தன் வேலையை இன்னொருத்தனிடம் விட்டுவிட்டு தான் ‘ஊரானுக்குத் தொண்டு செய்கிறேன்’ என்று போனால் அது பரிஹாஸந்தான், fraud [மோசடி] தான். தாயார், தகப்பனார், ஸஹோதரர், பத்னி, புத்ரர் இருந்தால் அவர்கள் – ஆகியவர்களுக்குச் செய்ய வேண்டிய ட்யூட்டிகளைச் செய்யாமல் லோகத்துக்கு உபகாரம் செய்கிறேன் என்றால் அது ‘ஹிபாக்ரிஸி’ [போலி வேஷம்] தான். இப்படியெல்லாம் பண்ணிவிட்டு பந்துக்கள் எடுத்துக் காட்டினால் கோபம் வருகிறது, எரிச்சல் வருகிறது என்றால் பரோபகாரத்தால் இவனுக்கு எந்த அபிவிருத்தியும் ஏற்படவில்லை என்றுதான் அர்த்தம். ‘எல்லாரிடமும் அன்பாயிருக்கணும், மதுரமாய்ப் பழகணும்’ என்பதுதான் தொண்டு செய்கிறவனுக்கு லக்ஷணம். பொதுத்தொண்டு என்பதற்காகவே வீட்டு மநுஷ்யர்களிடம் அன்பு போய், எரிந்து விழுந்து கொண்டிருக்கிறானென்றால் இவன் தொண்டு செய்து என்ன புண்யம்? இவனுக்கு என்ன சித்த சுத்தி ஏற்பட முடியும்? குளிக்கப்போய்ச் சேற்றைப் பூசிக்கொள்கிற மாதிரி பண்ணிக்கொள்ளக் கூடாது. – ஜகத்குரு ஸ்ரீசந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகளின் அருள்மொழிகள்
It is a matter of mockery and fraud if one performs social service after burdening somebody with one’s own responsibilities. It is nothing but hypocrisy if a person seeks to help the world around him without fulfilling his responsibilities towards his own immediate family – his parents, siblings, wife, and children. If a person gets irritated and angry when this lapse is pointed out to him it means that his bout of social service has not really ripened him spiritually. The true nature of a philanthropist is that he is kind and affectionate towards everybody. He is not going to earn any goodwill if he is going to perform social service while there is love lost between him and his family. It is like smearing oneself with mud while going to take a bath. – Jagadguru Sri Chandrasekharendra Saraswathi Swamigal
Categories: Deivathin Kural, Golden Quotes
Well said Sri Arvind. Fully agree with you.
Excellent advice by Mahaperiyava, the God – Every person, more especially the Preachers, must follow this.
(கொஞ்சமாவது) வேதாத்யாயனம் செய்வது, பஞ்சாயதன பூஜை செய்வது, நித்ய கர்மாக்களை விடாமல் இருப்பது, தர்ம சாஸ்திரப்படி போஜனம், ஸ்நானம் செய்வது இது எல்லாம் பலருக்கு கடமையாக தோன்றுவதில்லை. கல்யாணம் செய்து கொள்வது மட்டுமே பிரதான கடமையாக தோன்றுகிறது!!!