Author Archives

 • ப்ரமராதிபோ விஹரதாம் ஶ்ரீஶைலவாஸீ விபு:

  சிவானந்தலஹரில 51வது ஸ்லோகம், ஸம்ஸ்ருத கவிதையோட ஒரு உச்சமா இருக்கு. ஒரே பதத்திற்கு இரு பொருள் தரும் வார்த்தைகளை வைத்து விளையாடி “ஶ்ரீசைலவாஸியான மல்லிகார்ஜுன ஸ்வாமிக்கும், வண்டுக்கும்” ஸ்லேஷை பண்றார். ஒருவிதத்தில பார்த்தால் எல்லா பதங்களும் வண்டை குறிக்கிறது. இன்னொரு விதத்தில ஸ்வாமியை குறிக்கிறது. பொருளுரை இந்த இணைப்பில் –> சிவானந்தலஹரி 51வது ஸ்லோகம் பொருளுரை

 • படிப்பையும் பணத்தையும் கொண்டு பகவானை அடைய முடியாது

  சங்கர பகவத்பாதாள் ‘எனக்கு உன் பூஜைக்கு பலனா விஷ்ணுத்வம், ப்ரம்மத்வம் எல்லாம் கொடுத்து விடாதே’ என்று சொல்கிறார். ஏன்? இந்த இணைப்பில் கேட்கலாம் –> சிவானந்தலஹரி 23வது ஸ்லோகம் பொருளுரை

 • கும்பகோணம் அத்வைத ஸபை பொன் விழா நினைவு மாலை

  இந்த புத்தகம் அத்வைத சித்தாந்தத்தை பற்றி தமிழில் வெளிவந்த ஒரு பொக்கிஷம் என்று அட்டவணையைப் பார்த்தாலே தெரிகிறது. அதனால் உங்களோடு பகிர்கிறேன். கும்பகோணம் அத்வைத ஸபையின் பொன் விழாவிலே அத்வைதவுண்மை எல்லா அநுபவ நூல்களிலும் ஊடுருவியுள்ளதைத் தெளிந்தெடுத்தெழுதிச் சமர்ப்பித்த தமிழ்க் கட்டுரைகளின் தொகுதி. அட்டவணை மகாபெரியவா ஸ்ரீமுகம்‌ (தமிழ்‌ மொழி பெயர்ப்பு) அத்வைத ஸித்தாந்த வினாவிடை… Read More ›

 • குரு பூர்ணிமா 2020

  நாளை குரு பெளர்ணமி. வியாஸ பௌர்ணமி. இந்த நாளில் ஸந்யாசிகள், வேதத்தை தொகுத்து, தர்ம சாஸ்திரங்களையும் புராணங்களையும் அளித்த வியாஸ முனிவரையும், ரிஷி மண்டலத்தையும், குரு மண்டலத்தையும் தியானித்து, விஸ்தாரமாக பூஜை செய்வார்கள். ஒவ்வொருவரும் அப்படி வியாஸ பூஜை செய்யும் தம்முடைய சம்பிரதாயத்தை சேர்ந்த குரு பீடங்களை அலங்கரிக்கும் மகான்களை தரிசித்து, ஆசி பெறுவார்கள். மேலும்… Read More ›

 • பக்தி பண்ண என்ன தகுதி வேண்டும்?

  ஈச்வர பக்தி பண்ண க்ருஹஸ்தனாக இருக்க வேண்டுமா? சந்யாசி ஆக வேண்டுமா? யோகம், யாகம், ஜபம் எல்லாம் பண்ணத் தெரிய வேண்டுமா? ஏதாவது ஆஸ்ரமத்திலோ, காட்டிலோ போய் தங்க வேண்டுமா? ஆசார்யாள் என்ன சொல்கிறார்? –> சிவானந்தலஹரி 11, 12வது ஸ்லோகங்கள் பொருளுரை

 • சிவபெருமானுக்கு எதைத் தரவேண்டும்? அவரிடமிருந்து என்ன கிடைக்கும்?

  பரமேஸ்வரனுக்கு நாம் எதைக் கொடுத்தால் அவர் மகிழ்வார்? அவரிடமிருந்து நமக்கு என்ன கிடைக்கும்? சிவானந்த லஹரியில் ஆச்சார்யாள் இந்த கேள்விகளுக்கு விடை சொல்கிறார்–> சிவானந்தலஹரி 27, 28வது ஸ்லோகங்கள் பொருளுரை

 • நடராஜா நடராஜா நர்த்தன சுந்தர நடராஜா

  “ஆனித் திருமஞ்சனம் என்பது ஆனி மாதத்தில் வரும் உத்திர நட்சத்திரத்தன்று நடைபெறும் அபிஷேகம். நடராஜருக்கான ஆறு அபிஷேகங்களில் ஒன்று. எனவே, சிவாலயங்களில் இன்று தொடங்கி நாளை உத்திர நட்சத்திரம் முடியும் காலம் வரை ஏதேனும் ஒரு நேரத்தில் இந்த அபிஷேகத்தைச் செய்வது வழக்கம். ஆனால், சிதம்பரத்தில் ஒவ்வோர் ஆண்டும் அதிகாலை வேளையில் இந்த அபிஷேகத்தைச் செய்வது… Read More ›

