Upadesam

வரதட்சணை திருட்டுச்சொத்து!

  கல்யாணம் என்பது இக்காலத்தில் அக்கிரமமாக மாறிவிட்டது. நாம் எல்லோரும் பெண் பிள்ளைகளோடு பிறந்தவர்கள் தானே! அப்படி இருக்கும் போது பிள்ளை வீட்டார் வரதட்சணை கேட்பது மன்னிக்க முடியாத குற்றம். பெண்ணின் குலம், குணம் அறிந்து நல்ல பெண்ணை தேர்ந்தெடுப்பதில் மட்டுமே கவனம் இருக்க வேண்டும். நம்மைப் போல் மருமகளும் பெண் தானே என்று அபிமானமும்… Read More ›

காயத்ரீம் சந்தஸாம் மாதா

காயத்ரீ என்றால், “எவர்கள் தன்னை கானம் பண்ணுகிறார்களோ அவர்களை ரக்ஷிப்பது”என்பது அர்த்தம். காயந்தம் த்ராயதே யஸ்மாத் காயத்ரீ (இ) த்யபிதீயதே ! கானம் பண்ணவதென்றன்றால் இங்கே பாடுவதில்லை;பிரேமயுடனும் பக்தியிடனும் உச்சரிப்பது என்று அர்த்தம். யார் தன்னை பயபக்தியுடனும் பிரேமையுடனும் ஜபம் பண்ணுகிறார்களோ அவர்களை காயத்ரீ மந்திரம் ரக்ஷிக்கும். அதனால் அந்தப்பெயர் அதற்கு வந்தது. வேதத்தில் காயத்ரீயைப்… Read More ›

ஞானம் to ஆனந்தம்

நமக்கு எண்ணி முடியாத ஆசைகள் இருக்கின்றன. ஆனாலும் என்றோ ஒருநாள் நாம் ஆசைப்படும் வஸ்துகள் நம்மைவிட்டுப் பிரிவது அல்லது நாம் அவற்றைப் பிரிவது சர்வ நிச்சயம். சாவின் மூலம் இந்தப் பிரிவு ஏற்படாமல், அதற்கு முந்தி நாமாக ஆசைகளை  ராஜிநாமா செய்துவிட்டால், அத்ததனைக்கத்தனை ஆனந்தமாக இருக்கலாம். நமக்கு எத்தனை ஆசைகள் இருக்கின்றனவோ அத்தனையாலும் நம்மைக் கட்டிப்போட்டுக்… Read More ›

Advice to jyothishtas

ஜோஸ்யர் ஒருத்தர் பெரியவாளை தரிசிக்க வந்தார். “பெரியகுடும்பம்…….வருமானம் போறலை, ஜோஸ்யம் சொல்லறதிலே வரும்படிொம்பகொறைச்சல்..ரொம்ப கஷ்டம்..” என்று முறையிட்டார். “நீ………. ஒங்கஅப்பா இருந்த பூர்விக கிருஹத்லதானே இருக்கே?””இல்லே….அதுல அண்ணா இருக்கான். அதுக்கு மேற்கு பக்கம் ஒரு ஆத்துல இருக்கேன்””நீஅங்க இருக்க வேணாம். பூர்விக க்ருஹத்துலேயே கிழக்கு பக்கத்துல பழையமாட்டுகொட்டாய் இருக்கோன்னோ? அந்த எடத்ல ஒரு குடிசை போட்டுண்டு… Read More ›

எல்லா நாட்டிலும் செல்லும் நோட்டு

நம்மிடம் ஆயிரம் ரூபாய் சில்லரையாக இருக்கிறது. அது சுமப்பதற்கும், பாதுகாப்பதற்கும் சிரமமாக இருக்கிறது. இந்த நிலையில் ஒரு மலையைக் கடந்து பக்கத்து நாட்டுக்கு செல்ல வேண்டிய சூழ்நிலை. அப்போது அந்தப்பணம், ரூபாய் நோட்டாக இருந்தால் எடுத்துச் செல்வது சுலபமாக இருக்குமே என எண்ணுகிறோம். ஆனால், அந்த நோட்டு, மலைக்கு அடுத்துள்ள நாட்டில் செல்லுபடியாவதாக இருக்க வேண்டும்…. Read More ›

Amazing Mantra Upadesam by Periyava

I will translate this to English in the next day or two… I am into lot of things right now…. ஜகத்குரு அருளிய அதிசய மந்திரம்! ஐம்பது ஆண்டுகளுக்கு மேலாக எனக்குள் ஒரு கேள்வி: ஒன்றேயான கடவுளின் பல வடிவங்களான பல தேவதைகளுக்குத்தான் மூல மந்திரங்கள் உள்ளனவே தவிர,… Read More ›

