Thanks to Smt Ramya Iyer for FB share. My friend’s father-in-law once visited Chicago – he used to teach vedam etc. He told me once to read sundara kandam – knowing that we all are busy with work, travel etc, he said read at least 10 shlokas a day (not even a sarga). So I started reading few sargas per day – some are long – some are short ones. So i decide how many i wanted to read – i finished once round. Then after sevearl years i read again. Maybe i will start again. I encourage you all to read and receive the blessings of Anjaneya
1. ஒரே நாளில் சுந்தர காண்டம் முழுவதையும் படிப்பதன் பெருமையை ஆயிரம் நாக்குகள் படைத்த ஆதிசேஷனால் கூட விவரிக்க முடியாது என்று உமாசம்ஹிதையில் பரமேஸ்வரன் கூறியுள்ளார்.
2. காஞ்சி பெரியவர் ஸ்ரீ சந்திரசேகரேந்திர சுவாமிகளிடம் ஒரு சமயம் ஒருவர் வயிற்று வலியால் தான் மிகவும் கஷ்டப்படுவதாகவும், எந்த டாக்டராலும் அதை குணப்படுத்த இயலவில்லை என்றார். உடனே காஞ்சி பெரியவர் சுந்தரகாண்டத்தை தினமும் சாப்பிடும் முன் படி என்றார். அதன்படி அந்த நபர் பாராயணம் செய்து வர அவருக்கு வயிற்று வலி பறந்து போய் விட்டது.
3. சுந்தரகாண்டத்தில் உள்ள ஒவ்வொரு சர்க்கமும் மாபெரும் மந்திர சக்திகளுக்கு இணையானது என்று ஆன்மிக பெரியவர்கள் கூறியுள்ளனர்.
4. சுந்தரகாண்டத்தை நாம் எந்த அளவுக்கு படிக்கிறோமோ அந்த அளவுக்கு பகவானை நெருங்குகிறோம் என்று அர்த்தம்
5. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்து வந்தால் வாழ்க்கையில் உள்ள துக்கங்கள் முடிவுக்கு வந்து விடும்.
6. சுந்தரகாண்டம் வாசித்தால் வாழ்வு வளம் பெறும். கஷ்டங்கள் தொலைந்து போகும்.
7. சுந்தர காண்டத்தை தொடர்ந்து வாசித்து வந்தால், வாசிக்க, வாசிக்க மன வலிமை உண்டாகும்.
8. சுந்தரகாண்டத்தை முறைப்படி
வாசித்தால் காலதாமதமான திருமணம் விரைவில் கை கூடும். கவலைகள் மறந்து போய் விடும்.
9. சுந்தரகாண்டம் படித்து அனுமனை வழிபட்டு வந்தால் அறிவு, ஆற்றல், புகழ், குறிக்கோளை எட்டும் திறமை, துணிச்சல், ஆரோக்கியம், விழிப்புணர்வு, வாக்கு சாதூரியம் போன்றவற்றைப் பெறலாம்.
10. சுந்தரகாண்டத்தை மனம் உருகி படித்தால் பாவம் தீரும். முடியாத செயல்கள் முடிந்து விடும்.
11. ஆஞ்சநேயருக்கு வடை வெண்ணை வைத்து நெய்தீபம் ஏற்றி சுந்தரகாண்டம் படித்து வந்தால் குழந்தை பாக்கியம் உண்டாகும்.
12. ராம நவமியன்று விரதம் இருந்து ராமருக்கு துளசி மாலை அணிவித்து சுந்தரகாண்டம் படித்து வந்தால் வாழ்வில் அமைதி பெறலாம்.
13. ராமனுடன் மறுபடியும் வாழ முடியும் என்ற நம்பிக்கையை சீதைக்கு கொடுத்து சுந்தரகாண்டம்தான். எனவேதான் கருவுற்ற தாய்மார்கள் சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்கிறார்கள்.
14. ஏழரை சனி, அஷ்டமத்து சனி திசை நடப்பவர்கள் தினமும் சுந்தரகாண்டம் படித்து வந்தால் துன்பங்களில் இருந்து விடுபடலாம்.
15. சுந்தரகாண்டத்தில் அனுமன் கடலைத் தாண்டுவதற்கு முன்பு சொன்ன ஸ்லோகத்துக்கு “ஜெய பஞ்சகம்” என்று பெயர். இதை சொல்லி வந்தால் வீட்டில் செல்வம் பெருகும்.
16. சுந்தரகாண்டத்தில் அனுமன் சீதையை கண்டுபிடிக்க அசோக வனத்துக்கு செல்லும் முன்பு கூறிய ஸ்லோகத்தை கூறி வந்தால் வெற்றி மீது வெற்றி உண்டாகும்.
17. சுந்தரகாண்டத்தை நீண்ட நாட்களாக பாராயணம் செய்பவர்களை விட்டு நவக்கிரக தோஷங்கள் முற்றிலும் அகலும்.
