையற்ற) எதையோ தேடிக் கொண்டு போய்ப் பைத்தியம் மாதிரி என்னென்னவோ பண்ணி த்ருப்திப்படப் பார்க்கிறோமே!’ என்று தோன்றும்.

பூர்ணமான உள்நிறைவைத் தருவது நிவ்ருத்தி மார்க்கம்தான். கர்மாக்களை விட்டு, ஜன ஸமூஹத்தை விட்டு ஸந்நியாஸியாகி ஸதா காலமும் ஆத்ம சிந்தனை, த்யானம் என்று இருப்பவன்தான் ஆத்மா ப்ரஹ்மமே என்று அறிந்து அநுபவிப்பதான, நிறைந்த நிறைவான நிலையைப் பெறுவான். ஸமாதி என்றும் ஸாக்ஷாத்காரம் என்றும் சொல்லும் அந்த நிலையொன்றுதான் ஒரு முறை கிட்டினால் அப்படியே சாச்வதமாக இருப்பது. பேச்சு வழக்கில்கூட ‘ப்ரம்மானந்தமாயிருந்தது!’ என்று நமக்குத் தெரியும் இன்பத்தைச் சொல்கிறோம்! வாஸ்தவத்தில் அந்த “ப்ரம்மானந்தம்” நிவ்ருத்தி மார்க்கத்தில் ஸித்தி பெற்றவனுக்குத்தான் தெரியும்! அது, ப்ரம்மம் என்று ஒன்றை இன்னொருவன் அநுபவித்து ஆனந்திப்பது அல்ல. ப்ரம்மம் என்ற ஆனந்தம்தான் ப்ரம்மானந்தம். இவன் (நிவ்ருத்தி மார்க்கத்தில் ஸித்தி பெற்றவன்) தானே அந்த ப்ரம்மம் என்ற ஆனந்தமாக ஆகிவிடுகிறான். அங்கேதான் பயமேயில்லை, துக்கமில்லை, காமமும் க்ரோதமும் போட்டு இழுக்கிறதும் இல்லை. ஓயாத முயற்சியும் வேண்டியிருப்பதில்லை. ஸித்தியடைவதற்கு முன்னாடி ரொம்பப் பாடுபடத்தான் வேண்டும். போராட்டம் என்றேனே, அது பெரிசாக இருக்கத்தான் செய்யும். ஆனால் ஒரு தரம் அந்த லக்ஷ்யத்தை அடைந்துவிட்டால் போதும். அப்புறம் அதிலிருந்து நழுவுவது, விலகுவது என்பது கிடையாது.

“தில்லை வெளியிலே கலந்து விட்டாலவர்
திரும்பியும் வருவாரோ?”
என்று சொன்னது இதைத்தான். ஒரு தரத்துக்கு இரு தரமாக,

அநாவ்ருத்தி சப்தாத் அநாவ்ருத்தி சப்தாத்

என்று “ப்ரஹ்ம ஸூத்ரம்” முடிந்திருப்பதும் இதைத்தான் சொல்கிறது. ப்ரஹ்மஸூத்ரகாரர், “இது தாமே சொல்வதில்லை, ச்ருதியிலேயே (வேதத்திலேயே) இப்படி இருக்கிறது” என்றும் சொல்கிறார். ‘சப்தாத்’ — என்றால் சப்த ப்ரமாணம் என்பதான ச்ருதியிலிருந்து என்று அர்த்தம். ச்ருதி சிரஸான சாந்தோக்ய உபநிஷத்தில் இப்படியே இரண்டு தடவை சொல்லி முடித்திருக்கிறது.

அதாவது, நிவ்ருத்தி மார்க்கத்தினால்தான் நித்யமான பேரின்பம். ப்ரவ்ருத்தியில் பெறுவதெல்லாம் நச்வரமான (நிலையற்ற) சிற்றின்பம்தான்.

* “தெய்வத்தின் குரல்” முதற்பகுதியில் “பெயரில்லாத மதம்” என்ற உரை பார்க்கவும்.


Pravrutti ; Nivrutti

About 2000 to 2500 years back, our country was in a much degraded state.