எரிச்சுக்கட்டி ஸ்வாமி

“ஸந்த்யா வந்தனத்தின் மஹிமையைப் பற்றி ஒருகதை இருக்கிறது. இக்கதை சுமார் 500, 600வருஷங்களுக்கு முன் நடந்ததாக  ஊகிக்க முடிகிறது.சென்னை கவர்மெண்டைச் சேர்ந்த ஆர்க்கியலாஜிகல்டிபார்ட்மெண்டார் பிரசுரித்திருக்கும் ரிகார்டில் இந்தக் கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன. திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர்,எள்ளினால் ஒரு காலபுருஷன் உருவத்தைச் செய்து,அதனுள் ஏராளமான ஐவர்யத்தை வைத்து, தானம்செய்யப் போவதாக விளம்பரம் செய்தார். அந்தஉருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அநேகம் பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள். அந்தகாலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்கபதில் சொல்ல முடியாமல், தானம் வாங்கவந்தவர்களெல்லாம் மரணமுற்றார்கள். கன்னடியர்என்ற ஒரு பிராம்மணர் இருந்தார். ஸந்த்யா வந்தனகர்மாவில் வெகு ச்ரத்தை உள்ளவர். சாஸ்திரங்கள்முதலானவற்றில் அவருக்கு அப்யாஸம் கிடையாது.அந்தத் தானத்தை வாங்க அவர் வந்தார். அப்போது அந்த காலபுருஷனின் உருவம் மூன்றுவிரல்களைக் காட்டியது. முடியாது என்றார். பிறகுஇரண்டு விரல்களைக் காட்டியது. அதற்கும் முடியாதுஎன்றார். கடைசியாக ஒரு விரலைக் காட்டியது, சரிஎன்றார். தான் ஒன்றும் செய்ய முடியாததைக் கண்டு,கால புருஷன் அந்த உருவத்தினின்றும் மறைந்தான். அந்தத் தானத்தில் அடங்கிய சகல ஐசுவர்யங்களையும்அந்தப் பிராமணர் வாங்கிக் கொண்டார். மூன்றுவிரல்கள், மூன்று வேளைகளில் செய்யப்படும்ஸந்த்யா வந்தனத்தின் பலன். இரண்டு விரல்கள்,காலை மாலை இருவேளைகளின் ஸந்த்யாவந்தனபலன். ஒருவிரல், ஒருவேளை, அதாவதுமாத்யாந்நிகத்தின் பலன் என்பது காலபுருஷன் உருவம்கேட்ட கேள்விகளின் அர்த்தம். ஸந்த்யா வந்தனத்தின் ஒருவேளையின் பலனைக்கொடுத்ததன் மூலமும், ஐசுவர்யத்தைத் தானம்வாங்கியதன் மூலமும் பிராம்மணருக்குப் பாபம்சம்பவித்துவிட்டது. அந்தப் பாபத்தைப்போக்கிக்கொள்ள வேண்டிய வழியைத்தெரிந்துகொள்ள அகத்திய முனிவர் தவம்செய்துகொண்டிருப்பதாகச் சொல்லப்படும்மலைச்சாரலுக்குச் சென்றார். போகும் முன்,தம்மிடமிருந்த தனத்தைப் பாது காக்கும்படி, கோவில்பூஜை செய்து வந்த ஒரு குருக்களிடம் ஒப்படைத்தார்.எங்கே சென்றாலும் அகத்திய முனிவர் காணப்படவில்லை. முனிவரைக் காணாமையால்,அவர் ஏக்கமுற்றிருக்கும் சமயத்தில், அகத்தியமுனிவர் ஓர் கிழ வடிவத்துடன் பிராம்மணர் முன்தோன்றினார். அவரிடத்தில், பிராமணர் இக்கதையைச்சொன்னார். அந்தக் கிழவர், நீ போகின்ற வழியில் ஒரு பசுமாடு உமக்குத் தென்படும். அந்த இடத்திலிருந்து நீஒரு கால்வாய் வெட்ட ஆரம்பிக்க வேண்டும். பசுமாடுஎவ்வளவு தூரம் சென்று நிற்கின்றதோ அவ்வளவுதூரத்திற்குக் கால்வாய் வெட்ட வேண்டும். நடுவில் பசுமாடு எந்த இடங்களில் சாணி போட்டுமூத்திரம் பெய்கிறதோ அந்த அந்த இடங்களில்,சாணிபோட்ட இடத்தில் மடை அமைக்கவும், மூத்திரம்பெய்யும் இடத்தில் வாய்க்கால் வெட்ட வேண்டும்.இவ்விதம் செய்தால் உமக்கு ஏற்பட்டிருக்கும் பாபம் போய்விடும் என்று கிழவர் சொன்னார். கன்னடியர்அவ்விதமே செய்யத் தீர்மானித்துக் கொண்டு,திரவியத்தைத் திரும்ப வாங்குவதற்காக குருக்களிடம்சென்றார். குருக்களுக்குப் பிராமணர் கொடுத்த தனத்தின்மீதுமோகம் ஏற்பட்டுவிட்டது. அந்தக் காலத்து பவுன் இளம்துவரம் பருப்பை ஒத்திருக்குமாதலால், குருக்கள்பிராமணரிடம் துவரம் பருப்புகளைக் கொடுத்து, “நீர்கொடுத்த திரவியம் இதுதான், எடுத்துக் கொள்ளும்”என்றார். குருக்களின் வஞ்சகச் செயலைஅறிந்துகொண்ட பிராமணர், “நான் கொடுத்ததுஇதுவல்ல, நான் கொடுத்ததைக் கொடுங்கள்” என்றுமிகவும் பிரார்த்தித்துக் கேட்டுக்கொண்டார். எந்தப்பயனும் ஏற்படவில்லை. ஆகவே, ராஜாவிடம் சென்றுமுறையிட்டுக்கொண்டார். குருக்களும்தருவிக்கப்பட்டார். ஆனால் குருக்கள் குற்றத்தைஒப்புக்கொள்ளவில்லை. ஆகவே குருக்கள் பூஜைசெய்யும் லிங்கத்தைக் கட்டிக்கொண்டு பிரமாணம்செய்தால் நான் ஒப்புக்கொள்கிறேன் என்று பிராமணர் கூறினார். அவ்விதம் செய்வதாகக் குருக்களும்சம்மதித்துவிட்டார். குருக்கள் ஆபிசாரப் பிரயோகத்தில் தேர்ந்தவரானதால்,லிங்கத்திலுள்ள ஸ்வாமியைப் பக்கத்திலுள்ள ஒருமரத்தில் ஆகர்ஷனம் செய்துவிட்டார். இதை ஸ்வாமி,பிராமணரின் சொப்பனத்தில் தோன்றி, நடந்ததைச்சொல்லிவிட்டார். பிராமணர் மறுபடியும் ராஜாவிடம் சென்று “குருக்கள் மரத்தைக் கட்டிக்கொண்டுபிராமணர் செய்யும்படிச் செய்ய வேணுமாகக்கேட்டுக்கொண்டார்”. குருக்கள் மறுப்பளித்தார்…. Read More ›

Guruprasadam and Sahasra Gayathri

  மகா பெரியவாளுடன் பல இடங்களுக்கும் போய் வந்திருக்கிறார் பட்டாபி சார். பெரியவருக்கு ஆசை ஆசையாகப் பணிவிடைகள் செய்திருக்கிறார். அது காஞ்சி மடத்திலாக இருக்கும்; அல்லது, யாத்திரை போன இடத்திலாக இருக்கும். ”பெரியவாளோட குரு மகாதேவேந்திர சரஸ்வதி சுவாமிகள் ஆராதனை ஷஹாபாத் நகரில், நதிக்கரையில் நடந்தது. அந்த ஆராதனையை குரு ஆராதனைன்னு சொல்லுவா. அந்த நதியிலே… Read More ›

உபதேசத்தால் ஜனங்களை மாற்ற முடியுமா ! !

உபந்நியாசம் பண்ணுகிறோம். இன்னும் பல தினுசுகளில் தத்துவங்களை, தர்மங்களைப் பிரசாரம் பண்ணுகிறோம். ஆனால் இவற்றாலேல்லாம் தற்காலிகமான ஓர் உற்சாகம் தான் ஏற்படுமே ஒழிய, ஸ்திரமான மாறுபாடு நடக்காது என்பதுதான் என் அபிப்பிராயம். உபந்நியாசத்தினாலே ஏதோ கொஞ்சம் மாறுதல் சில ஜனங்களின் மனசில் ஏற்பட்டிருந்தால், அதுகூடப் போகப் போகத் தேய்ந்துதான் போகலாமேயொழிய வளருவதற்கில்லை. வெறும் உபந்நியாசம் என்று… Read More ›

Snanams

காஞ்சி மகாபெரியவர் சாஸ்திரத்தில் 5 வகை ஸ்நானங்கள் பற்றி சொல்லப் பட்டிருக்கிறது. ஸ்நானம் என்றவுடன் நாம் தினமும் செய்கிறதான ஜலத்தில் குளிப்பது… இது, ‘வாருணம்’ என்று அழைக்கப்படுகிறது. இந்த வாருணம் என்பதும் குளம், ஆறு போன்றவற்றில் முங்கிக் குளித்தலே! இதுவே முக்கிய ஸ்நானம். மற்றபடி பாத்திரம் போன்றவற்றால் நீரை எடுத்து விட்டுக் கொள்வது போன்றவை, இரண்டாம்பட்சம்தான்…. Read More ›

Thirumayam

தினம் தினம் திருநாளே! ஜயேந்திர ஸரஸ்வதி ஸ்வாமிகள் மடத்துக்கு வந்து சேர்ந்த புதிது. ஒரு முறை, காஞ்சி பரமாச் சார்ய ஸ்வாமிகளும், ஜயேந்திரரும் புதுக்கோட்டையை அடுத்துள்ள இளையாற்றங்குடி எனும் கிராமத்தில் தங்கியிருந்தனர். பரமாச்சார்யாளின் பூஜைக்குத் தேவையான அனைத்து கைங்கர்யங்களையும் ஜயேந்திரரே செய்வது வழக்கம். ஜயேந்திரருக்கு நியாய சாஸ்திரம் விஷயமாகச் சொல்வதற்கு ஆந்திராவில் இருந்து மாண்டரீக வேங்கடேச… Read More ›