18. சுந்தரகாண்டம் என்று பெயர் சொல்லுவார். இதை சுகம் தரும் சொர்க்கம் என்பார்கள்.
19. சுந்தர காண்டம் படிப்பதன் மூலம் வேதம் சொல்லிய புண்ணியத்தை பெண்கள் பெற முடியும்.
20. ராமாயணத்தில் மொத்தம் 24 ஆயிரம் சுலோகங்கள் உள்ளன. இதில் 2885 சுலோகங்கள் சுந்தரகாண்டத்தில் இருக்கிறது.
21. சுந்தரகாண்டத்தை எவர் ஒருவர் ஆழமாக படிக்கிறாரோ, அவருக்கு தனது உண்மையான சொரூபத்தை உணரும் ஆற்றல் கிடைக்கும்.
22. சுந்தரகாண்ட பாராயணம் நமது ஊழ்வினையால் ஏற்படும் நிம்மதி சீர்குலைவை சரி செய்து விடும்.
23. சுந்தரகாண்டத்தை நேரம் கிடைக்கும் போதெல்லாம் படித்தால் மனம் லேசாகி விடும்.
24. சுந்தரகாண்டத்தில் 42-ம் சர்க்கத்தில் 33-வது ஸ்லோகம் முதல் 37-வது ஸ்லோகம் வரை உள்ள ஸ்ரீஜெயபஞ்சகம் ஸ்லோகத்தை பாராயணம் செய்வதால் உடனே திருமணம் கைகூடும்.
25. ராமநவமியன்று ராகவேந்திர சுவாமிகள் இயற்றிய சுந்தரகாண்ட சுலோகம் கூறினால் மன தைரியம் உண்டாகும்.
26. ஒரு பெண் கருத்தரித்த நாள் முதல் 9 மாதம் வரை நாள் தவறாமல் சுந்தரகாண்டம் படித்து வந்தால் சுகப் பிரசவம் உண்டாகி குழந்தை ஆரோக்கியத்துடன் பிறக்கும் என்பது ஐதீகம்.
27. கர்ப்பிணிகள் குறைந்த பட்சம் 5-வது மாதத்தில் இருந்து சுந்தரகாண்டம் படித்து வந்தால், பிறக்கும் குழந்தை ஆன்மிக சிந்தனை உள்ள குழந்தையாக பிறக்கும்.
28. சுந்தரகாண்டத்தை ஆத்மார்த்தமாக படித்தால்தான் அதன் முழு பலனும் கிடைக்கும்.
29. சுந்தரகாண்டம் மிகவும் வலிமையானது. அதை வாசிப்பவர்களுக்கும் வலிமை தரக்கூடியது.
30. சுந்தரகாண்டம் படிக்கும் நாட்களில் உறுதியாக அசைவ உணவுகளை தவிர்க்க வேண்டும். வீட்டிலும் அசைவ உணவு தயாரிக்கக் கூடாது.
31. சுந்தரகாண்டத்தில் காயத்திரி மந்திரத்தின் அளவற்ற சக்தி உள்ளதாக கருதப்படுகிறது.
32. சுந்தரகாண்டம் படிக்க தொடங்கும் மன்பு முதலில் ராமாயணத்தை ஒரே நாளில் படித்து விட வேண்டும். அதன் பிறகு சுந்தரகாண்டம் படிக்க வேண்டும் என்பது ஐதீகம். (ராமாயணத்தை முழுமையாக படிப்பதா? அதுவும் ஒரே நாளில்… என்று நினைக்கவேண்டாம். அதற்க்கு ஒரு எளிய வழி இருக்கிறது. அடுத்த பதிவில் அது பற்றி சொல்கிறோம்.)
33. பூஜை அறையில் விளக்கு ஏற்றி வைத்து, அந்த அறை முன்பு அமர்ந்து சுந்தரகாண்டம் படிப்பது மிகவும் நல்லது.
34. சுந்தரகாண்டத்தை காலை, மாலை இரு நேரமும் படிக்கலாம்.
35. சுந்தரகாண்டத்தை படிக்கத் தொடங்கினால் ஒருநாள் கூட இடைவெளி விடாமல் படிக்க வேண்டும்.
36. பெண்கள் வீட்டுக்கு தூரமாக இருக்கும் நாட்களில் சுந்தரகாண்டம் படிக்கக் கூடாது.
37. சுந்தரகாண்டத்தின் ஒவ்வொரு சர்க்கத்துக்கும் ஒவ்வொரு பலன் உண்டு. அதை அறிந்து படித்தால் மிக எளிதாக பலன் பெறலாம்.
38. சுந்தரகாண்டத்தை முழுமையாக படித்து முடித்ததும் ஆஞ்சநேயரை வழிபட்டு, ஏழைகளுக்கு உதவி செய்தால் அளவில்லா புண்ணியம் கிடைக்கும்.
39. வசதி, வாய்ப்புள்ளவர்கள் சுந்தர காண்டம் படிக்கும் நாட்களில் ஆஞ்ச நேயருக்கு பிடித்த நைவேத்தியங்களை படைத்து பயன்பெறலாம்.
40. சுந்தரகாண்டம் புத்தகத்தின் பதினோரு பிரதிகள் வாங்கி பதினோரு பேருக்கு படிக்க கொடுத்தால் யாகம் செய்ததற்கான பலன்கள் கிடைக்கும்.
ஸ்ரீ ராமாயணம் கேட்க அனுமனும் வருவார்
ஸ்ரீ ராமாயண சொற்பொழிவு நடைபெறும் இடங்களில் எல்லாம் அனுமன் நேரில் வந்து அடியார்களுள் அடியாராய் பக்தருள் பக்தராய் அமர்ந்து உபந்நியாசத்தை பேரானந்தத்துடன் ரசித்து அனைவருக்கும் சகல சந்தோஷங்களையும் சுபிட்சங்களையும் வாரி வழங்கி பேரருள் புரிகிறார்
இதானால் துளசிதாசர் ஸ்ரீ ராமாயண பிரவசனம் தொடங்கும் முன்னர் பக்தர்களை பிரதட்சதனமாக வருவார் .அந்த பக்தர்களுடன் பக்தராக மாருதியும் எழுந்தருளிருப்பார் என்பது அவருக்குத் தெரியும் .
துன்பம் வருவது இன்பத்திற்கே
கஷ்டங்கள் வந்து மனம் குழம்பும் போது நாமும் கடவுளை நினைக்கிறோம் அப்போது நம்முடைய மனமும் கடவுள் என்னுடைய கோரிக்கைக்கு செவி சாயப்பாரா ? அவர் என்மீது அன்பு காட்டுவாரா என்னுடைய பக்தியை அவர் ஏற்றுகொள்வாரா ?’ என்றெல்லாம் எண்ணி கவலைப்படுகிறோம்.
ஒரு சந்தர்ப்பத்தில் இதோ குழப்பமான மனநிலை அனுமனுக்கும் வந்தது .
பலவானும் ,பராக்கிரமசாளியும் , மிகுந்த தன்னம்பிக்கையும் கொண்ட ஆஞ்சநேயரே இலங்கையில் சீதையைத் தேடித் தேடி காணாமல் மனம் துவண்டு கிஷ்கிந்தை செல்வதைவிட அங்கேயே உயிரை விட்டு விடும் மனநிலைக்கு வந்து விடுகிறார் .
பிறகு ஆலோசித்து ஒரு வேலை சீதாப்பிராட்டி உயிருடனிருந்து , அவர்களுக்கும் இதே மனநிலை யில் இருந்தால், அதைத் தடுப்பதற்காகவாது நான் உயிருடன் இருந்தேயாக வேண்டும் என்று நினைத்து தன் முடிவை மாற்றிக் கொள்கிறார் .
நம்பிக்கையுடன் இருப்பவர்களுக்கு தெய்வம் எப்படியாவது வழிகாட்டிவிடும் .
சகல தெய்வங்களும் தன் கார்யம் கைகூட ஆசீர்வதிக்கட்டும் என்று பிரார்த்தித்துக் கொண்டு நாலாபுறமும் தேடினார் .
அனுமனின் கண்களில் கடைசியில் அசோகவனம் தென்பட்டது.அன்னையைக் கண்டார். ஆனந்தம் கொண்டார் . ராமர் அனுப்பிய மோதிரத்தைப் பார்த்ததும் ,தேவிக்கு மகிழ்ச்சியும் ,மனநிறைவும் உண்டாகிறது .
“என்னுடைய ஸ்வாமி எப்படிருக்கிறார் ? அவரை என்னால் திரும்ப அடைய முடியுமா ?”
என்றெல்லாம் பலவாறு கேள்விகள் கேட்ட சீதையை அனுமன் சமாதானப்படுத்துகிறார் .
காத்திருந்தால் நிச்சயம் நல்ல காலம் பிறக்கும் .சோதனைகள் அதிகமாக ஆக வேதனைகள் தீரும் காலம் நெருங்கிவிட்டது என்ற நம்பிக்கை கொள்ளுங்கள்.
துன்பங்கள் அதிகமாகிக் கொண்டே போனால் இன்பங்களை அனுபவிக்கும் வேலை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.
மனம் குழப்பத்திலும் ,கஷ்டத்திலும் உள்ளவைகள் சுண்டரகாண்டத்திலுள்ள ஸ்லோகங்களை படித்தால் நிச்சயம் மனம் அமைதி பெறுவார்கள் .
உங்களின் எந்தப் பிரச்சனைக்கும் சுந்தரகாண்டத்தில் தீர்வு உண்டு .ஆகவே நம்பிக்கையுடன் படியுங்கள் .
![]()