 • பரமன் திருவடிகள் பயத்தை போக்கும்

  இன்று ஆனித்திருமஞ்சனம். சிதம்பரத்தில் நடராஜாவின் அபிஷேகத்தை இன்று காண்பது விசேஷம். குனித்த புருவமும், கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பும், பனித்த சடையும், பவளம் போல் மேனியில் பால் வெண் நீறும், இனித்தம் உடைய எடுத்த பொற்பாதமும் காணப் பெற்றால் மனித்தப் பிறவியும் வேண்டுவதே, இந்த மாநிலத்தே! என்று அப்பர் பெருமான் நடராஜாவின் தூக்கிய திருவடியை கண்டதால்… Read More ›

 • பக்தி என்கிற அம்மா; பக்தன் என்கிற குழந்தை

  சிவானந்த லஹரியில் பக்தியின் மூன்று பரிணாமங்களை பல உதாரணங்கள் மூலம் விவரித்து, பக்தி என்றால் என்ன என்று வரையறுத்து கூறிய ஆச்சார்யாள், அடுத்த ஸ்லோகத்தில் பக்தி எப்படி வளரும் என்று இன்னொரு உதாரணத்தின் மூலம் விளக்குகிறார். ஒரு அம்மா தன் குழந்தையை வளர்க்கும் போது செய்யும் உணவு ஊட்டுதல்,  குளிப்பாட்டுதல், ஆடை அணிவித்தல், தாலாட்டி தூங்கப்… Read More ›

 • ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு; Soundaraya lahari audio mp3

  சங்கர பகவத்பாதாள் அருளிய ஸ்தோத்திர ரத்னமான சௌந்தர்ய லஹரியை கற்றுக் கொள்ள வசதியாக, தெளிவான உச்சரிப்பும், அர்த்தத்தை அனுசரித்தும் அமைந்துள்ள ஒரு ஒலிப்பதிவை இந்த இணைப்பில் கேட்கலாம் –> ஸௌந்தர்ய லஹரி ஒலிப்பதிவு; Soundaraya lahari audio mp3 A good recording of Soundarya Lahari, (the sublime work of Adi Aacharya… Read More ›

 • மூகபஞ்சசதீ காமகோடி கோஷஸ்தானம் பதிப்பு

  மஹாபெரியவா காமகோடி கோஷஸ்தானத்தின் மூலம் 1944 ஆம் ஆண்டு தமிழில் பொருளுடன் வெளியிட்ட மூகபஞ்சசதீ ஸ்தோத்திரத்தின் நல்ல பிரதி இந்த இணைப்பில் இப்போது கிடைக்கிறது. 90 mb (a very good scanned copy of mooka pancha shathi published by Mahaperiyava in 1944 available in this link. Large file… Read More ›

 • கங்காவதரணம் ஒலிப்பதிவு மற்றும் பொருள்

  ராமாயணத்தில் விஸ்வாமித்திரர், ராம லக்ஷ்மணர்களுக்கு, பகீரதன் பெருந்தவம் செய்து, ஆகாச கங்கையை, பூமிக்கும், பின்னர் பாதாள லோகத்திற்கும் கொண்டு சென்றதைச் விரிவாகச் சொல்கிறார். வால்மீகி ராமாயணம் பால காண்டத்தில் 35வது ஸர்ககத்திலிருந்து 44வது ஸர்கம் வரையிலான இந்த பகுதியை கங்காவதரணம் என்று சொல்வார்கள். அமாவாசை மற்றும் சிராத்த தினங்களில் இந்த கங்காவதரணம் பாராயணம் செய்தால். கேட்டால்… Read More ›

 • சைவ சமய குரவர்கள் நால்வர் சரிதம்

  சைவ சமய குரவர்களான (குரு என்ற சம்ஸ்கிருத பதத்தின் பன்மை குரவ: அதைத்தான் தமிழில் குரவர்கள் (guravargal) என்று சொல்கிறோம். குறவர்கள் (kuravargal) என்று சொல்லிவிடக் கூடாது.) திருஞானசம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரும் சைவ சமயம் தழைக்க வந்த அவதார மகான்கள் ஆவர். மஹாபெரியவா தன்னுடைய உபன்யாசங்களில் நால்வர் அருளிய தேவார, திருவாசகத்தில்… Read More ›

 • ஸ்யமந்தகமணி உபாக்யானம்

  ஸ்ரீமத் பாகவதத்தில் ஸ்யமந்தக மணி உபாக்யானம் என்ற ஒரு பகுதி வருகிறது. மஹாபெரியவா தெய்வத்தின் குரல் நான்காம் பகுதியில், இந்த கதையை விஸ்தாரமாக சொல்லி இருக்கிறார்கள். விநாயக சதுர்த்தி அன்று இதை படிக்க வேண்டும் என்று சொல்லி இருக்கிறார்கள். ஸ்வாமிகளும் பாகவத பிரவசனத்தின் போது இந்த கதையை அழகாக சொல்வார்கள். அவற்றைக் கேட்டு, என் ஆசைக்கு… Read More ›

 • ஓஷதிபர்வதானயனம் பொருளுரை

  வால்மீகி ராமாயணம் யுத்த காண்டத்தில் 74வது ஸர்கம் ஓஷதிபர்வதானயனம். ஹனுமார் மூலிகை மலையை கொண்டு வந்து, இந்திரஜித் பிரயோகித்த பிரம்மாஸ்திரத்தால் உயிரிழந்தவர்களைப் போல மயக்கம் அடைந்த, ராம லக்ஷ்மணர்களையும் 67 கோடி வானர்களையும் உயிர்ப்பிக்கிறார். அந்த ஸர்கத்தை பாராயணம் செய்வதன் மூலம், ஜுரம் போன்ற உடல் உபாதைகளிலிருந்து விடுபடலாம். அந்த ஸர்கத்தின் பொருளை கேட்டாலே மனம்… Read More ›

 • கண்ணப்ப நாயனார் கதை

  ஆச்சார்யாள் பக்தி என்றால் என்ன என்று விளக்கிய பின், கண்ணப்பருடைய சரித்திரத்திலிருந்து சில நிகழ்ச்சிகளை கூறி, ‘இப்படி ஒரு அன்பை பார்க்க முடியுமா? ஒரு வேடன் பக்தர்களில் தலைசிறந்தவனாக ஆகிவிட்டானே’ என்று வியக்கிறார். மாணிக்கவாசகரும் ‘கண்ணப்பன் ஒப்பதோர் அன்பின்மை கண்டபின் என்னப்பன் என்னொப்பில் என்னையும்ஆட் கொண்டருளி வண்ணப் பணித்தென்னை “வா” என்ற வான் கருணை சுண்ணப்பொன்னீற்றற்கே… Read More ›

 • பக்தி என்றால் என்ன?

  தன்னுடைய வேதாந்த புத்தகங்கள் மூலம், உலகின் தன்னிகரற்ற ஞானச் சிகரமாக கொண்டாடப்படும் நம் ஆசார்யாள், தம்முடைய பக்தி கிரந்தங்களில், பலவித யுக்திகளை உபயோகப்படுத்தி , பாமரர்களும் புரிந்து கொள்ளும் வகையில் விஷயங்களை விளக்குகிறார். சிவானந்த லஹரியில் உபமா அலங்காரம் எனப்படும் உவமைகளைக் கொண்டு கருத்துக்களை தெளிவுபடுத்தும் யுக்தி நிறைய காணப்படுகிறது. பக்தி என்றால் என்ன என்ற… Read More ›

 • பெளமாஶ்வினி புண்யகாலம்

  சில நட்சத்திரங்களும் கிழமைகளும் சேரும் போது, அந்த நாட்கள் அமிர்த சித்தி யோக தினங்கள் என்று சொல்லப்படுகின்றன. அப்படிப்பட்ட விசேஷமான புண்ணிய தினங்களில் தெய்வங்களை பூஜித்தால் மிகுந்த பலன் கிடைக்கும். மேலே உள்ள காணொளியில் நம் ஆச்சார்யாள், வரும் ஜூன் 16ம் தேதி அஸ்வினி நட்சத்திரமும், செவ்வாய் கிழமையும் சேரும் பெளமாஶ்வினி என்ற புண்ணிய காலத்தை… Read More ›

 • எந்தையும் தாயும் மகிழ்ந்து குலாவி – மூன்றாம் பகுதி

  திருமணமாகி புகுந்த வீட்டிற்கு செல்லும் ஒரு பெண், அங்கே எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்பதையும், புது மாப்பிள்ளை பெண்ணை எப்படி பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதையும் ஒரு சிவானந்தலஹரி சுலோகத்தில் ஆச்சார்யாள் விளக்கி, அதுபோல ‘என் புத்தியாகிய கன்னிகையை பரமேஸ்வரா! உன்னிடம் ஒப்படைக்கிறேன். தேற்றி ஏற்றுக்கொள்’ என்று கூறுகிறார். அதன் பொருளைக் காண்போம் – >… Read More ›

 • பக்தி பண்ணுவதில் புத்தியின் பங்கு என்ன?

  பக்தி செய்வதற்கு புத்தி ஒரு தடையல்ல. ‘புத்தியை வாங்கி நின் பதாம்புயத்தில் புகட்டிக் அன்பால் முக்தியை வாங்க அறிகின்றிலேன்’ என்று அருணகிரிநாதர் பாடுகிறார். பக்தி மார்க்கத்தில் புத்தியை எப்படி, எது வரையில் உபயோகப்படுத்த வேண்டும் என்று கோவிந்த தாமோதர ஸ்வாமிகளின் வாழ்க்கையிலிருந்து நான் அறிந்து கொண்டதை இந்த சிவானந்தலஹரி பொருளுரை மூலமாக பகிர்கிறேன். சிவானந்தலஹரி 40வது… Read More ›