Since eternity, the path of Vedic dharma has been in existence in our country.  It is called Sanatana Dharma [सनातन धर्म].  Since it is in line with the Vedas, it can also be called as the Vedic religion.  After passage of many, many years, foreigners started calling it Hinduism and we have also been calling it by the same name since then. Nowhere it is mentioned in any of the literature related to our religion, that the name of our religion is Sanatana Dharma or Vedic religion. Since time immemorial, there was no other religion except this one; hence, there was no need to give it any name*.  Subsequently, when westerners entered our country, they had to cross the river Sindhu which they called as Indus; our country which is adjacent to the Sindhu was given the name India; the age-old religion practiced here was given the name Hinduism and its followers, Hindus.  These names have come to stay.

This Sanatana Dharma which is prescribed by the Vedas has two paths; namely, Pravrutti [प्रवृत्ति] and Nivrutti [निवृत्ति] . Pravrutti Margam is the path prescribed to enable one lead one’s life in this world in accordance with dharmic principles. Nivrutti Margam is the where one chooses to dissociate from worldly life, and when the life ends, merges with Paramatma, thus freeing oneself from the repetitive cycle of birth and death.

Pravrutti is the path, which prescribes leading a life of righteousness, for one’s own betterment and for the welfare of the community at large. In this path, a person leads the life of a householder and following the prescriptions of Varnasrama [वर्णाश्रम] performs the necessary karmaanushtanams [कर्मानुष्ठानम्].  Depending upon how sincerely the karmaanushtanams done, one earns Punya [पुण्य] and as a reward for the Punyas, gets to live in the joyful world of heaven. However, this joy is not permanent. The Punyas earned get reduced in proportion to the time spent in heaven. When the ‘balance’ is fully exhausted, he will be forced to take birth in this world again, in line with the precept, ‘punarapi jananam’[पुनरपि जननम्] (repeated births).  Owing to righteous conduct in the previous life, this next birth will be a good one with all comforts.  If one lives this next life also without wavering from the path of righteousness, he may once again go to heaven.  However, as said already, that joyful stay in heaven is not permanent.

The joy not being permanent is one aspect. Even while experiencing it, the joy will not give a sense of fulfillment.  One can get that bliss only when he reaches a stage where he feels ‘I do not need anything more at all! I have reached a permanent state from which I should never waver. I have nothing else that I require’. Only when one reaches this stage does he experience absolute bliss and fulfillment. Whatever be the pleasure or happiness in this world or in heaven, they are nowhere equal to this ultimate bliss. One cannot live in this world without being influenced by fear, sorrow, desire, anger etc.  Moreover, one needs to be constantly making efforts to obtain the worldly pleasures; in other words, one needs to constantly struggle to get them.

Not just that. Will these small pleasures satisfy what we are deep inside? They won’t. They can at best, satisfy the five senses of eyes, ears, touch, etc., and give joyful experience to the mind and the intellect but not to the ‘atma’ residing deep within us. The atma will not be able to get the experience of copious joy or ecstasy from these pleasures. Even while experiencing these small pleasures, a probing thought occurs in our minds now and then, which questions us:  ‘What is this? Without that essence within us not attaining any fulfillment, why are we running after these transitory pleasures like a mad person’?

The path of Nivrutti alone can give the permanent inner contentment.  Only the person who is able to get away from worldly activities (karma), become detached from the society, become a Sanyasi and continuously engage in soul searching and meditation, will realize that this human soul itself is part of the Supreme Brahmam and experience the permanent blissful state of contentment.  The states of Samadhi (profound meditation or deep contemplation) and Sakshaathkaram [साक्षात्कारम्] (realization) are one and the same.  If one attains that state, it is eternal.  Even in common parlance, we sometimes describe worldly joys as ‘Brahmanandam’ [ब्रह्मानन्दम्] (Divinely rapturous)!  In reality, only a person who has been able to reach that ecstatic state by following the path of Nivrutti, will be able to experience that Brahmanandam!  It is not something that one experiences by being outside it. The state of merging with the Supreme Being – the Brahmam – is Brahmanandam.  This person (who has reached the blissful state through the Nivruthi path becomes one with the Supreme (Brahmam ) and experiences the ecstasy. In that state, there is no fear, sorrow, desire or anger which overwhelms us. Also, there is no need for the perpetual struggle to attain something. However, one has to put in tremendous efforts to reach this blissful stage. The struggle that I had mentioned earlier will definitely be colossal.  It is sufficient that one attains that stage just once; there is no chance of ever slipping or swaying from that.

This is what is mentioned in the verse,

‘thillai veliyilae kalandhu vittaalavar
thirumbiyum varuvaro?’

The concluding part of Brahma Sutra says the same, not just once, but twice:  ‘Anaavrutti Shabdaath Anaavrutti Shabdaath’ [अनावृत्ति शब्दात् अनावृत्ति शब्दात्]. The author of Brahma Sutra [ब्रह्म सूत्र] says that these are not his words and that they are already there in the Sruti [श्रुति] (Vedas) itself.  Shabdaath means, ‘from the Sruti’ which is the proof of sound.  Chandogya [छान्दोग्य] Upanishad, which is the Vedanta part of Sruti (Vedas) has concluded by repeating this twice.

To summarize, one can get permanent blissful state only through the Nivrutti mode; all the small pleasures and happiness one may get through the Pravrutti mode are only temporary.

Refer: Deivathin Kural Part 1-Peyar Illadha Madham (Religion without a Name).

_______________________________________________________________________________________________

Audio



Categories: Deivathin Kural

Tags: ,

12 replies

  1. Maha Bhagyam to read Bhagavan Adi Sankara’s Charitham by Maha Periyava Himself! May their Divine Blessings be ever on all of you and through your efforts to us all! Hara Hara Shankara, Jaya Jaya Shankara!

  2. Namaskarams. Sri Sankara Charitham Audio romba nanna irukkirathu. Sowmya avarhalin theme sketch and audio irandumae nandraha ulladhu. Indha audio download seidhu vaithu kondu leisure hour-la repeated aaha ketka mudiyum. Being aged and rheumatoid arthritis patient, I request you to help me to download this.

    Mahaperiyava Paripoorna Anugraham.

    my mail id is : santhavasan@gmail.com

    Hara Hara Sankara ! Jaya Jaya Sankara !

  3. Thanks everyone

  4. சௌம்யா ஓவியம் அதி அற்புதம். தெய்வத்தின் குரலை உந்தன் குரலின் மூலம் பதிவு செய்த ஒலியும் அதி அற்புதம். தங்கு தடையின்ற நடை. ஸ்பஷ்டமான உச்சரிப்பு. உள்ளார்ந்தமாய் சொன்ன பாணி. அருமை. அருமை. பெரியவா அருளடனே செவ்வென தொடரட்டும் நின் சேவை. திரு ரவிகுமாருக்கும் எந்தன் வாழ்த்துக்கள்.

    🙏🏻🙏🏻👍🏻👍🏻👏🏼👏🏼

  5. அதி அற்புதம் சௌம்யா

    அதி அற்புதம் திரு ரவிக்குமார்

    தொடரட்டும் உங்கள் நற்பணி…

    மனம் நிறைந்த பாராட்டுக்கள்.

    ஹர ஹர சங்கர ஜெய ஜெய சங்கர

    ஆதி சங்கர பகவத் பாதாள் சரணம்

    காஞ்சி பெரியவா திருவடி சரணம்.

    சந்தர் சோமயாஜிலு

  6. Maha Periava Saranam

  7. Brilliant and thanks enlightening everyone.

  8. JAYA JAYA SANKARA

  9. Periyava kadaksham paripooranam…… Hara Hara sankara Jaya Jaya sankara……

  10. Namaskaaram
    I greatly indebted to you for including the audio clip of the post. Thank you. It is indeed a blessing.

  11. Namaskaaram. Thank you so much for the wonderful endeavour. I am the person who.had requested for an audio clip of the post and it was a pleasant surprise that you have included it and consider it a blessing from Mahaperiava. I have a medical condition which makes it difficult to read lengthy paragraphs; hence the request. Thank you again. Indhu

  12. Brilliant and awesome work and sketches .Jaya Jaya Sankara .. Hara Hara Sankara!!

Leave a Reply to ParthasarathyCancel reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading