श्रीशिवानन्दलहरी -०१ – ஶ்ரீஶிவாநந்த³லஹரீ -01 – Sri Sivaanandalahari-01 –

எந்நாட்டாரும் அறிவு தேவபக்தி முதலானவைகளில் முதிர்வதற்கு முன்னரே முதிர்ந்து, புறமத முதலியவற்றால் எது நேரிடினும், தேவபக்தியில் குறைவுபடாது நிலைநிற்கின்ற பக்த சிரோமணிகள் எண்ணிலாரையுடைய நம் இந்து தேசத்தில், அவதாரபுருஷர்களாகிய மஹான்கள் அஞ்ஞானத்தாழ்ந்த உலகினர்க்கு ஒளிதரும் விளக்காய் வாழ்ந்து உபதேசித்து, நீங்குங்கால், அன்பினால் அளித்துச்சென்ற ஸ்தோத்திர நூல்கள் பாஷைதோறும் பல இருக்கின்றன.
ஸ்ரீமத் ஆதிசங்கராச்சாரியரவர்கள் இவ்வவனியின்கண் அமர்ந்து அஞ்ஞானத்தை நீக்கு நாளில், எவற்கும், எக்காலத்தும் பக்திரஸத்தை யூட்டுமாறு செய்தருளியதும், சொற்சுவை , பொருட்சுவை, கற்பனை, அலங்காரம், சிறந்தபாவம் முதலிய நிறைந்ததும், பக்தி ரஸம் சொட்டுவதும், படித்துப்பாடிப் பரமசிவனை பணிவார்க்கு, அவரது அன்பும் அருளும் விளைக்கவல்லதுமாகிய திவ்விய வாக்கினையுடைய ஶிவானந்தலஹரீ என்னும் இந்த ஸ்தோத்திர நூல் பற்றி தொடர்ச்சியாக இந்நன்நாளிலிருந்து சிந்திக்கவுள்ளோம் .

இந்நாள், (மார்கசீர்ஷ-க்ருஷ்ண-துவாதசி) ஸ்ரீமத் ஆதிசங்கரரின் அம்ஸாவதாரமாகவே அவதரித்து, நூறு ஆண்டுகள் நம்மிடையே வாழ்ந்து, பாரதம் முழுதும் பாதயாத்திரை சென்று, பல லக்ஷம் பக்தகோடிகளுக்குத் தன் சாக்ஷுஷ வீக்ஷணத்தாலேயே (கடைக்கண் பார்வையால்) அருள் புரிந்து, பல துராசாரங்களை நிவர்த்தித்து, அழிந்துவிடும் தருவாயில் இருந்த பல வேத சாகைகளை மீண்டும் மலர்விட்டுத் துளிரும்படிச் செய்து, இன்றும் நமக்கு ஆச்ரயிக்க ஒளிவிளக்காய் நின்றொளிரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவாளின் 31-வது ஆராதனை தினத்தில், சுப அனுராதா நக்ஷத்ரம் கூடியிருக்க, ஸ்ரீசிவானந்தலஹரீ தொடர் விளக்கத்தைத் துவங்குவோம். ஸ்ரீஆதிசங்கரரால் இயற்றப்பட்ட இந்நூலை பல்வேறு கோணங்களில் நாம் சிந்திப்பது, ஸ்ரீமஹாபெரியவாளுக்கு மிகவும் பரீத்திகரமான இருக்கும் என்பதோடல்லாமல், நமக்கும் ஆத்மத்ருப்தியைக் கொடுத்து, நாமும் சிவாநுக்கிரஹத்திற்குப் பாத்திரம் ஆவோம் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.

பல சந்தர்ப்பங்களில் சிவானந்தலஹரீ ஸ்தோத்திரங்கள் இந்த blog-ல் வந்திருந்தாலும், தொடர்ச்சியாக , ஆரம்ப முதல் இறுதிவரை உள்ள நூறு ஸ்லோகங்களுக்கும், பதவுரை, அவதாரிகை, தாத்பர்யம், தெளிவுரை, கருத்துரை போன்றவை வெளிவராததால், இந்த முயற்சி ஒரு நன்முயற்சியே. நன்கு கற்றறிந்த வித்வான்களால் விளக்கப்பட்டு, தனித்தனியாகப் பிரசுரிக்கப்பட்ட புஸ்தகங்களிலிருந்து ஒவ்வொரு உரையும் தொகுக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடரில், சிவானந்தலஹரியின் ஸம்ஸ்க்ருத டீகா (ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி மடம், வாரணாசி – 1991), பதவுரை (K.ஜெகதீச ஐயர் -1935), தாத்பர்யம் (பு.ப.மாசிலாமணி முதலியார் – 1941), தெளிவுரை (ஸாஹித்ய சிரோமணி S.V.பரமேஸ்வரன் – 1976), கருத்துரை (“ஹிதபாஷிணி” ஆசிரியர் மீமாம்ஸா-சாஹித்ய சிரோமணி-விசாரத ப்ரஹ்மஸ்ரீ R.முத்துகிருஷ்ண சாஸ்திரிகள்), English explanation by Swami Tapasyananda (Sri Ramakrishna Mutt, 1985), ஹிந்தி – ஸ்வாமி ஸ்வயம்பிரகாசகிரி – ஸ்ரீதக்ஷிணாமூர்த்தி மடம், வாரணாசி) அவர்களின் நூல்களிலிருந்து தொகுக்கப்பட்டுள்ளன. ஆடியோ – Dr. M.பாலமுரளிகிருஷ்ணாவின் தேனிசைக்குரல்.

மேற்சொன்ன மஹான்களுக்கும், இந்த ஸ்தோத்திரத்தை நமக்கு உபதேசித்த கும்பகோணம் நித்யாக்னிஹோத்ரி ஸ்ரீ லக்ஷ்மிவெங்கடரமண தீக்ஷிதர் அவர்களுக்கும் நமஸ்காரங்கள். ஆச்சார்ய க்ருபை.


श्रीगुरुपादुकावन्दनम्

ऐंकार​-ह्रींकार – रहस्ययुक्‍त​
श्रींकारगूढार्थ महाविभूत्या।
ओंकारमर्म​-प्रतिपादिनीभ्यां
नमो नमः श्रीगुरुपादुकाभ्याम्॥

ஶ்ரீகு³ருபாது³காவந்த³னம்

ஐங்கார ஹ்ரீங்கார ரஹஸ்ய யுக்த
ஶ்ரீங்கார கூ³டா⁴ர்த²மஹாவிபூ⁴த்யா ॥ 1॥
ஓங்கார மர்ம ப்ரதிபாதி³நீப்⁴யாம்
நமோ நம: ஶ்ரீ கு³ருபாது³காப்⁴யாம் ॥ 2॥


श्रीशिवानन्दलहरी

कलाभ्यां चूडालङ्कृतशशिकलाभ्यां निजतपः-
फलाभ्यां भक्तेषु प्रकटितफलाभ्यां भवतु मे ।
शिवाभ्यामस्तोकत्रिभुवनशिवाभ्यां हृदि पुन-
र्भवाभ्यामानन्दस्फुरदनुभवाभ्यां नतिरियम् ॥ १ ॥

ஶ்ரீஶிவாநந்த³லஹரீ

கலாப்⁴யாம்ʼ, சூடா³லங்க்ருʼத ஶஶிகலாப்⁴யாம்ʼ, நிஜதப꞉ ᳲ –
ப²லாப்⁴யாம்ʼ, ப⁴க்தேஷு ப்ரகடித-ப²லாப்⁴யாம்ʼ- ப⁴வது மே ।
ஶிவாப்⁴யா-மஸ்தோக-த்ரிபு⁴வந-ஶிவாப்⁴யாம்ʼ, ஹ்ருʼதி³ புநர்-
ப⁴வாப்⁴யா-மாநந்த³-ஸ்பு²ர-த³நுப⁴வாப்⁴யாம்ʼ- நதிரியம் ॥ (1)


चित्रं वट तरोर्मूले वृद्धाः शिष्या गुरुर्युवा ।

गुरोस्तु मौनं व्याख्यानं शिष्यास्तु च्छिन्नसंशयाः ॥

 

अथ तत्र भवान्‌ परमकारुणिकः श्रीशंकराचार्यः परमेश्वरप्रणतिमहिम्ना सकलार्थसिद्धिमधिगत्य स्वयं भवं तर्तुम्‌, अन्यांश्च तारयितुं परमेश्वरं स्तोतुमारभमाणः अविघ्नेन ग्रन्थपरिसमाप्तये शिवयोर्नमनरूपं मङ्गलमाचरति – कलाभ्यामितिमे मम इयम्‌ असौ  नतिः प्रणामः शिवाभ्याम्‌, शिवा च शिवश्च शिवौ ताभ्याम्‌, “पुमान्‌ स्त्रिये’ त्येकशेषः पार्वतीपरमेश्वराभ्यां  भवतु अस्तु। नमस्कार्ययगुणान्‌ प्रकटयितुमाह- कलाभ्यामित्यादिकलाभ्यां श्रुतिप्रसिद्धसकलविद्यास्वरूपाभ्यां चूडालङ्कृतशशिकलाभ्यां चूडाभ्यां शिखाभ्याम्‌ अलंकृते मण्डिते शशिकले चन्द्रकले ययोस्ताभ्यां शशिकलातिशायिचूडाविशिष्टाभ्यामित्यर्थः। निजतपःफलाभ्यां निजे आत्मीये ये तपसी ये निराहारादि तदेकनिष्ठाद्युग्रवते तयोः फलाभ्यां फलभूताभ्यां परस्परतपःफलभूताभ्यामित्यर्थः। भक्तेषु स्वभक्तेषु प्रकटितफलाभ्यां प्रकटिते प्रकाशिते फले धर्मादिफलदाने याभ्यां ताभ्यां परहस्तप्रकटितसर्वफलदानाभ्यामिति यावत्‌। अस्तोकत्रिभुवनशिवाभ्याम्  अस्तोकम्‌ अनल्पं त्रिभुवनस्य त्रयाणां भुवनानां समाहारस्त्रिभुवनम्‌, तस्य शिवं भद्रं याभ्यां ताभ्याम्‌ अनल्पत्रिभुवनभद्रहेतुभ्यामित्यर्थः । हृदि मनसि पुनर्भवाभ्यां पौनः पुन्येन प्रतिध्यानं जायमानाभ्यां, यदा यदा ध्यायति तदा तदा नवनवोन्मेषणेनोत्पद्येते इति यावत्‌ । ‘सद्योजातं प्रपद्यामी’ति श्रुतेः। आनन्दस्फुरदनुभवाभ्याम्‌ आनन्देन साकं स्फुरन्‌ अनुभवः स्वरूपबोधः ययोस्ताभ्याम्‌ । एतैः कलाभ्यामित्यादि विशेषणैर्नमस्कार्यवस्तुनोर्वैशिष्ट्यं  प्रतिपाद्यते || १||


कलाभ्याम् – வேதம் முதலான சகல வித்யாஸ்வரூபர்களாகவும்

चूडालंकृतशशिकलाभ्याम् – ஜடையில் சந்திரனது கலைகளைத்தரித்திருப்பவர்களாகவும்

निजतपःफलाभ्याम् – நிஜமான வகையில் தவம் செய்வோர்களாகவும் (ஸ்ரீ பார்வதி  அல்லது பரமசிவன் இவர்களில் யாதொருவரை நோக்கி தவம் செய்தாலும் மற்றவரும் அத்தவத்தின் பயனைத் தருபவர்கள்)

भक्तेषु – தம்பக்தர்களுக்கு

प्रकटितफलाभ्याम् – ப்ரகடனம் செய்யப்பட்ட​ தர்மாதிபலன்களை கொடுப்பவர்களாகவும்

अस्तोक त्रिभुवन शिवाभ्याम् – திரிபுவனங்களுக்கும் சர்வமங்கள​த்தைச் செய்பவர்களாகவும்

हृदि – (பக்தர்கள்) மனதில்

पुनर्भवाभ्याम् – எந்தெந்த விதமாய் தியானிக்கிறார்களோ அந்ததந்த விதமாக தோன்றுபவர்களாகவும்

आनन्दस्फुरदनुभवाभ्याम् – அவ்வாறு தியானிப்போர்க்கு கொடுத்துங்குறையாத ஆனந்த மேலீட்டை அளிப்பவர்களாகவும் இருக்கின்ற

शिवाभ्याम् – பார்வதி பரமேச்வரர்களின் பொருட்டு

मे – என்னுடைய

इयं नतिः – இந்த நமஸ்காரம்

भवतु – இருக்கட்டும்.


நான்மறையாதி சகல கலைகளின் வடிவினராயும்,  கங்கை யணிந்த சடைமுடியில் அழகிய மூன்றாம்பிறைச் சந்திரனை யணிந்தவராயும்,  கச்சணிந்த உமையவளுக்கு அபேதராயும், (வேறாக நின்று) அவள் தவத்திற்கேற்பத் தக்கப்பயனளித்தும், என்றால்,  (சிவபெருமான் சக்திக்கு அருளியும்,  சக்தி சிவபெருமானுக்கருளியும்) அடியார்க்கு வேண்டிய இகபரபோகமளிப்பதில் கருத்தறிந்து ஈயும் காமதேனுவை ஒத்தவராயும்,  மண் விண் பாதாளமென்னும் மூவுலகத்து உயிர்கட்கும் அவரவர் வினைக்கேற்பப் பயன்தந்து,  இருவினையொப்பு மலபரிபாகம் சத்திநிபாதம் இவற்றையடையச்செய்து அந்தமில் மு(க்)த்தியின்பத்தையும் அருள்பவராயுமுள்ள, பார்வதீபரமேச்வரர்களே!உங்களது பாதாரவிந்தங்களை அடியேன் பூரணபக்தியோடு மனமுருகித் துதித்து இயற்றப் புகுந்த இவ்வினிய பாமாலையை அங்கீகரித்து அருள்புரிவீராக !

மிகத்தெளிவாக – ச்ருதிவாக்யங்களால்‌ விளக்கப்பட்டு “ஈசான ஸர்வ வித்யானா” மென்று ஸர்வ வித்யைகளினுடைய வடிவமாய்‌ விளங்குகின்‌றவர்களும்‌ தம்‌ தம்‌ தலையில்‌ அலங்காரமாக சூடப்பட்ட மூன்றாம்‌ பிறை சந்திரனுடைய சோபையை தங்கள்‌ கேச ஜாலங்களின்‌ சோபையால்‌ மேலும்‌ சோபையையூட்டுகின்றவர்களும்,‌ ஒரு சமயம்‌ பரமசிவன்‌ பார்வதியை பார்யையாக அடைய விரும்பி ஆஹாராதிகளையொழித்து மிகக்கடினமாகத்‌ தபஸ்‌ புரிந்தார்‌. அது போலவே பார்வதி தேவியும்‌ பரமசிவனைப்‌ பர்த்தாவாக அடைய விரும்பி பல கடின வ்ரதங்களை அனுஷ்டித்து தவம்‌ புரிந்து ஒருவருக்கொருவர்‌ செய்த தபஸின்‌ பலனாக தம்பதிகளாக ஆனவர்களும்‌, பார்வதீ பரமேச்வரர்களை “பக்தி செய்கின்ற பக்தர்களுக்கு அருள்பாலித்து தங்கள்‌ மஹிமைகளை பக்தர்களின்‌ மூலமாகவே வெளிப்படுத்‌துகின்றவர்களும்‌ மூன்று லோகத்து ஜீவராசிகளுக்கும்‌ அவரவர்களுடைய கர்மபலனை யொத்து அகேகவிதமான நன்‌மைகளை செய்‌கின்றவர்களும்‌ ஸத்யோஜாதம்‌ ப்ரபத்யாமி என்று வேதங்களில்‌ கூறியபடி பக்தர்கள்‌ எப்பொழுதெல்லாம்‌ த்யானம்‌ செய்கிறார்களோ அப்பொழுதெல்லாம்‌ புதிது புதிதாகத்‌ தோன்றுகின்‌றவர்களாயும்‌ சிவானந்த வெள்ளத்தில்‌ தூய்த்‌து ப்ரகாசிக்கின்ற ஞானமே வடிவாய்‌ அமர்ந்தவர்களுமான அந்த பார்வதீ பரமேச்வர்களுக்கு பூர்ண பக்தியுடன்‌ கூடின எனது இந்த நமஸ்காரம்‌ இருக்கட்டும்‌.

பரம கருணாமூர்த்தியான ஸ்ரீசங்கரபகவத் பாதாச்சார்ய ஸ்வாமிகள் ஸ்ரீபரமேச்வர ஆராதனை மஹிமையால் ஸகல வேத வேதாங்கங்களின் அர்த்தங்களையும் உணர்ந்து ஸ்வயம் ஜீவன் முக்தர்களாய் இருந்தபோதிலும் ஸம்ஸாரத்தில் உழன்று பரிதவிக்கும் மற்ற ஜீவராசிகளையும் உஜ்ஜீவிக்கும்படி செய்ய அவர்களுக்கும் பரமேச்வரனிடம் பக்தியுண்டு பண்ணுவதற்காக “சிவானந்தலஹரீ ”  என்ற இச்சிறந்த ஸ்தோத்திரத்தை இயற்றியுள்ளார்கள் .  இது எவ்வித இடையூறுமின்றி முடிவடைவதன் பொருட்டு மங்களஸ்வரூபிகளான ஸ்ரீபார்வதீ பரமேச்வரர்களின் நமஸ்கார ரூபமான மங்களத்தை இந்த முதல் ச்லோகத்தால் செய்கின்றார்கள்.

ச்ருதிகளில் ஸ்ரீபார்வதி பரமேச்வரர்கள் ஸகல வித்யாஸ்வரூபமாக கூறப்பட்டிருக்கிறார்கள் .  இந்த ஸ்தோத்ரரூபமான வித்யையும் அவர்களுடைய அருளால் மிகச்சிறந்து விளங்கவேண்டு மென்பதற்காக முதன் முதலில் வித்யாஸ்வரூபமாகவே அவர்களை போற்றுகின்றார் .

ஸ்ரீபார்வதி பரமேச்வரர்கள் இருவரும் சிரஸில் சந்த்ரகலையை தரித்துக்கொண்டிருக்கிறார்கள் .  சந்த்ர கலையால் சிரஸிற்கு சோபை என்று மற்றவர்களிடத்தில் கூறலாம் .  ஆனால் இவர்களிடத்தில் மட்டும் இவர்களுடைய கேசத்தால் தான் சந்த்ர கலைக்கு சோபை அதிகம் என்று குறிப்பிடுகிறார் .

ஸ்ரீபார்வதியை அடையவேண்டு மென்று ஸ்ரீபரமேச்வரனும் ,  ஸ்ரீபரமேச்வரனை பார்த்தாவாக அடையவேண்டு மென்று பார்வதியும் கடும்தவம்புரிந்து அதன் பயனாக ஒருவரை மற்றொருவர் பெற்றார் .

ஸ்ரீபார்வதீ பரமேச்வரர்களை அண்டியவர்கள் ஏராளமான பயனைப் பெறலாம் என்பதை அவர்கள் தானே வெளியிடுவதைவிட, அவ்விதபயன்களைப் பெற்ற பக்தர்கள் மூலம் வெளியிடுவதன்றோ விசேஷம் ! ஆதலால் அவ்விதமே அதை அவர்கள் வெளியிடுகிறார்கள் என கூறப்பட்டிருக்கிறது .

பொதுவாக உலகில் மங்களமென்றால் மங்களஸ்வரூபிகளான  ஸ்ரீபார்வதி பரமேச்வரர்களிட மிருந்தே உண்டாக வேண்டும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றார் .

இவ்வளவு மஹிமைபெற்ற சிறந்த தெய்வங்களை நாடுவது மிகசுலபம் என்பதை புகட்ட “த்யானம்” செய்யும் போதெல்லாம் மனதில் தோன்றுகின்றனர் என வர்ணிக்கப்படுகிறது .

உபநிஷத்துகளில் பரப்ரம்மத்தை ஸச்சிதானந்த ஸ்வரூபமாக வர்ணிக்கப் பட்டிருக்கின்றபடியால் அந்த பரப்ரம்மத்தின் ஸகுணரூபமான ஸ்ரீபார்வதி பரமேச்வரகர்களையும் ஸச்சிதானந்த ஸ்வரூபமாகவே இங்கும் போற்றுகிறார் .


कलाभ्याम्‌ = समस्त कलाओं के साररूप, चूडालङ्कृतशशिकलाग्याम्‌ = चन्द्रकला से
अलंकृत मस्तकवाले, निजतपःफलाभ्याम्‌ = एक दूसरे के तप के फलरूप, भक्तेषु = भक्तों पर ( कृपा
कर ) प्रकटितफलाभ्याम्‌ = फल देने वाले, अस्तोकत्रिभुवनशिवाभ्याम्‌ = समस्त त्रिभुवन का
कल्याण करने वाले, आनन्दस्फुरदनुभवाभ्याम्‌ = आनन्द के प्रकट अनुभवरूप्‌, पुनः = तथा, हृदि =
हृदय में, भवाभ्याम्‌ = होने वाले, शिवाभ्याम्‌ = शिव-शिवा के लिये, मे = मेरी, इयम्‌ = यह,
नतिः = प्रणति ( प्रणाम ), भवतु = हो ।

I make prostration to Siva and Parvati, who form the embodiment of all arts (fine and practical), whose matted crests are adorned with the crescent moon, who are to each other the mutual rewards obtained by their respective austerities, who bestow on aspirants liberation and other fruits of devotional life, who are the source of abounding good to the three worlds, who reveal themselves in forms of ever-renewing novelty with the progress of meditation, and whose experience generates supreme bliss in a mind contemplating on them.

Loading

6 Responses

  1. 🙏🏻👏om tat purushaya vidhmahe
    maha devaya dheemahi
    dhano rudra prachodayaat 🙏🏻👏

Leave a Reply

Discover more from Sage of Kanchi

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading